Showing posts with label onlinepj. Show all posts
Showing posts with label onlinepj. Show all posts

Sunday, 9 March 2014

இஸ்லாத்தில் விளையாட்டுக்கு அனுமதி உண்டா?

விளையாட்டுக்கு அனுமதி உண்டா? 
எந்தெந்த விளையாட்டுக்கள் தடுக்கப்பட்டுள்ளன.? 
முஹம்மத் ரியாஸ் 

விளையாட்டுக்களை இஸ்லாம் அனுமதிக்கவே செய்கின்றது. சில சமயங்களில் வலியுறுத்தவும் செய்கின்றது. 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்திய செய்தியை இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி 421, 2868, 2869, 2870, 7336 

கடை வீதியில் அம்பு எறியும் போட்டியை அஸ்லம் கூட்டத்தினர் நடத்திக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே வந்தனர். இஸ்மாயீல் நபியின் சந்ததிகளே! நீங்கள் அம்பு எறியுங்கள்! உங்கள் தந்தை இஸ்மாயீல் அவர்கள் அம்பு எறிபவராக இருந்தார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டு, இரு அணிகளாக இருந்தவர்களில் ஒரு அணியைக் குறிப்பிட்டு,நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன்'' என்று கூறி அந்த அணியில் சேர்ந்து கொண்டார்கள். எதிரணியில் இருந்தவர்கள் அம்பு எறிவதை நிறுத்தி விட்டார்கள். ஏன் நிறுத்தி விட்டீர்கள்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது, நீங்கள் இந்த அணியில் ஒருவராகச் சேர்ந்திருக்கும் போது உங்களுக்கெதிராக நாங்கள் எப்படி அம்பு எறிவோம்?'' என்று அவர்கள் விடையளித்தனர். அப்படியானால் நான் இரண்டு அணிக்கும் பொதுவானவனாக இருந்து கொள்கிறேன். இப்போது எறியுங்கள்!'' என்றார்கள். அறிவிப்பவர் : ஸலமா பின் அக்வஃ (ரலி) நூல் : புகாரி 2899, 3373, 3516 

நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் நடத்திய போது நான் அவர்களை முந்தி விட்டேன். சில காலம் கழித்து எனக்கு சதை போட்டு நான் கனத்து விட்ட போது மீண்டும் ஓடினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை முந்தி விட்டு, அதற்கு இது சரியாகி விட்டது என்றார்கள்'' என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்கள் : அஹ்மத் 22989, 25075, அபூதாவூத் 2214 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது முன்னிலையில் பள்ளிவாசலில் அபீஸீனியர்கள் தங்களின் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு விளையாடினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி 455, 950, 988, 2907, 3530, 5190 

இது போன்ற வீர விளையாட்டுக்களையும், பயனுள்ள விளையாட்டுகளையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. 

சூதாட்டம், உடலுக்கோ, அறிவுக்கோ பயன்தராத வீண் விளையாட்டுக்கள், விளையாட்டு என்ற பெயரில் ஆடல், பாடல், கச்சேரிகள் போன்றவைகளை இஸ்லாம் தடுக்கின்றது.  

குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். அல்குா்ஆன் 74 42 43 44 45 

அது போன்று பிறரைப் பாதிக்கும் விளையாட்டை நபிகளார் தடுத்துள்ளார்கள் 

கல்சுண்டு விளையாட்டிற்கு ("கத்ஃப்') நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அது வேட்டைப் பிராணியையும் கொல்லாது; எதிரியையும் வீழ்த்தாது. மாறாக, அது கண்ணைப் பறித்து விடும்; பல்லை உடைத்துவிடும்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவா் அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) நூல் : புகாரி 6220 

விளையாட்டுக்கள் பற்றி மேலும் அறிந்திட கீழ்க்காணும் ஆக்கங்களைப் பாருங்கள்
 http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/ches_soothatama/
 http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/cricet_vilayadalama/
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/seettu_vlayadalama/
 http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/reslin_parkalama/

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/vilayatuku_anumathi_unda/
Copyright © www.onlinepj.com

Saturday, 16 November 2013

அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு

திருக்குர்ஆன் 105வது அத்தியாயம் 
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் மக்காவில் நடந்த ஓர் அதிசய நிகழ்வைக் கூறுகிறது. இறைவனை வணங்குவதற்காக  
 
உலகில் முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா ஆகும். இந்த ஆலயத்தில் வழிபாடு நடத்த திரளான மக்கள் வந்து செல்வதில் பொறாமைப்பட்ட அப்ரஹா என்ற மன்னன், கஅபாவை இடித்துத் தகர்க்க யானைப் படையுடன் வந்தான். கஅபா ஆலயத்தை யானைப் படையினர் அழித்து விடாமல் தடுத்து அபாபீல் எனும் பறவைகள் மூலம் இறைவன் அந்தப் படையினரை அழித்தான். அப்பறவைகள் சூடான சிறு கற்களை யானைப்படை மீது வீசி அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கி விட்டன. 
இந்த வரலாற்றைத்தான் இந்த அத்தியாயம் குறிப்பிடுகின்றது. 


இந்த நிகழ்ச்சி நடந்த ஆண்டில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ஆண்டில் இது நடந்ததால் சிறு வயதிலேயே இந்த நிகழ்ச்சி பற்றி நபியவர்கள் கேட்டு அறிந்திருந்தார்கள். மக்காவைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் இது தெரிந்த நிகழ்ச்சியாகவே இருந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த பின் இதிலிருந்து மக்கள் ஆண்டுக் கணக்கைத் துவக்கினார்கள். அரபுகள் அனைவருக்கும், நபிகள் நாயகத்துக்கும் இது நன்றாகத் தெரிந்திருக்கும் போது, அவர்களுக்கே இதைச் சொல்லிக் காட்டுவது தேவையில்லை. அரபுகள் அறிந்து வைத்திருந்ததை விட மிகக் குறைவான விபரத்தைத்தான் இந்த அத்தியாயம் கூறுகின்றது. எனவே இந்தச் சம்பவத்தை அவர்களுக்குச் சொல்வது இதன் நோக்கமில்லை. மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டிய, மனிதர்கள் சிந்திக்க வேண்டிய இரண்டு செய்திகள் இதில் உள்ளன; அவற்றைச் சிந்திக்கச் சொல்வது தான் இதன் நோக்கமாக இருக்க முடியும். 
கடந்த காலத்தில் நான் எனது அருளைச் சொரிந்து உங்களை அதிசயமான முறையில் பாதுகாத்தேன், அதை எண்ணிப் பார்த்து நன்றி செலுத்துங்கள் என்பது முதலாவது செய்தி. இன்னொரு செய்தி ஆழமாகச் சிந்திக்கும் போது விளங்கும் செய்தி. சிந்தனையைச் செலுத்த வேண்டிய ஒரு செய்தி இதனுள் அடங்கியிருக்கிறது என்பதற்காகவே நீர் கவனிக்கவில்லையா என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது. 
யானை மிகப் பெரிய உயிரினம். அவற்றைச் சிறிய உயிரினமான பறவை இனம் அழித்த விதத்தைப் பற்றித்தான் இந்த அத்தியாயம் சிந்திக்கச் சொல்கிறது. அப்பறவைகள் தமது அலகுகளில் தாங்கி வந்த கற்கள் சாதாரணக் கற்கள் அல்ல. அதிக வெப்பமுடைய கற்கள் என்று குர்ஆன் கூறுகின்றது. இது வெளிவெப்பத்தைக் குறிக்காது. ஏனெனில், வெளிப்படையான வெப்பம் என்றால் யானைகளை அழிக்கும் அளவுக்கு வெப்பத்தைப் பலவீனமான அப்பறவைகளால் எப்படித் தாங்கியிருக்க முடியும்? மேலும் வெளிவெப்பமுடைய கற்களாக இருந்தால் அவை தரையில் விழுவதற்குள் சூடு ஆறியிருக்கும். அக்கற்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, கீழே விழுந்து வெடித்துச் சிதறும் போது ஏற்படும் வெப்பத்தையே இது குறிக்கிறது. சக்தி வாய்ந்த அணுகுண்டுகளில் அதிக வெப்பம் இருந்தாலும் அவை வெடிக்கும் போதுதான் அந்த வெப்பம் பாதிப்பை ஏற்படுத்தும். வெடிக்காத வரை சாதாரண பொருளைப் போல் அவற்றைத் தொடலாம். இந்த நிகழ்ச்சியில், பறவைகள் வீசிய சிறு கற்கள் யானைப் படையைக் கூழாக ஆக்கி விட்டது என்றால் அக்கல்லுக்குள் கடுமையான சக்தி அழுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதைத்தான் இறைவன் இங்கு சிந்திக்கச் சொல்கிறான். 
உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அணுக்களால் ஆனவை. அந்த அணுக்களையும் உடைத்தால் அதில் இருந்து மாபெரும் சக்தி வெளிப்படும் என்று மனிதன் இப்போது கண்டுபிடித்து விட்டான். சிறிய அளவு அணுகுண்டு ஒரு ஊரையே அழிக்கப் போதுமானது என்றும் நிரூபித்துக் காட்டிவிட்டான். அந்தக் குண்டுகளை உயரமான இடத்திலிருந்து போட்டால் குண்டு வீசியவர்களைப் பாதிக்காது. தரையில் இருந்து போட்டால், குண்டு போட்டவர்களும் அழிந்து போய் விடுவார்கள். இந்த உண்மைகள் அனைத்தையும் உள்ளடக்கும் விதமாகத்தான் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. 
மனிதர்களே! நீங்கள் முயற்சித்தால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் சக்தியை சிறிய பொருளுக்குள் அடக்க முடியும். அப்பொருளை வெடிக்க வைத்து எதனையும் அழிக்க இயலும். உங்களுக்கு அழிவு ஏற்படாத வகையில் இதைச் செய்ய முடியும். இவற்றைப் பற்றிக் கொஞ்சம் சிந்தியுங்கள் என்று சொல்வது போல 

