Friday, 31 May 2013
Thursday, 30 May 2013
திருப்பூர் மங்கலம் கிளையில் இஸ்லாத்தைஏற்ற கனேஷ் ..உமர்ஷரீப் ஆக _29052013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 29.05.2013அன்று சகோதரர்.கனேஷ் என்பவர் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை உமர்ஷரீப் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் மற்றும் அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு மங்கலம் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் மற்றும் அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு மங்கலம் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
Wednesday, 29 May 2013
இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?
இறந்தவரின் உறுப்புகளைக் கொண்டே தவிர வேறு எந்த சிகிச்சையாலும் மனித உயிரைக் காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டான நிலை வரும் போது இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாமிய ஷரீஅத் அனுமதிக்கிறதா? கூடுமா?
ஏனெனில், அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல் உறுப்புகளை அமானிதமாக வழங்கியுள்ளான்.
அந்த அமானிதத்தை முழுமையாக அவனிடத்தில் சேர்ப்பது மனிதனின் கடமையாகும். மறுமையில் அல்லாஹ்வுடைய சந்நிதானத்தில் நாம் முழுமையான உடலுறுப்புகளுடன் நிறுத்தப்பட்டு கேள்வி கணக்கு கேட்கப்படுவோம் என்பதற்கு குர்ஆனுடைய வசனங்கள் சான்று பகர்கின்றன.
ஹாமீம் ஸஜ்தா என்ற அத்தியாயத்தில் 20, 21, 22 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
இறுதியாக நரகமாகிய அதன் பால் அவர்கள் வந்தடைந்து விடுவார்கள். பாவம் செய்த அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவியும், அவர்களுடைய பார்வையும், அவர்களுடைய தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி சாட்சி கூறும்...
மேலும், தாஹா என்ற அத்தியாயத்தில் 125, 126 ஆயத்துக்களில் அல்லாஹ் கூறுகிறான். அந்த மனிதன் என் ரட்சகனே! ஏன் என்னை குருடனாக நீ எழுப்பினாய்? நான் திட்டமாக (உலகத்தில்) பார்வையுடையவ னாக இருந்தேனே என்று கேட்பான். (அதற்கு) அவ்வாறே! நம் வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவைகளை மறந்து விட்டாய். (நீ மறந்த) அவ்வாறே இன்றைய தினம் நீயும் (நம் அருளிருந்து) மறக்கப்படுகிறாய் என்று (அல்லாஹ்) கூறுவான்.
மேலும், மார்க்கச் சட்ட மேதைகள் ஒருவன் குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிப்பதற்கு முன்னால் அவனுடைய நகங்களையோ, மீசை போன்ற முடிகளையோ அகற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் மறுமையில் அந்த நகங்களும், முடிகளும் தீட்டுடன் அவன் முன் கொண்டு வந்து வைக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.
உடல் உறுப்புக்கள் பற்றி மறுமையில் அவற்றின் நிலை பற்றி தெளிவாகக் கூறியிருக்கும் போது,
அதை உலகிலே எப்படி தானம் செய்யலாம்?
- மவ்லவி ஹாபிழ் எஸ். அபூபக்கர் சித்தீக் பாகவி, மண்டபம்.
பதில்: நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனங்கள் எடுத்துக் கொண்ட தலைப்புடன் சம்பந்தப்பட்டவை அல்ல.
மறுமையில் இறைவன் நம்மை எழுப்புவது குறித்துக் கூறும் வசனங்களாகும். நமது உடல் உறுப்புகளைத் தானம் செய்யக் கூடாது என்றோ, அவ்வாறு செய்தால் அவ்வுறுப்புக்கள் இல்லாமல் எழுப்பப்படுவார்கள் என்றோ அவ்வசனங்கள் கூறவில்லை. மறைமுகமாகவும் அந்தக் கருத்து அவ்வசனத்திற்குள் அடங்கியிருக்கவில்லை.
நீங்கள் சுட்டிக்காட்டிய தாஹா 125, 126 வசனங்களை எடுத்துக் கொண்டால் அது உங்களது வாதத்துக்கு எதிராக அமைந்துள்ளதைக் காணலாம்.
