Thursday, 13 June 2013
சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்லசெலவினங்களுக்காகநிதியுதவி _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 09.06.2013 அன்று TNTJ சார்பாக நடத்தப்பட்டு வரும்சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம்
மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக
திருப்பூர் பகுதியில் உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை ரூ6170/= ஐ
சகோ.கோவை சஹாபுதீன் வசம் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள் நிதியுதவி வழங்கினர்.
Tuesday, 11 June 2013
மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா ! சரியா?
கேள்வி:
பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்கு தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று இதற்கு காரணம் கூறுகிறார்கள். இது சரியா?
பதில்:
முஸ்லிம்களைப் பொருத்த வரை தங்களின் அனைத்து காரியங்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் தான் நடத்த வேண்டும். சில காரணங்களை நாமாகக் கற்பணை செய்து கொண்டு சடங்குகளை உருவாக்கக் கூடாது.
பெண்கள் புகுந்த வீட்டில் சிரமப்படுக்ககூடாது என்பதற்காகவே வரத்ட்சணை கொடுக்கிறோம் என்று கூறுவது போலவும்,
பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்கு தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று இதற்கு காரணம் கூறுகிறார்கள். இது சரியா?பதில்:
முஸ்லிம்களைப் பொருத்த வரை தங்களின் அனைத்து காரியங்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் தான் நடத்த வேண்டும். சில காரணங்களை நாமாகக் கற்பணை செய்து கொண்டு சடங்குகளை உருவாக்கக் கூடாது.
பெண்கள் புகுந்த வீட்டில் சிரமப்படுக்ககூடாது என்பதற்காகவே வரத்ட்சணை கொடுக்கிறோம் என்று கூறுவது போலவும்,
கள்ளச் சாராயம் குடித்து சாகக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடை திறந்துள்ளோம் என்பது போலவும்
எல்லா தவறான காரியங்களுக்கும் காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தக் காரணத்தில் சிறிதும் உண்மை இல்லை.
உலகில் இந்தியா தவிர வேறு நாடுகளில் எல்லாம் பருவ வயது அடைவதற்கு விழாக்கள் இல்லை. அங்கெல்லாம் பெண்களுக்கு வரண் கிடைக்கவில்லையா?
ஆணுக்கு திருமணம் செய்ய எண்ணும் பெற்றோர் எந்த வீட்டில் பெண் இருக்கிறார் என்று விசாரித்துப் பார்த்து பெண் கேட்டு வருவார்கள். அது போல் பெண் வீட்டாரும் விசாரித்துப் பார்த்து மாப்பிள்ளை பேசுவார்கள். பூபெய்தல் விழாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.
பெண்ணுக்கு மாப்பிள்ளை அவசியம் என்பது போல் ஆணுக்கும் பெண் அவசியம் தானே? அப்படியானால் எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த ஆண் இருக்கிறான் என்பதற்காக ஏன் விழா நடத்தவில்லை?
கொடுத்த அன்பளிப்பை மொய் எனும் பெயரில் திரும்பப் பெறுவதற்காகவே இது போன்ற விழாக்களை மற்ற மதத்தவர்கள் உருவாக்கினார்கள்.

கொடுத்த அன்பளிப்பை திரும்பக் கேட்கக் கூடாது என்ற கொள்கையுடைய இஸ்லாத்தில் இந்த விழா தேவையற்றது.
மார்க்க சந்தேக கேள்வி - குர்ஆன் ஹதீஸ் ஆதார பதில் நிகழ்ச்சி _மங்கலம் கிளை _10062013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10.06.2013 அன்று கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது பள்ளியில் கேள்வி கேட்பதற்கான பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் மார்க்க சந்தேகங்களை கேட்டு பொது மக்கள் கேள்வி எழுதி போடுவார்கள், அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் வாரம் தோறும் திங்கள் கிழமை பதில் அளிக்கப்பட்டது.
Monday, 10 June 2013
சமூக சேவை _நல்லூர் கிளை _09062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 09.06.2013 அன்று நல்லூர் V.S.A. நகர் பகுதி ஆற்றில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் ,சுகாதார கேடாகவும் இருந்த செடி மற்றும் மரங்கள் கிளை சகோதரர்களால் அகற்றியும், கொசுத்தொல்லை ஏற்பட காரணமான சாக்கடை அடைப்புகளை அகற்றியும் கிளை சகோதரர்களால் சமூகசேவை செய்யப்பட்டது.
பேச்சாளர் பயிற்சி வகுப்பு _உடுமலைகிளை _09062013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக 09.06.2013 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மாவட்ட துணைசெயலாளர் சகோதரர்.சேக்பரீத் அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
மாவட்ட துணைசெயலாளர் சகோதரர்.சேக்பரீத் அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
இறைஅச்சம் _உடுமலைகிளை பெண்கள் பயான் _09062013
M.S.நகர் கிளை சார்பாக வாவிபாளையம் கிளை மார்க்க விளக்க நிகழ்ச்சிக்கு நிதியுதவி _09062013
Sunday, 9 June 2013
சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக நிதியுதவி _உடுமலை_07062013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 07.06.2013 அன்று TNTJ சார்பாக நடத்தப்பட்டு வரும்சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம்
மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக
உடுமலை பகுதியில் உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை ரூ6672/= ஐ
சகோ.கோவை சஹாபுதீன் வசம் கிளை நிர்வாகிகள் நிதியுதவி வழங்கினர்.
Subscribe to:
Posts (Atom)

.jpg)

.jpg)