இந்த (105வது) அத்தியாயம் அமைந்துள்ளது.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakam/355_anukundu_patriya_munnarivippu/
Copyright © www.onlinepj.com

Sunday, 10 November 2013

நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா?



கேள்வி : மனிதனின் அறிவு நல்லதை மட்டும் ஏவுமா, தீயதையும் ஏவுமா? காரல் மார்க்ஸ் வாதிகள் 'மனிதனின் அறிவாற்றல் தான் எல்லாமே; மற்ற எந்த நம்பிக்கையும் வீண்' என்கிறார்கள். கல்லூரி மாணவிகள் இதைப் பற்றி அறிய பெரிதும் ஆவல் கொள்கிறார்கள். விளக்கவும்!

-ஜுலைஹா புதல்வி, தருமாபுரம், காரைக்கால்

பதில் : மனிதனின் அறிவு மகத்தானது என்பதில் ஐயமில்லை. பல விஷயங்களை அறிவு சரியாகவே கண்டு பிடித்து விடும். ஆயினும் சில விஷயங்களில் அறிவு தவறிழைத்து விடுவதும் உண்டு. பல விஷயங்களை அறிவு சரியாகக் கண்டு பிடித்து விட்டாலும் அறிவின் கண்டு பிடிப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு வேறு வழியில் மனிதனை இழுத்துச் செல்லும் இன்னொரு ஆற்றல் மனிதனிடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பது நன்மையா? எனக் கேட்டால் அதில் உள்ள கேடுகளை நம்மை விட விரிவாக அவர் விளக்குவார். அவரது அறிவு புகை பிடிப்பதைத் தவறு என்று தீர்ப்பளித்த பிறகும் ஏன் புகை பிடிக்கிறார்?
தவறு எனக் கண்டு பிடித்தவுடன் அதை அந்த மனிதனால் ஏன் விட முடியவில்லை?

எனச் சிந்தித்தால் அறிவுக்குப் பெரிய ஆதிக்கம் ஏதுமில்லை என அறியலாம். திருடுபவன், மது அருந்துபவன், கொலை செய்பவன் என பல்வேறு தீமைகளில் மூழ்கியிருப்போர்க்கு அவை தீமைகள் என்று அவர்களின் அறிவுகள் உணர்த்துகின்றன. உணர்த்துவதைத் தவிர அவர்களது அறிவால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக இதை மனிதன் எடுத்துக் கொள்கிறான்.

சர்வாதிகார நாட்டின் அதிபருக்கும், ஒரு பள்ளிக் கூட வாத்தியாருக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அதை விட அதிக வித்தியாசம் மனிதனின் அறிவுக்கும் அவனை இயக்கும் மற்றொரு சக்திக்கும் இருக்கிறது.

பள்ளிக்கூட வாத்தியார் நல்லது கெட்டது இது எனச் சொல்லித் தருவார். அந்த வழியில் மாணவனை நடத்திச் செல்ல அவருக்கு ஆற்றல் இல்லை. ஒரு சர்வாதிகாரி ஒரு உத்தரவின் மூலம் மனிதனை வழி நடத்திச் செல்வான். இந்த வகையில் அறிவு என்பது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாத பள்ளிக் கூட வாத்தியார் போன்ற பரிதாப நிலையில் உள்ளது.

எத்தனையோ விஷயங்கள் நன்மையானவை என்று மனிதனின் அறிவு கூறுகிறது. ஆயினும் அவற்றை அவன் செய்வதில்லை. அறிவு மூலம் நன்மையைக் கண்டு பிடிக்க முடிந்ததே தவிர அவ்வழியில் மனிதனை வழி நடத்த முடியவில்லை. காரல் மார்க்ஸுக்கு இது தெரியா விட்டாலும் நம் அனைவருக்கும் இது கண் கூடாகத் தெரிகிறது. நாமே கூட நமது அறிவை இப்படித் தான் நடத்துகிறோம். அறிவு சொல்லும் பாதையில் மனிதனை நடத்திச் செல்ல அவனை விட வலிமையான ஒரு சக்தியை நம்ப வேண்டும். தவறு, தீமை எனத் தெரிந்தவற்றை நாம் செய்தால் நம்மை ஒருவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை மட்டுமே அறிவுக்கு மரியாதையைப் பெற்றுத் தரும். இது முதல் விஷயம். எல்லா விஷயத்திலும் நன்மையையும், தீமையையும் அறிவு கண்டு பிடித்து விடுகிறதா என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.

இரண்டு அறிவாளிகள் ஒரு விஷயத்தை தீமை என்று முடிவு செய்வதில் மாறுபட்ட கருத்துக் கொள்கின்றனர். இவர்களில் ஏதோ ஒருவரது அறிவு தவறான முடிவை அவருக்குக் காட்டியுள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கை நன்மை பயப்பது என வாதிடுவோரும், தீமை பயப்பது என வாதிடுவோரும் முட்டாள்கள் அல்லர்.

மாபெரும் மேதைகள் தான் முரண் பட்ட இவ்விரண்டு வாதங்களையும் முன் வைக்கின்றனர். இவ்விரண்டும் ஒரு சேர உண்மையாக இருக்க முடியாது. ஏதோ ஒன்று தான் இதில் உண்மையாக இருக்க முடியும்.

அப்படியானால் ஒரு தரப்புடைய அத்தனை அறிவாளிகளின் அறிவும் அவர்களுக்குச் சரியான முடிவைக் காட்டவில்லை என்பது தெளிவு. வட்டி ஒரு வன்கொடுமை என வாதிடும் காரல் மார்க்ஸும், வட்டி ஒரு வணிகமே எனக் கூறுவோரும் அறிவாளிகள் தாம்.

முரண்பட்ட இவ்விரண்டில் எது சரியானது என வைத்துக் கொண்டாலும் ஒரு சாரரின் அறிவு சரியானதைக் கண்டு பிடிக்கவில்லை என்பது உறுதி
.

அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உடைய விஷயங்கள் ஆயிரமாயிரம் உள்ளன. இதிலிருந்து மனித அறிவின் லட்சணத்தை அறிந்து கொள்ளலாம். அறிவாற்றல் தான் எல்லாமே என்பது ஒரு மாயை!

மார்க்ஸ் வழி வந்த ரஷ்யாவே மார்க்ஸை ஏன் ஓரம் கட்டியது? மார்க்ஸுக்குச் சரி எனப்பட்டது அவர் வழி வந்தவர்களுக்கே தவறு எனப்பட்டது ஏன்? என்றெல்லாம் சிந்தித்தால் அறிவு மமதையிருந்து விடுபட்டு, ஆன்மீக நெறியின் மூலம் மனிதன் தன்னை பக்குவப்படுத்துவதன் அவசியத்தை உணரலாம்.

பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து



Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/arvu_mattum_pothuma/
Copyright © www.onlinepj.com

Friday, 30 August 2013

முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கும் மீடியாக்களுக்கு எதிராக நாம் ஏன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கக் கூடாது?


பதில் 

நமது நாட்டில் உள்ள அதிகமான நீதிபதிகள் சட்டப்படி தீர்ப்பு அளிக்காமல் தங்கள் மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்தே தீர்ப்பு அளிக்கின்றனர். இதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.




 பிராணிகளை வதை செய்யக் கூடாது என்று சட்டம் உள்ளது.  


குருவி வேட்டையாடுவோரையும், பறவைகளை விற்பனை செய்வோரையும் தண்டிக்கும் நீதிமன்றங்கள் ஜல்லிக் கட்டு நடத்துவதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்க என்ன காரணம்? அப்பட்டமாக பிராணிகள் வதை செய்யப்படுவது தெரிந்தும் இதை அனுமதிக்க ஒரே காரணம் ஜல்லிக் கட்டு மத்த்தின் பெயரால் நடத்தப்படுவது தான். அதே நேரத்தில் ஆடு மாடு ஒட்டகம் உணவுக்காக அறுக்கலாம் என்று சட்ட்த்தில் அனுமதி இருந்தும்
ஒட்டகம் குர்பானி கொடுக்க நீதி மன்றம் தடை போட்டது. தடையை மீறி அறுப்போம் என்று அறிவித்த பின்னர் மாநில அரசின் தலையீட்டின் காரணமாக தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டது. 

இதிலிருந்து நீதிபதிகள் சட்ட்தைப் பார்த்து தீர்ப்பளிக்காமல் தங்கள் மத நம்பிக்கையைச் சார்ந்தே தீர்ப்பளிக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

 குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டால் அவர் சில நாட்கள் அதிக பட்சம் 90 நாட்கள் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார்கள். குண்டாஸ், மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டால் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் கழித்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள். இப்படித்தான்
 இந்த நாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படுகிறது. ஆனால் முஸ்லிம்கள் மட்டும் பத்து ஆண்டுகள் பதினாலு ஆண்டுகள் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருந்தனர். இருக்கின்றன. கீழ் நீதிமன்றங்களும் மேல் நீதி மன்றங்களும் முஸ்லிம்களுக்கு மட்டும் ஜாமீனில் விடுதலை செய்யும் உரிமையை வெளிப்படையாக மறுத்து வந்தன. வருகின்றன.

குண்டு வெடிப்பு வழக்கு என்று காரணம் சொல்லப்பட்டாலும் அதிலும் உண்மை இல்லை.

குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சங்பரிவாரத்தினருக்கு ஜாமீன் கிடைக்கிறது. 

முஸ்லிமுக்கு மட்டும் கிடைப்பதில்லை என்றால் என்ன அர்த்தம்? நீதிபதிகள் சட்ட்டப்படி நடப்பதில்லை. 

முஸ்லிம் என்ற வெறுப்பின் காரணமாகவே இப்படி நடக்கிறார்கள். பட்டியல் போடுவதாக இருந்தால் ஒரு நூலாக எழுதும் அளவுக்கு நீதி மன்றங்களின் பாரபட்சமான போக்குக்கு உதாரணங்கள் உள்ளன.

 வேறு விஷயங்களுக்கு நீங்கள் பொது நல வழக்கு தொடர்ந்தால் அதில் நியாயம் வழங்க வாய்ப்பு உள்ளது.

முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று மீடியாக்கள் கருதுவது போல் நீதிபதிகள் பலரும் கருதும் நிலையில் வழக்கு போடுவதால் என்ன பயன்? 

அது எழுத்துரிமை என்று தீர்ப்பளித்து நியாயம் வழங்குவார்கள். 

முஸ்லிம் சமுதாயம் சம்மந்தப்பட்ட எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுகாமல் பேச்சு வார்த்தை மூலமும் அரசியல் நடவடிக்கை மூலமும் போராட்டம் மூலமும் சந்திப்பது தான் அறிவுடமை.
 
 
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/naveena-pirassanaikal/mideavuku_ethiraka_vazaku_thodukalame/
Copyright © www.onlinepj.com

Thursday, 29 August 2013

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்?

 பதில் :

 
இதுபோன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்க இஸ்லாம் கூறும் பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். 
 
எந்த ஒரு விவகாரமானாலும் அதில் நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது. 
 
ஒருவன் முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயம் செய்தால் அவன் முஸ்லிம் என்பதற்காக அவனை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. 
இறை மறுப்பாளனாக இருக்கும் ஒருவன் அநீதி இழைக்கப்பட்டால் அவன் இறை மறுப்பாளன் என்பதற்காக அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டக்கூடாது என்றும் இஸ்லாம் கூறவில்லை. 
 
பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதும் அநியாயம் செய்தவன் யாராக இருந்தாலும் அவனைக் கண்டிப்பதும் தான் நேர்மையானது. இது போன்ற விஷயங்களில் இஸ்லாம் நீதத்தைத் தவிர மதத்தைப் பார்ப்பதில்லை. 
 
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2) ளالمائدة : 2ன5 
 
மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒரு வருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். அல்குர்ஆன் (5 : 2) 
 
இஸ்லாம் அல்லாத வேறு கொள்கையில் இருப்பவர்கள் விஷயத்தில் நீதம் தவறக் கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.
 
 
 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (8) ளالمائدة : 8ன5 
 
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். அல்குர்ஆன் (5 : 8)
 
 لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8) ளالممتحنة : 8ன60 
 
 மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். 
 
அல்குர்ஆன் (60 : 8) 
 
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முஸ்லிமுக்கும் மாற்றுக் கொள்கையில் உள்ள ஒருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட போது நபியவர்கள் தன் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் முஸ்லிமுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கவில்லை. 
 
மாறாக நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டு ஆதாரங்களின் அடிப்படையில் தான் தீர்ப்பளித்தார்கள். இதைப் பின்வரும் சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன. 
 
3415 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ عَنْ اللَّيْثِ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَمَا يَهُودِيٌّ يَعْرِضُ سِلْعَتَهُ أُعْطِيَ بِهَا شَيْئًا كَرِهَهُ فَقَالَ لَا وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ فَسَمِعَهُ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَامَ فَلَطَمَ وَجْهَهُ وَقَالَ تَقُولُ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا فَذَهَبَ إِلَيْهِ فَقَالَ أَبَا الْقَاسِمِ إِنَّ لِي ذِمَّةً وَعَهْدًا فَمَا بَالُ فُلَانٍ لَطَمَ وَجْهِي فَقَالَ لِمَ لَطَمْتَ وَجْهَهُ فَذَكَرَهُ فَغَضِبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ ثُمَّ قَالَ لَا تُفَضِّلُوا بَيْنَ أَنْبِيَاءِ اللَّهِ فَإِنَّهُ يُنْفَخُ فِي الصُّورِ فَيَصْعَقُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ يُنْفَخُ فِيهِ أُخْرَى فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ فَإِذَا مُوسَى آخِذٌ بِالْعَرْشِ فَلَا أَدْرِي أَحُوسِبَ بِصَعْقَتِهِ يَوْمَ الطُّورِ أَمْ بُعِثَ قَبْلِي وَلَا أَقُولُ إِنَّ أَحَدًا أَفْضَلُ مِنْ يُونُسَ بْنِ مَتَّى رواه البخاري 
 
யூதர் ஒருவர் (சந்தையில்) தன் சரக்கை எடுத்துக் காட்டிய போது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. 
உடனே அவர், "(நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டு விட்டார்.
 உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, "மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!' என்றா நீ கூறுகிறாய்?'' என்று கேட்டார். 
உடனே அந்த யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, "அபுல் காசிம் அவர்களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?'' என்று கேட்டார். 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, "நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?'' என்று கேட்டார்கள். அவர் நடந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கினார். 
உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, "அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே ("ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்' என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ஊதப்படும். உடனே, வானங்களீல் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்து விழுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு, அது இன்னொரு முறை ஊதப்படும். அப்போது (உயிராக்கி) எழுப்பப்படுபவர்களில் நான் தான் முதல் ஆளாக இருப்பேன். அந்த வேளையில் மூசா (அலை) அவர்கள் இறை சிம்மாசனத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். "அவர்கள் "தூர்சினாய்' மலையில் இறைவனைச் சந்தித்த) நிகழ்ச்சியின் போது மூர்ச்சையாகி விழுந்தது கணக்கிலெடுக்கப் (பட்டு இங்கு அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப் பட்டு விட்டாரா?' என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்களை விட ஒருவர் சிறந்தவர் என்று நான் கூற மாட்டேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் ; புகாரி (3414) 
 
மேற்கண்ட சம்பவத்தில் முஸ்லிம் மூசா நபியை விட தன்னை சிறப்பித்துப் பேசியதால் அவர் செய்ததை நபியவர்கள் ஆதரிக்கவில்லை. மாறாக தனது கோபத்தை வெளிப்படுத்தி அவர் நடந்துகொண்ட விதத்தைக் கண்டிக்கின்றார்கள். நபிமார்களில் ஒருவரை விட மற்றவரை சிறந்தவர் என்று கூறுவது கூடாது. இந்தத் தவறை முஸ்லிமும் செய்துள்ளார். யூதரும் செய்துள்ளார். எனவே நபியவர்கள் அவ்விருவர் செய்ததையும் கண்டிக்கும் வகையில் உபதேசம் செய்கிறார்கள். 
 
ஒரு முஸ்லிமுக்கும் யூதருக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம் தன் இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கவில்லை. மாறாக ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பையே அளித்தார்கள்
 
 
2417حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ شَقِيقٍ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهُوَ فِيهَا فَاجِرٌ لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ قَالَ فَقَالَ الْأَشْعَثُ فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنْ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَكَ بَيِّنَةٌ قُلْتُ لَا قَالَ فَقَالَ لِلْيَهُودِيِّ احْلِفْ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا إِلَى آخِرِ الْآيَةِ رواه البخاري 
 
"ஒருவன் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்வானாயின், மறுமையில், தன் மீது கோபம் கொண்ட நிலையில் அல்லாஹ்வை அவன் சந்திப்பான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது கேட்டுக் கொண்டிருந்த அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
 
எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்து விடவே நான் நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். நான், "இல்லை'' என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, "(அப்படியென்றால் "நிலம் என்னுடையது தான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை' என்று) சத்தியம் செய்'' என்று கூறினார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறென்றால் அந்த யூதன் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவானே!'' என்று கூறினேன். உடனே பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்., 
 
"எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பவிலைக்கு விற்றுவிடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கின்றது
 
 (3:77) 
 
புகாரி (2417) 
 
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் நாம் யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற கேள்விக்கு இப்போது வருவோம். அப்படியொரு சூழல் வந்தால் யாரிடம் நியாயம் இருக்கின்றதோ அவர்களை ஆதரிப்போம். அக்கிரமக்காரர்களைப் புறக்கணிப்போம்.  
 
இந்தியா பாகிஸ்தான் மட்டுமின்றி எந்த நாடாக இருந்தாலும் இந்த அளவுகோலின் அடிப்படையிலேயே நாம் முடிவெடுப்போம். 
 
பாகிஸ்தானைப் பொறுத்தவரை அது பெயரளவில் தான் இஸ்லாமிய நாடாக உள்ளது. அங்கே இஸ்லாமிய ஆட்சியோ அதை ஆளக்கூடியவர்களிடம் இஸ்லாமோ இல்லை. உலக ஆதாயத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு அமெரிக்காவின் கைகூலிகளாக செயல்படுகிறார்கள். நாட்டின் நிர்வாகத் துறையில் இந்தியாவை விட மிக மோசமான நிலையிலேயே பாகிஸ்தான் உள்ளது. 
 
ஒரு வாதத்துக்காக முஸ்லிம் நாடு என்று வைத்துக் கொண்டாலும் அந்தக் காரணத்துக்காக அதை ஆதரிக்க முடியாது ஒருவன் முஸ்லிமாக இருப்பதுடன் அவனுடைய செயல்பாடுகள் முயற்சிகள் இஸ்லாத்திற்காக இருந்தால் தான் அவற்றை ஆதரிக்க முடியும். அவனது செயல்பாடுகள் சுயலாபத்திற்காக இருந்தால் அல்லது தேவையற்றதாக இருந்தால் அதற்கு இஸ்லாமிய சாயத்தைப் பூசி ஆதரிக்க வேண்டியதில்லை. 
 
ஒரு முஸ்லிம் அமெரிக்க குடிமகனாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்கக் குடிமகன் என்பதற்காக அமெரிக்காவின் அத்துமீறல்களை ஆதரிக்கக் கூடாது. அமெரிக்கா செய்யும் நல்ல காரியங்கள் ஏதாவது இருந்தால் அதை மட்டும் தான் ஆதரிக்கலாமே தவிர அநியாயத்தை ஆதரிக்க முடியாது. 
 
அந்த அடிப்படையில் இந்தியாவின் நடவடிக்கை அநியாயமாக இருந்தால் அந்த அநியாயத்தை எதிர்க்கும் கடமை முஸ்லிம்களுக்கு உள்ளது. 
 
அதே நேரத்தில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கும் போர் நடந்து நியாய அநியாயங்கள் அடிப்படையில் முடிவெடுக்க முடியாத நிலை இருந்தால் அப்போது நாம் இந்தியாவின் பக்கம் தான் இருக்க வேண்டும். 
 
ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளான். 
 
அந்த அடிப்படையில் பாகிஸ்தான் நமது நாட்டின் மீது படை எடுக்கும் போது நாமும் நமது மக்களும் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நமது நாட்டின் பக்கம் தான் நிற்க வேண்டும்.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/india_pak_por_moondal/
Copyright © www.onlinepj.com

Wednesday, 28 August 2013

கற்பழிக்கப்பட்ட சிறுமிக்காக ஏன் போராடவில்லை?

கேள்வி 1:  
திருச்சியைச் சேர்ந்த முஸ்லிம் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து முஸ்லிம் இயக்கங்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதற்காக எந்தப் போராட்டமும் நடத்தவில்லை என்று ஒரு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது உண்மையா? உண்மை என்றால் தவ்ஹீத் ஜமாஅத் இதில் போராடாமல் போனதற்குக் காரணம் என்ன? 

நஸீர் அஹ்மது, திருச்சி 

இப்ராஹீம், திருச்சி 

கேள்வி 2:  

கோவையில் முஸ்லிம் சிறுவன் காவல்துறை வாகனத்தினால் விபத்துக்கு உள்ளாக்கப்பட்டு மரணித்தான். இதற்காக எல்லா அமைப்புகளும் போராடிய போது தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் ஒதுங்கிக் கொண்டது ஏன்? 

இர்பான், கோவை 
ஜக்கரியா, ஆவடி 



பதில்: 

இது குறித்து மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளும் நாம் சந்திக்கும் பிரச்சினைகளும் இரு வகைகளில் உள்ளன. 

முஸ்லிம் என்ற காரணத்திற்காக நாம் சந்திக்கும் பிரச்சினைகள் முதல் வகை. 

