Tuesday 11 June 2013

மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா ! சரியா?



கேள்வி:
பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்கு தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று இதற்கு காரணம் கூறுகிறார்கள். இது சரியா?

பதில்:

முஸ்லிம்களைப் பொருத்த வரை தங்களின் அனைத்து காரியங்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் தான் நடத்த வேண்டும். சில காரணங்களை நாமாகக் கற்பணை செய்து கொண்டு சடங்குகளை உருவாக்கக் கூடாது.

பெண்கள் புகுந்த வீட்டில் சிரமப்படுக்ககூடாது என்பதற்காகவே வரத்ட்சணை கொடுக்கிறோம் என்று கூறுவது போலவும், 

கள்ளச் சாராயம் குடித்து சாகக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடை திறந்துள்ளோம் என்பது போலவும் 

எல்லா தவறான காரியங்களுக்கும் காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தக் காரணத்தில் சிறிதும் உண்மை இல்லை.

உலகில் இந்தியா தவிர வேறு நாடுகளில் எல்லாம் பருவ வயது அடைவதற்கு விழாக்கள் இல்லை. அங்கெல்லாம் பெண்களுக்கு வரண் கிடைக்கவில்லையா?

ஆணுக்கு திருமணம் செய்ய எண்ணும் பெற்றோர் எந்த வீட்டில் பெண் இருக்கிறார் என்று விசாரித்துப் பார்த்து பெண் கேட்டு வருவார்கள். அது போல் பெண் வீட்டாரும் விசாரித்துப் பார்த்து மாப்பிள்ளை பேசுவார்கள். பூபெய்தல் விழாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.

பெண்ணுக்கு மாப்பிள்ளை அவசியம் என்பது போல் ஆணுக்கும் பெண் அவசியம் தானே? அப்படியானால் எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த ஆண் இருக்கிறான் என்பதற்காக ஏன் விழா நடத்தவில்லை?

கொடுத்த அன்பளிப்பை மொய் எனும் பெயரில் திரும்பப் பெறுவதற்காகவே இது போன்ற விழாக்களை மற்ற மதத்தவர்கள் உருவாக்கினார்கள். 

கொடுத்த அன்பளிப்பை திரும்பக் கேட்கக் கூடாது என்ற கொள்கையுடைய இஸ்லாத்தில் இந்த விழா தேவையற்றது.

" சஹாபிய பெண்களின் தியாகம் " வெங்கடேஸ்வராநகர்கிளை பெண்கள்பயான் _09062013

திருப்பூர் மாவட்டம்வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்
 09.06.2013அன்று வெங்கடேஸ்வராநகர் மதரசுதுத்தக்வாவில் பெண்கள்பயான் நடைபெற்றது. அதில் " சஹாபிய பெண்களின் தியாகம் "எனும் தலைப்பில் சகோ.சலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார். பெருவாரியான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இறைவனை நம்பாதவர்களுக்கு நிரந்தர நரகம் _மங்கலம் கிளை பயான் _11062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "இறைவனை நம்பாதவர்களுக்கு நிரந்தர நரகம் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

மார்க்க சந்தேக கேள்வி - குர்ஆன் ஹதீஸ் ஆதார பதில் நிகழ்ச்சி _மங்கலம் கிளை _10062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10.06.2013 அன்று கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது 
பள்ளியில் கேள்வி கேட்பதற்கான பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் மார்க்க சந்தேகங்களை கேட்டு பொது மக்கள் கேள்வி எழுதி போடுவார்கள், அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் வாரம் தோறும் திங்கள் கிழமை பதில் அளிக்கப்பட்டது.

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _மங்களம் கிளை_10062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையின் சார்பாக 10.06.2013அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சிறுவனுக்கு தாயத்தின் தீமைகளை விளக்கி தஃவா தாயத்து அகற்றப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

நரகவாசிகளின் உணவு _மங்கலம் கிளை பயான்_10062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நரகவாசிகளின் உணவு " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது