Friday, 6 June 2014

_அனுப்பர்பாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளையின் சார்பாக 01.06.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஷாஜிதா ஆலிமா  அவர்கள் உரையாற்றினார். அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்..

அனுப்பர்பாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளையின் சார்பாக 25.05.2014 அன்று சகோ.சித்திக் அவர்கள்  குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Thursday, 5 June 2014

சிறுவர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக ரூ.2450/= நிதிஉதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 05.06.2014 அன்று  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்தப்பட்டு வரும்
சிறுவர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை ரூ.2450/= நிதிஉதவி ஐ சகோ.கோவை சஹாபுதீன் வசம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

சிறுவர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காகரூ.2160/= நிதிஉதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 05.06.2014 அன்று  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்தப்பட்டு வரும்
சிறுவர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை ரூ.2160/= நிதிஉதவி ஐ சகோ.கோவை சஹாபுதீன் வசம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

பிறமத சகோதரரின் சிகிச்சைக்கு இரத்ததானம் _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 05.06.2014  அன்று உடுமலை   மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழனி நெய்காரப்பட்டி சேர்ந்த   பிறமத சகோதரர்.நாகசாமி  அவர்களின் கல்லீரல் சிகிச்சைக்கு தேவைப்பட்ட B+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

"ராணுவ பலத்தை பெருக்குவது அரசின் கடமை " _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 05.06.2014 அன்று சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் "ராணுவ பலத்தை பெருக்குவது அரசின் கடமை " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை
படை திரட்டுதல் என்பது முஸ்லிம்கள் தமது நாடுகளில் செய்ய வேண்டிய கடமையாகும். ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழ்பவர்கள் இவ்வாறு படை திரட்டலாம் என்று இவ்வசனத்தை (8:60) புரிந்து கொள்ளக் கூடாது.
மக்காவில் இருந்த போதும், அபிஸீனியாவில் அடைக்கலம் பெற்ற போதும் முஸ்லிம்கள் இவ்வாறு படை திரட்டவில்லை. மாறாக மதீனாவில் நல்லாட்சியை அமைத்த பிறகுதான் இதைச் செய்தார்கள். அப்போதுதான் இது சாத்தியமுமாகும்.
ஒரு நாடு உருவான பின் அது தனது பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்வதை யாராலும் குறை கூறமுடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லாட்சி அமைத்த பிறகுதான் இந்த வசனம் அருளப்பட்டது என்பதும் அவர்கள் மக்காவில் துன்பத்திற்கு மேல் துன்பத்தை அனுபவித்த போது அருளப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
போர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 53, 54, 55, 76, 89, 198, 199, 203, 359 ஆகிய குறிப்புக்ளைப் பார்க்கவும்.
 http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/53_pira_mathathavarai_islam_kolla_solkiratha/
 http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/54_matham_matra_por_koodathu/
 http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/55_punitha_mathangal_evai/
 http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/76_atchi_illamal_por_illai/
 http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/89_pira_mathathavarkalai_nanbarkakka_koodatha/
 http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/198_palaveenamana_arasin_meethu_por_kadamayillai/
 http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/203_kuraivaka_irunthal_por_kadamaya/
 http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/359_yar_meethu_por_kadamai/

"மார்க்க கல்வியின் சிறப்பு" _பெரியதோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை சார்பாக 01.06.2014 அன்று பெரியதோட்டம் 6 வது வீதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "மார்க்க கல்வியின் சிறப்பு"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 4 June 2014

ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02.06.2014 அன்று ஒரு இளைஞரிடம் ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்  தஃவா செய்து அவரின் கழுத்தில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது.

