Sunday, 30 September 2012
Wednesday, 26 September 2012
மங்கலம் மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க மழை தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2012 அன்று காலை 08:00 மணியளவில் நபிகள் நாயகம் (ஸல்) *காட்டிய வழிமுறைப்படி மங்கலம் மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய மழைத்தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்
POSTED BY மாணவரணி SHAHID
உடுமலை மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க மழை தொழுகை
23.09.2012 ஞாயிறு காலை 8 மணிக்கு
உடுமலை குட்டை திடலில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி
மழை தொழுகை நடைபெற்றது..
உடுமலை மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க
வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய
பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை
மற்றும் துவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்
இந்த நிகழ்ச்சி பற்றிய பத்திரிக்கை செய்தி.....
1.தினத்தந்தி
2.தினகரன்
3.தினமலர்
POSTED BY மாணவரணி SHAHID
Sunday, 23 September 2012
நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்- திருப்பூர் வீடியோ பதிவு
திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.09.2012 அன்று மாலை 04.00 மணியளவில் மாநகராட்சி முன்பு
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும்,
அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும்
அமெரிக்க அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொண்டனர் .
அல்ஹம்துலில்லாஹ்.
சகோ.H.M.அஹமது கபீர் அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்
POSTED BY மாணவரணி SHAHID
Thursday, 20 September 2012
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் அமேரிக்க அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 18-09-2012.அன்று மாலை 4.மணியளவில் திருப்பூர் மாநகராட்சி வளாகம் முன்பு நடை பெற்றது மாவட்ட தலைவர் :ஷேக்ஃபரீத் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடை பெற்றது.
சகோ:H.M.அஹமது கபீர் அவர்கள் கண்டன உரையாற்றினார். இக்கூட்டத்தில் ஆண்கள் பெண்கள் மூன்றாயிரத்திற்க்கும்அதிகமானோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.
ஒபாமாவிற்க்கு மரியாதை |
POSTED BY மாணவரணி SHAHID
Tuesday, 18 September 2012
பிரம்மாண்டமாக நடந்து முடிந்த திருப்பூர் தாலுக்கா கண்டன ஆர்ப்பாட்டம்
த்மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் வட்டம் சார்பாக 18.09.2012 இன்று மாலை 04.20 மணிமுதல் 05.40 மணி வரை திருப்பூர் மாநகராட்சி முன்பு
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனை TERRY JONES யை கண்டித்தும்,
அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும்
அமெரிக்க அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் (3000) மூன்றாயிரத்திற்க்கும் அதிகமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொண்டனர் .
(அல்ஹம்துலில்லாஹ்.)
சகோ.H.M.அஹமது கபிர் அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்.
சகோ.H.M.அஹமது கபிர் அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்.
மேலும் தகவல், வீடியோ மற்றும் புகைப்படம் இன்ஷா அல்லாஹ் விரைவில்........
POSTED BY மாணவரணி SHAHID
நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-உடுமலை வீடியோ பதிவு
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும், * *அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும்
TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.09.2012 அன்று காலை 11 மணி முதல்12.15 மணி வரை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உடுமலை தாலுகா கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில் நடந்தது இதில் சகோ.H.M.அகமது கபீர் அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்.
POSTED BY மாணவரணி SHAHID
நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-தாராபுரம் வீடியோ பதிவு
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும், அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 17.09.2012 அன்று காலை 10.30 மணியளவில் தாராபுரம் நகராட்சி முன்பு
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
POSTED BY மாணவரணி SHAHID
Monday, 17 September 2012
நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 17.09.2012 இன்று காலை 10.30 மணியளவில் தாராபுரம் நகராட்சி முன்பு
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும்,
அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும்
அமெரிக்க அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொண்டனர் .
அல்ஹம்துலில்லாஹ்.
சகோ.முஹம்மது சலீம் அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்.
ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும்மு ஸ்லிம்கள் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.
POSTED BY மாணவரணி SHAHID
நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-உடுமலை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.09.2012 இன்று காலை 11 மணி முதல்12.15 மணி வரை
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும்,
அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும்
அமெரிக்க அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உடுமலை தாலுகா கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில் நடந்தது.
இதில் ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொண்டனர் . (அல்ஹம்துலில்லாஹ். )
ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும்மு ஸ்லிம்கள் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.
