Thursday, 3 July 2014

மார்க்கம் அறிவோம் : ரமளானும் நம்பிக்கையாளர்களும்...

இறையச்சம் தரும் காரியங்கள்


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

(திருக்குர்ஆன் 2 : 183)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (القرآن 183 : 2)

பொய் பேசுவது கூடாது
ஏமாற்றும் காரியங்கள் இருக்கவே கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
          யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : புஹாரி (1903)


حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ  (بخاري 1903)

சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி பேனர்கள்_உடுமலை கிளை


டிஎன்டிஜே  திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 30.06.14 அன்று  ரமலான் மாதம் முழுவதும்  மெகா டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து 4*2 அளவில் மொத்தம் 10 பேனர்கள் உடுமலை நகரின்  மக்கள் பார்க்கும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.....

அலங்கியம் கிளை சார்பாக சஹர் நேர நிகழ்ச்சி பேனர்கள்....


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக...

கடந்த 29.06.14 அன்று மெகா டிவி சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து... 


3*2 என்ற அளவில் மொத்தம் 5 பேனர்கள் அலங்கியத்தில் வைக்கப்பட்டன. 

அல்ஹம்துலில்லாஹ்..

நல்லூர் கிளை சார்பாக சஹர் நேர நிகழ்ச்சி பேனர்...

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக,  ரமலான் மாதம் முழுமதும் டிஎன்டிஜே நடத்தும் மெகா டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து பேனர் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை  சார்பாக 03.07.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.
 அதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் பெற்றோர்களை சபிப்பது பாவம் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை  சார்பாக 02.07.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. அதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் நோன்பின் சட்டங்கள் பற்றி விளக்கினார். 

அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரருக்கு தாவா_மங்கலம் கிளை

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 2-7-2014 அன்று  இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையைப் பற்றி பிற மத சகோதரர் ஒருவருக்கு தாவா செய்யப்பட்டது. 








மேலும் அவர் அணிந்திருந்த தாயத்து அகற்றம்  செய்யப்பட்டது. அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற     இரு புத்தகங்கள்  வழங்கப்பட்டன

அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக பெரியவர்களுக்கு குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 29/6/2014 அன்று குர்ஆன் ஓதத் தெரியாத பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அலி அவர்கள் அனைவருக்கும் குர்ஆன் படிக்கும் முறையை கற்று தந்து பாடம் நடத்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 1 July 2014

ரமளான் நோன்பு அட்டவணை 1000 விநியோகம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பில் 30.06.2014  அன்று அல்குர்ஆன், ஹதிஸ் விளக்கங்கள் கொண்ட சஹர், மற்றும் இப்தார் நேரங்களை கொண்ட ரமலான் நோன்பு அட்டவணை 1000  விநியோகம் செய்யப்பட்டது.

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர்  கிளை சார்பாக  01.07.2014  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.கலீல் ரஹ்மான் அவர்கள், இதில் முக்கியமான  நோன்பின் சட்டங்கள் பற்றி விளக்கம் அளித்தார்.

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்காவுண்டனூர்  கிளை சார்பாக கடந்த 30.06.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் நோன்பின் சட்டங்கள் குறித்து விளக்கினார். 

அல்ஹம்துலில்லாஹ்..

பெரியகடை வீதி கிளை சார்பாக மதரஸா நிறைவு விழா நிகழ்ச்சி...

    டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக நடத்தப்படும் அல்மத்ரஸதுத் தவ்ஹீத் உடைய நிறைவு விழா நிகழ்ச்சி கடந்த 27.06.14 அன்று நடைபெற்றது. 

  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். 

இதில் மதரஸா மாணவர்கள் 50 பேரும், மாணவிகள் 32 பேரும், பொதுமக்கள் 170 பேரும் என மொத்தம் 252 பேர் கலந்து கொண்டார்கள். 


மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளும் (ஹாட் பாக்ஸ்), ஆறுதல் பரிசுகளும் ( 17 - ஜனஸா சட்டங்கள் புத்தம், 70 - டிபன் பாக்ஸ்) வழங்கப்பட்டன.  


அல்ஹம்துலில்லாஹ்...

Monday, 30 June 2014

மங்கலம் கிளை சார்பாக ஃபஜ்ருக்கு பிறகு பயான்...

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  27-6-2014 அன்று  பஜ்ரு தொழுகைக்கு பின் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சகோ.அன்சர் கான்  அவர்கள் உரை நிகழ்த்தினார்.

மங்கலம் கிளை சார்பாக 40 உணர்வு பேப்பர்கள் இலவச விநியோகம்


டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 27.06.14 அன்று 40 உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

மங்கலம் கிளை சார்பாக 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை...

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27.06.2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை பெண்கள் மதரஸா பரிசளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-6-20l4 அன்று சிறுவர்கள்  சிறுமியர்கள் மக்தப்  மற்றும் பெண்களுக்கான மதரசாவினுடைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. 
இதில் அனைத்து மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ். 

