தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 31/03/2019 ஞாயிறு அன்று ஒருநாள் மாவட்ட தர்பியா (நல்லொழுக்கப் பயிற்சி) நீலகிரி மாவட்டம் குன்னூர் பேரிஸ்ஹால் பகுதியில் நடந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!
இந்த தர்பியா (நல்லொழுக்கப் பயிற்சி) 31/03/2019 ஞாயிறு அன்று பஜ்ர் தொழுகையுடன் ஆரம்பித்து மாலை 4:30 வரை நடைபெற்றது.
அதில் காலை 6:00 முதல் 8:00 மணி வரை
சகோ. M.I.சுலைமான் அவர்கள், தவ்ஹீத் ஜமாஅத் நோக்கவும் வரலாறும் எனும் தலைப்பிலும்,
காலை 9:30 முதல் 12:30 மணி வரை சகோ. M.S.சுலைமான் அவர்கள், தடுமாறுவதும், தடம்மாறுவதும் எனும் தலைப்பிலும்,
மாலை 2:45 முதல் 4:30 மணி வரை சகோ. கோவை R.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், நமது இலக்கு எனும் தலைப்பிலும் நமக்கு அவசியமான தகவல்களை கொண்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
கிளை நிர்வாகிகள் , மாவட்ட பேச்சாளர்கள், மற்றும் ஜமாஅத்தின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு
பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்