Wednesday, 27 November 2013
Tuesday, 26 November 2013
அண்டை வீட்டாரின் உரிமைகள் _மங்கலம் R.P.நகர் கிளைதெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளையின் சார்பாக 25-11-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை கிடங்குத்தோட்டத்தில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ யாசர் அவர்கள் அண்டை வீட்டாரின் உரிமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
பேச்சாளர் பயிற்சி வகுப்பு,கிராஅத் பயிற்சி,செய்தி வாசிக்கும் பயிற்சி _மங்கலம் கிளை
(1).jpg)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 24-11-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் துஃபைல் அவர்கள் நபிகளாரின் வரலாறு என்ற தலைப்பிலும்,
சரீஃப் அவர்கள் ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும்,
தன்வீர் அஸார் அவர்கள் இணைவைப்பின் வகைகள் என்ற தலைப்பிலும்,
சம்சுதீன் அவர்கள் அபூபக்கர்(ரலி)யின் சிறப்பு என்ற தலைப்பிலும்,
அப்பாஸ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும்,
யாசர் அவர்கள் முஸ்லீம் பெண்கள் எங்கே என்ற தலைப்பிலும்,
அசேன் அவர்கள் கோடையை மிஞ்சும் கொடிய நரகம் என்ற தலைப்பிலும்
செய்யது இப்ராஹீம் அவர்கள் இஸ்லாமிய இளைஞர்கள் என்ற தலைப்பிலும், உரையாற்றினார்கள்.
மேலும் இந்த பயிற்சியில் கிராஅத் பயிற்சியும் செய்தி வாசிக்கும் பயிற்சியும் நடைபெற்றது
"குழந்தை வளர்ப்பு " காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 25.11.2013 அன்று சாதிக்பாட்சாநகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ முஹம்மதுசலீம் அவர்கள் "குழந்தை வளர்ப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணியிடங்கள்
தமிழகத்தின் தலைமையிடமான சென்னையில் செய்பட்டு வரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
பணிவாரியான காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள் 268
01. Personal Assistant to the Hon’ble Judge - 57
02. Personal Assistant - 07
03. Assistant - 37
04. Computer Operator - 28
05. Typist - 139
வயதுவரம்பு:
22.11.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை:
01. Personal Asst பணிக்கு Written Examination, Skill test and Oral Test.
02. Asst & Computer operator பணிக்கு Written Examination and Oral test.
03. Typist பணிக்கு Written Examination & Skill test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
பணி 1 க்கு ரூ. 15,600 - 39,100 + Grade Pay ரூ. 5400
பணி 2 க்கு ரூ. 9,300 - 34,800 + Grade Pay ரூ. 4,600
பணி 3 க்கு ரூ. 5,200 - 20,200 + Grade Pay ரூ. 2600
பணி 4 க்கு ரூ. 5,200 - 20,200 + Grade Pay ரூ. 2800
பணி 5 க்கு ரூ. 5200 - 20,200 + Grade Pay ரூ. 2400
தேர்வுக் கட்டணம்:
ரூ.150
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
20.12.2013
வங்கிகள் மூலம் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:24.12.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:
23.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Monday, 25 November 2013
தொழுகை மற்றும் அதன் செயல்முறைகள் _செரங்காடுகிளை தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பில் 24.11.2013 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. சகோதரர் ஆஜம் அவர்கள் தொழுகை மற்றும் அதன் செயல்முறைகள் எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள். ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....
M.S.நகர் கிளை பொதுக்குழு - புதிய நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையில் 24.11.2013 அன்று திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் அப்பாஸ், முஹம்மதுசலீம்,பசீர் முன்னிலையில், கிளைப்பொதுக்குழு நடைபெற்றது.
M.S.நகர் கிளை புதிய நிர்வாக
தலைவராக..... சகோ. சிராஜ் 7871888444 அவர்களையும்,
செயலாளராக..... சகோ.லுத் புல்லாஹ் 9787200405 அவர்களையும்,
பொருளாளராக..... சகோ.அப்துல்லாஹ் 9865986567 அவர்களையும்,
துணைத்தலைவராக..... சகோ.பாஷா 9943681084 அவர்களையும்,
துணைச்செயலாளராக..... சகோ.திவான் ஒலி 9629254448 அவர்களையும்,
கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டனர்...
M.S.நகர் கிளை புதிய நிர்வாக தலைவராக..... சகோ. சிராஜ் 7871888444 அவர்களையும்,
செயலாளராக..... சகோ.லுத் புல்லாஹ் 9787200405 அவர்களையும்,
பொருளாளராக..... சகோ.அப்துல்லாஹ் 9865986567 அவர்களையும்,
துணைத்தலைவராக..... சகோ.பாஷா 9943681084 அவர்களையும்,
துணைச்செயலாளராக..... சகோ.திவான் ஒலி 9629254448 அவர்களையும்,
கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டனர்...
Subscribe to:
Posts (Atom)

.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)
.jpg)



.jpg)

.jpg)
.jpg)
b.jpg)
.jpg)

.jpg)

.jpg)






