Saturday, 28 June 2014

மார்க்கம் அறிவோம் : ரமளானின் சிறப்புகள்

நின்று வணங்குபவர்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
     எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : புஹாரி (37)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ 
 (بخاري 37)


லைலத்துல் கத்ரில் வழங்கப்படும் பாவமன்னிப்பு


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    யார் "லைலத்துல் கத்ர்' இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது முன் பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : புஹாரி (1901)

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا هِشَامٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ  .
(بخاري 1901)


லைலத்துல் கத்ரின் சிறப்பு

ஒரு நன்மைக்கு ஆயிரம் மடங்கு நன்மை பெற்று தரும் இரவு


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!
அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி)
ஆதாரம் : புஹாரி (2017)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا أَبُو سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنْ الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ.

(بخاري 2017)


    மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ் வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர்.. ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
(திருக்குர் ஆன் 97 : 1 - 5)


إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ.  وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ . لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ . تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ . سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
(القرآن سورة 97 )

வடுகன்காளிபாளையம் கிளை மதரஸா நிறைவு நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக சிறுவர் மற்றும் சிறுமியருக்காக நடைபெற்று வரும் மதரஸாவின் இந்த வருடத்திற்குரிய நிறைவு விழா நிகழ்ச்சி 24.06.14 அன்று நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சி கிளை சார்பாக புதியதாக கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் மஸ்ஜிதுர் ரஹ்மானில் நடைபெற்றது. 

 இவ்வாறு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 




இதில் சகோ.இ.முஹம்மது (மாநில செயலாளர்), பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


இதில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டனர். 






அல்ஹம்துலில்லாஹ்...





வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக புதிய பள்ளிவாசல் துவக்கம்...



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக,



கடந்த 27.06.14 வெள்ளிக்கிழமை அன்று புதிய பள்ளியில் ஜும்ஆ துவக்கம் செய்யப்பட்டது. 




இதில் சகோ. இ.முஹம்மது (மாநில செயலாளர்) 


 உரை நிகழ்த்தினார். 















அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..





                   








மங்கலம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக 50 சிறிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டன



திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 26.06.14 அன்று, நோன்பின் நோக்கம் என்ற தலைப்பில் 50 சிறிய போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

மார்க்கம் அறிவோம் : ரமளானின் சிறப்புகள்

நோன்பு மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் :
எவர்   நம்பிக்கை   கொண்டவராகவும்,   நன்மையை எதிர்பார்த்தவராகவும்    ரமளான்    மாதத்தில்   நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : புஹாரி (38)


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَامٍ قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ 
(بخاري 38)

மறுமையில் இறைவனை சந்திக்கும் பாக்கியம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே நற்பலன் அளிப்பேன்!'' என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் "நான் நோன்பாளி!'' என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையைவிட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : புஹாரி (1904)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالصِّيَامُ جُنَّةٌ وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلَا يَصْخَبْ فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ .

(بخاري 1904)





நோன்பாளிகளுக்கு சொர்க்கத்தில் சிறப்பு நுழைவாசல்

    சொர்க்கத்தில் ரய்யான் என்று அழைக்கப்படும் ஒரு வாசல் இருக்கின்றது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி),
ஆதாரம் : புகாரி (1896), (1897), முஸ்லிம் (1947)


حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ عَنْ سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ .
(بخاري 1896)

மார்க்கம் அறிவோம் : ரமளானின் சிறப்புகள்

நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை
கஸ்தூரியின் வாசத்தை விட சிறந்தது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
    என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும். "எனக்காக நோன்பாளி தனது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகின்றார். நோன்பு எனக்கு உரியது. அதற்கு நானே கூலிலி கொடுப்பேன். ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்காகும்'' (என்று அல்லாஹ் கூறுகின்றான்)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
ஆதாரம் : புகாரி (1894)


حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا.

(بخاري 1894)

மார்க்கம் அறிவோம் : ரமளானின் சிறப்புகள்

நோன்பிற்கு அல்லாஹ்வே கூலி வழங்குகிறான்...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
    நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே நற்பலன் அளிப்பேன்!'' என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் "நான் நோன்பாளி!'' என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையைவிட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : புஹாரி (1904)


حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالصِّيَامُ جُنَّةٌ وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلَا يَصْخَبْ فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ .
(بخاري 1904)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
     ஒவ்வொரு நன்மையும் அதுபோன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
ஆதாரம் : திர்மிதீ (695)



حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى الْقَزَّازُ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ زَيْدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ رَبَّكُمْ يَقُولُ كُلُّ حَسَنَةٍ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَالصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ الصَّوْمُ جُنَّةٌ مِنْ النَّارِ وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ وَإِنْ جَهِلَ عَلَى أَحَدِكُمْ جَاهِلٌ وَهُوَ صَائِمٌ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ وَفِي الْبَاب عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَكَعْبِ بْنِ عُجْرَةَ وَسَلَامَةَ بْنِ قَيْصَرٍ وَبَشِيرِ ابْنِ الْخَصَاصِيَةِ وَاسْمُ بَشِيرٍ زَحْمُ بْنُ مَعْبَدٍ وَالْخَصَاصِيَةُ هِيَ أُمُّهُ قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

(ترمذي 695)

"உறவும்,பிரிவும் அல்லாஹுவிற்காக" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 28.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள்  "உறவும்,பிரிவும் அல்லாஹுவிற்காக" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பெற்றோரைபேணுதல்" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 27.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள்  "பெற்றோரைபேணுதல்" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இறையச்சம்_தாராபுரம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை  சார்பாக 22-6-2014 ஞாயிறு      ஈமான் நகரில் தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது. 