முஸ்லிம் என்ற காரணத்திற்காக அல்லாமல் பொதுவாக நாம் சந்திக்கும் பிரச்சினைகள் இரண்டாவது வகை. 

உதாரணமாக ஒரு விபத்தில் முஸ்லிம் ஒருவர் மரணமடைகிறார் அல்லது படுகாயம் அடைகிறார் என்று வைத்துக் கொள்வோம். 

இந்த விபத்து முஸ்லிம் என்ற காரணத்திற்காக நிகழ்த்தப்படவில்லை. 

விபத்தில் முஸ்லிம்கள் மரணிப்பது போலவே முஸ்லிமல்லாத நபர்களும் மரணிக்கிறார்கள். விபத்தை ஏற்படுத்தியவர்களில் முஸ்லிம்களும் இருக்கலாம். முஸ்லிம் அல்லாதவர்களும் இருக்கலாம். அரசு வாகனத்தினாலும் விபத்து ஏற்பட்டு இருக்கலாம். தனியார் வாகனம் மூலமாகவும் விபத்து ஏற்படலாம். விபத்துக்கு உள்ளானவரே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம். அல்லது விபத்தை ஏற்படுத்தியவரே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம். ஒரு முஸ்லிம் விபத்துக்கு உள்ளாகி மரணித்து விட்டால் அதைச் சமுதாயப் பிரச்சினையாக ஆக்கக் கூடாது. அது நியாயமாகவும் ஆகாது. நாட்டில் அன்றாடம் நிகழ்ந்து வரும் மற்ற விபத்துக்களைப் போலவே முஸ்லிம்களுக்கு ஏற்படும் விபத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.


 விபத்து நடந்த பகுதியில் உள்ள மக்கள் சம்பவம் நடந்தவுடன் ஒன்று திரள்வது இயற்கையானது. விபத்துக்குக் காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக இப்படி திரள்வார்கள். இவ்வாறு திரள்வது முஸ்லிம் என்பதற்காக இருக்கக் கூடாது. 

 முஸ்லிமல்லாதவர் விபத்துக்கு உள்ளானாலும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் திரளும்போது நாமும் அவர்களுடன் சேர்ந்து திரள வேண்டும். இதற்காக ஊர்கள் தோறும் மாவட்டங்கள் தோறும் போராட்டங்கள் நடத்துவது அறிவுடைமையாகாது. 

விபத்துக்கள் நடக்கும் பொழுது அதை இயக்கப் பிரச்சினையாக்காமல் எந்த இயக்கத்தின் பெயரிலும் பேனரிலும் இல்லாமல் எந்த அமைப்பின் கொடியும் இல்லாமல் மக்கள் தன்னிச்சையாகத் திரண்டால் தவ்ஹீத் ஜமாஅத்தினரும் மக்களோடு மக்களாக தவ்ஹீத் ஜமாஅத் அடையாளம் இல்லாமல் கலந்து கொள்ளலாம். 

கோவை சிறுவன் மரணத்தின் போது இப்படித்தான் நாம் நடந்து கொண்டோம். 

விபத்தை ஏற்படுத்தியது அரசு வாகனம் என்பதால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்காது. ஏனெனில் அரசாங்கத்தின் எந்த வாகனமும் இன்ஷுரன்ஸ் செய்யப்படுவதில்லை என்பதால் இறந்தவரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் நஷ்டஈடு கிடைக்காது. 

எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியாளரைச் சந்தித்து தக்க இழப்பீடு அளிக்க கோரிக்கை வைக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு தலைமை மூலம் அறிவுரை கூறி அவ்வாறு மனு கொடுக்கப்பட்டது. 

அதே நேரத்தில் முஸ்லிம் என்பதற்காக வேண்டும் என்றே வாகனத்தை ஏற்றிக் கொலை செய்திருந்தால் அப்போது அது சமுதாயப் பிரச்சனையாக மாறிவிடும். 

அது போல் கற்பழிப்பு போன்ற கொடுமைகள் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு நடந்தாலோ கற்பழித்து கொல்லப்பட்டாலோ அது முஸ்லிம் என்பதற்காக நிகழ்த்தப்பட்டது அல்ல. 

நாடே சீரழிந்து போய்க் கிடப்பதால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி அதை விட அதிகமாக முஸ்லிமல்லாதவர்கள் கற்பழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 

இது மதத்தின் அடிப்படையில் நடப்பது அல்ல. 

திருச்சி சம்பவத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களில் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் உள்ளனர். 


முஸ்லிமுக்கோ முஸ்லிம் அல்லாதவருக்கோ இது போன்ற கொடுமை இழைக்கப்பட்டால் அப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டு குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தினால் அவர்களோடு நாமும் கலந்து கொள்ளலாம். 

கொலையாளிகளையும், காமுகர்களையும் தப்ப விடக்கூடாது என்பதற்காக இது போல தன்னார்வத்துடன் உணர்ச்சி கொந்தளிப்புடன் மக்கள் திரள்வதை நாம் குறை கூற முடியாது. 

இது போன்ற பிரச்சினைகளை வைத்து ஒரு இயக்கம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வகையில் இயக்கத்தின் பெயர், கொடி, பேனருடன் அரசியலாக்கினால் அவர்களோடு இணையாமல் ஒதுங்கிக் கொள்வது என்ற நிலைபாட்டை நம் ஜமாஅத் கடைப்பிடித்து வருகின்றது.  


காவல்துறையினர் நியாயம் வழங்காமல் வழக்கை திசை திருப்பினால் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் அப்போது அமைப்பின் சார்பில் வீரியமிக்க போராட்டம் நடத்தலாம்

ஏனெனில் முஸ்லிம் என்ற காரணத்திற்காக நீதி மறுக்கப்பட்டால் அப்போது அது சமுதாயப் பிரச்சினையாக உருமாறி விடுகின்றது. அவ்வாறு அல்லாமல் முஸ்லிம் என்ற காரணத்துக்காக அதிகாரிகளோ, பிற சமுதாயத்தவர்களோ அநீதி இழைத்தால் அது போன்ற விஷயங்களில் தவ்ஹீத் ஜமாஅத் மற்ற யாருக்கும் சளைக்காமல் வீரியமிக்க போராட்டம் நடத்தத் தயங்கியதில்லை

இந்த நிலைப்பாட்டுக்கு ஏற்பவே நம்முடைய நடவடிக்கைகள் அமைதுள்ளன.
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/unarvuweekly/karpazikapata_sirumikaka_en_poradavillai/
Copyright © www.onlinepj.com

Monday, 19 August 2013

கண்தானம், கிட்னிதானம் , உடல் தானம் செய்யலாமா? இஸ்லாத்தில் அனுமதி உண்டா ?

உடல் தானம் செய்யலாமா உடலையும் உடலின் கண் கிட்னி போன்ற உறுப்புக்களையும் தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா 

ரிஸ்வான் 


கண் கிட்னி போன்ற சில மனித உறுப்புக்களை பிற மனிதர்களுக்கு பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. எனவே உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிராக இருக்கின்றதா? என்று மட்டும் பார்க்க வேண்டும். 

நவீன முறைகள் இஸ்லாமியச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இல்லாவிட்டால் அவை அனுமதிக்கப்பட்டதாகி விடும். கண், கிட்னி, இரத்தம் போன்றவற்றை தானமாக கொடுத்து பிறரை வாழவைப்பதை தடை செய்யும் விதமாக குர்ஆன் ஹதீஸில் எந்த சான்றும் இடம் பெறவில்லை. 

மாறாக மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்லறமாகும். 


சிலர் சரியான மார்க்க அறிவு இல்லாமல் மனித உயிரைக் காக்கும் இது போன்ற உறுப்பு தானங்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கோ இவர்களின் உறவினர்களுக்கோ பிறருடைய உறுப்பைப் பொறுத்தினால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் அப்போது இவர்கள் உறுப்பு தானத்தை எதிர்க்க மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அனைத்து மனிதனும் மன உறுத்தலின்றி இதை ஏற்றுக் கொள்வான். அதே நேரத்தில் உடல் முழுவதையும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல. 

உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை. மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப் படுகின்றன. 

கண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப்படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. 

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி), நூல் : புகாரி 2474, 5516 

உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம். உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது அவசியமாகும். 

'ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூ ராஃபிவு (ரலி) நூல்கள்: பைஹகீ 3/395, ஹாகிம் 1/505, 1/516 தப்ரானி 1/315 
 
இறந்த பின்னரும் ஒரு மனிதரின் வெட்கத்தலம் மறைத்து பாதுக்காக்கப்பட வேண்டும். 

ஆனால் உடல் தானம் செய்தால் அந்த உடலை மற்றவர்கள் அன்றாடம் நிர்வாணமாக்க் காணும் நிலை ஏற்படும். 

மருத்துவ படிப்புக்கு உடல் தேவைப்படும் என்ற காரணத்தால் இதை இஸ்லாம் அனுமதிக்காது. 

மனித உடல் போன்ற மாதிரிகளை வைத்து மருத்துவப் படிப்புக்கு பயன்படுத்த முடியும். 

மேலும் பார்க்க 

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/kan_danam_udal_danam/ 
 http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/kan_thanam/ 
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/moolai_sethavarin_uruppukal/ 
 http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/moolai_sethavarin_ithayathai_matravaruku/

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/udal_dhanam_seyyalama/
Copyright © www.onlinepj.com






## உறுப்பு தானம் செய்யலாம்..., உடல் தானம் செய்யகூடாது...###

Tuesday, 30 July 2013

அலர்ஜியைத் தடுக்கும் மீன்

 மீன் சாப்பிடும் குழந்தைகளை அலர்ஜி நோய் தாக்காது: - விஞ்ஞானிகள் தகவல்! 
கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்! திருக்குர்ஆன் 16:14 
கடந்த வார உணர்வு இதழில்,
 “சைவ, அசைவ உணவுகள் - ஓர் ஒப்பீடு”  
என்ற தலைப்பில் சைவ உணவுகளை வெறுத்து அசைவ உணவுகளை மட்டுமே ஒருவர் உட்கொண்டால் அதனால் ஏற்படும் கேடுகள் குறித்து விரிவாக விளக்கியிருந்தோம். அதை உண்மைப்படுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான ஆய்வில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
ஒரு வயதிற்குள் மீன் சாப்பிடும் குழந்தைகள் பிற்காலத்தில் அலர்ஜி நோய்களுக்கு ஆளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. 
குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த இவர்கள், ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன. அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால், அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். உடம்பின் மேல் முழுவதும் வரும் சிவப்புத் திட்டுகள் அவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஒரு சில மருந்துகளே இந்த நோயை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சிலருக்கு நோயின் தீவிரம் காரணமாக, உடல் முழுவதும் துணிக்கட்டுகள் போடவேண்டியிருக்கும். தூசியினால் வரும் சளிக்காய்ச்சல்கள், ஐந்து பிள்ளைகளில் ஒருவருக்கு வருவதாகக் கூறப்படுகின்றது. இவை இரண்டுமே நாட்பட்ட நிலையில் ஆஸ்துமா நோயை வரவழைக்கக்கூடிய அபாயம் கொண்டவை ஆகும். 

மீன் உணவு கொடுப்பது நான்கு வயது வரை மட்டுமே பலனளிக்கும் என்று முந்தைய ஆராய்ச்சியின் முடிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், 


சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் வல்லுனர்கள், 3,285 குழந்தைகளை அவர்களின் 1,2,4,8 மற்றும் 12 வயதுகளில் ஆய்வு செய்தனர். இவர்களில் 80 சதவிகிதம் பிள்ளைகள் குறைந்தது மாதம் இரண்டு முறை மீன் உட்கொள்ளுபவர்களாக இருந்தார்கள். மற்றவர்களைவிட இவர்களின் ஆரோக்கியத்தில் தெரிந்த வளர்ச்சி, உணவுப் பழக்கங்களில் மீன் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்பதை உணர்த்தியது.
 மீன் என்பது அசைவம் என்று சொல்லி அதை ஒதுக்குபவர்கள் இதுபோன்ற பல நன்மைகளை இழக்க நேரிடும்  
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

June 25, 2013, 11:37 PM

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/-/
Copyright © www.onlinepj.com

Tuesday, 16 July 2013

கிரிமினல்கள் ஆதிக்கத்தை நீதிமன்றத் தீர்ப்பு மாற்றுமா ?????

கேள்வி : 
குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கிரிமினல்களின் ஆதிக்கத்தைக் குறைக்குமா? 










பதில் : 

உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகள் வழங்கியுள்ளது. அதில் ஒரு தீர்ப்பை நாம் வரவேற்கலாம். இன்னொரு தீர்ப்பு நியாயமற்றதாக உள்ளது. அதை நாம் வரவேற்க முடியாது. ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் உடனே அவர் பதவி இழக்க வேண்டும் என்ற தீர்ப்பை நாம் வரவேற்க முடியும். இது குறித்து தனி கட்டுரை இடம் பெற்றுள்ளது. 

ஆனால் விசாரணைக் கைதிகளாக உள்ளவர்கள் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது என்றும். ஓட்டுப் போட உரிமை இல்லாதவர்கள் போட்டியிடக் கூடாது என்றும் அளிக்கப்பட்ட தீர்ப்பை நாம் வரவேற்க முடியாது. 
மக்கள் பிரதிநிதித்துவ
சட்டம் பிரிவு4 மற்றும்5-ன் படி வாக்களிக்க தகுதி பெற்ற ஒருவர்தான் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதி படைத்தவர்கள் என்கிறது. அதே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 62(5)பிரிவின்படி தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களும், விசாரணைக் கைதிகளும் தேர்தலில் ஓட்டுப்போட முடியாது. எனவே வாக்களிக்கும் தகுதியை இழந்த நபர் தேர்தலில் போட்டியிட தகுதி கிடையாது என்ற சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்களும், போலீஸ் காவலில் இருக்கும் விசாரணைக் கைதிகளும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று நீதிபதிகள் பட்நாயக், முகோபாதியா கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு முற்றிலும் தவறாகும். இது கிரிமினல்களை ஒழிப்பதற்குப் பதிலாக அப்பாவிகளை கிரிமினல்களாக ஆக்கவே உதவும். போலீசார் எத்தனையோ அப்பாவி மக்களைக் கைது செய்து சிறையில் தள்ளுகின்றனர். அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு நீண்ட காலம் விசாரணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்படுன்றனர். பல வருடங்கள் சிறைவாசம் முடிந்த பின் இவர்க நிரபராதிகள் என்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இவர்களைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தீர்ப்பளித்தால் இது மாபெரும் அநீதி என்று ஏன் இந்த நீதிபதிகளுக்குத் தோன்றவில்லை? தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதிர்க்கட்சிகள் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு என பல வழக்குகளைப் போட்டு நீதிமன்றக் காவலில் அரசாங்கத்தால் வைக்க முடியும். அவர்களை இதன் காரணமாக போட்டியிடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம்? ஒருவர் கிரிமினலா இல்லையா என்பதை நீதிமன்றங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். போலீசார் முடிவு செய்யக் கூடாது என்று ஏன் இந்த நீதிபதிகளுக்குத் தோன்றவில்லை? விசாரணைக் கைதிகள் ஓட்டுப் போட முடியாது என்று சட்டம் உள்ளதால் ஓட்டுப் போடாதவர்கள் எப்படி தேர்தலில் போட்டி இடலாம் என்று நீதிபதிகள் கேட்பது அவர்களின் சிந்தனைக் கோளாறுக்கு ஆதாரமாக உள்ளது. விசாரணைக் கைதிகள் ஓட்டுப் போட முடியாது என்ற சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி அதைத் தான் நீதிமன்றம் தடுத்து இருக்க வேண்டும். நீதிமன்றங்கள் குற்றவாளி என்று முடிவு சொல்வதற்கு முன்னால் அரசாங்கம் குற்றவாளி என்று தீர்மானிக்கும் வகையில் இந்தச் சட்டம் உள்ளதால் விசாரணைக் கைதிகள் ஓட்டும் போடலாம். போட்டியும் இடலாம் என்று தீர்ப்பளிப்பதுதான் அரசியல் சட்டத்துக்கு நெருக்கமானதாக இருக்கும். இலாவிட்டால் ஒரு அரசாங்கம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் விசாரணக் கைதியாக்கி தேர்தலில் ஓட்டுப் போடுவதை தடுக்க முடியும். அதைக் காரணம் காட்டி அவர் தேர்தலில் போட்டியிடுவதையும் தடுக்க முடியும். இந்த அநியாயத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிராக உள்ளது என்று காரணம் சொல்லி அந்தச் சட்ட்த்தை திருத்தச் சொல்லும் நீதிமன்றம் அதே காரணத்தை இந்த விஷயத்தில் கருத்தில் கொள்ளவில்லை. சட்டப்படி ஒருவன் குற்றவாளி என்று அறிவிக்கப்படும் முன் அவன் நிரபராதி என்பது தான் உலகம் முழுவதும் உள்ள நீதியாகும். நீதிமன்றங்கள் விசாரணை செய்து குற்றவாளி என்று அறிவிக்காமல் இருக்கும் போது அவன் குற்றவாளி என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறினால் அதைத் தான் திருத்த வேண்டும். விசாரணைக் கைதிகள் உண்மையில் குற்றவாளிகள் அல்லர். எனவே அவர்களின் ஓட்டுரிமையைப் பறிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளிப்பதுதான் சரியானதாக இருக்கும். முரண்பாடு இல்லாத தீர்ப்பாக இருக்க முடியும். இரு தீர்ப்புகளுக்கும் இரு வேறு அளவு கோலைப் பயன்படுத்தி அப்பாவிகளைக் கிரிமினல்களாக ஆக்கும் இந்தத் தீர்ப்பு கட்டாயம் மாற்றப்பட வேண்டும்

