Monday, 6 May 2013

"இஸ்லாம்" _M.S. நகர்கிளை பெண்கள் பயான் _05052013


 TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 05.05.2013 அன்று M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.பசீர் அவர்கள் "இஸ்லாம்"தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

M.S. நகர்கிளையில் அல்குர்ஆன்வகுப்பு


TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 05.05.2013 அன்று M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் குர்ஆன் வகுப்பு பாடம் நடத்தினார்கள்.

பிற மத சகோதரர். நந்தகுமார் அவர்களுக்கு கிருத்துவ விவாத dvd வழங்கி தாவா _04052013





TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 04.05.2013அன்று M.S. நகர்பகுதியை சேர்ந்த பிற மத சகோதரர். நந்தகுமார் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் வழங்கி மாமனிதர் நபிகள்நாயகம், இயேசுஇறைமகனா? புத்தகங்கள், கிருத்துவ விவாத dvd ஆகியவை வழங்கப்பட்டது.

மருத்துவ உதவி _கோம்பைதோட்டம் _04052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 04.05.2013 அன்று கோம்பைதோட்டம் பகுதியை சார்ந்த சகோதரி.நூர்ஜஹான் அவர்களின் கணவருக்கு ஏற்பட்ட நோய் சிகிச்சை மருத்துவசெலவினங்களுக்கு ரூ.3282/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

Saturday, 4 May 2013

கோம்பைதோட்டம் கிளை சார்பாக புதிய நூலகம் 04052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 04.05.2013 அன்று இஸ்லாத்தினை அதன் தூய முறையில் அறியவும், தங்களின் உலக மற்றும் மார்க்க அறிவை வளர்க்கவுமான  பல்வேறு இஸ்லாமிய புத்தகங்கள்,பொது அறிவு புத்தகங்கள்  கொண்ட புதிய நூலகம் ஆரம்பிக்கபட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தினர் வஹ்ஹாபிகளா?

தவ்ஹீத் ஜமாஅத்தினர் வஹ்ஹாபிகளா? 

அரஃபாத் 

கேடுகெட்ட துருக்கியர்கள் ஆளுகையின் கீழ் முஸ்லிம் நாடுகள் இருந்த போது மக்கா மதீனா நகரங்களும் துருக்கி ஷைத்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தன. (துருக்கியர்கள் உலக முஸ்லிம் நாடுகளுக்கு தலைமை வகித்ததால் நம்மையும் துருக்கர் எனச் சொல்லி பின்னர் துலுக்கர் என்று ஆனது.
இவர்கள் ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும் அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணைவத்தலும் கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின. 
பத்ருப்போர் நடந்த இடத்திலும் உஹதுப் போர் நடந்த இடத்திலும் நூற்றுக்கணக்கான தர்காக்கள் கட்டப்பட்டன. 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஒட்டி அமைந்துள்ள மஸ்ஜிதுன்னபவியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வாகவே ஆக்கப்பட்டார்கள். அவர்களின் அடக்கத்தலம் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் சுவரிலும் டூம்களிலும் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் கவிதைகள் பதியப்பட்டன. 
எந்த அளவுக்கு மார்க்கத்தை நாசப்படுத்தி இருந்தார்கள் என்றால் கஅபாவைச் சுற்றி நான்கு முஸல்லாக்கள் உருவாக்கப்பட்டன. ஒரே நேரத்தில் ஷாபி, ஹனபி, மாலிகி, ஹன்பலி என நான்கு பிரிவினரும் தனித்தனியாக தொழுகை நட்த்துவார்கள். இதைப் பார்த்தால் உலகமே காரித்துப்பும் அளவுக்கு இருந்தது. இது பற்றிய ஆக்கத்தைக் காண http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/kabavil_nangu_thozum_thalangal_irunthathaa/ ஹஜ் 

உம்ராவுக்கு வரும் பயணிகளிடம் கொடிய வரி விதிக்கப்பட்டது. 
கப்ரு வணக்கத்தை இஸ்லாத்தில் நுழைத்த இந்தக் கேடுகெட்டவர்களை எதிர்த்து இப்ன் சவூது படைதிரட்டி போரிட்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இவர் பெயரைக் குறிக்கும் வகையில் தான் சவூதி அரசாங்கம் எனப் பெயர் சூட்டப்பட்ட்து. 
இவரது போராட்டத்துக்கு பக்கபலமாக இருந்தவர் 
முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்ற மார்க்க அறிஞர். இவர் ஒரு பக்கம் அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதை எதிர்த்து பிரச்சாரம் செய்து துடிப்புள்ள இளைஞர்களை உருவாக்கி இருந்தார். 



அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் அநியாயத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற உறுதி மொழியின் அடிப்படையில் துருக்கியர்களிடமிருந்து நாட்டை மீட்கும் படையுடன் இணைந்து செயலாற்றினார். 

