Thursday 24 July 2014

மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-7-2014  அன்று இஷா தொழுகைக்குப் பின் மாணவர்களுக்கான தர்பியா பயிற்சி வகுப்பு   நடைபெற்றது. 






இதில் முதலாவதாக சகோ. அன்சர் கான் அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பிலும், அதை தொடர்ந்து சகோ.முஹம்மது சலீம் அவர்கள்  மாணவரணியின் செயல்பாடுகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் 20 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். 

அல்ஹம்துலில்லாஹ் .

ஃபித்ரா குறித்து 10,000 நோட்டீஸ்கள் _ திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம்  குறித்தும் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள் குறித்தும் 10,000   நோட்டீஸ்கள்   அச்சடிக்கப்பட்டு   கடந்த   18.07.14   அன்று   மாவட்டத்தில் இருக்கும் அனைத்து கிளைகளுக்கும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 23.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக23.07.2014 அன்று ரமளான்  இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.  சகோ. தவ்ஃபீக் DISc.  அவர்கள் "திருக்குர்ஆன் மாபெரும் அற்புதம்"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பெருவாரியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து பயன்பெற்றனர். 
அல்ஹம்துலில்லாஹ்..

மார்க்க அறிவுத் திறன் போட்டி _ பெரிய கடை வீதி கிளை



திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 22.07,14 அன்று ரமளான் இரவு பயானை அடுத்து மார்க்க அறிவுத் திறன் போட்டி நடைபெற்றது. இதில் சரியா பதிலை அளித்த சிறுவனுக்கு சொர்க்கம் நரகம் எனும் புத்தகம் பரிசாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 22.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 22.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பின் ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள், சல்மான் ஃபார்ஸி(ரலி) அவர்களின் வாழ்க்கை பற்றி தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக தனி நபர் தாஃவா ....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-7-2014 அன்று ஒரு பள்ளி மாணவருக்கு இஸ்லாம் குறித்து அவர் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்து தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம், அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் ஆகிய 4 புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு..

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர்  கிளை சார்பாக 23.07.14  அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் அனுமதிக்கப்பட்ட உணவுகள் என்ற தலைப்பில் 2:168, 5:88, 16:114, 2:172 ஆகிய எண்களில் இருக்கும் குர்ஆன் வசனங்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..