Friday 22 May 2015

" அல்லாஹூவின் சோதனை " -Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " அல்லாஹூவின் சோதனை "என்ற தலைப்பில் உரையாற்றினார்

கிருஸ்துவ சகோதருக்கு 2புத்தகம் வழங்கி தாவா _ Msநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Msநகர் கிளை சார்பாக 22-05-15 அன்று சந்திரன் என்ற கிருஸ்துவ சகோதருக்கு இயேசு இறைவனுமில்லை , இறைமகனுமில்லை என்பது பற்றி தாவா செய்து "_இயேசு இறைமகனா?" மற்றும் " மனிதனுக்கேற்ற மார்க்கம் " கிருஸ்துவ சகோதருக்கு வழங்கப்பட்டது

கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு _ தாராபுரம் நகர கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளையின் சார்பாக 22/5/15 அன்று  கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு  நிகழ்ச்சி  நடைபெற்றது .
கடந்த 13/5/15 அன்று முதல் 22/5/15 அன்று வறை கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 
இதில் மாணவ,மாணவிகள் 18 பேர் கலந்துகொண்டு பயண்அடைந்தார்கள்
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

"அந்நஸ்ர்" _அவினாசி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 21.05.15 அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "அந்நஸ்ர்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

அந்நஸ்ர்- உதவி
மொத்த வசனங்கள் : 3
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... 
1. அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது,
2. அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது,
3. உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக!493 அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

இணைவைப்பு கயிர் அகற்றம் _தாராபுரம் நகர கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 22.05.2015 அன்று  ஒரு சகோதரரிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து இணைவைப்பு கயிர் அகற்றப்பட்டது .. .அல்ஹம்துலில்லாஹ்.

சூரத்துல் அஃலா _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 22.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் "சூரத்துல் அஃலா" எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்