Thursday 9 August 2012

திக்கு முக்காட வைத்த திருப்பூர் விவாதம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருப்பூர் மாவட்டம் – காலேஜ் ரோடு கிளையில் ‎உள்ள டிஎன்டிஜே உறுப்பினர் ஒருவரிடத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கிறித்தவ ‎சகோதரர் ஆனந்தன் என்பவர்,
“இயேசுவைத்தான் நாம் ரட்சகராக ஏற்றுக் கொள்ள ‎வேண்டும். அவர்தான் நமது பாவங்களைப் போக்க தன்னையே ஒப்புக்கொடுத்தார்” ‎என்று கூறி தங்களது மதத்திற்கு ஆள் பிடிக்கும் வேலையைச் செய்துள்ளார். இந்த ‎செய்தியை மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவிக்க, தலைமையில் நடைபெற்ற ஒரு மாதப் ‎பிரச்சாரகர் பயிற்சி வகுப்பில் பயிற்சி எடுத்த முஹம்மது யூசுப் அவர்கள் திருப்பூர் ‎மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கிறித்தவ போதகருடன் விவாதம் செய்ய அந்தப் ‎பகுதிக்குச் சென்று ஆனந்தன் என்ற அந்த கிறித்தவ சகோதரரிடத்தில் சில ‎கேள்விகளைக் கேட்டுள்ளார்.‎
இயேசு இரட்சிக்க வரவில்லை என்பதை ஒப்புக் கொண்ட கிறித்தவ போதகர் :‎

