தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக 15 மற்றும் 16 ஆகஸ்ட் 2016 ஆகிய தேதிகளில் சேத்துமடையில் உள்ள வெஸ்டர்ன் கேட்ஸ் வில்லாஸ் ஸில் வைத்து
கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பேச்சாளர்களுக்கான இரண்டு நாள் மாவட்ட தர்பியா மாநில தலைமை காட்டி தந்த அடிப்படையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ...
இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் 130 பேர் கலந்து கொண்டனர்.
இத்தர்பியாவில்
ஒவ்வொரு தொழுகையும் ஒரே ஜமாஅத்தாக மட்டும் நடத்தப்பட்டது.தொழுகைக்கு பிறகு ஒத வேண்டிய துஆ சொல்லி தரப்பட்டது.முன்,பின் சுன்னத் தொழுகைகள் பேணப்பட்டது.
"வணக்க வழிபாட்டின் அவசியம்" -என்ற தலைப்பில்
சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் தொழுகை தான் நம்மை பண்படுத்தும் என்று தொழுகையின் முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார்.
"நற்பண்புகள்" என்ற தலைப்பில் மாநில செயலாளர் சகோ.அப்துர் ரஹீம் அவர்கள் நம்மிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் குறித்தும் தாவாப்பணிக்கு நம்மை அர்பனிக்க வேண்டும் என்பதனையும் எடுத்து சொன்ன விதம் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
"திருக்குர்ஆனை அணுகும் முறை" எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை கேள்விகளுடன் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆரம்பித்து மிக சிறப்பான முறையில் குர்ஆன் பற்றி புதிய பயனுள்ள பல்வேறு தகவல்களை வகுப்பாக நடத்தினார்.
முதல் நாள் உணவும் , சிறிது நேர கட்டாய ஓய்வு
ம் அளிக்கப்பட்டது. அஸ்ர் தொழுகை
க்கு பின் விளையாட்டு
நேரம் ஒதுக்கப்பட்டது.
இரு நாட்களும் "துஆக்கள் மனனம் வகுப்பு"
மார்க்க அறிஞர்களை கொண்டு சிறு சிறு குழுக்களாக பிரித்து நடத்தப்பட்டு பலர் அன்றாடம் பயன்படும் துஆக்களை மனனம் செய்தனர்
இரவு உறக்கமும் அதனை தொடர்ந்து மறுநாள் அதிகாலை
3.30 மணியில் இருந்து 5.00
மணி வரை
தஹஜ்ஜத் தொழுகை
நடைபெற்றது.பின் ஃபஜர் தொழுகையும் அதன்பிறகு
திருக்குர்ஆன் ஓதுவதின் அவசியமும் அலட்சியமும் –
என்ற தலைப்பில் சகோ அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் உறையாற்றினார்கள்.
பின்பு 30 நிமிடம் குர்ஆன் ஓதுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு அனைவரும் குர்ஆன் ஒதினர்.
இடைவேளைக்கு பிறகு
ஒழுக்கும் உயர்வு தரும்– என்ற தலைப்பில் சகோ.
கோவை.அப்துர் ரஹீம் அவர்கள் தன்னளவில் ஒவ்வொருவரும் ஒழுக்கவாதிகளாக திகழ வேண்டும் என்பதனை வலியுறுத்தி உரையாற்றினார்.
திருக்குர்ஆன் வகுப்பும்
மார்க்க அறிஞர்களால் குழுவாக பிரித்து நடத்தப்பட்டது.இவ்வகுப்பு மிகவும் மக்களால் விரும்பப்பட்ட வகுப்பாக மாறியது
தொழுகை பயிற்சியும் அதனை தொடர்ந்து தொழுகை குறித்த கேள்விகளுக்கு பதிலும் - சகோ.ஷபீர் அஹமத் எம்.ஐ.எஸ்.ஸி வழங்கினார்
பொருளாதாரமும் சோதனையும் - என்ற தலைப்பில் ஒவ்வொரு தவ்ஹீத்வாதியும் பொருளாதார விஷயத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று
H.M,அஹமது கபீர் அவர்கள் உரையாற்றினார்
இறுதியாக இந்த தர்பியாவில் பயின்ற பாடம் வாழ்வில் என்றென்றும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி
"தொடரட்டும் இறையச்சம் "–என்று
குல்ஜார் நுஃமான் அவர்கள் பேசியது மக்கள் சிந்தனை சீர்படுத்தி சிந்திக்க வைத்தது.அல்ஹம்துலில்லாஹ் ..
இத்தர்பியாவில் கலந்து கொண்ட மக்களின் பெரும்பாலானவர்களிடம் மாற்றத்தை காண முடிந்ததோடு இது போன்ற தர்பியாக்கள் தங்களுக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கையும் மக்களால் வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...