பதில் அளித்தார். திருப்பூர் மருதுவரணி செயலாளர் சகோ:-S.M.யூசுப் தலைமை தங்கினார்.(26.05.2011 SUNDAY) posted by SM.YOUSUF
Wednesday, 29 June 2011
பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
பதில் அளித்தார். திருப்பூர் மருதுவரணி செயலாளர் சகோ:-S.M.யூசுப் தலைமை தங்கினார்.(26.05.2011 SUNDAY) posted by SM.YOUSUF
Tuesday, 28 June 2011
Monday, 27 June 2011
தமிழாக்கம் செய்ய கூகிளின் புது வசதி
கூகிள் Translate பற்றிஅனைவரும் அறிந்திருப்பீர்கள். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கட்டுரைகளையோ, வலைத்தளங்களையோ மாற்ற உதவுகிறது. ஆனால் இதுவரை தமிழ் மொழிக்கு மாற்றும் வசதி இல்லை. தற்போது அதனையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் தற்போது சோதனை முறையாகவே அறிமுகம் செய்துள்ளது. அதனால் சரியாக மொழிமாற்றம் செய்யவில்லை. பல ஆங்கில வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளாகவே கொடுக்கிறது. அதே போல தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றினால் பல தமிழ் வார்த்தைகளை தமிழிஷ் [Tamil word in English] வார்த்தைகளாகவே கொடுக்கிறது.
மொழிமாற்றம் செய்ய:

http://translate.google.com/ தளத்திற்கு சென்று நீங்கள் டைப் செய்யுங்கள். நீங்கள் எந்த மொழியில் டைப் செய்தாலும் முடிந்தவரை அது தானியங்கியாக கண்டுபிடித்துவிடும். பிறகு மேலே TO என்ற இடத்தில் எந்த மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டுமோ, அதனை தேர்வு செய்யவும். பிறகு Translate என்பதை க்ளிக் செய்யவும்.
வலைத்தளங்களை மொழிமாற்றம் செய்ய:
வலைத்தளங்களை மொழிமாற்றம் செய்ய http://translate.google.com/ தளத்திற்கு சென்று தளமுகவரியை (URL) கொடுத்து Enter கீயை அழுத்தவும்.
தமிழுடன் சேர்த்து வங்காளம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகள் தற்போது சோதனை முறையில் இருக்கின்றன. Google Translate Gadget-ல் இன்னும் இந்த வசதி வரவில்லை.
இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை காண : இங்கு க்ளிக் செய்யவும்.
சைபர் க்ரைம் - ஒரு பார்வை
இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.
இணைய குற்றங்கள் (Cyber Crimes):
1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள். இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.
2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.
3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.
4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.
6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]
7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.
பாதுகாப்பு வழிகள்:
1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.
2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.
3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.
4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.
5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.
6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.
7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.
8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.
9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.
10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும்.
13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.
பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.
சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:
1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு
2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள்
3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].
4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள்
5. கடன் அட்டை எண் திருட்டு
6. வலைத்தள ஹேக்கிங்
தமிழ்நாட்டில் புகார் கொடுக்க:
மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in
தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in
கவனிக்க: இந்த பதிவை எழுதுவதற்கு என்னை தூண்டியதே 3,6,7 ஆகிய குற்றங்கள் தான். அவைகள் என்னை அதிகம் கவலைப்பட வைத்தது. நாளைய தலைமுறையினர் வழிமாறி செல்லக்கூடாது என்பதே எனது ஆசை.
posted by SM.YOUSUFஇணைய குற்றங்கள் (Cyber Crimes):

சென்னை தவிர பிற மாவட்டங்கள்:
Tmt.Sonal V.Misra, IPS,SCB, Cyber Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32
மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in
சென்னை:
Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32
தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in
கவனிக்க: இந்த பதிவை எழுதுவதற்கு என்னை தூண்டியதே 3,6,7 ஆகிய குற்றங்கள் தான். அவைகள் என்னை அதிகம் கவலைப்பட வைத்தது. நாளைய தலைமுறையினர் வழிமாறி செல்லக்கூடாது என்பதே எனது ஆசை.