திருஷ்டி எலுமிச்சை அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக  01.06.2014 அன்று ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்  நடைபெற்றது. ஒரு வீட்டில் தஃவா செய்து அந்த வீட்டின் முன் இருந்த திருஷ்டி எலுமிச்சை அகற்றப்பட்டது

திருஷ்டி தேங்காய் அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக  31-05-2014 அன்று ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்  நடைபெற்றது. ஒரு வீட்டில் தஃவா செய்து அந்த வீட்டின் முன் இருந்த திருஷ்டி தேங்காய் அகற்றப்பட்டது

"சென்றுவிட்ட தூதர்களில் ஈஸா நபி ஒருவரா?" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 03.06.2014 அன்று சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் "சென்றுவிட்ட தூதர்களில் ஈஸா நபி ஒருவரா?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

101. சென்று விட்ட தூதர்களில் ஈஸா நபி ஒருவரா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக முஸ்லிம்களின் ஒரே தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இறைவனின் தூதரே தவிர இறைவனல்ல என்பதை இவ்வசனம் (3:144) வலியுறுத்துகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டால் வந்த வழியே திரும்பிச் சென்று விடக் கூடாது; இறைவனது தண்டனைக்கு அஞ்சியும், இறைவனது பரிசுகளை எதிர்பார்த்தும் இம்மார்க்கத்தில் இருக்க வேண்டுமே தவிர, முஹம்மத் (ஸல்) அவர்களுக்காக இம்மார்க்கத்தில் இருக்கக் கூடாது என்றும் இவ்வசனம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.
இந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்காக இவ்வசனம் அருளப்பட்டாலும் இவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர் என்று இவ்வசனத்தில் கூறப்படுவதால் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளதாகச் சிலர் வாதிடுகின்றனர்.
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் வந்த ஈஸா நபி உள்ளிட்ட அனைத்துத் தூதர்களும் மரணித்து விட்டனர் என்பது இவர்களின் வாதம்.
ஏற்கனவே வந்த தூதர்கள் மரணித்ததை முன்னுதாரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மரணிப்பார்கள் என்பதை இறைவன் அறிவிப்பதால், இக்கருத்து மேலும் வலுவடைகின்றது எனவும் கூறுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது, பெரும்பாலான நபித்தோழர்கள் அவர்களின் மரணத்தை நம்ப மறுத்தனர். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை எடுத்துச் சொல்லித்தான் நபித்தோழர்களைச் சரியான வழிக்குக் கொண்டு வந்தனர்.
இந்த வரலாறு புகாரி (1242, 3670, 4454) மற்றும் பல ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களையும் தங்களின் வாதத்துக்கு வலு சேர்ப்பதற்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
"ஈஸா நபி மரணிக்காமல் இருந்திருந்தால் அபூபக்கர் (ரலி) அவர்களின் வாதத்தை நபித்தோழர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள். ஈஸா நபி மரணிக்காமல் இருப்பது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஏன் மரணிக்காமல் இருக்கக் கூடாது என்று நபித்தோழர்கள் எதிர்க்கேள்வி கேட்டிருப்பார்கள்'' எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
திருக்குர்ஆனை அணுக வேண்டிய விதத்தில் அணுகாதவர்கள் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்க முடியும். ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு வசனத்தில் கூறப்பட்டதை மட்டும் வைத்து முடிவுக்கு வருவது குர்ஆனை அணுகும் வழியல்ல.
இது பற்றி வேறு வசனங்களில் கூடுதல் விளக்கம் உள்ளதா? அல்லது விதி விலக்குகள் உள்ளனவா? என்று தேடிப் பார்க்க வேண்டும். பல இடங்களில் அது குறித்துக் கூறப்பட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு வருவதே குர்ஆனை அணுகும் முறையாகும்.
திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களில் பொதுவாகக் கூறப்பட்டதற்கு வேறு இடங்களில் விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. இதுதான் திருக்குர்ஆனின் தனி நடையாகும்.
இந்த வசனத்திலேயே "ஈஸா நபியைத் தவிர'' என்று கூறப்படவில்லையே என்று கேட்பது திருக்குர்ஆனின் நடையைப் புரிந்து கொள்ளாதவர்களின் கேள்வியாகும்.
"முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்'' என்ற வார்த்தைக்குள் ஈஸா நபி அடங்கினாலும் வேறு வசனங்களில் ஈஸா நபிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்காததால் இவ்வாறு வாதிடுகின்றனர்.
ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார். (திருக்குர்ஆன் 43:61)
ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள். (திருக்குர்ஆன் 4:159)
இவ்விரு வசனங்களும் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்று அறிவிக்கின்றன.