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/unarvuweekly/cimilnalkalin_athikathai_neethimnara_theerpu_matruma/
Copyright © www.onlinepj.com

சீனாவில் குட்டைப்பாவாடைக்குத் தடை

சீனாவில் குட்டைப்பாவாடைக்குத் தடை!
எதிரிகளால் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம்!! 

பெண்களைப் பாலியல் தொந்தரவுகளிலிருந்து தடுக்க குட்டைப்பாவாடை மற்றும் உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தக்கூடிய லெகின்ஸ் மற்றும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்று சீனப் பெண்களுக்கு பெய்ஜிங்கில் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் சமீபகாலமாக பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு அதிக அளவில் ஆளாவதாக காவல்துறைக்கு புகார்கள் குவியத் தொடங்கின. அந்தப் புகார்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், புகார்கள் குறைந்தபாடில்லை. அந்தப் புகார்களைப் பெற்றுக்கொண்ட காவல்துறை பெண்கள் அதிக அளவில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகக் காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தது.

பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்குப் பெண்கள் ஆளாவதைத் தடுக்கும் வகையில் பெண்கள் கவர்ச்சிகரமான

உடைகளான ஸ்கர்ட், லெகின்ஸ், உடல் அமைப்பை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்பதே சீனப் பெண்களுக்கு சீனப் போலீசார் விடுத்த எச்சரிக்கை. பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகாமல் இருக்க குட்டைப்பாவாடை, உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தும் உடைகள், மார்பு தெரியும் பனியன்கள், உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தும் லெக்கின்ஸ் பேன்ட் போன்றவற்றை அணியக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசுப்பேருந்துகள் பாதியளவுக்கு உயரமாகவும் இன்னொரு பாதி தாழ்வாகவும் அமைந்துள்ளன. உயரமான பகுதியில் பெண்கள் அமரும் தாழ்வான பகுதியில் உள்ள ஆண்கள் பெண்களின் தொடைகளையும் அதைத் தாண்டியும் செல்போனில் படம் எடுக்கின்றனர். பார்த்து ரசிக்கின்றனர். இதைத் தவிர்ப்பதற்காக அரசுப் பேருந்துகளில் உயரமாக உள்ள பேருந்தின் பின்புறத்தில் பெண்கள் அமரக் கூடாது; தாழ்வாக உள்ள முன்புறத்தில் தான் அமர வேண்டும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது. இதே போல மாடிப் பேருந்துகளில் உள்படியில் நிற்கும் பெண்களை கீழ்தளப்பேருந்தில் இருந்து ஆபாசமாக செல்போனில் படம் பிடிப்பபதைத் தவிர்க்க உள்படியில் பெண்கள் நிற்க்க் கூடாது எனவும் சீன காவல்துறை எச்சரித்துள்ளது. இதைப் பிரசுரமாக அச்சிட்டு பேருந்துகளிலும், பொது இடங்களிலும் ஒட்டி உள்ளனர். அரைகுறை ஆடை அணிந்து செல்லும் பெண்களை தவறான முறையில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க தங்கள் உடல்களை பெண்கள் அவரவர் கொண்டு செல்லும் பத்திரிகைகள் மற்றும் கைப்பைகளை வைத்து மறைத்துக் கொள்ளுமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுபோல ஆஸ்திரேலியாவில் குட்டைப்பாவாடை அணிந்து சென்ற மாணவிகள் பேருந்தில் ஏறுவதை பேருந்துப் படிகளில் மறைத்து வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் படம் பிடித்த பேருந்து ஓட்டுநரை ஆஸ்திரேலியப் போலீசார் கைது செய்து வழக்குத்தொடர்ந்து அவருக்கு 7மாத சிறைத்தண்டனை கொடுத்த சம்பவமும் சிலமாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுபோல "அரியானாவில், மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவியர், குட்டைப் பாவாடை அணியத் தடை விதிக்க வேண்டும்' என, மாநிலக் கல்விக் குழு அதிகாரியை, அம்மாநிலத்தின் மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டது. திருமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தவும் ஜீன்ஸ் அணியவும் தடைவிதிக்கக் கோரி பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்திய சம்பவமும் சென்ற வாரம் பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால் பெண்கள் திருமணத்திற்கு முன் மொபைல் போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் அனுமதிக்கக் கூடாது என மத்தியப் பிரதேச பா.ஜ.க. துணைத் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான ரகுநந்தன் சர்மா கடந்த வாரம் மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். மாணவர்கள் குறிப்பாக இளம் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதாலேயே பெரும்பாலான அச்சுறுத்தல்களும், குற்றங்களும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். அவருக்கு கண்டனக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் பறந்தன. பெண்கள் கவர்ச்சி ஆடை அணிவது கூடாது; அதனால் ஆண்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற கருத்து மோலோங்கியதோடு மட்டுமல்லாமல் ஜவுளிக்கடையில் வைக்கப்பட்டுள்ள பொம்மைகளுக்குக்கூட கவர்ச்சி ஆடை அணிவித்து ஆடவர்கள் கண்களில் படுமாறு வைக்க எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.

மும்பை மாநகராட்சியின், 121வது வார்டு உறுப்பினர், ரிது தாவ்டே (39). பாரதிய, ஜனதாவைச் சேர்ந்த இவர், செல்லும் பாதையில், பெண் பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தாமல், அந்த இடத்தை விட்டு நகர மாட்டார். துணிக் கடைகள் மற்றும் நடைபாதைக் கடைகளில், பெண் பொம்மைகளை வைத்திருப்பதைப் பார்ப்பதால், ஆண்களிடம் பாலியல் வக்கிரம் வெளிப்படுகிறது. எனவே, உள்ளாடை விற்பனை கடைகளில் வைக்கப்பட்டிருக்கும், பெண் பொம்மைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, மும்பை மாநகராட்சியில் இவர் மற்றும் 227 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.