துருக்கி ஷைத்தான்கள் விரட்டி அடிக்கப்பட்ட உடன் எல்லா த்ர்காக்களும் உடைத்து எறியப்பட்டன. தாயத்து தட்டு மோசடிக்கார்ர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். 
லாயிலாஹ இல்ல்ல்லாஹ் என்பதைக் கொடியில் பதித்து இனி எல்லாம் தவ்ஹீத் தான் என்று பிரகடனம் செய்யப்பட்ட்து. நான்கு முஸல்லாக்களும் உடைத்து நொறுக்கப்ப்ப்பட்டு ஒரே முஸல்லாவாக ஆக்கப்பட்டது. ஹஜ் உம்ராவுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்து செய்யப்பட்டன. 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தில் மட்டும் இன்னும் சில அனாச்சாரங்கள் மிச்சம் உள்ளன தர்காக்களை உடைத்து எறிந்ததாலும் புரோகிதர்களை ஒழித்துக் கட்டியதாலும் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் போதனை செய்ததாலும் இந்தக் கொள்கையைச் சொன்னவர்கள் வஹ்ஹாபிகள் என்று குறிப்பிடப்படுகின்றனர். ஆனால் இவரது பெயர் வஹ்ஹாப் அல்ல. அப்துல் வஹ்ஹாபும் அல்ல. இவரது தந்தையின் பெயர் தான் அப்துல் வஹ்ஹாப். இவரது பெயர் முஹம்மத் ஆகும். முஹம்மதீ என்று பெயர் சூட்டினால் அது நபிகள் நாயகத்தைக் குறித்து விடும் என்று அஞ்சிய கப்ரு வணங்கிக் கூட்டம் அவ்ரது தந்தையின் பெயரால் வஹ்ஹாபிகள் எனக் கூறி தனிமைப்படுத்த முயன்றனர். 
ஆனால் அவரது தந்தையின் பெயர் அப்துல் வஹ்ஹாப் தானே தவிர வஹ்ஹாப் அல்ல. வஹ்ஹாப் என்பது அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களில் ஒன்றாகும். முஹம்மதிகள் என்று சொன்னால் நபி வழி நடப்பவர்கள் என்று மக்கள் நினைப்பார்கள் என்று அஞ்சினார்கள். ஆனால் வஹ்ஹாபிகள் என்று அதைவிட அழகான பெயரை அவர்கள் வாயாலேயே அல்லாஹ் சொல்லவைத்து விட்டான். 
வஹ்ஹாப் என்றால் அல்லாஹ். வஹ்ஹாபி என்றால் அல்லாஹ்வின் கட்சியைச் சேர்ந்தவர் என்று பொருள். நாங்கள் கப்ரு வணங்கிகள் அல்ல என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது. 

துருக்கி ஷைத்தான்களை எதிர்த்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து மிகப் பெரும் தியாகம் செய்த மாவீர்ர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப். பெருமிதப்படும் வரலாறு சமைத்தவர். அவர் சந்தித்து போன்ற அடக்குமுறைகளையும் எதிர்ப்புகளையும் நாம் சந்தித்து இருந்தால் நம்மில் எத்தனை பேர் கடைசி வரை தாக்கு பிடித்திருப்போம் என்று சொல்ல முடியாது. 
இன்றைய சவூதி ஆட்சியாளர்கள் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் இப்னு சவூதையும் இப்னு அப்துல் வஹ்ஹாபயும் ஏகத்துவவாதிகள் வெறுக்க முடியாது. அவர் அன்று துணிச்சலுடன் கப்ரு வணக்கத்தின் தீமைகளை எதிர்த்து தான் நமக்கெல்லாம் உத்வேகத்தை அளித்தது என்பதை மறந்து விட முடியாது. 
நாம் பெரிதும் மதிக்கும் நல்லறிஞர்களில் ஒருவர் தான் முஹ்ஹம்த் பின் அப்துல் வஹ்ஹாப். ஆனால் அவர் சொன்ன அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பது இதற்கு அர்த்தமில்லை. அவரது சில போதனைகள் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக உள்ளன. அதை நாம் சுட்டிக்காட்டி நிராகரித்துள்ளோம். 

 Published on: 03.05.2013. 03:10 Views: 1453

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/nallor_varalaru/thauheed_jamaaathinar_vahhabikala/
Copyright © www.onlinepj.com

பிறமதத்தினர் பள்ளிவாசலுக்குள் வரலாமா?