எனவே இவ்விரு வசனங்களையும், "அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள்'' என்பதையும் இணைத்து "ஈஸா நபி தவிர மற்ற தூதர்கள் இவருக்கு முன் மரணித்து விட்டார்கள்'' என்று தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு முடிவு செய்யும் போது எந்த வசனத்தையும் நாம் மறுக்கவில்லை. எல்லா வசனங்களும் சேர்ந்து எந்தக் கருத்தைத் தருகிறதோ அந்தக் கருத்தைத்தான் நாம் கொள்கிறோம்.
இவ்விரு வசனங்கள் மட்டுமின்றி மற்றொரு வசனமும் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
மர்யமின் மகன் மஸீஹ் (ஈஸா) தூதரைத் தவிர வேறு இல்லை. அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் அதிக நம்பிக்கையுடையவராவார். அவ்விருவரும் உணவை உட்கொண்டவர்களாக இருந்தனர். நாம் அத்தாட்சிகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்று கவனிப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக! (திருக்குர்ஆன் 5:75)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து "அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்'' என்று குறிப்பிடுவது போலவே இவ்வசனம் "ஈஸா நபிக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்'' என்று குறிப்பிடுகிறது. இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது பளிச்சென விளங்கும்.
இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் ஈஸா நபி மரணித்திருந்தார்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அவரைக் கடவுளாக நம்புகின்ற மக்களுக்கு மறுப்புக் கூறும் போது எவ்வாறு கூற வேண்டும்?
"ஈஸா தூதர் தான்; அவரே மரணித்து விட்டார்'' என்று கூறினால் அதுதான் சரியான பதிலாக இருக்க முடியும்.
மரணித்தவரை எப்படிக் கடவுள் எனக் கருதலாம் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கும். ஈஸா நபி மரணித்திருந்தால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இதுதான். ஈஸா நபியைக் கடவுள் ஆக்கியவர்களுக்கு மறுப்புச் சொல்லும் இந்த இடத்தில் இறைவன் பயன்படுத்திய வார்த்தையைக் கவனியுங்கள்.
"ஈஸா தூதர் தான். அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்'' என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் ஞானமிக்கவன்; நுண்ணறிவாளன்; அவன் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதை விட்டும் தூய்மையானவன். ஈஸா நபி மரணித்திருந்தால் அதற்கு எதிரான கருத்தைத் தரும் வகையில் இறைவன் இப்படிக் கூறியிருக்க மாட்டான்.
அவரே இறந்திருக்கும் போது அதைக் கூறாமல் அவருக்கு முன் சென்றவர்கள் இறந்து விட்டார்கள் என்று விவேகமுள்ளவர் யாரேனும் பேசுவது உண்டா?
அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர் எனக் கூறி விட்டு, அவர் பூமியில் வாழும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை அல்லாஹ் மறுக்கிறான். அவர் மரணித்திருந்தால் அவரது மரணத்தையே காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை இறைவன் மறுத்திருப்பான்.
முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் அருளப்படும் போது முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்தனர் என்று புரிந்து கொள்கிறோம்.
அது போல் ஈஸாவுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் இறங்கும் போதும் ஈஸா நபி உயிருடன் இருந்தனர் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு இடங்களில் வித்தியாசமாகப் பொருள் கொள்வது ஏற்புடையதன்று.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது நபித் தோழர்கள் நடந்து கொண்ட முறையை அவர்கள் சான்றாகக் காட்டுவதும் சரியல்ல.
ஈஸா நபி வருவார்கள் என்ற ஏராளமான ஹதீஸ்களை நபித்தோழர்கள் தான் அறிவிக்கின்றனர். நாம் முன்னர் சுட்டிக் காட்டிய 43:61, 4:159 இரு வசனங்களையும் நபித்தோழர்கள் அறிந்திருந்தனர். ஈஸா நபிக்கு விதிவிலக்கு இருந்ததைச் சந்தேகமற அவர்கள் அறிந்திருந்தனர்.
நபிகள் நாயகத்துக்கும் அது போல விதிவிலக்கு இருக்கும் என்று அவர்கள் எண்ணியதால் தான் "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை'' என்று வாதிட்டனர். நபிகள் நாயகத்துக்கு விதிவிலக்கு இல்லை என்பது அபூபக்கர் (ரலி) அவர்களின் வாதத்தின் மூலம் தெரிந்ததும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டார்கள்.
அனைவருக்கும் சர்வ சாதாரணமாகத் தெரிந்த விதிவிலக்குகளை யாரும் சான்றாகக் காட்டிப் பேச மாட்டார்கள்.
எனவே, இவ்வசனம் (3:144) ஈஸா நபி மரணித்ததைக் கூறவில்லை. இது போல அமைந்த 5:75 வசனம் அவர்கள் இது வரை மரணிக்கவில்லை என்ற விதிவிலக்கைக் கூறுகிறது என்பதே சரியாகும்.
இது பற்றி அதிக விபரம் அறிய 133, 134, 151, 278, 342, 456 ஆகிய குறிப்புகளைக் காண்க!