POSTED BY மாணவரணி SHAHID
Wednesday, 12 September 2012
தெருமுனை பிரச்சாரம்-மங்கலம் கிளை
இறைவனின் திருப்பெயரால்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2012 அன்று மங்கலம் சக்தி மஹால் அருகில் மாலை07:00மணி முதல் 08:00 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் குர்ஆன் கூறும் விஞ்ஞானம் என்ற தலைப்பிலும் சகோ சிராஜ்தீன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
POSTED BY மாணவரணி SHAHID
மாணவர் அணியின் பயான் பயிற்சி-மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 09-09-2012 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 15 இளைஞர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர் வரும் வாரங்களில் ஞாயிறு தோறும் காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரையும் புதன் தோறும் இரவு 09:00 மணி முதல் 09:30 மணி வரையும் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது
POSTED BY மாணவரணி SHAHID
Tuesday, 11 September 2012
பட்டாசுக்களால் பலியாகும் உயிர்கள் : தடுக்க வழி என்ன?
சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் ஏராளமானோர் பலியாகி பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது போன்று எதிர் காலத்தில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
முஹம்மது அப்துல்காதர், விருதுநகர்
அரசாங்கத்தை நடத்தக்கூடியவர்களுக்கு கொஞ்சம் மூளை இருந்து, அந்த மூளையைப் பயன்படுத்தி சட்டங்களை இயற்றி இருந்தால், இதுபோன்ற பேரழிவுகளைத் தடுத்திருக்க முடியும்.
வெடி மருந்துகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் அறிந்துள்ளோம். மிக அவசியமான தேவைகளுக்காகவே தவிர, வேறு எதற்காகவும் வெடி மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது என்றுதான் அறிவுடைய மக்கள் முடிவுக்கு வருவார்கள்.
பாறைகளை உடைப்பதன் மூலம்தான் சாலை வசதிகளைப் பெற முடியும் என்பதால், இதற்காக வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்கிறது.
உணவைச் சமைத்துச் சாப்பிட நெருப்பு அவசியம். அதை உருவாக்கிட தீப்பெட்டி அவசியம் என்பதால் இதற்காக வெடிமருந்துகள் பயன்படுத்துவதை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்கிறது.
படிப்படியாகக் குறைந்து வரும் தீப்பெட்டிப் பயன்பாடு காலப்போக்கில் அறவே இல்லாமல் போய்விடும். அதுபோல் ஜல்லிகள் மூலம் சாலைகள் போடுவதற்குப் பதிலாக பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் தொழில் நுட்பம் அதிகரிக்கும்போது பாறைகளை உடைக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும். அப்போது மக்களுக்கு வெடி மருந்துகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விடும்.
அதுவரை மேற்கண்ட இரண்டு காரியங்களுக்கு மட்டுமே வெடிமருந்துகள் குறைந்த அளவுக்கு தேவைப்படும். இவற்றைத் தவிர மற்ற அனைத்துப் பயன்பாடுகளில் இருந்தும் வெடி மருந்துகளைத் தள்ளிவைப்பதுதான் அறிவுப்பூர்வமானது.
ஆனால் மக்கள் சர்வசாதாரணமாக வெடி மருந்துகளுடன் விளையாடும் நிலைக்கு பட்டாசு உபயோகமே காரணமாகும். தீபாவளி போன்ற பண்டிகைகளுடன் தொடர்புபடுத்தி இதற்கு பட்டாசு வியாபாரிகள் மதச் சாயம் பூசிவிட்டதே இந்த பேராபத்துக்குக் காரணம்.
உண்மையில் இதற்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பட்டாசுகள் பிற்காலத்தில் வந்த கண்டுபிடிப்பாகும்.
முந்தைய காலத்தில் தீபாவளி கொண்டாடிய இந்துக்கள் பட்டாசுகளை அறிந்திருக்கவில்லை. எனவே மதத்துக்கு வெளியே நின்று சிந்திப்பதுதான் சரியானதாகும். இப்படி சிந்தித்தால் பட்டாசுகள் வெடிப்பதால் கீழ்க்கண்ட தீமைகள் ஏற்படுவதை உணரலாம்.
