Monday 9 December 2019

திருப்பூர் மாவட்ட பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட பொதுக்குழு
8/12/2019 அன்று காலை இனிதே ஆரம்பமாகி ...

உளத்தூய்மையுடன் நமது செயல்பாடுகளை தொடர்வோம் என்று மாநில செயலாளர் T.A. அப்பாஸ் அவர்களின் அறிவுறுத்தலுடன்
ஆண்டறிக்கை மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் அவர்களும், வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்களும் தாக்கல் செய்தனர்.
மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.




மாணவரணி செயலாளர் இம்ரான் அவர்கள் மாணவரணி மூலம் எவ்வாறெல்லாம் சமூக சேவைகளை செய்வது என்றும்,
பேச்சாளர்கள் எவ்வாறெல்லாம் தாவா பணிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதையும்,
மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீத் அவர்கள் மருத்துவணி சேவைகளை செய்வதின் பலன்களும் , ஒழுங்குமுறைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.
மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்தீக் அவர்கள் தொண்டரணி அமைத்து சேவைகளை செய்ய ஆர்வமூட்டினார்கள்.
மாநில பொதுச்செயலாளர் E.முஹம்மது அவர்கள் *நமது இலக்கு* எனும் தலைப்பில் வருங்கால தாவா சமூக சேவைப்பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டினார்கள்.
மருத்துவணி செயலாளராக S V காலனி அப்பாஸ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
கிளைகளின் தாவா சேவைப்பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த வருடம் சிறந்த முறையில் பணி செய்த கிளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட சகோதரர்கள் உற்சாகமாக வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தும் உறுதியோடு ஆண்டுப் பொதுக்குழு நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்