Thursday, 11 July 2013
ரமலானின் சட்டதிட்டங்கள் _S.V.காலனி கிளை ரமலான் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 10.07.2013 அன்று S.V.காலனி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலானின் சட்டதிட்டங்கள்" எனும் தலைப்பில் சகோ.சேக் பரீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
Wednesday, 10 July 2013
Tuesday, 9 July 2013
V.K.P.கிளை நபி வழியில் தொழுகை,ஜும்மாஹ் மற்றும்இரவுத்தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் vkp கிளையின் சார்பாக " புதிய ஜும்ஆ " vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது. மேலும் ,இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதம் முதல் நாளிலிருந்து ஐவேளை தொழுகைகள் தொடர்ச்சியாக தினசரி vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
மேலும் ,இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதம் முதல் நாளிலிருந்து இரவு தொழுகை vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
இதில் ,பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது அல்ஹம்துலில்லாஹ்
"மாறும் உலகில் மாறாத இஸ்லாம்" மங்கலம் கிளை போஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-07-2013 அன்று மங்கலம் பகுதிகளில்போஸ்டர் தாவா ,இன்ஷாஅல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும்,மெகா டிவியில் ஒளிபரப்பாகும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் என்ற நிகழ்ச்சிக்காக 500 லேம்ப் போஸ்டர்கள் அச்சிட்டு மின்கம்பங்கள் மற்றும் வீட்டு வாசல்களில் ஒட்டப்பட்டது
ரமலான் _V.K.P.கிளை நோட்டிஸ்தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில்
08.07.2013 அன்று " ரமலான் " என்ற தலைப்பில் இன்றைய காலகட்டத்தில் ரமலான் மாதத்தில் பரவியுள்ள பித்அத்களை இனங்காட்டும் விதமாகவும் , மறைக்கப்பட்ட சுன்னத்தான செயல் முறைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் முகமாகவும் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரத்துடன் நோட்டிஸ் அடித்து(வடுகன்காளிபாளையம்) ஊர் முழுவதும் விநியோகம் செய்யது தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.......Monday, 8 July 2013
அல்குர்ஆன் ஹதிஸ் கேள்வி பதில் நிகழ்ச்சி _பரிசளிப்பு வெங்கடேஸ்வராநகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 07.07.2013 அன்று வெங்கடேஸ்வராநகர் மதரசதுல்தக்வாவில், அந்த பகுதி சகோதரிகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறந்த முறையில் பதில் வழங்கிய சகோதரிகளுக்கு பரிசுகள் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.அல்ஹம்துலில்லாஹ்!
Saturday, 6 July 2013
"ஜூம்ஆஅவசியமும்,முஸ்லிம்களின் கடமையும்" _நல்லூர் கிளையில் புதிதாக நபிவழி ஜூம்ஆ
S.V.காலனி கிளையில் புதிதாக நபிவழி ஜூம்ஆ தொழுகை
TNTJ திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக
05.07.2013 அன்று S.V.காலனி கிளையில்புதிய மர்கஸ் அமைக்கப்பட்டு புதிதாக ஜூம்ஆ ஆரம்பிக்கப்பட்டது
மாநில பேச்சாளர் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் ஜூம்ஆ உரையாற்றினார்கள்.ஏராளமான சகோதர,சகோதரிகள் இந்த நபிவழி ஜூம்ஆ தொழுகையில் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
"கல்வியின் அவசியம்" _அரபி பாடசாலையின் ஆண்டு விழா பரிசளிப்பு _ V.K.P.கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் 30.06.2013 அன்று V.K.P.கிளை அரபி பாடசாலையின் ஆண்டு விழா நடைபெற்றது,
மாணவ மாணவியர் ஸூரா மனனம், கிராத், மற்றும் மார்க்க விளக்க கேள்வி பதில் சொல்லுவது ஆகியன நடத்தப்பட்டது.
மாநில பேச்சாளர் சகோ.அஹமது கபீர் அவர்கள் கலந்து கொண்டு
அரபி பாடசாலை யில் பயின்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி "கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
Subscribe to:
Posts (Atom)



+notice.jpg)


.jpg)
.jpg)






(1).jpg)





.jpg)