பேச்சைத்துவக்கியதுமே நமது தரப்பில் ஒரு கேள்வி அவரை நோக்கி ‎கேட்கப்பட்டுள்ளது. ஒரு கம்பெனியின் முதலாளி ஒரு நபரை கம்ப்யூட்டர் ‎ஆபரேட்டராக வேலைக்குச் சேர்த்து, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலையை நீ செய்ய ‎வேண்டும் என்று அவரிடத்தில் பொறுப்புக் கொடுத்து அனுப்பி வைக்கின்றார். ஆனால் ‎அந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டரோ தனது பணியின் முக்கியத்துவத்தை அறியாமல், ‎‎“முதலாளியே! முதலாளியே! ஏன் என்னை இந்த வேலைக்கு அனுப்பினீர்! என்னை ‎விட்டால் உனக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? இந்த வேலையைக் கொடுத்து ஏன் ‎என்னை சோதிக்கின்றீர்? ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கேட்பாரேயானால், அந்த ‎கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தனது வேலையை சரிவரச் செய்தார் என்று சொல்லலாமா? ‎அவருக்கு முதலாளி சம்பளம் கொடுப்பது சரியா?” என்ற ஒரு கேள்வியை ‎எழுப்பியுள்ளார்.‎
அதைக்கேட்ட கிறித்தவ போதகரோ, “அது எப்படி சரியாகும்? தனது வேலையை முழு ‎திருப்தியோடு செய்யாமல், என்னை ஏன் இந்த வேலைக்கு அனுப்பி சோதிக்கின்றீர்? ‎என்று ஒருவர் கேட்பாரேயானால் அது ரொம்பத் தவறு. அவர் தனது வேலையை முழு ‎திருப்தியோடு செய்தவராகமாட்டார். அவரே விரும்பி அந்த வேலையைச் ‎செய்தவராகமாட்டார்” என்று சொல்லியுள்ளார்.‎
அதற்கு நமது சகோதரர், “அப்படியானால், இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்; ‎அவர் நமக்காக தன்னையே ஒப்புக் கொடுத்தார். அவர் தன்னையே பலி கொடுத்தார் ‎என்று சொல்லுகின்றீர்களே! ஆனால் அவரோ தன்னை சிலுவையில் அறையும் போது, ‎‎”தேவனே! தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்!” என்று அழுது புலம்பி கர்த்தரை ‎திட்டிக் கொண்டல்லவா உயிரை விட்டுள்ளார். இவராக விரும்பி மரணித்தார் என்று ‎எப்படி சொல்கின்றீர்கள்? இந்த பாத்திரத்திலிருந்து என்னை விடுவித்துவிடும் என்று ‎சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னால் சாவுக்கேதுவான துக்கங்கொண்டு ‎புலம்பியவர்தான் ஏசு என்று பைபிள் கூறுகின்றது. அப்படியிருக்கையில் அவர் ‎நமக்காக பலியானார் என்பது சரியா?” என்று கேள்வி எழுப்பியவுடன், “பிரதர், நீங்க ‎ரொம்ப டீப்பா கிறித்தவத்தை ஆய்வு செய்துள்ளீர்கள். உங்களுக்கு என்னால் பதில் ‎சொல்ல முடியாது. கோயம்பத்தூரில் பெரிய போதகர்கள் குழு உள்ளது. அவர்களை ‎அழைத்து வருகின்றேன். அவர்களிடத்தில் என்ன கேள்வி வேண்டுமானாலும் நீங்கள் ‎கேளுங்கள். அவர்கள் அனைத்திற்கும் பதில் சொல்வார்கள்” என்று ஆனந்தன் ‎கூறியவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட விவாதம்தான் திருப்பூர் கிறித்தவ விவாதம்.‎
இதன் பிறகு நமது சகோதரர்களை தொடர்பு கொண்ட கிறித்தவத்தரப்பினர், “நீங்கள் ‎ஜெர்ரி தாமஸ் குழுவினரோடு நடத்திய விவாதத்தையெல்லாம் நாங்கள் ‎பார்த்துவிட்டோம். எங்களிடம் வந்து கேள்வி கேட்டுப் பாருங்கள்; நாங்கள் எப்படி பதில் ‎சொல்கின்றோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; நாங்கள் ஒன்றும் ‎ஜெர்ரிதாமஸ் போல உளறமாட்டோம்; அவரைப் போல திணற மாட்டோம். நீங்கள் ‎கேட்கும் கேள்விகளுக் கெல்லாம் நாங்கள் கிரிட்டிக்கலாக பதில் சொல்வோம்” என்று ‎கூறி அவிநாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டி என்ற இடத்திலுள்ள கோஸ்பல் ‎தேவாலயத்திற்கு நம்மை அழைத்து எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்க இருபுறமும் ‎ஒப்பந்தக்கடிதம் பரிமாறப்பட்டது. அதையடுத்து கடந்த 16.07.2012 திங்கட்கிழமையன்று ‎அன்று விவாதம் காலை 11 மணிக்கு ஆரம்பமானது.‎
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் ‎அப்பாஸ் அலி, தாங்கல் ஹபீபுல்லாஹ், அஹமத் கபீர், முஹம்மத் யூசுப், ‎சதாம்ஹுசைன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மத் ஹுசைன், அலாவுதீன் ‎ஆகியோர் கலந்து கொண்டனர்.‎
கோஸ்பல் (நிளிஷிறிணிலி) சபையின் சார்பாக சகோ. சாலமன், ஆனந்தன், சகோ. ‎நாப்தலின் மற்றும் அவர்களது குழுவினர் கலந்து கொண்டனர்.‎
சத்தியத்தைக் கண்டு அசத்தியவாதிகள் எப்படி சிங்கத்தைப் பார்த்து ‎வெருண்டோடக்கூடிய கழுதைகளைப் போல ஓடுவார்கள் என்பது இந்த விவாதத்திலும் ‎உண்மையானது. அவர்கள் கிரிட்டிக்கலாகக் கேட்ட கேள்விகளின் லட்சணம் என்ன? ‎வழக்கம்போல தவ்ஹீத் ஜமாஅத் குழுவினரிடத்தில் மாட்டிக் கொண்டு ‎எப்படியெல்லாம் விழிபிதுங்கித் திணறினர்? எப்படியெல்லாம் திக்குமுக்காடினர் என்பது ‎குறித்த முழுவிபரங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் விரிவாகக் காண்போம்.‎

