Showing posts with label செயற்குழு. Show all posts
Showing posts with label செயற்குழு. Show all posts

Saturday, 27 July 2019

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சார செயல்வீரர்கள் கூட்டம் 260719







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம் ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரத்தை அறிவித்து, தமிழகம் முழுவதும் மற்றும் அதன் கிளைகள் உள்ள  பகுதிகளில் பலவிதமான பிரச்சாரங்கள் வாயிலாகவும், சமூக நற்பணிகள் மூலமாகவும் தொடர் பிரச்சாரத்தை செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக  திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சார செயல்வீரர்கள் கூட்டம் 26.07.19 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00மணிக்கு திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் இ. முஹம்மது , மாநில செயலாளர்கள் அப்துல் கரீம், மற்றும் கோவை. டி.ஏ. அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக மாநில பொதுச் செயலாளர் இ. முஹம்மது அவர்கள் பேசும் போது, அமைதியையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி மக்களிடம் தவறான செய்தியாக பரப்பியும், இஸ்லாம் பற்றிய மக்களின் பார்வையை சிதைக்கும் வண்ணம் பல அவதூறுகளையும் கட்டவிழ்த்து மகிழ்கின்றனர் சில விஷமிகள். இதை உடைத்தெரியும் விதமாக, இஸ்லாம் காட்டும் வாழ்வியல் முறைகளை நாம் ஒவ்வோருவரும் நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ வேண்டும். இஸ்லாம் கூறுவது போல் நன்மையைக் கொண்டு தீமையை அழிக்க வேண்டும் எனவும், இதுபற்றிய விழிப்புணர்வை அனைத்து பகுதியிலுள்ள மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மாநில செயலாளர் அப்துல் கரீம் அவர்கள், இந்த தீவிரவாத எதிர்ப்பு தொடர் பிரச்சாரத்தின் செயல் திட்டங்களை அறிவித்தார். அதில் முக்கியமாக மக்களின் உயிர்காக்கும் இரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் போன்ற சமூக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இஸ்லாமிற்கும் தீவிரவாதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை விளக்கி நோட்டீஸ், துண்டுப் பிரசுரம், புக்ஸ்டால் அமைத்தல், இலவசமாக திருக்குர்ஆன் வழங்குதல் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். 

மேலும் மாநில செயலாளர் கோவை டி.ஏ.அப்பாஸ் அவர்கள், ஏற்கனவே நாம் செய்துகொண்டிருக்கும் இப்பணிகளை கிளைகள் இன்னும் துரிதமாக செய்து செயல்பட வேண்டும். இச்செயல்கள் குறித்து கண்காணிக்கப்படும் என கூறினார்.

இதில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், பொருளாளர் அப்துல் ரஹ்மான், துணைத் தலைவர் யாசர் அராபத், துணைச் செயலாளர்கள் அப்துல் ரஷீது, ஷேக் பரீத், ரபீக், ஹனிபா மற்றும் மாணவரணிச் செயலாளர் இம்ரான், மருத்துவரணிச் செயலாளர் ஜாகிர், தொண்டரணிச் செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். 
இதில் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் ,பேச்சாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 4 March 2019

திருப்பூர் மாவட்ட செயற்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 03/03/2019 ஞாயிறு காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
அனைத்து கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் மற்றும் ஜமாஅத் ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு வருங்காலத்தில் நமது தாவா செயல்பாடுகளை எவ்வாறெல்லாம் அமைத்துக் கொள்ளலாம் என்று கருத்துக்கள், ஆலோசனைகள், வழங்கினார்கள்.
இதில் மாநில மேலாண்மை குழு தலைவர் சகோ. M.S. சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு வருங்கால தாவா பணிகளை வீரியப்படுத்த பல்வேறு ஆலோசனைகள், மற்றும் மக்களின் கருத்துக்களுக்கு விளக்கம் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 25 January 2019

திருப்பூர் மாவட்ட அவசர செயற்குழு _ திருப்பூர் மாவட்டம்




மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு  இன்ஷாஅல்லாஹ் ஜனவரி 27 அன்று உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெறவுள்ளதை ஒட்டி  *திருப்பூர் மாவட்ட அவசர
செயற்குழு*  திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் *25/01/2019 வெள்ளி க்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்* நடைபெற்றது.