 ஏன் எங்களை பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பதில்லை என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி கேட்கிறார்கள். இதற்கு தக்க பதில் கொடுத்தால் எனக்கு தாஃவா செய்வதற்கு பயன் உள்ளதாக இருக்கும் 

டி.ஆபிதீன் 

பதில் : 
முஸ்லிமல்லாதவர்கள் பள்ளிவாசலுக்குள் வரக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் உள்ளது. இது தவறான கருத்தாகும். குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் இதைத் தெளிவாக அனுமதிக்கின்றன நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பள்ளியான மஸ்ஜிதுந் நபவீயில் முஸ்லிமல்லாதவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்க வைத்தார்கள். இதைப் பின்வரும் செய்திகளின் மூலம் அறியலாம்

462حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ سَمِعَ أَبَا هُرَيْرَةَ قَالَ بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ فَخَرَجَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَطْلِقُوا ثُمَامَةَ فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنْ الْمَسْجِدِ فَاغْتَسَلَ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ رواه البخاري 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கிக் குதிரைப்படை பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த (யமாமா வாசிகளின் தலைவரான) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் (மக்கள்) கட்டிவைத்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்த (நாட்களில் முன்றாம் நாளின்) போது, "ஸுமாவை அவிழ்த்து விட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள். அவர் பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமானன பேரீச்சந்தோட்டத்திற்குச் சென்று குளித்தார். பிறகு பள்ளீவாசலுக்குள் வந்து "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி மொழிகிறேன்'' என்றார். 

நூல் :புகாரி (462) 

இணைவைப்புக் கொள்கையில் இருந்த ஸுமாமா பின் உஸால் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாட்கள் பள்ளிவாசலில் தான் தங்க வைத்துள்ளார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது. 

4854حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثُونِي عَنْ الزُّهْرِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ فَلَمَّا بَلَغَ هَذِهِ الْآيَةَ أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمْ الْخَالِقُونَ أَمْ خَلَقُوا السَّمَوَاتِ وَالْأَرْضَ بَلْ لَا يُوقِنُونَ أَمْ عِنْدَهُمْ خَزَائِنُ رَبِّكَ أَمْ هُمْ الْمُسَيْطِرُونَ قَالَ كَادَ قَلْبِي أَنْ يَطِيرَ قَالَ سُفْيَانُ فَأَمَّا أَنَا فَإِنَّمَا سَمِعْتُ الزُّهْرِيَّ يُحَدِّثُ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ وَلَمْ أَسْمَعْهُ زَادَ الَّذِي قَالُوا لِي رواه البخاري 

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் "அத்தூர்' எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். "(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்து விட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்கள் இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துபவர்களா?'' எனும் இந்த (52:35-37ஆகிய) வசனங்களை நபி அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்துவிடுமளவுக்குப் போய்விட்டது. 

நூல் : புகாரி (4854) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் மஃக்ரிப் தொழுகை நடத்தியபோது அங்கு அவர்கள் ஓதியதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் செவியேற்றார்கள். இது மேற்கண்ட புகாரியின் அறிவிப்பில் உள்ளது இந்தச் சமயத்தில் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை. இணைவைப்புக் கொள்கையில் இருந்தார்கள். இது கூடுதலாக முஸ்னது ஹுமைதி என்ற நூலில் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது 

مسند الحميدي - أحاديث جبير بن مطعم رضي الله عنه حديث : ‏539‏24954 حدثنا الحميدي قال : ثنا سفيان قال سمعت الزهري يحدث عن محمد بن جبير بن مطعم ، عن أبيه أنه " سمع رسول الله صلى الله عليه وسلم يقرأ في المغرب بالطور " قال سفيان : قالوا في هذا الحديث : إن جبيرا قال : " سمعتها من النبي صلى الله عليه وسلم وأنا مشرك فكاد قلبي أن يطير " ولم يقله لنا الزهري * 

நான் இணைவைப்பவனாக இருக்கும் நிலையில் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றேன். நூல் : முஸ்னது ஹுமைதி எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இணைவைப்பவர்கள் பள்ளிக்குள் வரும் நிலை இருந்துள்ளது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்யாமல் அனுமதித்து இருந்தார்கள். சகீஃப் குலத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாக பேசி இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்காக வந்தனர். இன்னும் இஸ்லாத்தை ஏற்றிராத நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களை பள்ளிவாசலில் தங்க வைத்தார்கள். 

