Thursday, 30 July 2015
Wednesday, 29 July 2015
பிறமத தாவா - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-07-15 அன்று அசோக் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதியான மார்க்கம் என்பது பற்றி விளக்கி தாவா செய்யப்பட்டது ,மேலும் அவருக்கு "முஸ்லீம் தீவிரவாதிகள்.." மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் .....
"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 28-7-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் "இந்தியாவின் தெற்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்களின் தீரமிக்க போராட்டங்கள்"பற்றி சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்...
கிளை பொதுக்குழு - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் பொதுக்குழு 27-07-15 அன்று மாவட்ட நிர்வாகிகள் முஹம்மது பிலால்,பஷீர்,அப்துர்ரஹ்மான். ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.முதலாவதாக மாநில பேச்சாளர் சகோ.அகமது கபீர அவர்கள் "தாவாபணியில் வீரியம் செலுத்துவோம்" என்ற தலைப்பில் உறையாற்றினார்.அதன் பின் சகோ.அர்ஷத் ஆண்டறிக்கையை வாசித்தார்...அதன் பின் சகோ.சிராஜ். வரவு,செலவு கணக்கை வாசித்தார் அதன் பிறகு பொதுக்குழு உறுப்பினர்களால் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விபரம்...
தலைவர் : ஜாஹீர் அப்பாஸ்.
செயலாளர் : அர்ஷத்.
பொருளாளர் : முஹம்மது பஷீர்.
துணைத்தலைவர் : சாகுல்.
துணைச்செயலாளர் : சிராஜ்.
அல்ஹம்துலில்லாஹ்......
தலைவர் : ஜாஹீர் அப்பாஸ்.
செயலாளர் : அர்ஷத்.
பொருளாளர் : முஹம்மது பஷீர்.
துணைத்தலைவர் : சாகுல்.
துணைச்செயலாளர் : சிராஜ்.
அல்ஹம்துலில்லாஹ்......
கேள்வி பதில் போட்டி - கோல்டன் டவர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்கள் இஷா தொழுகைக்குப் பிறகு "குர்ஆனை அறிவோம்" கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டது. இதில் முப்பது போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அவர்களில் சிறப்பாக பதில் எழுதி வந்தவர்களுக்கு பெருநாள் திடலில் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....
பிறமத தாவா - கோல்டன் டவர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 15-07-2015 அன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ராமநாதன் என்ற ரஹ்மத்துல்லாஹ்விற்கு ,தஃவா செய்து ''மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம், அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும்", ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.....
Tuesday, 28 July 2015
பெண்கள் பயான் - வடுகன்காளி பாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளையின் சார்பாக,26-7-15 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரி : ஆயிஷா அவர்கள் "இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவோம் "என்ற தலைப்பிலும்,சகோதரி : சுமைய்யா அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 26-7-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் "ஒருங்கிணைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போர், சிப்பாய் புரட்சியின் முடிவில் முஸ்லிம்கள் சந்தித்த இழப்புகள் "பற்றி சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)