மாணவரணி செயற்குழு _24042012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பாக 24.04.2011
அன்று காலை 11.00 மணிக்கு மாவட்ட தலைமை மர்கசில் வைத்து மாணவரணியின் எதிர்கால
செயல்பாடுகள் குறித்து செயற்குழு நடைப்பெற்றது. இதில் மாவட்ட மாணவரணி
செயலாளர் சகோதரர் ஷாஹிது ஒலி அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் மாணவரணியின்
பணிகள் நோக்கம் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார்.மேலும் தாவா
பணியும் மாணவர்களும் என்ற தலைப்பில் சகோதரர் ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்.posted by SM.YOUSUF
கல்விஉதவி _19062012
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத திருப்பூர் மாவட்ட மாணவரணியின் சார்பாக 19.06.2011
அன்று M.பெனாசிர் என்ற தாய் தந்தை இல்லாத மாணவிக்கு மேற்படிப்பிற்காக கல்விஉதவி
தொகையாக 4400 ரூபாய் வழங்கப்பட்டது.இதை மாவட்ட துணை தலைவர் ஷாஜஹான்
மற்றும் மாவட்ட மாணவரனி துணை செயலாளர் தஸ்தகிர் வழங்க மாணவியின் தாதி பெற்று
கொண்டார்.posted by SM.YOUSUF

தர்பியா _KNP காலனி _17042011
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட KNP காலனி கிளையின் சார்பாக
17.04.2011 அன்று காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு மாவட்ட அளவிலான தர்பியா
நிகழ்ச்சி
நடைப்பெற்றது. இதில் சகோதரர் H.M.அஹ்மது கபீர் அவர்கள் 'நேரடி தொழுகை
பயிற்சி' அளித்தார்கள்.மேலும் சகோதரர் M.I.சுலைமான் அவர்கள் 'சுன்னத் ஜமாஅதமற்றும் தவ்ஹீத் ஜமா அத இடைய உள்ள கொள்கை வேறுபாடுகள்' குறித்து பயிற்சி
அளித்தார்கள்.posted by SM.YOUSUF
இரத்த தான முகாம் _பெரிய கடை வீதி 19062011
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட பெரிய கடை வீதி கிளையின் சார்பாக
19.06.2011 அன்று காலை 9.00 மணிக்கு நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில் வைத்து
திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் மற்றும் லோட்டஸ்
கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்
நடைப்பெற்றது.இம்முகாமிற்கு கிளை தலைவர் A.சலீம் அவர்கள் தலைமை
தாங்கினார்கள்.மாவட்ட துணை தலைவர் ஷாஜஹான் முன்னிலை வகித்தார்.இம்முகாமில் 45
பேர் இரத்த தானம் செய்தார்கள். திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்
dr.பிரியா விஸ்வம் ஸ்டாப், நர்ஸ் காயத்திரி ,செல்வமணி மற்றும் லேப் டெக்னிசியன்
அனிதா, ஊழியர் காளிமுத்து ஆகியோர் கலந்துகொண்டார்கள்.இம்முகாமில் 148 பேர் கண்
பரிசோதனையில் கலந்து பயன்பெற்றர்கள்.இதில் 8 பேர் கண் ஆபரேசனுக்கு தேர்வு
செய்யபட்டார்கள்.இம்முகாமில் லோட்டஸ் கண் மருத்துவமனையின் சார்பாக மருத்துவர்
dr.சுந்தர மூர்த்தி மற்றும் பொறுப்பாளர் ஜெகநாதன் மற்றும் மருத்துவ
குழுவினர்கள் கலந்துகொண்டார்கள்posted by SM.YOUSUF
Monday, 20 June 2011
மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் _12062011 _41வதுவார்டு
posted by SM.YOUSUF
Saturday, 18 June 2011
செக்ஸ் புகாரில் சிக்கிய ஊட்டி பாதிரியார் அமெரிக்கா செல்ல பிஷப் உத்தரவ
செக்ஸ் புகாரில் சிக்கிய ஊட்டி பாதிரியார் அமெரிக்கா செல்ல பிஷப் உத்தரவு சென்னை: அமெரிக்காவில் பாலியல் புகாரில் சிக்கிய, ஊட்டி பாதிரியார் முறைப்படி விசாரணையை எதிர்கொள்ளுமாறும், இதற்காக அமெரிக்காவுக்குச் செல்லுமாறும் பிஷப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள மின்னசோடா மாகாணத்தில் கத்தோலிக்க பாதிரியாராக இருந்தவர் ஜோசப் பழனிவேல் ஜெயபால். வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜெயபால் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் வாட்டிகனை எட்டியதும், பாதிரியார் ஜோசப் பழனிவேலுக்கு சிறிய அளவிலான தண்டனை கொடுக்கப்பட்டது. தற்போது அவர், ஊட்டியில் உள்ள அமல்ராஜ் என்ற பிஷப்பின் கீழ் பணியாற்றி வருவதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களை அவர் தான் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயபாலால் பாதிக்கப்பட்டோர், மின்னசோடாவில் ஒன்று கூடி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் சர்ச் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர். ஆனால், 'பாதிரியாரை எளிதாக நாங்கள் விரட்டிவிட முடியாது. அவர் பிஷப் இல்லத்திலேயே தங்கி இருக்கிறார். ஆசிரியர்கள் நியமனத்தில் எனக்கு உதவியாக இருக்கிறார். இதுபற்றி அவரிடம் விசாரித்த போது தான் குற்றமற்றவன் எனக் கூறுகிறார். எனக்கு வேறு வழி தெரியவில்லை' என்றார். இந்நிலையில், பாதிரியார் ஜெயபால் அமெரிக்கா சென்று வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை உயர் மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா உத்தரவிட்டிருக்கிறார். பாதிரியார் ஜெயபாலை வழக்கு விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்குமாறு ஊட்டி பிஷப்பிடம் பேசியிருப்பதாகவும் பேராயர் சின்னப்பா கூறினார். Source : http://thatstamil.oneindia.in/news/2010/04/07/accused-abuse-catholic-priest-ask.html
posted by SM.YOUSUF
Monday, 13 June 2011
சட்டமன்ற முற்றுகை
இன்ஷா அல்லாஹ் சட்ட மன்றம் கூடும் முதல் நாள் சட்மன்ற முற்றுகைப் போராட்டம் – மாநிலத தலைவர் பேச்சு!posted by SM.YOUSUF
Wednesday, 8 June 2011
புகை நமக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு.
மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வழி முறைகளை இஸ்லாம் ஒரு சந்தர்ப்பத்திலும் அனுமதித்தது கிடையாது. இன்று நமக்கு மத்தியில் வாழும் மனிதர்களில் பலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் விதமாக புகைப் பிடிக்கும் தீய காரியத்தில் ஈடுபடுவதை நாம் காண் முன்னே கண்டு வருகிறோம்.
புகை பிடிக்கவில்லை என்றால் ஏதோ தங்கள் கவுரவம் பாதிக்கப்பட்டதாக இவர்கள் நினைக்கிறார்கள். புகைப் பிடிப்பவன் தான் மேலானவன் என்பதைப் போலும் புகை பிடிக்கத் தெரியவில்லை அல்லது பிடிப்பதில்லை என்ற வட்டத்தில் யாராவது இருந்தால் அவர்கள் நாகரீகம் தெரியாதவர்கள் என்பதைப் போலும் தான் இந்த சமுதாயம் அவர்களை நோக்குகிறது.
ஆனால் இஸ்லாம் இப்படிப்பட்ட தீய நாகரீகங்களை ஒரு போதும் அனுமதிப்பதில்லை.
இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் இப்படிக் குறிப்பிடுகிறான்.
உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! (அல்குர்ஆன் 4:29)
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் 2:195)
புகைத்தல் என்பது மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் மாபாதகச் செயல்பாடாகும்.
இந்தப் புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் ஒவ்வொருவனும் தனது உடல் நலத்தையும் கெடுத்து தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுக வாழ்வையும் நாசப்படுத்துவதைப் பார்க்களாம்.
புகையிலையிலிருந்து 300க்கும் அதிகமான நச்சுப் பொருட்கள் (பர்ஷ்ண்ய்ள்) வெளியாகின்றன. அவற்றில் அதிகம் கேடு விளைவிப்பவை,
1. நிகோடின்,
2. கார்பன் டை ஆக்ஸைடு,
3. கார்பன் மோனாக்ஸைடு,
4. கார்பன் டெட்ரா குளோரைடு ஆகியவையாகும்.
இவை அனைத்தும் கரியமில வாயுடன் தொடர்புடையவை.
புகை பிடிப்பதால் உதடுகள், நாக்கு, வாயின் உட்பகுதி, கன்னம், மூக்கின் இரு பகுதியில் உள்ள சைனஸ், தொண்டை, பேரிங்ஸ், லாரிங்ஸ், உணவுக்குழாய், காற்றுக் குழாய், நுரையீரலுக்குள் செல்லும் சிறு காற்றுக் குழாய்கள், நுரையீரல், நுரையீரலைச் சுற்றியுள்ள உறை, இரைப்பை, கல்லீரல், சிறு குடல், பெருங்குடல், கணையம், சிறுநீரகம், ஆண் பெண் உறுப்புக்கள், இதயம், மூளை, கண்கள் ஆகிய உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. அதாவது கிட்டத்தட்ட எல்லா உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன.
பெரிய, சிறிய, நடுத்தர இரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள சிறிய தசைகளை நிக்கோடினும், பிற நச்சுப் பொருட்களும் சுருங்கச் செய்து இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, இரத்த ஓட்டத்தைக் குறைக்கின்றன. இதனால் உடல் உறுப்புக்கள் படிப்படியாகச் செயலிழக்கின்றன.
மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் கரோடிட் இரத்தக் குழாய்களும், அதன் கிளைகளும் சுருங்கி மூளையின் செல்களுக்குக் குறைவான இரத்தம் செலுத்தப் படுவதால் பக்க வாதம் ஏற்படுகின்றது.
கண்களுக்கு இரத்தம் அளிக்கும் முக்கியக் குழாய்களில் சுருக்கம் ஏற்பட்டு விழித்திரை பழுதடைந்து, திடீர் பார்வையிழப்பு ஏற்படுகின்றது.
காதுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் சுருக்கம் ஏற்படுவதால் ஆக்ஸிஜன் சப்ளையின்றி கேட்கும் திறன் பாதிக்கப்படுகின்றது.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்களின்படி இவ்வருடம் 5 மில்லியன் மக்கள் புகைத்தலின் காரணமாக இறந்திருப்பதுடன் அதில் 600,000 மக்கள் இப்புகையிலை புகைகை நுகர்வதனால் உயிர்நீத்துள்ளனர் என்பது கவலைக்குரியது.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் எனும் கூற்று பொய்த்து இன்றைய இளைஞர்கள் நாளைய புகைஞர்கள் எனும் வகையில் 13-18 வயதிற்குட்பட்ட புகையிலை பாவனையாளர்களின் எண்ணிக்கை 7 இல் 1 ஆக அதிகரித்துள்ளமை நெஞ்சை சுடும் விஷயமாக உள்ளது.
சர்வதேசரீதியில் ஒவ்வொரு 8 செக்கனிற்கும் ஒருவர் புகையிலையால் இறப்பதுடன் இலங்கையில் ஒவ்வொரு 6.5 செக்கனிற்கும் ஒருவர் இறக்கின்றனர். அதுமட்டுமன்றி இலங்கையில் வருடாந்தம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் இந்தப் பழக்கத்தால் இறப்பதுடன் நாளொன்றுக்கு 4,101 மில்லியன் புகையிலை உற்பத்திகள் விற்பனையாகின்றன என்பது அதிசயிக்கத்தக்கதன்று.
புகையிலையினால் ஏற்படும் பாதிப்புக்களை இலகுவான விஞ்ஞான ரீதியில் எடுத்து நோக்கினால், புகையிலை புகையில் காணப்படும் நிக்கொட்டின் எனும் பதார்த்தம் இதயத்துடிப்பு வீதத்தை தற்காலிகமாக அதிகரிப்பதுடன் குருதியமுக்கத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. மற்றும் சிகரட் புகைத்தல் சுவாசப்பை சிறு குழாய்களில் அழற்சியை ஏற்படுத்துவதுடன் இதன் விளைவாக மூச்சு விடுதல் கடினமாகிறது. அதுமட்டுமன்றி நமது சுவாசப்பை தொகுதியில் உள்ள பிசிர் தொழிற்பாடுகள் இழக்கப்படுவதால் வாயுப் பரிமாற்றத்திற்கான வினைத்திறன் வாய்ந்த பரப்பும் குறையும்.

புகையிலையின் புகையில் காணப்படும் காபன் மோனாக்சைட்டு வாயு குருதியினால் உறிஞ்சப்பட்டு ஈமோகுளோபின் உடன் மீளாத்தன்மையாக சேருகின்றது.ஆக்சிஜன் வாயுவிலும் பார்க்க இவ்வாயு வினைத்திறனாக ஈமோகுளோபின் உடன் சேரும். இதனால் குருதியில் ஆக்சிஜன் கடத்தப்படும் அளவு குறையும்.
இவை ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் பாதிப்புக்கள் எனும் அதேவேளை இறைவனின் கொடையாகிய சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் பாதிப்புக்கள் ஏராளமானவை. இவ்வனைத்து பாதிப்புக்களுக்கும் தீர்வு காணும் விதமாக உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு வருடமும் புதிய முயற்சிகளைக் மேற்கொண்டு வருவதுடன் உலக நாடுகளும், ஊடகவியலாளர்களும், தனிநபர் மற்றும்,நிறுவனங்களும்,துண்டுபிரசுரங்களினூடாகவும்,பத்திரிகைகளினூடாகவும்,சுவரொட்டிகளினூடாகவும்,ஒளித்தோற்றங்களினூடாகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
எனினும் 2025 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 8 மில்லியனாக அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனத்தினால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்குக் காரணம் யார்? வருமானத்திற்கென புகையிலை உற்பத்திகளை உற்பத்தி செய்பவர்களாளா அல்லது 'புண்பட்ட நெஞ்சங்களை புகைவிட்டு ஆற்றுவதாக சொல்லிக் கொள்ளும் மன நோயாளிகளா?
நம்முடைய சிந்தனைகள் இன்னும் அறியாமையில்தான் இருக்கின்றன,அவற்றை நாம் புகையின்றி ஒளி பெறச்செய்ய வேண்டும்.
நமக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் இந்த கொடிய செயல்பாட்டில் இருந்து விடுபட்டு தூய்மையான இஸ்லாமிய வழிகாட்டுதலுடன் வாழ்வதற்கு தயாராகுவோம்.
குறிப்பு : இந்தக் கட்டுரையில் சகோதரி பா.ரம்யாவின் ஆக்கத்தின் சில பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)