3917أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ النُّعْمَانِ بْنِ سَالِمٍ قَالَ سَمِعْتُ أَوْسًا يَقُولُ أَتَيْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَفْدِ ثَقِيفٍ فَكُنْتُ مَعَهُ فِي قُبَّةٍ فَنَامَ مَنْ كَانَ فِي الْقُبَّةِ غَيْرِي وَغَيْرُهُ فَجَاءَ رَجُلٌ فَسَارَّهُ فَقَالَ اذْهَبْ فَاقْتُلْهُ فَقَالَ أَلَيْسَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ قَالَ يَشْهَدُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَرْهُ ثُمَّ قَالَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَإِذَا قَالُوهَا حَرُمَتْ دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ إِلَّا بِحَقِّهَا قَالَ مُحَمَّدٌ فَقُلْتُ لِشُعْبَةَ أَلَيْسَ فِي الْحَدِيثِ أَلَيْسَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ قَالَ أَظُنُّهَا مَعَهَا وَلَا أَدْرِي رواه النسائي 

நுஃமான் பின் சாலிம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : சகீஃப் கூட்டதாருடன் நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வந்தேன். ஒரு கூடாரத்தில் நான் அவர்களுடன் உறங்கினேன். நூல் : நஸாயீ (3917) மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலுக்கு மட்டுமே இணைவைப்பாளர்கள் வரக்கூடாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَذَا وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ إِنْ شَاءَ إِنَّ اللَّهَ عَلِيمٌ حَكِيمٌ (28)9 

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது. அல்குர்ஆன் (9 : 28) 

இதிலிருந்து மஸ்ஜிதுல் ஹராம் அல்லாத மற்ற எந்தப் பள்ளிகளானாலும் இணைவைப்பாளர்கள் உள்ளே செல்வது குற்றமில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. முஸ்லிம் அல்லாதவர்கள் பள்ளிவாசலுக்குள் வரும் போது நல்ல விசயங்களைப் பார்க்கும் வாய்ப்பும் நல்ல விசயங்களைக் கேட்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கின்றது. இதன் மூலம் அவர்கள் முஸ்லிமாகவும் மாறலாம். எனவே மார்க்கம் அனுமதித்த இந்தக் காரியத்தை யாரும் தடை செய்யக் கூடாது 

மேலும் விபரத்துக்கு இதையும் பார்க்கவும். 

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/mulimalathavr_palliku_varala

ma/

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/
Copyright © www.onlinepj.com

தாராபுரம் கிளையின் தன்னார்வ இரத்த தான சேவையை பாராட்டி அரசு விருதுகள் _03052013

தமிழக அரசு சார்பில் 03.05.2013 அன்று திருப்பூரில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்த தான நாள்விழாவில்  TNTJ திருப்பூர் மாவட்ட தாராபுரம் கிளையின் தன்னார்வ இரத்த தான சேவையை பாராட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள்  TNTJ திருப்பூர் மாவட்டதிற்கு 2 இரத்த தான விருதுகள்    வழங்கினார்.

Friday, 3 May 2013

TNTJ திருப்பூர் மாவட்டஇரத்த தான சேவையை பாராட்டி அரசின் இரத்த தான விருதுகள் _03052013





தமிழக அரசு சார்பில் 03.05.2013 அன்று திருப்பூரில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்த தான நாள் விழாவில்  TNTJ திருப்பூர் மாவட்ட தன்னார்வ இரத்த தான சேவையை பாராட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள்  TNTJ திருப்பூர் மாவட்டதிற்கு 2 இரத்த தான விருதுகள்    வழங்கினார்.


Thursday, 2 May 2013

கடவுள் படைப்பில் ஏற்ற தாழ்வு ஏன் _ Copyright © www.onlinepj.com

அல்லாஹ் ஏன் பிறப்பால் குருடர்கள், செவிடர்கள் ஊமைகள் கை கால் ஊனமுற்றவர்கள் இப்படி ஏன் படைத்துள்ளான் தயவு செய்து விளக்குங்கள். 

நூருல் அமீன் 



பதில் : நாம் எழுதிய
அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இக்கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. 
அதையே உங்கள் கேள்விக்குக்கும் பதிலாக அளிக்கிறோம். 

மனிதர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டது போன்ற குறைகள் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. 
ஆனா
ல் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன. 
வறுமை, அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை, வலிமையானவர்களின் அடக்குமுறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத் திறன் குறைவு, இப்படி ஆயிரமாயிரம் பாதகங்கள் உள்ளன. 
நீங்கள் நோயை மட்டும் பாதகமாகக் கருதுகிறீர்கள்! 
மேலே சுட்டிக்காட்டியது போன்ற 
ஏதேனும் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பெற்றே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். 
எந்தப் பாதகமும் இல்லாத ஒருவரும் உலகில் கிடையாது. 
நமக்கு இறைவன் வறுமை மற்றும் நோயைக் கொடுத்திருக்கலாம். 
ஆனால் செல்வமும், ஆரோக்கியமும் உள்ளவருக்கு வேறு ஏதேனும் குறைகள் இருக்கும். 
அவருக்கு பொருத்தமில்லாத மனைவியையோ, மக்களையோ இறைவன் கொடுத்திருப்பான். 
அல்லது வேறு ஏதேனும் குறைகளைக் கொடுத்திருப்பான். 
நீங்கள் நோயை நினைத்துக் கவலைப்படுவது போலவே அவர் குடும்பத்தை நினைத்துக் கவலைப்படுவார். 
மனதை உலுக்குகிற அழுத்தம் இல்லாததால் நீங்கள் படுத்தவுடன் தூங்கி விடுவீர்கள். 

