Thursday 18 April 2013

சாப்பிட்ட பின் விரலைச் சூப்ப வேண்டுமா?



சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் பரக்கத் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார். மேலும் "உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்'' என்றும், உங்களின் "எந்த உணவில் பரகத் உள்ளது' அல்லது "(உங்களின் எந்த உணவில்) உங்க ளுக்கு பரக்கத் வழங்கப்படும்' (என்பதை அவர் அறியமாட்டார்)''

அறிவிப்பவா் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 4140

பரக்கத் என்றால் நம் புலனுக்குத் தெரியாத மறைமுக அருள் என்று பொருள்.


 
விரலைச் சூப்புவது இன்று அநாகரிகமாக பார்க்கப்படுகிறது. மேலைநாட்டவர்கள் சாப்பிடுவதற்கு கரண்டியைப் பயன்படுத்தி வருவதால் ஈர்க்கப்பட்டவர்கள் இதை அநாகரிகம் என்று சித்தரித்து விட்டனர்.

உண்பதற்கு கரண்டியைப் பயன்படுத்துவது மேலை நாட்டவரின் அநாகரிகத்தால் உருவாக்கப்பட்ட வழக்கமாகும்.

மேலை நாட்டவர்கள் நம்மைப் போல் தினமும் குளிக்க மாட்டார்கள். மலம் கழித்தால்கூட துடைத்து விட்டு போவார்களே தவிர கழுவ மாட்டார்கள். தண்ணீர் என்றால் அவர்களுக்கு அவ்வளவு அலர்ஜி. விரல்களால் சாப்பிட்டால் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டிய நிலை வரும் என்பதால் அவர்கள் கரண்டியால் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் விரல்களைப் பயன்படுத்தி சாப்பிடுவதும் விரல்களைச் சூப்புவதும் தான் சிறந்த நாகரிகமாகும்

பொதுவாக ஈரமான பொருளில் அல்லது திரவத்தில் விரல்கள் படும்போது விரல்களில் இருந்து ஒரு திரவம் சுரக்கும். அந்தத் திரவம் எளிதில் அப்பொருளை ஜீரணமாக்கிவிடும் என்பதால் விரல்களைக் சூப்புவது தான் சரியான உண்ணும் முறையாகும்.

இதை அறிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சியாளர்களிடம் நாம் கேட்கத் தேவையில்லை. நாமே பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம்.

ஒரு குழம்பைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.

அதை இரண்டு பாத்திரங்களில் ஊற்றுங்கள்.

ஒரு பாத்திரத்தில் ஏதாவது ஒரு கரண்டியைப் போடுங்கள்

இன்னொரு பாத்திரத்தில் உள்ள குழம்பில் சிறிது நேரம் விரலை வைத்து விட்டு எடுத்து விடுங்கள்.

விரலை விட்ட குழம்பு சில மணி நேரங்களில் நொதித்துப் போய் இருப்பதையும் கரண்டியைப் போட்ட குழம்பு நொதிக்காமல் இருப்பதையும் நீங்கள் காணலாம். இதை சமையல்கட்டில் உள்ள எல்லா பெண்களும் அறிவார்கள்.

உணவு நொதித்துப் போவதுதான் ஜீரணத்தின் ஆரம்ப நிலையாகும்.

எனவே சாப்பிட்ட பின் விரலைச் சூப்புவதால் விரலில் சுரக்கும் திரவம் உணவில் கலந்து அது எளிதில் ஜீரணமாகும் நிலைக்கு மென்மைப்படுத்துகிறது.




நாகரிகம் என்ற பெயரில் நமக்கு நன்மை தரும் இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் யாருக்காக்வும் விட்டு விடக் கூடாது

http://www.onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/sappitta_pin_viralai_soopa_venduma/


thanks: Muja Al-ikhlas

"அண்டைவீட்டாரின் ஒழுக்கம்" -பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் -17042013

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 17/04/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் S.அப்துல்லாஹ் MISC அவர்கள் "அண்டைவீட்டாரின் ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது