Wednesday, 31 October 2012
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை_உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை
சார்பாக 27-10-2012 அன்று காலை 07:30 மணிக்கு
மஸ்ஜிதுத் தக்வா பள்ளி எதிரில் உள்ள திடலில்
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் சகோ.பழனி சேக் மைதீன்அவர்கள்
"இப்ராகிம் நபி வாழ்வில் படிப்பினை பெறுபவர்களே முஸ்லிம்கள் "என்று உரையாற்றினார்.
பெருவாரியான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ் !
POSTED BY மாணவரணி SHAHID
Sunday, 28 October 2012
நீங்களும் செய்யலாமே....நோட்டிஸ் தஃவா
மாணவர் அணியின் சார்பாக ஹஜ்ஜுப்பெருநாள் அன்று இஸ்லாம் கூறும்
கடவுள் கொள்கை என்ற துண்டு பிரசுரத்தில் சாக்லேட் இணைத்து மாற்றுமத
சகோத்தரகளுக்கு வழங்கப்பட்டது.இவ்வாறு ஆயிரம் துண்டு பிரசுரங்கள் மாற்றுமத சகோதரர்கள் இருந்த வீடுகளில் கடைகளில் முக்கிய சாலைகளில் பேருந்துகளில் இரு சக்கர வாகனங்களில் வழங்கப்பட்டது.இதை படித்த மாற்றுமத சகோதரர்கள் சிலர் இஸ்லாத்தை மேலும் அறிந்து கொள்ள விரும்புவதாக கூறினார்கள். ஒரு பஸ்சில் இருந்த நடத்துனர் இந்த நோட்டிசை படித்து விட்டு பஸ்சில் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கும் வரை பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். மேலும் அருகில் உள்ள மாற்றுமதத்தவர்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று இந்த நோட்டிஸ் வழங்கப்பட்டது
POSTED BY மாணவரணி SHAHID
அழைப்பு பணி-மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின்
சார்பாக கூட்டு குர்பானியில் சேர்ந்த 35 நபர்களையும் ஆர்வப்படுத்தும்
விதமாக ஒவ்வொருவருக்கும் இலவசமாக நபிகளாரின் நற்போதனைகள்
மற்றும் குர்பானியின் சட்டங்கள் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டன.
POSTED BY மாணவரணி SHAHID
Thursday, 18 October 2012
மாணவரணி சார்பாக தர்பியா நிகழ்ச்சி-மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 14-10-2012 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் காலை 09:30 மணி முதல் 11:00 மணி வரை சகோ தவ்ஃபீக் அவர்கள் தொழுகைப் பயிற்சி அளித்தார் 11:00 முதல் 1:00 மணி வரை சகோ முஹம்மதுசலீம்அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திறக்கும் பெற அமைப்புக்களுக்கும் உள்ள வேறுபாடு என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார் இதில் 63 பேர் கலந்து கொண்டனர்(அல்ஹம்துலில்லாஹ்)
POSTED BY மாணவரணி SHAHID
Wednesday, 17 October 2012
மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி-உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பில்
மடத்துக்குளம் தாலுக்கா ருத்ரா பாளையம் கிராம
(பூர்வீக மஸ்ஜித் )பள்ளிவாசலில்
(பூர்வீக மஸ்ஜித் )பள்ளிவாசலில்
வாரந்திர பயான் (மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி )
14.10.2012 அன்று அசர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது .
மாநில பேச்சாளர் சகோதரர்.கோவை ஜாகிர் அவர்கள்
மாநில பேச்சாளர் சகோதரர்.கோவை ஜாகிர் அவர்கள்
"மறுமைநம்பிக்கை "எனும் தலைப்பில் சிறப்பான
உரை நிகழ்த்தினார் .
பள்ளியின் பாங்கு சொல்லும் ஒலிபெருக்கி யில் உரை நிகழ்த்தியதால்
உரை நிகழ்த்தினார் .
பள்ளியின் பாங்கு சொல்லும் ஒலிபெருக்கி யில் உரை நிகழ்த்தியதால்
ஏராளமான கிராம ஆண்களும் பெண்களும்
கேட்டு பயன் பெற்றனர்.POSTED BY மாணவரணி SHAHID
Sunday, 14 October 2012
வாழ்வாதார உதவி-உடுமலை 10102012
TNTJ திருப்பூர் மாவட்டம் _ உடுமலை கிளையின் சார்பாக
10.10.2012 அன்று உடுமலை பகுதியை சார்ந்த ஏழை சகோதரி.சுலைகா அவர்களின்
10.10.2012 அன்று உடுமலை பகுதியை சார்ந்த ஏழை சகோதரி.சுலைகா அவர்களின்
வாழ்வாதார செலவினக்களுக்கு ரூபாய் 2,500 /=
TNTJ உடுமலை கிளை ஜகாத் நிதிலிருந்து உதவி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....POSTED BY மாணவரணி SHAHID
Tuesday, 9 October 2012
மாவட்ட தாயீக்களுக்கான பயிற்சி முகாம் 07102012
திருப்பூர் மாவட்ட தலைமை சார்பாக 07.10.12 அன்று மதியம் 2.30 மணிக்கு மாவட்ட தலைமை மர்கஸில் வைத்து மாவட்ட தாயீக்களுக்கான பயிற்சி முகாம் நடைப்பெற்றது.இதில் மாநில பேச்சாளர்கள் H.M.அஹமது கபீர் , மற்றும் K.S.அப்துர் ரஹ்மான் பிர்தௌஸி ஆகியோர் "பேச்சின் ஒழுங்குகள் மற்றும் நெறிகள்" குறித்து மாவட்ட பேச்சாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
POSTED BY மாணவரணி SHAHID
மாவட்ட மாணவரணியின் மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணியின் சார்பாக மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி மாவட்ட தலைமை மர்கஸில் வைத்து நேற்று 07.10.12 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட மாணவரணி செயளாலர் சகோ.S.ஷாஹிது ஒலி அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயளாலர் சகோ.பஷீர் முன்னிலையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோ.H.M.அஹமது கபீர் அவர்கள் ”இஸ்லாம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை எப்படி அறிமுகப்படுத்துவது”என்ற தலைப்பில் சக நன்பர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்வது குறித்து பயிற்சி வழங்கினார்.அவரை தொடர்ந்து மாநில பேச்சாளர் சகோ.K.S.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் ”நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் சக நன்பர்களுக்கு இஸ்லாத்தை சொல்லும் போது ஏற்படும் பிரச்சனைகளை மற்றும் பிற இயக்கத்தை சார்ந்தவர்கள் எடுத்து வைக்கும் கேள்விகளை எப்படி தர்க்கரீதியாக எதிர்கொள்வது என்பது குறித்து பயிற்சி வழங்கினார்.இத்ல் 70 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
POSTED BY மாணவரணி SHAHID
Monday, 8 October 2012
Saturday, 6 October 2012
மூட நம்பிக்கை செயல்களை தெளிவு படுத்தும் தெருமுனை கூட்டம் -பெரியதோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக கடந்த 05-10-2012 அன்று இரவு 7 மனியளவில் தெருமுனை கூட்டம் பெரியதோட்டம் 4 வது வீதியில் நடைபெற்றது
மூட நம்பிக்கை செயல்களை தெளிவு படுத்தும் வகையில் இந்த தெருமுனை கூட்டம் நடைபெற்றது .
அல்ஹம்துலில்லாஹ்!
இதில் சகோ திருப்பூர் சதாம் ஹுசைன் அவர்கள் "சமூக தீமைகள் "என்ற தலைப்பிலும்
சகோ.அப்தூர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் "இஸ்லாத்தின் பெயரால் மூடநம்பிக்கைகள்"என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்.
பெண்கள் குழந்தைகள் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கேட்டு பயன் பெற்றனர்.
சகோ.அப்தூர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் "இஸ்லாத்தின் பெயரால் மூடநம்பிக்கைகள்"என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்.
பெண்கள் குழந்தைகள் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கேட்டு பயன் பெற்றனர்.
POSTED BY மாணவரணி SHAHID
Wednesday, 3 October 2012
தெருமுனை பிரச்சாராம் _ கோம்பைத்தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை மாணவரணி சார்பாக முஸ்லிம்கள் மத்தியில் கல்வியின் விழிப்புணர்வை உருவாக்க வாரந்தோறும் இஸ்லாத்தின் பார்வையில் கல்வி என்ற் தலைப்பில் தெருமுனை பிரச்சாராம் துவக்கப்பட்டு முதல் கட்டமாக திருப்பூர் கோம்பைத்தோட்டம் பகுதியில் 01.10.2012 அன்று இரவு 08 மணியளவில் நடைப்பெற்றது.இத்ல் மாவட்ட பேச்சாளர் சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
POSTED BY மாணவரணி SHAHID
Tuesday, 2 October 2012
Monday, 1 October 2012
இணை வைப்பு கூடமான தர்கா அருகில் தெருமுனை கூட்டம்-உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 30-09-2012 அன்று
தெருமுனை கூட்டம் இணை வைப்பு கூடமான தர்கா அருகில் நடைபெற்றது
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த பகுதியில் உள்ள தர்காவில் திருவிழா(உருஸ்) மற்றும்
ஜமாலி யின் வழிகேடான உரை நிகழ்ச்சி நடைபெற்றது
அந்த வழிகெட்ட செயல்களை தெளிவு படுத்தும் வகையில் இந்த தெருமுனை கூட்டம் நடந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!
இதில் சகோ திருப்பூர் சதாம் ஹுசைன் அவர்கள் "சமூக தீமைகள் "என்ற தலைப்பிலும்
சகோ.கோவை ஜாகிர் அவர்கள் "இஸ்லாத்தின் பெயரால் வழிகேடுகள்"என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்.
பெண்கள் குழந்தைகள் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கேட்டு பயன் பெற்றனர்.
POSTED BY மாணவரணி SHAHID
நபிகள் நாயகம் (௦ஸல்) அவர்களை அறிந்து கொள்ள பேனர் தஃவா- மங்கலம் கிளை
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-09-2012 அன்று நபிகள் நாயகம் (௦ஸல்) அவர்களை அறிந்து கொள்ள என்ற தலைப்பில் பேனர் தஃவா செய்யப்பட்டது இதில் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகத்தை இலவசமாக பெற மாற்று மத சகோதரர்கள் தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது இது வரை 5 சகோதரர்கள் புத்தகம் பெற்றுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்)
POSTED BY மாணவரணி SHAHID
Subscribe to:
Posts (Atom)