தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-12-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் முதலாவதாக மதரஸா மாணவ , மாணவிகளின் கிராஅத் ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறகு சகோ. அப்துல் ரஹ்மான் (misc) அவர்கள் " திருக்குர்ஆன் மாநாடு ஏன் ? எதற்கு ? " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இறுதியாக சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் " தியாகம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பிறகு மாநாட்டிற்கான VKP கிளையின் தாவா பணிகளின் விபரங்கள் மற்றும் வாகன ஏற்பாடுகள் , பொருளாதார வசூல் சம்பந்தமாகவும் கிளை நிர்வாகிகள் விளக்கம் அளித்தார்கள்
கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெருந்திரலாக கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை யின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (16.12.2018)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் தேவராயம்பாளையம் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளி அருகில் மற்றும் அடுத்த வீதியிலும் 2 இடங்களில் நடைபெற்றது.
சகோ. இம்ரான் கான் அவர்கள் *மறுமை* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக17:12:18திங்கள் அன்று சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ:அப்துல்வஹாப் அவர்கள் "பின்பற்ற தகுதிஉடையவர் யார்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்