 http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/101_senru_vitta_thootharkalil_oruvara/

ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30.05.2014 அன்று  ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்  நடைபெற்றது. பெற்றோரிடத்தில் தஃவா செய்து குழந்தையின் கழுத்தில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது.

ஏழை சகோதரர்க்கு ரூ.20,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 31.05.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.உமர் முக்தார் க்கு ரூ.20,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29.05.2014 அன்று  ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்  நடைபெற்றது. பெற்றோரிடத்தில் தஃவா செய்து குழந்தையின் கழுத்தில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது.

Tuesday, 3 June 2014

ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28.05.2014 அன்று ஒருவரிடம் ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்  தஃவா செய்து அவரின் கையில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது.

ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-05-2014 அன்று ஒரு இளைஞரிடம் ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்  தஃவா செய்து அவரின் கழுத்தில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது.

"இஸ்லாத்தின் அடிப்படை" _மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 03-06-2014 அன்று  தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் "இஸ்லாத்தின் அடிப்படை" என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 26-05-2014 அன்று ஒரு சகோதரரிடம் ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் தஃவா செய்து அவரின் காலில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது

"யாராலும் கொல்ல முடியாத தலைவர்" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 02.06.2014 அன்று சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் "யாராலும் கொல்ல முடியாத தலைவர்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
145. யாராலும் கொல்ல முடியாத தலைவர்
இவ்வசனத்தில் 5:67 நபிகள் நாயகத்தை யாரும் கொல்ல முடியாது என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற்காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. போர்க்களங்களிலும் பங்கெடுத்து, கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கி இருந்தார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை.
தினமும் ஐந்து நேரத் தொழுகை நடத்துவதற்காக மக்களோடு மக்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கலந்து கொள்வார்கள்.
அன்றைய நிலையில் மிக எளிதாக ஒருவரைக் கொல்வது என்றால் அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலிடத்தில் இருந்தார்கள். அப்படியிருந்தும் "உம்மை இறைவன் காப்பான்'' என்று இவ்வசனத்தில் சொல்லப்படும் முன்னறிவிப்பு நிறைவேறியது.
இப்படி அறைகூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிரூபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை.
இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் முஹம்மது நபியவர்கள் என்றோ கொல்லப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான நிரூபணம்.
என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதாரணமாக இன்றைய உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும்.
அன்றைய நிலையில் முஹம்மது நபியைப் போல் சர்வசாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாகப் பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து, தாம் கூறுவது இறைவாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிரூபித்தார்கள்.

"கல்வியின் அவசியம்" _2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் -S.V. காலனி கிளை


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பாக 01.06.2014 அன்று S.V. காலனி மற்றும் 7ஸ்டார் வீதி ஆகிய  2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.ஜாகிர்அப்பாஸ்  அவர்கள் "கல்வியின் அவசியம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  
ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 2 June 2014

மதரஸா ஆண்டுவிழா பரிசளிப்பு விழா_ வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக நடத்தப்படும் மதரஸத்துத்தக்வா மதரஸா ஆண்டுவிழா 01.06.2014 அன்று நடைபெற்றது.
அதில் மதரஸா மாணவ, மாணவிகளின் பயான் உரைகள்,
துஆ ஓதுதல்,கிராஅத் ஓதுதல் ஆகியவை நடைபெற்றது..
இறுதியாக அனைத்து மாணவ மாணவியர்களுக்கும்
மதரஸா ஆசிரியைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது

"கப்ரு வழிபாடு , வரதட்சணை, புறம், கேலிகிண்டல், வட்டி விழிப்புணர்வு நாடகங்கள் _வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக நடத்தப்படும் மதரஸத்துத்தக்வா மதரஸா ஆண்டுவிழா 01.06.2014 அன்று நடைபெற்றது.
மதரஸா மாணவ மாணவியர்கள் "கப்ரு வழிபாடு , வரதட்சணை, புறம், கேலிகிண்டல், வட்டி" ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தி அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினார்கள்.

"நோன்பின் முக்கியத்துவம்" _அவினாசி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 01.06.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "நோன்பின் முக்கியத்துவம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 
இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்

"இஸ்லாத்தின் வளர்ச்சியில் மதரஸாக்களின் பங்கு" _வெங்கடேஸ்வரா நகர் கிளை பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 01.06.2014 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 



சகோதரி. சஜினாஆலிமா அவர்கள் "வரதட்சணை " எனும் தலைப்பிலும், 
 






 சகோதரர். H.M அஹ்மது கபீர் அவர்கள் "இஸ்லாத்தின் வளர்ச்சியில் மதரஸாக்களின் பங்கு"எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்


"இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 02.06.2014 அன்று சகோ.சவுக்கத்அலி  அவர்கள் "இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை

யூதர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டதாக இவ்வசனம் (3:112) கூறுகிறது.
இன்றைக்கு யூதர்கள் வறுமையில் இல்லையே? என்று சிலர் நினைக்கலாம். அதற்கு இவ்வசனத்திலேயே பதில் உள்ளது.
மற்றவர்களுடன் உடன்படிக்கைகள் செய்து தம்மைக் காத்துக் கொள்ளும் போது இந்த நிலை அவர்களுக்கு ஏற்படாது என்பது தான் அந்தப் பதில்.
ஹிட்லரால் கொன்று குவிக்கப்படும் வரை அவர்களுக்கு இழிவு தான் இருந்தது. முஸ்லிம்களாலும், பின்னர் கிறித்தவர்களாலும், பின்னர் நாஜிக்களாலும் ஏராளமான இழிவுகளைச் சுமந்தனர்.
"இயேசு தவறான முறையில் பிறந்தவர்'' என்பது இவர்களின் கொள்கை. அந்த இயேசுவை இறைமகன் என்று ஏற்றுள்ள பிரிட்டனுடன் செய்து கொண்ட உடன்படிக்கை மூலமும், அதன் பின்னர் அமெரிக்காவின் ஒத்துழைப்பு மூலமும் தான் வறுமையற்ற நிலையில் உள்ளனர்.
எனவே இந்தப் பிரகடனம் ஒரு காலத்திலும் பொய்யாகவில்லை. அதே நேரத்தில் இந்த இழிவு அனைத்து யூதர்களுக்கும் உரியது அல்ல என்பதை அடுத்த வசனத்தில் காணலாம்.
திருக்குர்ஆன் 5:14 வசனத்தில் யூதர்களுக்கும், கிறித்தவர்களுக்குமிடையே கியாமத் நாள் வரை பகைமையை ஏற்படுத்தியதாகவும், 5:64 வசனத்தில் யூதர்களுக்கிடையே கியாமத் நாள் வரை பகைமை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இன்று அவர்களிடையே பகைமை காணப்படவில்லையே என்று சிலருக்குத் தோன்றலாம். ஆயினும் இவ்வசனங்களில் கியாமத் நாள் வரை அவர்களுக்கிடையே பகைமை நிலவும் என்று கூறப்பட்டாலும் 3:112 வசனத்தில் அவர்கள் மனிதர்களோடு செய்து கொள்ளும் உடன்படிக்கையால் இது போன்ற இழிவிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கிடையே பகைமை இல்லாதிருப்பது குர்ஆனின் அறிவிப்புக்கு எதிரானது என்று கருத முடியாது.
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/99_isravelaruku_vithikaptta_varumai/