மங்கலம் கிளை மதரஸா பரிசளிப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-6-20l4 அன்று சிறுவர்கள்  சிறுமியர்கள் மக்தப்  மற்றும் பெண்களுக்கான மதரசாவினுடைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி  மாலை 5 மணி முதல் 6 வரை நடைபெற்றது    இதில் சகோ. அன்சர் கான் misc அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்   மாணவ மாணவிகளின் 100 க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். .அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை பெண்கள் மதரஸா நிறைவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   25-6-20l4    அன்று சிறுமியர்கள் மக்தப்  மற்றும் பெண்களுக்கான மதரசாவின்  ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.   
இதில் மதரசா மாணவிகளின் மார்க்கம் சம்பந்தமான வினா விடை நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

மங்கலம் கிளை சார்பாக மதரஸா நிறைவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-6-20l4 அன்று சிறுவர்களுக்கான மக்தப் மதரசாவின் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் மதரசா மாணவர்களின்  மத்ஹப் ஓர் வழிகேடு என்ற சிறு நாடக  நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் குழு தாவா...

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.06.14 அன்று மங்கலம் பகுதியில் உப்பு தோட்டம் இரண்டாவது  வீதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 45 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய  50 நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக பேனர் தாவா.....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக 30.06.14 அன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் 6*4 என்ற அளவில் மொத்தம் 5 பேனர்கள் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக உண்டியல் தாவா....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-06-2014 அன்று கோல்டன் டவர் பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக, நூறு வீடுகளில் ஹதீஸ் வாசகத்துடன் இருக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட 100 உண்டியல்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கோல்டன் டவர் கிளை நடத்தும் பெரியவர்களுக்கான மதரஸா....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக குர்ஆன் ஓதத் தெரியாத பெரியவர்களுக்கு  ரமலான் மாதம் முழுவதும்  குர்ஆன் வகுப்பு (மதரஸா) நடத்துவது என முடிவு செய்து  30-06-2014 அன்று முதல் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு (மதரஸா) நடைபெற்று வருகிறது. இதில் 22 பேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...   

மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக பேனர் தாவா...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-06-2014 அன்று மெகா டிவியில் ஒளிபரப்பாகும் சஹர் நேர பயான் நிகழ்ச்சி குறித்து 8*4 என்ற அளவில் நான்கு இடங்களில் மொத்தம் 4 பேனர்கள் வைக்கப்பட்டன.

Saturday, 28 June 2014

மார்க்கம் அறிவோம் : ரமளானின் சிறப்புகள்

ரமளானில் செய்யப்படும் உம்ரா ஹஜ்ஜாகும்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    நபி (ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியபோது உம்முஸினான் அல்அன்ஸாரியா என்ற பெண்மணியிடம், "நீ ஹஜ்ஜுக்கு வர என்ன தடை?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "என் கணவரே காரணம்; அவருக்கு தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறது; (இதுவே காரணம்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், "ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்'' என்றார்கள்
ஆதாரம் : புஹாரி (1782), (1863)


حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ أَخْبَرَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ عَنْ عَطَاءٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَمَّا رَجَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ حَجَّتِهِ قَالَ لِأُمِّ سِنَانٍ الْأَنْصَارِيَّةِ مَا مَنَعَكِ مِنْ الْحَجِّ قَالَتْ أَبُو فُلَانٍ تَعْنِي زَوْجَهَا كَانَ لَهُ نَاضِحَانِ حَجَّ عَلَى أَحَدِهِمَا وَالْآخَرُ يَسْقِي أَرْضًا لَنَا قَالَ فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ تَقْضِي حَجَّةً أَوْ حَجَّةً مَعِي رَوَاهُ ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ عُبَيْدُ اللَّهِ عَنْ عَبْدِ الْكَرِيمِ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
)بخاري 1782)


மறு நோன்பு வரை சிறுபாவங்கள் மன்னிக்கப்படும்

ஐந்து நேரத் தொழுகைகள், ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ, (தொழுது) ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் (வரை நோன்பு நோற்று) பெரும் பாவங்களை விட்டு விலகியிருந்தார் எனில் அவற்றுக்கிடையில் ஏற்பட்ட பாவங்களுக்கு அவை பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
ஆதாரம் :  முஸ்லிம் (344)


حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ أَبِي صَخْرٍ أَنَّ عُمَرَ بْنَ إِسْحَقَ مَوْلَى زَائِدَةَ حَدَّثَهُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ
(مسلم 344)


சொர்க்கத்திற்குரிய நன்மை வாசல்கள் திறக்கப்படும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 ரமளான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : புஹாரி (1899)


حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي أَنَسٍ مَوْلَى التَّيْمِيِّينَ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِّحَتْ أَبْوَابُ السَّمَاءِ وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتْ الشَّيَاطِينُ
(بخاري 1899)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : புஹாரி (3277)



حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي أَنَسٍ مَوْلَى التَّيْمِيِّينَ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتْ الشَّيَاطِينُ (بخاري 3277)