கண் பார்வையுடன் இவ்வுலகில் வாழ்ந்தவன் இறைவனின் போதனையை மறுத்தால் குருடனாக எழுப்பப்படுவான் என அவ்வசனம் கூறுகிறது. குருடனாக எழுப்பப்படுவதற்குக் காரணம் அவன் நல்லவனாக வாழவில்லை என்பது தானே தவிர இவ்வுலகில் கண்ணை இழந்திருந்தான் என்பது அல்ல. கண் இருந்தவனைக் குருடனாக எழுப்பிட அவனது நடத்தை தான் காரணம். அது போல் கண்ணற்றவன் இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அவன் குருடனாக எழுப்பப்பட மாட்டான். அவனும் மற்ற நல்ல முஸ்லிம்களைப் போல இறைவனைக் காண்பான்.
எனவே நல்லவர் கெட்டவர் என்ற அடிப்படையில் இறைவன் செய்யும் ஏற்பாட்டை அதற்குத் தொடர்பு இல்லாத காரியத்துடன் பொருத்தக் கூடாது.
மேலும் மறுமையில் நாம் எழுப்பப்படும் போது அனைத்து ஆண்களும் சுன்னத் செய்யப்படாதவர்களாகவே எழுப்பப்படுவோம் - புகாரி 3349, 3447, 4635, 4740, 6524
சுன்னத் மூலம் நம்மிடமிருந்து அப்புறப்படுத்திய பகுதிகளையும் சேர்த்து இறைவன் எழுப்புவான் என்பது எதை உணர்த்துகிறது?
இவ்வுலகில் எந்த உறுப்புக்களை இழந்தான் என்பதற்கும் மறுமையில் எழுப்பப்படும் கோலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை இது உணர்த்தவில்லையா?
சில முகங்கள் மறுமையில் கறுப்பாக இருக்கும். சில முகங்கள் வெண்மையாக இருக்கும் எனவும் திருக்குர்ஆன் கூறுகிறது.
அமெரிக்கர்களின் முகம் வெண்மையாகவும், ஆப்ரிக்கர்களின் முகம் கறுப்பாகவும் இருக்கும் என்று இதற்கு அர்த்தமில்லை. மாறாக நல்லடியாராக வாழ்ந்த ஆப்ரிக்கர் வெண்மையான முகத்துடன் வருவார். ஜார்ஜ் புஷ் இப்படியே மரணித்தால் கறுத்த முகமுடையவராக வருவார் என்பதே இதன் கருத்தாகும்.
இவ்வுலகின் தோற்றத்துக்கும், மறுமைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
நவீனமான காரியங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பொருத்த வரை நேரடியாக திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறப்பட்டிருக்காது. ஆயினும், மறைமுகமாக ஏதேனும் தடை இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும்.
தடை காணப்பட்டால் அதைக் கூடாது என அறியலாம்.
கண்தானம், இரத்ததானம், கிட்னி தானம் போன்ற காரியங்கள் கூடாது என்பதை மறைமுகமாகக் கூறும் எந்த ஒரு ஆதாரமும் நாமறிந்த வரை கிடைக்கவில்லை.
சுட்டிக் காட்டப்படும் ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை.
மார்க்கம் தடை செய்யாத ஒன்றை தடை செய்ய நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அடுத்தது நமது உறுப்புக்கள் அமானிதம் என்று கூறுகிறீர்கள். அமானிதம் தான். ஆனால், இந்த அமானிதத்தின் பொருள் வேறாகும். நான் உங்களிடம் ஒரு பொருளை அமானிதமாகத் தந்தால் அதை நீங்கள் உபயோகிக்கக் கூடாது. அதை அப்படியே திருப்பித் தர வேண்டும். ஆனால், அல்லாஹ் அமானிதமாகத் தந்த கண்களால் நாம் பார்க்கிறோம். காதுகளால் கேட்கிறோம். இன்னும் மற்ற உறுப்புகளையும் பயன்படுத்துகிறோம்.
அமானிதம் என்பதற்கு மற்ற அமானிதம் போன்று பொருள் கொண்டால் இவையெல்லாம் கூடாது எனக் கூற வேண்டும். இறைவன் தடை செய்த காரியங்களில் பஸ்ன்படுத்தக் கூடாது என்ற ஒரு நிபந்தனையுடன் அதைப் பயன்படுத்தலாம். இந்த அடிப்படையில் தான் அது அமானிதமாகிறது.
நம்மிடம் அல்லாஹ் காசு பணத்தைத் தருகிறான் என்றால் அதுவும் அமானிதம் தான். அதாவது அதை நாமும் பயன்படுத்தலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். தவறான வழியில் மட்டும் செலவிடக் கூடாது.
