Showing posts with label மாநில நிகழ்ச்சி. Show all posts
Showing posts with label மாநில நிகழ்ச்சி. Show all posts

Saturday, 27 July 2019

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சார செயல்வீரர்கள் கூட்டம் 260719







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம் ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரத்தை அறிவித்து, தமிழகம் முழுவதும் மற்றும் அதன் கிளைகள் உள்ள  பகுதிகளில் பலவிதமான பிரச்சாரங்கள் வாயிலாகவும், சமூக நற்பணிகள் மூலமாகவும் தொடர் பிரச்சாரத்தை செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக  திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சார செயல்வீரர்கள் கூட்டம் 26.07.19 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00மணிக்கு திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் இ. முஹம்மது , மாநில செயலாளர்கள் அப்துல் கரீம், மற்றும் கோவை. டி.ஏ. அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக மாநில பொதுச் செயலாளர் இ. முஹம்மது அவர்கள் பேசும் போது, அமைதியையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி மக்களிடம் தவறான செய்தியாக பரப்பியும், இஸ்லாம் பற்றிய மக்களின் பார்வையை சிதைக்கும் வண்ணம் பல அவதூறுகளையும் கட்டவிழ்த்து மகிழ்கின்றனர் சில விஷமிகள். இதை உடைத்தெரியும் விதமாக, இஸ்லாம் காட்டும் வாழ்வியல் முறைகளை நாம் ஒவ்வோருவரும் நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ வேண்டும். இஸ்லாம் கூறுவது போல் நன்மையைக் கொண்டு தீமையை அழிக்க வேண்டும் எனவும், இதுபற்றிய விழிப்புணர்வை அனைத்து பகுதியிலுள்ள மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மாநில செயலாளர் அப்துல் கரீம் அவர்கள், இந்த தீவிரவாத எதிர்ப்பு தொடர் பிரச்சாரத்தின் செயல் திட்டங்களை அறிவித்தார். அதில் முக்கியமாக மக்களின் உயிர்காக்கும் இரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் போன்ற சமூக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இஸ்லாமிற்கும் தீவிரவாதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை விளக்கி நோட்டீஸ், துண்டுப் பிரசுரம், புக்ஸ்டால் அமைத்தல், இலவசமாக திருக்குர்ஆன் வழங்குதல் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். 

மேலும் மாநில செயலாளர் கோவை டி.ஏ.அப்பாஸ் அவர்கள், ஏற்கனவே நாம் செய்துகொண்டிருக்கும் இப்பணிகளை கிளைகள் இன்னும் துரிதமாக செய்து செயல்பட வேண்டும். இச்செயல்கள் குறித்து கண்காணிக்கப்படும் என கூறினார்.

இதில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், பொருளாளர் அப்துல் ரஹ்மான், துணைத் தலைவர் யாசர் அராபத், துணைச் செயலாளர்கள் அப்துல் ரஷீது, ஷேக் பரீத், ரபீக், ஹனிபா மற்றும் மாணவரணிச் செயலாளர் இம்ரான், மருத்துவரணிச் செயலாளர் ஜாகிர், தொண்டரணிச் செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். 
இதில் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் ,பேச்சாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, 19 July 2019

ஆண்டியகவுண்டனூர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் சார்பில் ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு 18/07/2019 அன்று 9:30 மணி முதல் 11:00 மணி வரை கிளை மர்கஸில் நடைபெற்றது.




மாநில செயலாளர் T.A.அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைசெயலாளர் அப்துல் ரஷீத் அவர்களும் கலந்து கொண்டு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைகள், கருத்துக்களை கேட்டறிந்தனர்.
நிர்வாக மற்றும் தாவா பணிகளை சிறப்பாக செய்திட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

உடுமலை கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் சார்பில் உடுமலை கிளை சந்திப்பு 18/07/2019 அன்று 7:30 மணி முதல் 8:45 மணி வரை கிளை மர்கஸில் நடைபெற்றது.


மாநில செயலாளர் T.A.அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைசெயலாளர் அப்துல் ரஷீத் அவர்களும் கலந்து கொண்டு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைகள், கருத்துக்களை கேட்டறிந்தனர்.
நிர்வாக மற்றும் தாவா பணிகளை சிறப்பாக செய்திட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 14 July 2019

GK கார்டன் கிளை மாநில நிர்வாக சந்திப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று மாலை GK கார்டன்  கிளை மாநில நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.
மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், சேக் பரீத், மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ்ரோடு கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று மாலை காலேஜ்ரோடு கிளை மாநில நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.
மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், சேக் பரீத், மருத்துவரணி ஜாகிர் மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

பெரிய கடை வீதி -வெங்கடேஸ்வரா நகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று காலை மாவட்ட மர்கஸில் பெரிய கடை வீதி மற்றும் வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அராபாத், மாவட்ட துணை செயலாளர்கள் மாபுபாஷா, அனீபா மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

யாசின்பாபு நகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று காலை  யாசின்பாபு நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.





மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.

மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா, அனீபா மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

ஹவுசிங் யூனிட் கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று காலை ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.


மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின்
நிறை குறைகள் கேட்டறிந்தார்.

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.
மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா, அனீபா மற்றும் மாவட்டதொண்டரணி செயலாளர் சித்திக்  ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 11 July 2019

M.S.நகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 11/7/2019 அன்று இரவு  M.S.நகர்  கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.


மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளை குறிப்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரசாரத்தின் அவசியம் பற்றியும் எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.

மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா  ஆகியோர் கலந்து கொண்டனர் 

அல்ஹம்துலில்லாஹ்

S.V. காலனி கிளை மாநில நிர்வாக சந்திப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 11/7/2019 அன்று மாலை S.V. காலனி கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.

மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு 





நிர்வாக மற்றும் தாவா பணிகளை குறிப்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரசாரத்தின் அவசியம் பற்றியும் எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.


மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா  ஆகியோர் கலந்து கொண்டனர் 

அல்ஹம்துலில்லாஹ்.........

Monday, 29 October 2018

மண்டல செயற்குழு கூட்டம் - திருப்பூர்






திருக்குர்ஆன் மாநில மாநாடு மண்டல செயற்குழு கூட்டம் திருப்பூர் DRG ஹோட்டலில் 28/10/2018 அன்று காலை 10:30 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

அல்ஹம்துலில்லாஹ்

மாநில செயலாளர்கள் Eபாரூக், CVஇம்ரான், செங்கோட்டை பைஸல் மற்றும் தரமணி யாஸிர் அவர்களும்
நமது திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மக்களிடம் எவ்வாறெல்லாம் திருக்குர்ஆனின் போதனைகளை கொண்டு செல்வது பற்றியும்,
மாநாட்டில் எவ்வாறெல்லாம் நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்பது பற்றியும் பல்வேறு தலைப்புகளில்
தாயிக்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 23 July 2018

கோவை மண்டல தாயிகள் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி - திருப்பூர்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோவை மண்டல தாயிகள் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி  22.7.2018 ஞாயிறு காலை
10 மணிக்கு ,



திருப்பூர் பல்லடம் ரோடு,
ஹோட்டல் DRG ல் நடைபெற்றது.



மாநில செயலாளர்கள்
ரஹ்மத்துல்லாஹ்,
ஆவடி இப்ராஹீம்,
பல்லாவரம் இப்ராஹீம்,
முஹம்மது கனி.
ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

Thursday, 12 April 2018

மாநில நிர்வாகத்தின் சார்பாக கிளை சந்திப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  11/4/18 புதன் கிழமை  அன்று இரவு 9:00 மணியளவில் மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் மாநில செயலாளர்கள் சகோதரர் அப்துர் ரஹிம் மற்றும் காஞ்சி சித்திக் அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைப்பெற்றது. இந்த சந்திப்பில் நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்

மாநில நிர்வாகம் சார்பாக கிளைகள் சந்திப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 11/4/2018, அன்று அவினாசி கிளையில் நடைப்பெற்ற கள ஆய்வில் கலந்து கொன்ட போது எடுத்த படம், இதில் மாநில செயலாலர் E பாரூக், மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலார்கள், ரபீக் மற்றும் யாசர் அராபத் முன்னிலையில் நடைப்பெற்றது.இதில் அனுப்பர்பாளையம் மற்றும் அவினாசி கிளை நிர்வாகிகள் பற்றும் உறுப்பினர்கள் கலந்து கொன்டார்கள்.

Sunday, 4 March 2018

திருப்பூர் மாவட்ட சீரமைப்பு- புதிய நிர்வாகிகள்


      திருப்பூர் மாவட்டத்தின் தாவாப் பணிகளை மாநிலப் பொருளாளர் சாதிக் அவர்களும், மாநிலச் செயலாளர் ஆவடி இப்ராஹீமும் 03/03/2018 அன்று கள ஆய்வு மேற்கொண்டு, 


மாவட்ட தலைவர் M.அப்துர்ரஹ்மான் (1) , 
மாவட்ட பொருளாளர் சேக் ஜீலானி (2) ,
மாவட்ட துணை செயலாளர் பசீர் அலி (3) , 
மாவட்ட மாணவரணி செயலாளர் சிராஜ் (4)  
ஆகியோரின் விலகலை மாநில நிர்வாகத்தால், ஏற்றுக் கொண்டு மாவட்ட நிர்வாகம் சீரமைக்கப்பட்டுள்ளதால், 


திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் 


தலைவர் : 

S.அப்துல் ரஷீத் 
70944 65550, 94435 22534 , 

செயலாளர் : 

J.ஜாஹிர் அப்பாஸ் 
70944 65551, 91500 30398, 
பொருளாளர் : 
A.ஷேக் ஃபரீத்,
70944 65552, 86103 27348

துணைத்தலைவர் : 

A.அப்துர் ரஹ்மான் 
70944 65553, 98430 86807

துணைச்செயலாளர் : 

A.யாசர் அரஃபாத்  7094465558, 93454 56363

துணைச்செயலாளர்: 

ரபீக் 7094465559, 99438 14137

மருத்துவ அணி செயலாளர் : 

B.ஜாகிர் 9244642002, 90434 93168

தொண்டர் அணி செயலாளர்: 

J.அப்பாஸ்   9042008313  

அல்ஹம்துலில்லாஹ்...


Monday, 25 December 2017

மாநில நிர்வாகத்துடன் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு


 திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் 25/12/2017  அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் மாநில நிர்வாகிகளை சந்தித்து மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய எதிர்கால தாவா பணிகள் மற்றும்  மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டத்தில், மாநில தலைவர் pj தேதி உட்பட விசயங்கள் சம்பந்தமாக   ஆலோசனைகள் பெறப்பட்டது.

Sunday, 9 October 2016

மாநில செயற்குழு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கன்னியாகுமரி யில் வைத்து  04-10-2016 அன்று   நடைபெற்றது . இதில்  மாவட்டம் தோறும் நடக்க இருக்கும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்)  மாநாடு முக்கியத்துவம் குறித்தும் இதற்கு அதிகமான மக்களை அழைத்து வருவது குறித்தும் ஏற்பாடுகள் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது குறித்தும் 


மாவட்ட நிர்வாகிகளுக்கு  ஆலோசனை வழங்கப்பட்டது ,மேலும் மாநில  செயற்குழுவில் மாவட்ட  செயலாளர் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நிறை குறைகளை பதிவு செய்தார். அல்ஹம்துலில்லாஹ்.




Tuesday, 10 September 2013

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்" கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம் _ தீர்மானங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜனவரி 28  அன்று  கோவை,சென்னை, திருச்சி,நெல்லை ஆகிய 4 மண்டலங்களில் முஸ்லிம் சமுதாயதிற்கு தனி இடஒதுக்கீடு கேட்டு   சிறை செல்லும் போராட்டம்  நடைபெற உள்ளது.  

கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு  கூட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ்  தலைமையில் மாநில செயலாளர் அப்துர்ரஹீம் மற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக்  முன்னிலையில் கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல்,திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி ,மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு  கூட்டம்   09.09.2013 அன்று திருப்பூர் பெரியகடைவீதி மர்கசில் நடைபெற்றது. 

கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

1.சிறை செல்லும் போராட்டம்

  தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கா3.5%இடஒதுக்கீடு போதுமானதல்ல. அதை அதிகரித்து தருவோம் என முதல்அமைச்சர்.ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், இந்தியஅளவில் முஸ்லிம்களுக்கு தனியாக 10% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என நீதிபதி.ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற கோரி மத்தியஅரசை வலியுறித்தியும் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜனவரி 28 செவ்வாய்கிழமை கோவையில் நடைபெறும் சிறை செல்லும் போராட்டத்திற்கு, 8 மாவட்டங்களில் இருந்து 4 இலட்சம் முஸ்லிம்களை திரட்டி செல்லவேண்டும்..என்றும்

2.வக்ப் வாரியத்தை முற்றாக கலக்க வேண்டும் 

கிருத்துவ சமுதாயத்தின் அறப்பணிகளுக்கான சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் கிருத்துவ சமுதாயம் மட்டுமே நிர்வகித்து வருகிறது.இதனால் அவர்களின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப் படாமல் பாதுகாப்பாக இருந்துவருகிறது.ஆனால்,முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசின் வக்ப் வாரியம் நிர்வகிக்கிறது.இதனால்,அரசியல்வாதிகளும், சுரண்டல் பேர்வழிகளும், கொள்ளையடிக்க வாய்ப்பாக இருந்துவருகிறது.எனவே முஸ்லிம் சமுதாய சொத்துகளை  அரசு தலையீடு இல்லாமல் முஸ்லிம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ப் வாரியத்தை முற்றிலுமாக கலைத்து  விடவேண்டும் ....என்றும் 

3.திருமண பதிவுகளில் கெடுபிடி நீக்கவேண்டும்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருமணங்களை பதிவு செய்யவேண்டும் என தமிழகஅரசு சட்டம் இயற்றியது.திருமணத்தை பதிவு செய்ய போகும்போது முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சனை களை எதிர் கொள்கின்றனர்.தற்காலத்தில் முஸ்லிம்கள் திருமண பத்திரிக்கை கூட அடிக்காமல் எளிமையாக திருமணம் செய்கின்றனர்.அனால் அதிகாரிகள் திருமண பத்திரிக்கை கொண்டு வர நிர்பந்தப்படுத்து கின்றனர். மேலும் இது போன்ற கெடுபிடிகளை நீக்கவேண்டும்.... என்றும் 

4. மின்வெட்டை சீர்செய்ய வேண்டும்.


குழந்தைகள்,மாணவ மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பதிக்கும் வகையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும் ..என்றும் 

தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு? _பத்திரிக்கையாளர்சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  09.09.2013 அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ்  அவர்கள் தலைமையில்  மாநில செயலாளர் அப்துர்ரஹீம் மற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக்  முன்னிலையில் 
 
கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி ,மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு  கூட்டம்"   திருப்பூர் பெரியகடைவீதி மர்கசில் நடைபெற்றது.



பத்திரிக்கையாளர் சந்திப்பு

இந்த கூட்டத்தில்  ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு? என்பது பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ்  அவர்கள் பத்திரிக்கையாளர் மத்தியில் விரிவாக விளக்கம் வழங்கினார். மேலும் பத்திரிக்கையாளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் விளக்கம் வழங்கி நடந்தது.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  09.09.2013 அன்று

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ்  தலைமையில்  மாநில செயலாளர் அப்துர்ரஹீம் மற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக்  முன்னிலையில் 

கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி ,மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு  கூட்டம்"   திருப்பூர் பெரியகடைவீதி மர்கசில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் கோவையில் நடைபெறும் சிறை செல்லும் போராட்டத்திற்கு, 8 மாவட்டங்களில் இருந்து 4 இலட்சம் முஸ்லிம்களை திரட்டிசெல்ல வேண்டும்.. என்று தீர்மானிக்கப்பட்டது