இதில் சகோ.ஆஜம் MISC அவர்கள்   இறையச்சம் என்ற தலைப்பில் 
உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...





"அறுத்து பலியிடுதல் " _S.V. காலனி கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 27.06.2014 அன்று அன்று சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "அறுத்து பலியிடுதல் " எனும் தலைப்பில்   பயான்  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக நிர்வாக ஆலோசனை கூட்டம்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25-06-2014 அன்று நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவரணி செயலாளராக முஹம்மது அசேன் என்பவர் நியமிக்கப்பட்டார்.

மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக 1000 நோட்டீஸ்கள் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக தி இந்து நாளேட்டில் செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் முஸ்லிம்கள் பற்றி வெளியான செய்தி நோட்டீஸாக அச்சடிக்கப்பட்ட நிலையில் 

கடந்த 21-06-2014    அன்று  அதில்  1000  பிரிசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...


  

கோல்டன் டவர் கிளை சார்பாக 100 மினி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-06-2014 அன்று ரமளானின் சிறப்பு என்ற தலைப்பில் (100) நூறு மினி போஸ்டர்கள் ஒட்டப்பட்டது 

ரமளானை வரவேற்போம்_மங்கலம் கோல்டன் நகர் கிளை சார்பாக தெருமுனைப் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

திருப்பூர் மாவட்டம் கோல்டன் 

டவர் கிளையின் சார்பாக          

26-062014 அன்று மாலை 07:00 

மணி முதல் 09:00 மணி வரை 

மூன்று இடங்களில் தெருமுனை 

பயான் நடைபெற்றது. 



இதில் யாசர், அன்சர்கான், சலீம், 

ஆகிய சகோதரர்கள், ரமலானை

வரவேற்போம் என்ற தலைப்பில் 

உரையாற்றினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்..




Friday, 27 June 2014

ரமலானின் சிறப்புகள்_தாராபுரம் கிளை சார்பாக பெண்கள் பயான்

திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 22-6-2014 ஞாயிறு அன்று நேதாஜி தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி குர்ஷீத் ஆலிமா அவர்கள் `ரமலானின் சிறப்புகள்´ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏரளமான பெண்கள் கலந்துகொன்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்....

 

"ஹஜ்ஜில் கடைபிடிக்க வேண்டிவைகள் " _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 27.06.2014 அன்று  சகோ.சுலைமான்  அவர்கள் "ஹஜ்ஜில் கடைபிடிக்க வேண்டிவைகள் "  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தெருநாய்களை உடனடியாக பிடிக்கக் கோரி அலுவலரிடம் மனு _கோம்பைத் தோட்டம் கிளை சமூகசேவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 26.06.2014 அன்று கோம்பை தோட்டம் பகுதியில் தெருநாய் தொல்லையை விளக்கியும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பட  தெருநாய்களை உடனடியாக பிடிக்கக் கோரி , திருப்பூர் மாநகராட்சி அலுவலரிடம்   மனு அளிக்கப்பட்டது..

நல்லூர் கிளை சார்பாக தாயத்து அகற்றம்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 21.06.14 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் தாயத்து அகற்றம் செய்து அழைப்புப்பணி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

நல்லூர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 26.06.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.    இதில் சகோ.ராஜா உரையாற்றினார். இந்த உரையை மக்கள் கேட்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 26 June 2014

"காலத்தை ஏசாதீர்கள்" யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 26.06.2014 அன்று  சகோ.சுலைமான்  அவர்கள் "காலத்தை ஏசாதீர்கள்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிக்கல் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.9561/=(+) 3000/= மதிப்புள்ள தங்க நகை நிதியுதவி _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 26.06.2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிளை மர்கஸ் பணிக்காக   ரூ.9561/=(+) 3000/= மதிப்புள்ள தங்க நகை ஆகியவை    நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட புதிய இணையதளம்

"நண்பர்கள்" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 26.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள்  "நண்பர்கள்" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.

சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பிற மதத்தவர்களுடன் நல்லிணக்கம்" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 26.06.2014 அன்று சகோ.ஜின்னா அவர்கள் "பிற மதத்தவர்களுடன் நல்லிணக்கம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 
பிற மதத்தவர்களின் கடவுள்களை ஏசக்கூடாது 
பிற மதக் கடவுள்களைத் திட்டக் கூடாது என்று திருகுர்ஆன் வசனம் (6:108) கூறுகின்றது.
அகில உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கையில் முழு அளவுக்கு இஸ்லாம் உறுதியாக நிற்கின்றது.
அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் அனைத்தும் கற்பனைகளே தவிர கடவுள்கள் அல்ல எனவும் இஸ்லாம் அடித்துக் கூறுகிறது.
ஆனாலும் முஸ்லிமல்லாதவர்கள் தெய்வமாக நம்புவோரைப் பற்றி தரக் குறைவாக விமர்சிப்பதோ, ஏசுவதோ கூடாது என்றும் திட்டவட்டமாக இஸ்லாம் அறிவிக்கிறது.
முஸ்லிமல்லாதவர்கள் எவ்வளவுதான் வம்புக்கு இழுத்தாலும் அவர்கள் புனிதமாகக் கருதுவோரை எக்காரணம் கொண்டும் ஏசக் கூடாது எனக் கூறி பல்சமய மக்களிடையே நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கிறது.