Showing posts with label இனிய மார்க்கம். Show all posts
Showing posts with label இனிய மார்க்கம். Show all posts

Tuesday, 9 May 2017

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக k.k.அம்மண் மண்டபத்தில் இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது,நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு 10 திருக்குர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள் நாயகம் 14 புத்தகம்,அர்த்தமுள்ள இஸ்லாம் 14 புத்தகம்,இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்.14 புத்தகம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் 14 புத்தகம்,வழங்கப்பட்டது, சகோ.அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்கள் பிறமத சகோதரர்களில் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ் 





Tuesday, 27 September 2016

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - பல்லடம் கிளை

 திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 22-09-2016 அன்று பல்லடம் கிளையின் சார்பாக நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக பல்லடம் நகராட்சித் தலைவருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு  அழைப்புவிடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 21-09-2016 அன்று பல்லடம் கிளையின் சார்பாக 25-09-2016 அன்று நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக 1500 அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு அதை பிறமத சகோதரர்களுக்கு கொடுத்து நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....



Saturday, 29 November 2014

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் _மங்கலம் கிளை

     
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-11-2014 அன்று முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி 
மங்கலம் சமுதாயக் கூடத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. 
இதில் 20 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது .



மாநில துணைத்தலைவர் சகோதரர். M.S.செய்யது இப்ராஹிம் அவர்கள் சிறப்பான முறையில் இஸ்லாத்தின் அடிப்படையில் பதில் வழங்கினார்கள்..
கேள்வி கேட்ட ஒவ்வொருவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுகேற்ற மார்க்கம் இஸ்லாம், மற்றும்


முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனிதனுகேற்ற மார்க்கம் இஸ்லாம், அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 
மேலும் முஸ்லிமல்லாதவர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது . 
அல்ஹம்துலில்லாஹ்......

Monday, 14 April 2014

"இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" _காலேஜ் ரோடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளை சார்பாக   13.04.2014 அன்று    "இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது. 

  



 

பிறமத மற்றும்  பிறகொள்கை சகோதர சகோதரிகள்  கலந்துகொண்டனர்.  இஸ்லாம் மார்க்கம் குறித்தும், முஸ்லிம்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்கள் கேட்ட  கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர். சகோ.செய்யது இப்ராகிம்

அவர்கள் ,தெளிவான பதில் மூலம் சத்திய இஸ்லாத்தினை  எடுத்துரைத்தார்.




 இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான இஸ்லாமிய சகோதர  சகோதரிகளும்  கலந்து கொண்டனர்.



கலந்து கொண்ட பிற சகோதர சகோதரிகளுக்கு   "மாமனிதர் நபிகள் நாயகம்- 25 ", இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் -25, மனிதனுக்கேற்ற மார்க்கம் -25 ஆகிய புத்தகம் மற்றும் DVD 25 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சி கிளை சகோதரர்கள் மற்றும் திருப்பூர் மாவட்ட சகோதரர்களின்  ஒத்துழைப்புடன் சிறப்பாக  நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்...



Tuesday, 25 December 2012

இஸ்லாம் ஒர் இனியமார்க்கம் _ உடுமலை _23122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   23.12.2012 அன்று உடுமலையில் நடைபெற்ற "இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சியில்
ஏராளமான பிறமத மற்றும் பிறகொள்கை சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு அவர்களின் இஸ்லாம் மார்க்கம் குறித்த
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு
சகோ.பக்கீர் முஹமது அல்தாபி அவர்கள் ,
தெளிவான பதில் மூலம் சத்திய இஸ்லாத்தினை எடுத்துரைத்தார்.
 இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான இஸ்லாமிய
சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டனர்.


கலந்து கொண்ட சகோதர சகோதரிகளுக்கு "இஸ்லாம்கூறும்கடவுள்கொள்கை " ,யார் இவர்?
ஆகிய துண்டு பிரசுரங்கள் , 
"அறிவை இழப்பதற்கா ஆன்மிகம் ",யார்கடவுள்?  மற்றும்  "மனிதன் கடவுளாக முடியுமா?" ஆகிய DVD கள் ,
 மற்றும் "மாமனிதர் நபிகள் நாயகம் " புத்தகம் வழங்கப்பட்டது.

உடுமலை கிளை சகோதரர்கள் திருப்பூர் மாவட்ட சகோதரர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தினர்.

மேலும் இந்த நிகழ்ச்சி  
TNTJ web master சகோ.S.M.அப்பாஸ் அவர்களால் onlinepj.com இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால்,
உலகமெங்கும் ஏராளமானோர் கண்டு பயன்பெற்றனர்.
குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் உள்ளூர் கேபிள் டிவியில்
நேரடி ஒளிபரப்பு  செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

Thursday, 9 August 2012

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – திருப்பூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கடந்த 01-07-2012. அன்று மாலை 400.மணியளவில் திருப்பூரில் உள்ள டவுன்ஹால் வளாகத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் அல்லாத பிற மத சகோதர சகோதரிகளின் மனங்களில் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை, திருமண முறை, வரதட்சனை, விவாகரத்து, இஸ்லாமிய பெண்களின் ஆடைமுறை, பென்டிமைத்தனம், குற்றங்களுக்கான இஸ்லாத்தில் உள்ள கடுமையான் தண்டனை,போன்ற சந்தேகங்களுக்கும். முஸ்லிம் மக்களிடம் உள்ள மூட பழக்க வழக்கங்களும் கட்டாய மத மாற்றம், தீவிரவாதம், பயங்கர வாதம், போன்ற குற்றச்சாட்டுகளும். இஸ்லாமிய வாழ்வியல் சட்ட திட்ட முறைகள்.குறித்த சந்தேகங்கள் ஆகியவற்றை வெளிப்படையாகவும் எந்தவித தயக்கங்கள் இன்றியும் கேள்விகளாக கேட்டு ஓரு மத நல்லிணக்கத்திற்கு வழிவகை செய்யும் ஒரு நிகச்சியாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இதில் பிற மத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு மாநிலத் தலைவர் p.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள். அளித்து பேசினர் இதில் மாவட்டத்தலைவர்: ஷேக்பரித் துனைத்தலைவர்: ஷாஜகான். மாவட்ட
பிறமத சகோதர சகோதிரிகள் நூற்றுக்கணக்கானனோர் பார்வையாளர்களாகவும் இஸ்லாமிய மக்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானனோர் கலந்து கொண்டனர்.
கேள்வி கேட்ட பிறசமய சகோதரர்களுக்கு ரியாத் மண்டலம் சார்பாக குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.

என்றும் அன்புடன் SM.YOUSUF