அது போல் தான் நமது உறுப்புக்களை நாமும் பயன்படுத்தலாம். நமக்கு எந்தக் கேடும் வராது என்றால் பிறருக்கும் கொடுக்கலாம். தப்பான காரியங்களில் அவற்றைப் பஸ்ன்படுத்தக் கூடாது. இது தான் அமானிதத்தின் பொருள். குர்ஆனினும், ஹதீஸிலும் தடை செய்யப்படாதவற்றைத் தவறா? சரியா? எனக் கண்டுபிடிக்க நமது மனசாட்சியையே அளவுகோலாகக் கொள்ள நபி(ஸல்) அனுமதியளித்துள்ளனர். (அஹ்மத் 17320)
உங்களுக்கு மிக விருப்பமான ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு இன்னொருவரின் இரத்தமோ, கிட்னியோ வைக்கப்பட்டால் தான் பிழைப்பார். இந்த நிலையில் உங்களுக்கு நெருக்கமானவர் என்றால் உங்கள் மனசாட்சி அதைச் சரி காணும். பெற்றுக் கொள்வதை மட்டும் சரி கண்டு விட்டு கொடுப்பதைச் சரி காணாமல் இருந்தால் அது நேர்மையான பார்வை இல்லை.
மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியத்துக்கு இந்த அளவுகோலைப் பயன்படுத்துமாறு நாம் கூறுவதாக நினைக்க வேண்டாம்.
மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றை நமது மனசாட்சி சரி கண்டாலும் அது தவறு தான். மார்க்கத்தில் தடுக்கப்படாத ஒன்றை நமது மனசாட்சி சரி கண்டால் அது சரியான அளவுகோல் தான் என்பதே அந்த நபிமொழியின் கருத்தாகும்.
குளிப்புக் கடமையானவர்கள் முடியையோ, நகங்களையோ வெட்டக்கூடாது என்று சில அறிஞர்கள் கூறினாலும் அதற்கு குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ எந்த ஆதாரமும் இல்லை. எனவே தான் வேறு சில அறிஞர்கள் ஆதாரமற்ற இக்கருத்தை நிராகரித்துள்ளனர். எனவே உறுப்புக்கள் தானம் பற்றி தடை செய்யும் ஏற்கத்தக்க ஆதாரங்கள் வேறு இருந்தால் தெரிவியுங்கள். நாம் பரிசீலிக்கத் தயாராகவுள்ளோம்.
பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/kan_thanam/
Copyright © www.onlinepj.com
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/kan_thanam/
Copyright © www.onlinepj.com
Tuesday, 28 May 2013
"இதுதான் இஸ்லாம்" உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் இரவு 9.00முதல் 10.00 வரை- 1மணி நேரம் தூயஇஸ்லாமிய மார்க்கவிளக்க நிகழ்ச்சிகள் "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்பட்டு தாவா செய்யப்படுகிறது.
மே மாதம் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள்
- 01.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் இஸ்லாம் எளிய மார்க்கம்
- 02.05.2013 அப்பாஸ் அலி இம்மையும் மறுமையும் 4
- 03.05.2013 செல்வபுரம் ஜாகிர் குழந்தை வளர்ப்பு
- H.M.அஹ்மத் கபீர் தீமைகளை தவிர்ப்போம்
04.05.2013 M.I.சுலைமான் அறிவை பயன்படுத்துவோம்- யூசுப் இஸ்லாத்தில் கேள்வி உரிமை
- 05.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் தனித்து விளங்கும் இஸ்லாம்
- 06.05.2013 அப்பாஸ் அலி இம்மையும் மறுமையும் 5
- 07.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் இஸ்லாம் எளிய மார்க்கம்
- 08.05.2013 யூசுப் மார்க்கத்துடன் மோதாதீர்கள்
- கோவை ரஹமத்துல்லாஹ் ஏழை தர்மம்
- 09.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் தனித்து விளங்கும் இஸ்லாம்
- 10.05.2013 அஹமது கபீர் கல்வியில் நமது நிலைபாடு
- 11.05.2013 உடுமலை கோடைகால பயிற்சி முகாம்
- 12.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் துபாய் எளிய மார்க்கம்
- 13.05.2013 ளுஹா இஸ்லாத்தில் புதிதாக புகுந்த
- அனாச்சாரங்கள்
14.05.2013 அஸ்ரப்தீன் வரதட்சணை - 15.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் இஸ்லாத்தில் பெண்கள்
- நிலை
- 16.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் தொழ அனுமதிக்கப்பட்ட
- பள்ளி
- 17.05.2013 செரங்காடுஅப்துல்லாஹ் முன்மாதிரி
- நபித்தோழர்கள்
- 18.05.2013 அப்பாஸ் அலி இம்மையும் மறுமையும் 6
- 19.05.2013 P.ஜைனுல்ஆபிதீன் மாணவரணி செல்ல
- வேண்டிய
- பாதை
- 20.05.2013 ளுஹா இஸ்லாத்தின் தூண்கள்
- 21.05.2013 கோவை ரஹமத்துல்லாஹ் கொள்கை உறுதி
