Wednesday 27 March 2019

பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களை தூக்கிலிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்




பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களை தூக்கிலிட வலியுறுத்தி 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.03.2019 திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு திருப்பூர் காங்கயம் ரோடு CTC அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்ட்த்தில் மாநில பேச்சாளர் சகோதரர். கோவை R. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

தமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி சம்பவத்தில் நூற்றுக்கணக்கான அபலைப் பெண்களை காம வெறியர்கள் சிலர் காதல் என்ற பெயரில் தனி இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்து, அடித்துத் துன்புறுத்தி நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர்.

அந்த வீடியோவை வைத்து அப்பெண்களை மிரட்டிப் பணம் பறித்ததுடன் அதை வைத்தே அவர்களை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படாத காரணத்தினால்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

பொள்ளாச்சியில் நிகழ்ந்தது போன்ற பாலியல் கொடூரம் இனியும் நிகழாது இருக்க வேண்டுமென்றால் இதில் தொடர்புடையவர்கள், இதன் பின்னணியில் இருப்பவர்கள் என அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை பார்த்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட நினைக்கும் கயவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்பட வேண்டும்.

இவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும். அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.



மாவட்ட துணைச்செயலாளர் சேக்பரீத் நன்றியுரை ஆற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட பெரிய தோட்டம் குமார்

அலை அலையாக இஸ்லாத்தை நோக்கி...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையில் 20-3-2019 அன்று குமார் என்கிற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். 

அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்