•பொருளாதாரத்தைத் பயனற்ற வழியில் விரயமாக்குவது
•பட்டாசு வெடித்து உயிர்கள் பலியாவது
•பட்டாசுகள் மூலம் குடிசைகள் எரிந்து சாம்பலாவது
•பட்டாசு வெடிப்பவர்களுக்கும் அருகிலிருப்பவர்களுக்கும் படுகாயங்களை ஏற்படுத்துவது
•மனிதனின் காதுகள் தாங்கிக் கொள்ள முடியாத அதிக சப்தம் காரணமாக கேட்கும் திறனில் ஏற்படும் பாதிப்புகள்
•இதய நோயாளிகளும், பச்சிளம் குழந்தைகளும், சிந்திப்பவர்களும், படிப்பவர்களும் இந்த சப்தம் காரணமாக கடுமையான பாதிப்புகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளாகுவது
•பட்டாசுகள் மூலமாக வெளியேறும் நச்சுப்புகை மூலம் காற்று மாசு படுகிறது
•அதை சுவாசிப்பதன் மூலம் மனிதர்களும், இன்னபிற உயிரினங்களும் கடும் பாதிப்புக்குகளைச் சந்திக்கின்றன.நோயாளிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
•பட்டாசு வெடிப்பதன் மூலம் குப்பைகளின் அளவும் அதிகரித்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.
•நச்சுப் பொருள் கலந்த குப்பைகளால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது.
இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் இதனால் எந்த நன்மையாவது உள்ளதா என்றால் அதுவும் இல்லை.
நவீன சாதனங்கள் பயன்படுத்துவதன் காரணமாக காற்று மாசு படுவதாகவும், பூமி வெப்பமயமாகி வருவதாகவும், ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு புற ஊதாக்கதிர்கள் பூமிக்கு வந்து மனிதர்களுக்கு கேடுகள் ஏற்படுத்துவதாகவும் கூறி அந்த நவீன சாதனங்களின் பயன்பாட்டைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேற்கண்ட சாதனங்களால் சில கேடுகள் ஏற்பட்டாலும் அது பட்டாசினால் ஏற்படும் கேடுகளை விட பலப்பல மடங்கு குறைவானதுதான். அத்துடன் இந்த சாதனங்கள் மூலம் விரைவாகவும் பணிகள் முடிகின்றன. சொகுசான இன்பங்களை அனுபவிக்கிறோம். இதற்காக மேற்கண்ட தீமைகளை நாம் சகித்துக் கொள்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால் இதைவிட பெரும்கேடு ஏற்படுத்தும் பட்டாசுகளால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
அறிவுள்ள மக்களுக்குத் தெரியும் இந்த விபரம் ஆட்சியாளர்களுக்கு ஏன் தெரியவில்லை.
அவசியமற்ற கேடுகள் விளைவிக்கின்ற பட்டாசுகளுக்கு அறவே அனுமதி இல்லை என்று முடிவு செய்தால், இதுபோன்ற அழிவுகளுக்கு இடமில்லை.
பட்டாசைக் காரணம்காட்டி வெடி மருந்துகள் பரவலாகக் கிடைப்பதால்தான், வெடிகுண்டு தயாரிக்கும் பயங்கரவாதிகளுக்கும் வசதியாகப் போய்விடுகிறது.
இதைப்பற்றி சிந்திக்காமல் நீதி விசாரணை நடத்துவதும் நஷ்ட ஈடு கொடுப்பதும்தான் அரசின் நடவடிக்கையாக இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற பேரழிவுகள் தொடர்கதையாகிப் போய்விடும்.
நன்றி;-http://onlinepj.com/unarvuweekly/crackers-how-to-ban-17-03/POSTED BY மாணவரணி SHAHID
Monday, 10 September 2012
தபால் துறையில் வேலைவாய்ப்பு
தமிழக தபால் வட்டத்தில், தபால் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
தமிழக தபால்வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக தபால் வட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் உதவியாளர் பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி உள்ள தேர்வர்கள்இதற்கான விண்ணப்பத்தை தலைமை தபால் நிலையத்தில், நேரடியாகவோ அல்லது," www.indiapost.gov.in, www.tamilnadupost.nic.in' ஆகிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணமாக, 50 ரூபாயும், தேர்வு கட்டணமாக, 200 ரூபாயும் செலுத்த வேண்டும்.
மேலும் எஸ்.சி., எஸ்.டி., மகளிர்,ஊனமுற்றோர் பிரிவு தேர்வர்களுக்கு, தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல்,பணம் செலுத்தியதற்கான ரசீதை, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள, ஏழு இலக்க எண்ணை, ரசீதின் பின்புறம் குறிப்பிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்
விண்ணப்பம் வழங்கப்படும் நாள் : 11.08.2012 முதல்25.09.2012 வரை விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் : 01.10.2012
விண்ணபங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
'Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi 110001'
குறிப்பு : விண்ணப்பங்களை Speed Post/ Register Post மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு
http://tamilnadupost.nic.in/rec/notif2010.htm
பார்வையிடவும்.
POSTED BY மாணவரணி SHAHID
Subscribe to:
Posts (Atom)