- ளுஹா ஜும்ஆ உரை
- 22.05.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி மூடநம்பிக்கை
- 23.05.2013 அப்துல்கரீம் உடுமலை எளியமார்க்கம் 001
- 24.05.2013 கோவை அப்துல்ரஹீம் உடுமலை
- ஜும்மாஹ்உரை
- 25.05.2013 அப்துல்கரீம் உடுமலை எளியமார்க்கம் 002
- 26.05.2013 அப்துல்கரீம் உடுமலை எளியமார்க்கம் 003
- 27.05.2013 அப்துல்கரீம் உடுமலை எளியமார்க்கம் 004
- 28.05.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி தவ்ஹீத் எழுச்சி
- 29.05.2013 அப்பாஸ் அலி இம்மையும் மறுமையும் 7
- 30.05.2013 அல்தாபி அல்லாஹுவின் எல்லைகள்...
- ளுஹா சத்தியத்தை தயங்காமல்எடுத்துரைப்போம்
- 31.05.2013 உடுமலை அப்துர்ரசீது ஜும்ஆ உரை
கேள்வி கேட்பதற்கான பெட்டி _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-05-2013 அன்று கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது
நீங்களும் செய்யலாமே
இந்நிகழ்ச்சி நடக்கும் முறை :
பள்ளியில் கேள்வி கேட்பதற்கான பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் மார்க்க சந்தேகங்களை கேட்டு கேள்வி எழுதி போடுவார்கள், அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் வாரம் தோறும் திங்கள் கிழமை பதில் அளிக்கப் படும்.
பள்ளியில் கேள்வி கேட்பதற்கான பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் மார்க்க சந்தேகங்களை கேட்டு கேள்வி எழுதி போடுவார்கள், அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் வாரம் தோறும் திங்கள் கிழமை பதில் அளிக்கப் படும்.
இது போல் அனைத்து கிளைகளிலும் செய்தால் சிறப்பாக இருக்கும்
Monday, 27 May 2013
Sunday, 26 May 2013
மங்கலம் கிளை பேச்சாளர் பயிற்சி வகுப்பு 26052013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 26-05-2013 அன்று காலை 06:00 மணி முதல் 07:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இத்ரீஸ் மரணத்திற்கு பின் என்ற தலைப்பிலும்,
பிலால் ஜிஹாத் ஏன் எப்படி என்ற தலைப்பிலும்
சம்சுதீன் அல்லாஹ்வை அஞ்சிவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)
Saturday, 25 May 2013
முருகேஷ்க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம்உட்பட நூல்கள் வழங்கி தாவா _மங்கலம் -23052013
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம் கிளை சார்பில்23.05.2013 அன்று பிறமத சகோதரர். முருகேஷ் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம்,வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
அல்ஹம்துலில்லாஹ்.
கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு _மங்கலம் _24052013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 24-05-2013 அன்று கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த கோடைகாலப் பயிற்சி முகாமில் 12 பெரிய மாணவர்களும் 40 சிறியமாணவர்களும் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சேகர் க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம்உட்பட நூல்கள் வழங்கி தாவா 24052013
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில்24.05.2013 அன்று காங்கேயம்ரோடு பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர். சேகர் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம்,திருக்குர்ஆன்அறிவியல் உண்மைகள் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
அல்ஹம்துலில்லாஹ்.
சிவராமகிருஷ்ணனுக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம்உட்பட நூல்கள் வழங்கி தாவா _23052013
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில் 23.05.2013 அன்று விஜயபுரம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர். சிவராமகிருஷ்ணன் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம்,திருக்குர்ஆன்அறிவியல் உண்மைகள் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, 23 May 2013
Subscribe to:
Posts (Atom)