Saturday, 6 September 2014

நிகழ்ச்சி குறித்து 5 போஸ்டர்கள் - பல்லடம் கிளை...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 04.09.14 அன்று மங்கலம் கிளை மூலம் நடைபெறும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம், மக்தப் மதரஸா துவக்க நிகழ்ச்சி பற்றிய போஸ்டர் மொத்தம் 5 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்....

காவல்துறை அறிமுக சந்திப்பு கூட்டம் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 03.09.14 அன்று மாவட்ட நிர்வாகிகள் சகோ. ஜாஹிர் அப்பாஸ் மற்றும் சகோ. முஹம்மது பஷீர் ஆகியோர் தலைமையில், காவல்துறை அறிமுக சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

தனி நபர் தாஃவா - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31.08.14 அன்று தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், இரு சகோதரர்களுக்கு தொழுகை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான்....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.09.14  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், மாலை 5 மணி முதல் 6 மணி வரை ரம்யா கார்டன் பகுதியில் சகோ. பாஜிலா அவர்கள்  சொர்க்கம் செல்ல என்ன வழி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் 30 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் தஃவா குழு ஆலோசனைக் கூட்டம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02.08.14  அன்று பெண்கள் தஃவா குழு ஆலோசனைக் கூட்டம்  நடை பெற்றது. காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற இதில், பெண்கள் தாஃவா குழு சார்பாக வீடுகளில் எவ்வாறு தாவா செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

நிகழ்ச்சி பற்றிய நோட்டீஸ் விநியோகம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக 04.08.14 அன்று பெண்கள் தாஃவா குழு சார்பாக  05.09.14 நடக்கவிருக்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் மற்றும் மத்ரஸதுத் தக்வா துவக்க நிகழ்ச்சி தொடர்பாக  மங்கலம்  பகுதியில் வீடு வீடாக சென்று 1000 க்கும் மேற்ப்பட்ட நோடீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.08.14  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், கிடங்குத் தோட்டம் என்ற பகுதியில் சகோ. ஃபாஜிலா அவர்கள்  அழியும் உலகமும் அழியா மறுமையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துல்லில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.08.14  அன்று EB ஆபிஸ் பகுதியில் மக்ரிபிற்குப் பின் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோதரர். அன்சர்கான் இஸ்லாமும் முஸ்லிம்களின் நிலையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

ஏழு வீடுகளில் பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.09.14  அன்று  பெண்கள் தாஃவா குழு சார்பாக  சக்தி மஹால் பகுதியில் 7 வீடுகளில் இணைவைப்பு மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராக தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

நிகழ்ச்சிகள் குறித்து 70 போஸ்டர்கள் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.08.14 அன்று 5 ம் தேதி நடைபெறும் எளிய மார்க்கம் மற்றும் வருகின்ற 7 ம் தேதி புதிய மதரஸா துவக்க நிகழ்ச்சி சம்பந்தமாக மங்கலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 70  போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

சூனியம் தொடர்பாக சவால் விடும் 30 போஸ்டர்கள் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.09.14  அன்று சூனியம் வைப்பது தொடர்பான சவால்  போஸ்டர் மொத்தம் 30 போஸ்டர்கள்  மங்கலத்தின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 4 September 2014

சூனியம் குறித்து 2 பேனர்கள் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 04,09.14  அன்று சூனியம் குறித்து சவால் விடும் பேனர் மொத்தம் இரண்டு பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 04.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. யூசுப்  அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டோர் யார்? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 02.09.14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக கடந்த 31.08.14 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் இஸ்லாம் கூறும் குடும்ப நிர்வாகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 02.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.பிலால் அவர்கள் அண்டை வீட்டாரின் கடமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.1000 மருத்துவ உதவி - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக  02.09.14 அன்று காஜாமைதீன் என்ற வாத நோயால் பாதிக்கப்பட்ட முதியவருக்காக மருத்துவ உதவியாக ரூ.1000 அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.1000 வாழ்வாதார உதவி - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 02.09.14 அன்று ஹாஜராம்மா என்ற காது கேட்காத முதிய பெண்மணிக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 02.09.14  அன்று பழகுடோன் பகுதியின் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் பேய் பிசாசு உண்டா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளையில் குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 03.08.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ.சல்மான்  அவர்கள் தொற்றுநோய் உண்டா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 3 September 2014

செயல் வீரர்கள் கூட்டம் - ஆர்.பி.நகர் கிளையில்....

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி. நகர் கிளை சார்பாக 02.09.14  அன்று மாவட்ட நிர்வாகிகள் சகோ. பஷீர் அலீ மற்றும் சகோ. ஷேக் ஃபரீத் ஆகியோரின் முன்னிலையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சியில் நடந்து முடிந்த  மாநில செயற்குழு முடிவுகள் குறித்தும், கிளையின் வருங்கால செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

சூனியம் குறித்து 50 போஸ்டர்கள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 01.09.14  அன்று சூனியத்தின் மூலமாக யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதை நிரூபிக்க நாங்களும் தயாராக இருக்கின்றோம் என்ற திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளின் பகிரங்க சவால் போஸ்டர் மக்கள் பார்க்கும் முக்கிய பகுதிகளில் 50 போஸ்டர்கள் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.9,000 வட்டி இல்லா கடனுதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 01.09.14  அன்று திண்டுக்கல் மாவட்டம், பழநி பகுதியைச் சேர்ந்த  சகோதரர். அப்துல்சலாம் அவர்களுக்கு  ரூ.9,000 வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாஸின் பாபு நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 02.09.14 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. தீன்  அவர்கள் பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

சூனியம் குறித்து 3 பேனர்கள் - வடுகன்காளிபாளையம் கிளை...

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை சார்பாக கடந்த 31.08.14 அன்று சூனியம் குறித்து 5*5 என்ற அளவில் மூன்று (3) பேனர்கள் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...