கிளை நிர்வாகிகள் மற்றும் வாகனங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அதில் திருப்பூர் மாவட்ட கிளைகளின் சார்பாக அழைத்து செல்லும் மக்களுக்கு உதவ, மாநில, மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு விளக்கம் வழங்கி சிறப்பாக நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 29 October 2018

மண்டல செயற்குழு கூட்டம் - திருப்பூர்






திருக்குர்ஆன் மாநில மாநாடு மண்டல செயற்குழு கூட்டம் திருப்பூர் DRG ஹோட்டலில் 28/10/2018 அன்று காலை 10:30 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

அல்ஹம்துலில்லாஹ்

மாநில செயலாளர்கள் Eபாரூக், CVஇம்ரான், செங்கோட்டை பைஸல் மற்றும் தரமணி யாஸிர் அவர்களும்
நமது திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மக்களிடம் எவ்வாறெல்லாம் திருக்குர்ஆனின் போதனைகளை கொண்டு செல்வது பற்றியும்,
மாநாட்டில் எவ்வாறெல்லாம் நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்பது பற்றியும் பல்வேறு தலைப்புகளில்
தாயிக்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 16 September 2018

திருப்பூர் மாவட்ட செயற்குழு



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 16/09/2018 ஞாயிறு அன்று காலை 9:30 முதல்திருப்பூர் ஹோட்டல் DRG மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.


மாநில செயலாளர் சகோ. அப்துல் கரீம் அவர்கள்  மற்றும் திருப்பூர் மாவட்ட அனைத்து கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 18 August 2018

மர்கஸ் பள்ளி கட்டுமானப் பணிக்கான செயற்குழு _ GKகார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் GKகார்டன் கிளை மர்கஸ் பள்ளி கட்டுமானப் பணிக்கான செயற்குழு..
17/08/2018 அன்று ஜும்ஆவிற்கு பிறகு நடைபெற்றது.

மாவட்ட தலைவர். அப்துல்ரஷீது அவர்கள் பள்ளிகட்டுவதின் சிறப்பும்  ஒவ்வோர் மக்களும் பங்களிக்க வேண்டும் என்பதின் அவசியத்தையும் ஆர்வமூட்டி எடுத்துச் சொன்னார்கள்
மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ்,
மாவட்ட து.தலைவர் அப்துர்ரஹ்மான்,
மாவட்ட து.செயலாளர் யாஸர் அராபத் ஆகியோர் மற்றும் கிளை நிர்வாகிகள், சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 12 December 2017

மாவட்ட செயற்குழு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 2019 ஜனவரி 27 ல் நடத்தவுள்ள  திருக்குர்ஆன் மாநில மாநாடு  செயல்திட்டங்களை வகுக்கவும்,  

     தாவா பணிகளை வீரியப்படுத்தவும், கிளை மாவட்ட நிர்வாக ஒழுங்குகளை சீராக்கவும் மாநில தலைமையின் வழிகாட்டுதலுடன் 
        டிசம்பர் 10   (10.12.2017) அன்று திருப்பூர் மாவட்ட செயற்குழு  உடுமலை கிளை மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

     இந்த செயற்குழுவில் மாவட்டத்தின் அணைத்து கிளை நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள், மாவட்ட பேச்சாளர்கள் ஆகியோர்   கலந்து கொண்டனர் 

       இந்த செயற்குழுவில் மாவட்ட நிர்வாகிகள், ஜமாஅத் தின் நிலைப்பாடுகள் பற்றியும், மாநில செயலாளர். பா.அப்துர்ரஹ்மான் அவர்கள் " திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன்? எதற்கு? எனும் தலைப்பிலும்,  மாநில செயலாளர் ஈ.முஹம்மது அவர்கள் நிர்வாக ஒழுங்குகள்" எனும் தலைப்பிலும்  உரை நிகழ்த்தி விளக்கம் வழங்கினார்கள்.



  அல்ஹம்துலில்லாஹ்..

Tuesday, 11 April 2017

அவசர செயற்குழு கூட்டம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  10/04/2017 அன்று மாலை 7மணி முதல் 9 மணி வரை   மாவட்ட மர்கஸில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 16 அன்று நடைபெறவிருக்கும் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு சம்பந்தமாக அவசர செயற்குழு கூட்டம்  நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட தலைவர். சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் மாநாட்டின் அவசியம் பற்றி விளக்கினார்.

திருப்பூர் மாவட்ட செயலாளர்  சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் மாநாட்டிற்காக இதுவரை செய்த பணிகள் பற்றியும் இனி செய்ய வுள்ள பணிகள் பற்றியும் விளக்கினார்கள்.

திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் . சகோ. உடுமலை அப்துர்ரஹ்மான் அவர்கள் கிளை செய்த பணிகள் பற்றி கேட்டறிந்து இனி செய்யவுள்ள பணிகள் பற்றி விளக்கினார்.

மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு செயல்திட்டங்கள், ஆலோசனைகள் வழங்கினர்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, 4 March 2017

மாவட்ட மாநாடு அவசர செயற்குழு கூட்டம்-திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  3/3/2017 அன்று மாலை 7மணி முதல் 9 மணி வரை   மாவட்ட மர்கஸில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 16 அன்று நடைபெறவிருக்கும் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு சம்பந்தமாக அவசர செயற்குழு கூட்டம்  நடைபெற்றது.

மாநில அழைப்பாளர். சகோ. கோவை அப்துர்ரஹீம் அவர்கள் மாநாட்டின் அவசியம் பற்றி விளக்கினார்.

மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு செயல்திட்டங்கள், ஆலோசனைகள் வழங்கினர்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்!




Wednesday, 2 November 2016

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி பொதுக்கூட்டம் அவசர செயற்குழு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக  31-10-2016 அன்று மாலை 4.45 மணிக்கு மாவட்ட தலைமையகத்தில் வைத்து இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 6 ந்தேதி நடைபெறும் பேரனி & பொதுக்கூட்டம் குறித்து அவசர செயற்குழு நடைபெற்றது,இதில் மாவட்ட பொருளாளர் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் பேரணி & பொதுக்கூட்டம் குறித்தும், மாவட்ட செயலாளர் சகோ.முஹம்மது ஹூசைன் அவர்கள் இந்நிகழ்ச்சி சார்ந்த கிளை நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினார்கள்,மேலும் கிளை நிர்வாகிகளுக்கு பேருந்திலும் அதற்கு முன்னும், பின்னும் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் சுற்றறிக்கையாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.




Friday, 23 September 2016

முஹம்மதுர்_ரசூலுல்லாஹ்{ஸல்} மாவட்ட செயற்குழு - திருப்பூர் மாவட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே....

 இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ந்தேதி நடைபெறும்

 #முஹம்மதுர்_ரசூலுல்லாஹ்{ஸல்} 

திருப்பூர் மாவட்ட மாநாடு குறித்த செயல்திட்டம் மற்றும் ஆலோசனைக்காக (18/09/2016) அன்று காலை 10:30 மணிக்கு கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் மாவட்ட மர்கஸில்

💺💺#மாவட்ட_செயற்குழு💺💺

நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ...

மாவட்ட தலைவர் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில்......

துவக்கமாக மாவட்ட பொருளாளர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "#உளத்தூய்மை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் சகோ.முஹம்மது ஹூஸைன் அவர்கள்
மாநாடும் அது சார்ந்த நிர்வாக அறிவிப்புகளான

1. மாநாடு திருப்பூர் மங்கலம் பகுதியில் நடைபெறும்.....

2. முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) மாநாடு கொங்கு  மண்டலத்தில் நடைபெறும்  முதல் மாநாடு.  

3. திருப்பூர் மாவட்டமாக உதயமான பின் TNTJ நடத்தும் முதல் மாநாடும் கூட

4. மாநாட்டிற்கு அதிக எண்ணிக்கையில் மக்களை திரட்ட அனைத்து  கிளைகளும் வியூகம்  அமைக்க வேண்டும்.

5. நமது கிளை மதரஸா மாணவ,மாணவிகளின் பிரச்சாரங்களை வீரியம் நிறைந்ததாக இருக்க  மாவட்ட பேச்சாளர்கள் அபூபக்கர் சித்தீக் ஸஆதி,முஹம்மது சலீம் மற்றும் யாசர் அரஃபாத் ஆகியோர் அவர்களுக்கு பயிற்சி வழங்குவார்கள்

 6. மதரஸா மாணவ, மாணவிகளின்  ""முஹம்மது ரஸுலுல்லாஹ்"""
மாநாட்டு விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்

7. மக்கள்  கூடும் இடங்களில்  மதரஸா மாணவ,மாணவியர்களின் தெரு முனை  பிரச்சாரம் செய்ய வேண்டும்.

8. இன்னும் பிளக்ஸ்,விசிறி,நோட்டீஸ்,போஸ்டர்,காலன்டர்,தெருமுனை பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டம் போன்ற விளம்பரங்களை குறித்தும்

பல தகவல்களை அறிவித்தார்.

அதனை தொடர்ந்து கிளை மக்களிடம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டது.

இறுதியாக மாநில செயலாளர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்....

ஏன் இந்த மாநாடு ...? என்ற தலைப்பில் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்து இயம்பிய விதம் அனைவரையும் இந்த பணியில் தன்னால் இயன்ற அளவு களம் காண வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

அல்ஹம்துலில்லாஹ் ....

இறுதியாக மாவட்ட துணை செயலாளர் சகோ.சேக் ஜீலானி அவர்கள் நன்றியுரை கூறி நிறைவடைந்தது.

மாநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய





https://m.facebook.com/Tntj-Tiruppur-Conference-327313450950517/

Thursday, 5 May 2016

செயற்குழு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 29-04-2016 அன்று ஜும்மாவிற்கு பிறகு செயற்குழு நடைபெற்றது.ஜும்மா விற்கு தொழுகைக்கு வரக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தொழுகைக்கு இட பற்றாக்குறை ஏற்படுவதால்,பள்ளிவாசல் கட்டுமான பனியை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Friday, 15 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை செயற்குழு - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த  கிளையின் செயற்குழு நடைபெற்றது,இதில் மாவட்ட துனைச் செயலாளர் சகோ.அப்துர் ரஷீத் மற்றும் மாவட்ட பேச்சாளர் பஷீர் அலி ஆகியோர்  கலந்துகொண்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவத்தையும் ,அதற்கான பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் ஆலோசனைகளை வழங்கினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

Saturday, 28 February 2015

மங்கலம் கிளை ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை  சார்பாக இன்ஷாஅல்லாஹ் வருகிற 8.03.2015 நடைபெறுகிற பொது கூட்டம் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மங்கலம் பகுதி 3 கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...

Sunday, 28 December 2014

"தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரவிளைவுகள் _திருப்பூர் மாவட்ட செயற்குழு



  திருப்பூர் மாவட்டம் சார்பாக 28.12.2014 அன்று  மாவட்ட செயற்குழு திருப்பூர் மாவட்ட மர்கஸில்  கிளை நிர்வாகிகள்,  பிரச்சாரகர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கலந்து கொண்டு நடைபெற்றது.
 
               மாநில செயலாளர் சகோ.கோவை M.அப்துர்ரஹீம் அவர்கள்,
 நம் ஜமாஅத் சார்பில் கடந்த அக்டோபர்  15 முதல் நவம்பர்15 வரை ஒரு மாதம் செய்த "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்" ஏற்படுத்திய விளைவுகளை பட்டியலிட்டு, இது போன்ற பிரச்சாரங்களை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியங்களையும்,  வழிமுறைகளையும் விளக்கினார்.

                  கிளை நிர்வாகிகளிடம் இந்த பிரச்சாரம் செய்ததில்  ஏற்பட்ட அனுபவங்களை  கேட்கப்பட்டது.

             இந்த பிரச்சாரம்  எளிதாக தூய இஸ்லாத்தினை பிறமக்களுக்கு எடுத்து சொல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியது என்றும், 

                      அரசுதுறை அதிகாரிகள், பல்வேறு பிரமுகர்களின்  இஸ்லாத்தினை பற்றிய தவறான கண்ணோட்டத்தை போக்கும் வகையில்   அமைந்தது என்றும், 

     பல்வேறு கோணத்தில் கருத்து தெரிவித்தனர். 
    
    மாவட்ட பிரச்சாரகர்கள்  பொறுப்பாளரும், மாவட்ட பொருளாளருமான  சகோ.முஹம்மது சலீம் அவர்கள் மாவட்ட பிரச்சாரகர்கள், மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு வருங்காலத்தில் நடைமுறைபடுத்த அவசிய ஆலோசனைகளை விளக்கினார்.  

   தொடர்ந்து மாநிலமேலாண்மைகுழு உறுப்பினர் சகோதரர். M.S.சுலைமான் அவர்கள் "நிர்வாகிகள், பிரச்சாரகர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குகள்" பற்றியும், முக்கியமாக தற்கால நவீன பிரச்சார கருவிகளான பேஷ்புக், வாட்சாப் போன்ற சாதனங்களை பயன்படுத்தும் ஒழுங்குகள் பற்றியும்   வருங்காலத்தில்  பிரச்சாரத்தை வீரியமாக செய்ய பல்வேறு ஆலோசனைகளையும் அழகாக எடுத்து சொல்லி உரையாற்றினார்கள். 
   மாநிலம் சார்பில் வழங்கப்பட்ட அப்பாஸ்அலி நீக்கம் ஏன்? என்ற DVD மற்றும்  சகோ.அல்தாபி எழுதி வெளியான  "முஸ்லிம் தீவிரவாதிகள்...??? புத்தகங்கள், புத்தகங்கள்(800) கிளைநிர்வாகிகள்  மற்றும் பிரச்சாரகர்களுக்கு,  பகிர்ந்து  வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 18 October 2014

உடுமலையில் 3 கிளைகளின் செயற்குழு ....

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை, மடத்துக்குளம் கிளை, ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 15.10.2014 அன்று "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சார செயற்குழு" உடுமலையில் நடைபெற்றது. சகோதரர்.யாஸர் அராபத் அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிராக எப்படி எல்லாம் வீரியமாக பிரச்சாரம் செய்வது  என்று விளக்கம் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...