நீங்கள் யாரைப் பார்த்து பொறாமைப் படுகிறீர்களோ அவரால் பஞ்சு மெத்தையிலும் தூங்க முடியாது. 
இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும், நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். 
எல்லோருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் யாரும் வேலைக்குப் போக மாட்டோம். நமது நிலத்தை நாமே உழுது பயிரிட சக்தி பெறவும் மாட்டோம். அனைவரும் சோத்துக்கு இல்லாமல் செத்து விடுவோம்.
 எல்லோரிடமும் கோடி ரூபாய் இருந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அனைவரும் அழிவது தான் நடக்கும். இதனால் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறையையும், நிறையையும் வழங்கி இறைவன் கருணை புரிந்துள்ளான். 
நோயாளியைக் கொண்டு மருத்துவரின் வாழ்க்கை ஓடுகிறது. 
மருத்துவரின் மூலம் வியாபாரியின் வாழ்க்கை ஓடுகிறது. 
வியாபாரியின் மூலம் விவசாயி, மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை ஓடுகிறது. 
இத்தகைய சங்கிலித் தொடர் மூலம் உலகம் இயங்குவதற்காகத் தான் இறைவன் இவ்வாறு செய்துள்ளான். 
எத்தனையோ செல்வந்தர்கள் தினம் இரண்டு இட்லி தான் சாப்பிட வேண்டும்; மாமிசம், எண்ணெய் தொடக்கூடாது என்று மருத்துவர்களால் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். 
கோடி கோடியாக இருந்தும் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடிவதில்லை. கிடைக்கிற அனைத்தையும் சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள ஏழை, இந்த வகையில் அவனை விடச் சிறந்தவன் இல்லையா? 
இது போல் வறுமையும், நோயும் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள நிறைகளை எண்ணிப் பார்த்தால் நிச்சயமாக நோயற்றவர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு வசதி, வாய்ப்பு, பாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருப்பதை உணருவார்கள். 
அப்போது இறைவன் எத்தகைய கருணைக் கடல் என்பதை சந்தேகமற அறிவார்கள். 
மேலும் விபரமறிய இந்த இணைப்பை க்ளிக் செய்து வாசிக்கவும்

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/kadavul_irunthal_etrathazvu_en/ http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/pirachaniku_kadavul_thane_karanam/ http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/manithanin_thunbathuku_kadavul_thane_karanam/ http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/maru_piravi_unda/

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/kadavul_padaipil_etrathazvu_en/
Copyright © www.onlinepj.com

"வீட்டுவாடகையும், மனிதநேயமும்" _கோம்பைதோட்டம்கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  கோம்பைதோட்டம் கிளை சார்பாக 
 29.04.2013 அன்று திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

சகோ.பக்கீர்முஹம்மதுஅல்தாபி அவர்கள் "ஆடம்பரதிருமணமும், நபிவழியும்" எனும் தலைப்பிலும்  
சகோ.அஹமது கபீர் அவர்கள் "வீட்டுவாடகையும், மனிதநேயமும்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிற மத 6 வயது சிறுவனுக்கு மருத்துவ உதவி _ M.S. நகர்கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 29.04.2013 அன்று M.S. நகர்பகுதியை சேர்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிற மத 6 வயது சிறுவனின்    மருத்துவ சிகிச்சை செலவினகளுக்காக ரூ.7002 /= வசூல் செய்து  மருத்துவ உதவி வழங்கப்பட்டது 

Wednesday, 1 May 2013

புது நகரம் பள்ளிகட்டுமான பணிகளுக்காக நிதியுதவி -உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக26.04.2013 அன்று கேரளா மாநிலம் புது நகரம்  பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரு.3,350/= ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது

ஆசிட் வீச்சைத் தடுக்க என்ன வழி?


காதலிக்க மறுக்கும் பெண்மீது ஆசிட் வீசுவதைத் தடுக்க ஆசிட் கிடைக்காத வகையில் சட்டம் போடுவதும், ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் தீர்வாகுமா? 

அப்துல்லாஹ், கீழக்கரை 

காதலிக்கவில்லை என்ற கோபம்தான் இதற்குக் காரணம். இந்தக் கோபத்தை வெளிப்படுத்த ஒருவன் ஆசிட்டைப் பயன்படுத்துகிறான். ஆசிட் கிடைக்காவிட்டால் அரிவாளைப் பயன்படுத்துவான். அல்லது வேறு எத்தனையோ சாதனங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவான். எனவே ஆசிட் கிடைக்காமல் செய்வது இதற்கான தீர்வாகாது. 

ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும்
அவர்கள் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். 

குறிப்பிட்ட மாடலில் ஒரு சட்டை வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது கிடைக்காவிட்டால், அல்லது கிடைத்து விலை கட்டுப்படியாகாவிட்டால், என்ன செய்கிறோம்? அதை மறந்துவிட்டு கிடைப்பதை வாங்கி அணிந்து கொள்கிறோம். 

குறிப்பிட்ட உணவுக்கு ஆசைப்படுகிறோம். அந்த உணவு கிடைக்கவில்லை எனில், அதையே ஜெபம் செய்துகொண்டு செத்துப் போகமாட்டோம். அது கிடைக்காவிட்டால் வேறு உணவைச் சாப்பிட்டுக் கொள்கிறோம். 

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால், மருத்துவக் கல்லூரிகளைக் கொளுத்துவோமா? வேறு துறையைத்தான் தேர்வு செய்வோம். இதுதான் எதார்த்தம். 

இதுதான் வேண்டும். இது தவிர வேறு எதுவும் வேண்டாம் என்பது மனநோய். 

அதுபோல் ஒரு ஆணுக்குப் பெண் தேவை. பெண்ணிற்கும் ஆண் தேவை. ஒருவனை அல்லது ஒருத்தியை விரும்புகிறோம். அவள் இன்னொருவன் மனைவியாக இருக்கலாம். இன்னொருவனை விரும்புபவளாக இருக்கலாம். அல்லது நம்மை அவளுக்குப் பிடிக்காது இருக்கலாம். அதன் காரணமாக அவள் நம்மை நிராகரித்துவிட்டால், வேறு ஒருவரைத் தேடிக் கொண்டால், அதுதான் எதார்த்தம். 

அவன்தான் வேண்டும் - அவள்தான் வேண்டும் என்று அதையே நினைத்துக் கொண்டு இருந்தால், அது மனநோய். இந்த மனநோய்தான் ஆசிட் வீச்சிற்கும் தன்னைப் பிடிக்காதவரை அழித்தொழிக்கவும் காரணம். 


இந்த மனநோயை அறிவு ஜீவிகள்(?), ஊடகங்கள் போன்ற விஷக்கிருமிகள் காதல் என்ற பெயரில் பரப்புகின்றன. இவன்தான் வேண்டும் - இவள்தான் வேண்டும் என்று உருகுவதுதான் சிறந்தது. அதுதான் தெய்வீகக் காதல் என்றெல்லாம் மக்களுக்கு மனச் சிதைவை இவர்கள் தான் ஏற்படுத்துகின்றனர். 

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிலை மாறாதவரை இதுபோன்ற எழுத்தாளர்கள் ஊடகத்துறையினரில் உள்ள விஷக்கிருமிகளை அடக்கி ஒடுக்க சட்டம் போடாதவரை இதுபோன்ற சம்பவங்களை ஒருக்காலும் தடுக்கவே முடியாது. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புவதும், ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவதும் தான் காதல். விருப்பம் நிறைவேறாவிட்டாலும் நான் அவளையே/அவனையே நினைத்து உருகுவேன் என்பது காதல் அல்ல - அது மனநோய்தான். தங்களது மகன் அல்லது மகளுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டு, அதையே நினைத்து உருகிக் கொண்டு இருந்தால், ஆகா தெய்வீகக் காதல் என்று ஊடகங்களின் முன்னாள் பாராட்டிக் கொண்டா இருப்பார்கள்?

தான் விரும்புவதையே மக்களுக்கும் விரும்புபவன்தான் அறிவாளி. 

தொலைக்காட்சியில் முகம் காட்ட வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக பேசுபவன் அறிவாளி இல்லை என்ற விழிப்புணர்வை எற்படுத்தினால், இதுபோன்ற செயல்களை ஓரளவு தடுக்கமுடியாது 

(குறிப்பு :ஆசிட் வீசியவன் அவள் தனக்கு கேடு செய்தால் என்பதற்காகவோ தனது சொத்தைப் பறித்துக் கொண்டால் என்பதற்காகவோ ஆசிட் வீசவில்லை. தனக்கு அவள் கிடைக்கவில்லை என்ற வெற்தான் காரணம். அந்த வெறியை அவனுக்கு ஊட்டியவர்கள் அறிவு ஜீவிகள் எனும் விஷக்கிருமிகள் தான்.)

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/unarvuweekly/acid_veechai_thadukka_ennavazi/
Copyright © www.onlinepj.com

பெங்களூர் குண்டுவெடிப்பில் முஸ்லிம்கள் கைது சரியா?


பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன? 
இது தவறு என்றால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கை என்ன? 

.....மசூது, கடையநல்லூர்......

எவ்வித அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் பொய்யாகக் கைது செய்துள்ளனர் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை. 
அத்துடன் குமரி மாவட்ட பா.ஜ.க. பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கிலும் இவ்வாறு பொய்யாகக் கைது செய்துள்ளனர். தமிழக அரசும், கர்நாடக பா.ஜ.க. அரசும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சு நடத்தி முஸ்லிம்கள் சிலரைக் கைது செய்தால், தேர்தலில் கைகொடுக்கும் என்று கள்ள ஒப்பந்தம் செய்திருப்பார்களோ என்று நினைக்கும் அளவுக்கு இந்தக் கைதுகள் அமைந்துள்ளன. 
இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஒன்றும் செய்யாமல் உள்ளே போவதைவிட எதையாவது செய்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணத்தை விதைக்கும் ...அநியாயமாகவே இதை நாம் காண்கிறோம்.
இதில் எள்முனையளவு கூட உண்மை இல்லை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நடுநிலையாளருக்கும் தெரிகிறது. 
ஆனால் நாம் ஏன் இதற்காகப் போராட்டம் நடத்தவில்லை என்பதற்கு முன்னரே நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். சில ஆண்டுகளுக்கு முன் சிறைவாசிகளுக்காக நாம் குரல் கொடுத்த போது எங்களை வைத்து அரசியல் பண்ண வேண்டாம் என்று அவர்கள் துண்டுப் பிரசுரம் வெளியிட்டு நாடெங்கும் பரப்பினார்கள். அவர்களை வைத்து தவ்ஹீத் ஜமாஅத் அரசியல் நடத்தவில்லை. சிறைவாசிகள் பெயரைச் சொல்லி நாம் எந்த வசூலும் செய்வதில்லை. சிறைவாசிகளுக்கு உதவுகிறோம் என்பதைக்கூறி நாம் ஆள் சேர்ப்பதும் இல்லை. ஏகத்துவக் கொள்கையை மட்டுமே முன் வைத்துதான் நாம் மக்களை வென்றெடுத்து வருகிறோம். அப்படி இருந்தும் அவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று பகிரங்கமாக அறிவித்தனர். அப்போது முதல் ஏற்கனவே வழக்கில் உள்ளவர்களுக்காக போராட்டம் எதுவும் நடத்துவதில்லை. 
ஆனால் இதுபோன்ற அக்கிரமங்களை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம். அரசியல் செய்கிறோம் என்று சொல்லமுடியாத வகையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் மனுக்கள்அளித்துள்ளோம்.  அந்த அடிப்படையில்தான் இதை இப்போது கடுமையாகக் கண்டிக்கவும் செய்கிறோம். 

கடந்த காலத்தில் தடா என்ற பொய் வழக்கை ஆரம்பித்து வைத்த தமிழக அரசின் நடவடிக்கைதான் குண்டு வெடிப்பு வரை கொண்டு போய் சேர்த்தது. அதே வழிமுறையில் செல்ல வேண்டாம். சந்தேகத்தின் பெயரில் இது போன்ற கைது நடவடிக்கை வேண்டாம். இது மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/unarvuweekly/bengalur_kunduvedippu_muslimkal_kaithu/
Copyright © www.onlinepj.com

"உலக அற்புதம் எது? " _வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை சார்பில் 
27.04.2013அன்று   வெங்கடேஸ்வராநகர் 
மதரசுதுத் தக்வா வில் பெண்கள்பயான் நடைபெற்றது.
அதில் "உலக அற்புதம் எது? " எனும் தலைப்பில் சகோ.ஷாஹிது ஒலி   அவர்கள் உரை நிகழ்த்தினார்.

Tuesday, 30 April 2013

கோடைகால பயிற்சி _ உடுமலை






TNTJ 
திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக உடுமலை மஸ்ஜிதுத் தக்வா பள்ளி வளாகத்தில் கோடைகால பயிற்சி முகாம் 26.04.2013 முதல் நடைபெற்றுவருகிறது.


ஆண்கள் மற்றும் பெண்கள் 65 நபர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

"பித்-அத்" தாராபுரம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _29042013





TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக 29.04.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் சதாம் அவர்கள் "பித்-அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது

Monday, 29 April 2013

பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்!



பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்! –

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டுநடப்புகள்


இந்தக் காலத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது.  புட்டிப்பால் கொடுத்தே வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.  ஆனால் தாய்ப்பால் கொடுக்காமல் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுப்பார்களேயானால் குழந்தைகளும் சரியான நோய் எதிர்ப்பு சக்தி பெறாமல் சீரழிவதோடு, பெண்களுக்கும் இதனால் புற்றுநோய் ஏற்படுகின்றது என்றும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் காக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு :  இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்) பெண்களுக்கு மேல் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.  குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன்மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றது. 

