Thursday 24 November 2011

அல்லாஹ்வின் உதவியுடன் தனித்து களமிறங்கிய TNTJ



இறைவனின் திருபெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர,சகோதரிகளே!
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் ஆகும். விபரம்  இந்த பாதிப்பு ஏற்பட்டவுடன் திருப்பூர் பகுதியில் இருந்த அனைத்து அமைப்புகளும் களத்தில் இறங்கி வேலைகள் செய்தது எந்த ஒரு அமைப்பும் குறை சொல்ல இயலாத அளவு தங்களால் இயன்ற அளவு வேலைகளை செய்தனர்  எனபது குறிப்பிடத்தக்கது இந்த பெரும் வெள்ள விபத்து நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு  அனைத்து ஜமாத்தும் இணைந்து அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது . 
இதில் குர்ஆன்,ஹதீஸ் சரியாக சொல்வதால் நம்மை அவர்கள் அழைக்கவில்லை. என்றாலும் நமது கொள்கைக்கும் உறுதிக்கும் அல்லாஹ் வழங்கிய மாபெரும் அருளால் பாதிக்கப்பட்ட மக்களை உடனுக்குடன் சென்று சந்தித்து அவர்களுக்கு உடன் 
தேவைப்பட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் அண்ணாநகர் எனும் பகுதியில் சென்று அந்தப்பகுதியில் சேரும் சகதியுமாக இருந்த வீடுகள் முதற்கொண்டு சென்று சுத்தம் செய்யப்பட்டது. அவர்களுக்கு உணவு,தேனீர்,பிஸ்கட் போன்றவை புதன் இரவு வரை வழங்கப்பட்டது மேலும்

Tuesday 15 November 2011

திருப்பூரில் வெள்ளம் – நிவாரணப்பணியில் திருப்பூர் TNTJ

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் ஆகும். நள்ளிரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கிட்டத்தட்ட 14 பேர் உயிரிழந்தார்கள். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து வாழ்வாதார அடிப்படை வசதிகூட இல்லாமல் அரசின் எவ்வித உதவியும் கிடைக்காமலும் கடும் பாதிப்புக்குள்ளார்கள்கள். சத்யா நகர், சுகுமார் நகர் ,பெரியதோட்டம் ,அண்ணா நகர் ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தால் சேறும் சகதியுமாக தேங்கி நின்றன.
மக்களின் கடும் பாதிப்பைக் கண்ட திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 நாட்களும் எவ்வித அடிப்படை வசதியும் உணவும் இல்லாமல் தவித்த அந்த மக்களுக்கு உணவு, குடிநீர்,தேனீர் போன்றவைகளை வழங்கி சேவையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து  அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்கப்பட்டது . அதுமட்டுமின்றி பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கப்பட்டது .
மேலும் வெள்ளித்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய்கள் ஏதும் வராமல் இருக்க அதற்குரிய தடுப்பூசிகள் போடப்பட்டது.