என்றும் அன்புடன் SM.YOUSUF

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – திருப்பூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கடந்த 01-07-2012. அன்று மாலை 400.மணியளவில் திருப்பூரில் உள்ள டவுன்ஹால் வளாகத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் அல்லாத பிற மத சகோதர சகோதரிகளின் மனங்களில் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை, திருமண முறை, வரதட்சனை, விவாகரத்து, இஸ்லாமிய பெண்களின் ஆடைமுறை, பென்டிமைத்தனம், குற்றங்களுக்கான இஸ்லாத்தில் உள்ள கடுமையான் தண்டனை,போன்ற சந்தேகங்களுக்கும். முஸ்லிம் மக்களிடம் உள்ள மூட பழக்க வழக்கங்களும் கட்டாய மத மாற்றம், தீவிரவாதம், பயங்கர வாதம், போன்ற குற்றச்சாட்டுகளும். இஸ்லாமிய வாழ்வியல் சட்ட திட்ட முறைகள்.குறித்த சந்தேகங்கள் ஆகியவற்றை வெளிப்படையாகவும் எந்தவித தயக்கங்கள் இன்றியும் கேள்விகளாக கேட்டு ஓரு மத நல்லிணக்கத்திற்கு வழிவகை செய்யும் ஒரு நிகச்சியாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இதில் பிற மத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு மாநிலத் தலைவர் p.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள். அளித்து பேசினர் இதில் மாவட்டத்தலைவர்: ஷேக்பரித் துனைத்தலைவர்: ஷாஜகான். மாவட்ட
பிறமத சகோதர சகோதிரிகள் நூற்றுக்கணக்கானனோர் பார்வையாளர்களாகவும் இஸ்லாமிய மக்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானனோர் கலந்து கொண்டனர்.
கேள்வி கேட்ட பிறசமய சகோதரர்களுக்கு ரியாத் மண்டலம் சார்பாக குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.

என்றும் அன்புடன் SM.YOUSUF

’’ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 10500/- மருத்துவ உதவி’’ – மங்கலம் கிளை











திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த  29-06-2012 அன்று
 ’’ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 10500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

என்றும் அன்புடன் SM.YOUSUF

’ஏழை சகோதரருக்கு ரூபாய் 10.000 மருத்துவ உதவி’ – உடுமலை கிளை











திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 19.07.2012 அன்று
’’ஏழை சகோதரருக்கு ரூபாய் 10 ஆயிரம் மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.

என்றும் அன்புடன் SM.YOUSUF

சுரேஷ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – மங்கலம்















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் 23-07-2012 அன்று
திருப்பூரை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

என்றும் அன்புடன் SM.YOUSUF

ஏழை சகோதரருக்கு ரூபாய் 6 ஆயிரம் மருத்துவ உதவி – திருப்பூர்















TNTJ திருப்பூர் மாவட்ட மருத்துவரணி சார்பாக கடந்த 23-7-2012 அன்று
மைனர் என்பவருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 6 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
என்றும் அன்புடன் SM.YOUSUF

’’மூஃமினான பெண்களின் பண்புகள்’’ – சத்தியா நகர் கிளை பெண்கள் பயான்












திருப்பூர்  மாவட்டம்   சத்தியா நகர் கிளை சார்பாக கடந்த 22.07.2012  அன்று
பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது  இதில் சகோதரி சாரா அவர்கள் ’’மூஃமினான பெண்களின் பண்புகள்’’என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

என்றும் அன்புடன் SM.YOUSUF

’’மூடநம்பிக்கையும் முஸ்லீம்களும் ’’ – மங்கலம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்











திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 08-07-2012 அன்று
தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது, இதில் சகோ;சிராஜ் அவர்கள் ’’மூடநம்பிக்கையும் முஸ்லீம்களும் ’’ என்ற தலைப்பிலும் மற்றும் ‘’இறையச்சம்’’ என்ற தலைப்பில் சகோ; தவ்ஃபீக் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


POSTED BY SM.YOUSUF

ஏழை சகோதரருக்கு ரூபாய் 5000/-மருத்துவ உதவி – உடுமலை கிளை














திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 09.07.2012 அன்று ஏழை சகோதரருக்கு
ரூபாய் 5000/-
மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது மற்றும் 01.07.2012 அன்று பயண செலவுக்கு   ரூ.500 /=  வழங்கப்பட்டது

என்றும் அன்புடன் SM.YOUSUF

தாயிக்களுக்கான பயிற்சி முகாம் – திருப்பூர்











தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருப்பூர் மாவட்டம் சார்பில் கடந்த 16-7-2012
அன்று தாயிக்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாநில செயல்த் தலைவர் .சகோ:மவ்லவி,M.I.சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள். தாயிக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் 

என்றும் அன்புடன் SM.YOUSUF

சுரேஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – காலேஜ் ரோடு















கடந்த 09-07-2012 அன்று திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையின்
சார்பாக சகோ.சுரேஸ் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.
என்றும் அன்புடன் SM.YOUSUF

ஏழை சகோதரருக்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி – உடுமலை















கடந்த 11.07.2012 அன்று திருப்புர் மாவட்டம் உடுமலை கிளையில் ஏழை சகோதரருக்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் 2 முறை இவருக்கு உதவி செய்யப்பட்டள்ளது குறிப்பிடதக்கது.
என்றும் அன்புடன் SM.YOUSUF