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கூறப்படும் வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன்மூலம், பல நோய்களிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.  

உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதி மையமும், அமெரிக்காவின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் கூறியுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன்மூலம்

ஒருவர் 34 சதவிகிதம் தம்மை நோயிலிருந்து காத்துக்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த வழிமுறைகள் வருமாறு: ·  ஆரோக்கியமான உடல் எடை, ·  சுறுசுறுப்பாக இருத்தல், ·  உடல் எடையைக் கூட்டும் உணவுப்பொருட்கள் பானங்களைத் தவிர்த்தல், ·  தாவர உணவு வகைகளையே அதிகம் உட்கொள்ளுதல், ·  மது அருந்துவதைத் தவிர்த்தல் மற்றும் ·  6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் அளித்தல்  மேற்கண்ட விஷயங்களை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்று இந்த ஆய்வு கூறுகின்றது.  லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இந்த ஆராய்ச்சியை வழி நடத்தியவர். இந்த வழிமுறைகளை பின்பற்றுவோருக்கு புற்றுநோய், ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அவர் கூறியுள்ளார்.  மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. அல்குர் ஆன் 31 : 14  


பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிறவனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை.

சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். அல்குர் ஆன் 2 : 233  
மேற்கண்ட வசனங்களில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான்.  தங்களது குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்ட வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில்தான் இறைக்கட்டளையாக போடப்பட்டுள்ளது. வேறெந்த மதமோ, சித்தாந்தமோ பாலூட்டுவதை கட்டளையாகப் போடவில்லை.  இஸ்லாம் கட்டளையிடக்கூடிய ஒவ்வொரு வழிமுறையும் மனித குலத்துக்கு நன்மைப் பயப்பதாகவே அமைந்துள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வு முடிவுகள் உண்மைப்படுத்துகின்றன.

23.04.2013. 01:58

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/
Copyright © www.onlinepj.com

Sunday, 28 April 2013

கோபி பள்ளிகட்டுமான பணிகளுக்காக நிதியுதவி - MS நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 26.04.2013 அன்றுஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் மஸ்ஜுத் அக்ஸா பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரு.12,200/= ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது

புற்று நோய் சிகிச்சை செலவினகளுக்காக _மருத்துவ உதவி _தாராபுரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக 19.04.2013 அன்று
தாராபுரம் பகுதியை சேர்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட சகோதரி.மும்தாஜ்  அவர்களின் மருத்துவ சிகிச்சை செலவினகளுக்காக ரூ.3500 /= வசூல் செய்து  மருத்துவ உதவி வழங்கப்பட்டது 

மழை தொழுகை _தாராபுரம் அலங்கியம் _27042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பாக 27.04.2013 அன்று   தாராபுரம் அலங்கியம் பகுதி திடலில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி மழை தொழுகை நடைபெற்றது..
தாராபுரம் அலங்கியம்  மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய 
பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்தனர்.சகோதரர்.திருப்பூர் சதாம் அவர்கள் தொழுகை நடத்தினார்கள் .

கிரகணதொழுகை _M.S.நகர் கிளை _25042013




TNTJ திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக, 25.04.2013 அன்று சந்திர கிரகணம் ஏற்பட்டதால் நபிவழி அடிப்படையில் M.S.நகர் கிளைபகுதியில் கிரகணதொழுகை நடைபெற்றது.

அதில் சகோதரர் திருப்பூர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்

கிரகணதொழுகை _தாராபுரம் கிளை _25042013



TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக, 25.04.2013 அன்று   சந்திர கிரகணம்  ஏற்பட்டதால் நபிவழி அடிப்படையில் தாராபுரம் பகுதியில் கிரகணதொழுகை நடைபெற்றது. 
அதில் சகோதரர்   தாராபுரம் தவ்பீக் அவர்கள் உரையாற்றினார்

Friday, 26 April 2013

ஷிர்க்க்கு எதிராக குழு தாவா மடத்துக்குளம் கிளை




TNTJ 
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 26.04.2013 அன்று கிளை சகோதர்கள் குழுவாக சென்று ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் செய்து ஒரு வீட்டில் இருந்த தர்கா போட்டோ,எந்திரங்கள்,மற்றும் காயல்  பட்டிணம் புர்தா ஷரிப் எனும் ஷிர்க்கான நிகழ்ச்சிக்கென வைத்திருந்த உண்டியல் ஆகியவைகளின் தீமைகளை விளக்கியதால் வீட்டின் உரிமையாளர்கள் தாமாக அவற்றை  கழற்றி எறிந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்