இதுகுறித்து, ரிது தாவ்டே கூறியதாவது: பெண்களின் உள்ளாடை விற்பனைக்காக, கடைக்காரர்கள், இத்தகைய பொம்மைகளை, தங்கள் கடைகளின் வெளிப்புறமாக வைக்கின்றனர். அதில், பிரா, ஜட்டியுடன் காட்சியளிக்கும் பொம்மைகளைப் பார்க்கும் ஆண்கள், அவற்றை பொம்மைகளாகப் பார்ப்பதில்லை; பெண்களாகவே பார்க்கின்றனர். இதனால், நல்ல எண்ணம் கொண்ட ஆண்களுக்கும், வக்கிர புத்தி ஏற்படுகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த, ஆண், பெண் என, அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் சாலைகளில், இத்தகைய கவர்ச்சி பொம்மைகள் வைத்திருப்பது, நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்திற்கு எதிரானது. எனவே, அவற்றை அகற்றுவது என்ற முடிவை எடுத்தேன். தீர்மானம் : நாடு முழுவதும், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய பொம்மைகள், பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தும் என்பது என் எண்ணம். எனவே, நாடு முழுவதும், பெண்கள் கவர்ச்சி பொம்மைக்கு தடை விதிக்க வேண்டும் அவர் கூறினார். மேற்கண்ட செய்திகள் நமக்கு உணர்த்துவது என்ன? பெண்களுக்கு எதிரான தொல்லைகள் அதிகமாவதற்கு அவர்களது ஆடைக் கலாச்சாரம்தான் காரணம். அவர்கள் ஆடைகளை ஒழுங்காக அணிந்தால் அதுவே அவர்களுக்கு சரியான பாதுகாப்பு என்று இஸ்லாம் சொல்லக்கூடிய கட்டளைகளைக் கடைப்பிடிக்காததே அதற்கு முழுமுதற்காரணம். இந்தக்கருத்தை இஸ்லாம் கூறும் கட்டளையாகச் சொன்னபோது இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது; அவர்களைச் சித்ரவதை செய்கின்றது; பெண்களை பர்தா அணியச் சொல்லும் இவர்கள் பழமைவாதிகள்; அடிப்படைவாதிகள்; பிற்போக்குவாதிகள்; காட்டுமிராண்டிகள் என்று கதையளந்தனர் இஸ்லாமிய எதிரிகள். ஆனால் தற்போது நிலை என்ன? யார் தங்களை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டார்களோ அந்த  

முற்போக்கு(?)வாதிகளது வாயிலிருந்தே இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை அல்லாஹ் வழிமொழிய வைத்துள்ளான்.

சீனக் காவல்துறை இந்தச் சட்டத்தை கொண்டுவரும் என்று யாரும் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இஸ்லாத்தை இழிவுபடுத்துவதையே முழுமுதற் குறிக்கோளாகக் கொண்டுள்ள பா.ஜ.க.வினரது வாயிலிருந்தே பர்தாவின் அவசியத்தை இறைவன் விளங்க வைத்துள்ளான். இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகுதான் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதற்கு அவர்கள் அணியும் ஆடைகள்தான் காரணம் என்பதை இப்போதுதான் மிகவும் காலம் தாழ்ந்து ஆய்வு செய்து கண்டு பிடித்துள்ளனர்.

 இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர் ஆன் தெளிவுபடுத்தியுள்ளதைப் பாருங்கள் : 

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/-/chinavil_kuttaipavadaiku_thadai/
Copyright © www.onlinepj.com

Monday, 17 June 2013

பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு

இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு பெண்கருத்து!



 உடலை மறைத்தால்தான் ஆண்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முடியும். ஆண்களிடம் குலைந்து பேசக்கூடாது. அப்போதுதான் பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியும் என இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. 

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நவீன கால பெண்களின் ஆடை முறைகளே. பெண்கள் தங்களின் உடலை இஸ்லாம் சொல்லும் முறைப்படி மறைத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்களை பெருமளவில் குறைக்க முடியும். 

அதேபோல் பெண்கள் ஆண்களிடம் குழைந்து பேசுவதை தவிற்பதன் மூலம் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என குர்ஆன் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றது.

 "நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்" அல்குர் ஆன் (33.32) 

குர்ஆனின் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணமாக இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுப் பெண்கள் இந்திய வாலிபர்களின் தொல்லை தாங்க முடியாமல் உடலை மறைப்பதன் மூலமும், குழைந்து பேசுவதை தவிற்பதன் மூலமும் எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர். 

இந்திய வாலிபர்களால் தொல்லைக்கு ஆளான வெளிநாட்டுப் பெண்களை சந்தித்து அவர்கள் பட்ட தொல்லைகள், அதை தவிற்க அவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகளை பேட்டி எடுத்து தி வீக் (The Week) பத்திரிக்கை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. 

அதில்... 

நெதர்லாந்தைச் சேர்ந்த 26 வயது பெண் அன்னிமிகி ஸ்பிட்சி, டெல்லியில் படித்துக்கொண்டு இருகின்றார். அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்... நான் மேற்கத்திய பாணியில் (அறைகுறை) ஆடைகள் அணிந்து செல்லும்போது ஆண்களின் தொல்லைக்கு ஆளானேன். ஒரு முறை பழைய டெல்லியில் சாலையை கடக்க முயன்றபோது ஒருவன் என்னை தொட்டு சில்மிஷம் செய்தான். நான் பேருந்தில் பயணிக்கும்போது வேண்டும் என்றே என்னை உரசுவது, பிறகு, “சாரி” சொல்வது ஆண்களுக்கு வாடிக்கையாய் போய்விட்டது. இதைத் தடுக்க நான் இப்போதெல்லாம் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிகின்றேன். வெளியில் போகும்போது ஸ்கார்ப்ஃபை அணிந்து செல்கின்றேன். இப்போது என்மீதான ஆண்களின் பார்வையை தடுக்க முடிகின்றது. ஓரளவிற்கு பாதுகாப்பை உணரமுடிகின்றது எனத் தெரிவித்துள்ளார். 

இவரைப்போல் பாதிக்கப்பட்ட லிஸ் கிரீன் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மனி கூறுகையில்... 

ஆண்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க நான் இபோது ஆண்களிடம் குழைந்து பேசுவது இல்லை. கடுமையாகவே நடந்துகொள்கின்றேன். ஆண்களைப் பார்த்து புன்னகை புரிவதில்லை. இதன் மூலம் நாம் பாதுகாப்பாக இருந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். 

இஸ்லாம் மனித குலத்திற்கு நடைமுறைப்படுத்த கூடிய சிறந்த நடைமுறையையே வழங்குகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையிலிருந்து தீர்வை வழங்குகின்றது. பாதிக்கப்பட்ட இந்த பெண்கள் முஸ்லிம்கள் இல்லை. 

இவர்கள் ஆண்களின் தொல்லைகளை அனுபவித்து அதில் இருந்து தப்பிக்க இஸ்லாம் சொல்லும் தீர்வைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். 

இப்படி பிரச்சனைகளை சந்திக்காத, அல்லது இதுபோன்ற கேவலத்தை விரும்புபவர்கள்தான் இஸ்லாம் சொல்லும் தீர்வை எதிர்க்கின்றனர். ஆண்களின் பாலியல் தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்ள மானம் உள்ள எவரும் இஸ்லாம் சொல்லும் உடலை மறைத்தல், ஆண்களிடம் கண்டிப்புடன் பேசுதல் போன்ற தீர்வைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் சொல்லக்கூடிய தீர்வுகள்தான் சரியானவை என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் உண்மைப்படுத்திக் கொண்டுள்ளன. 

முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் பெண்களை ஒரு காமப் பொருளாக பார்க்கவே இவர்கள் பெண்களின் மானத்தைக் காக்கும் பர்தா முறையை எதிர்க்கின்றார்கள். 

பர்தா எதிர்ப்பு என்பது ஆண்களின் காம இச்சையின் வெளிப்பாடே தவிர ஒழுக்கமுள்ள மனிதனின் பண்பாகாது. எனவே பெண்கள் பர்தா அணிவதை வலியுறுத்துவோம். பெண்களின் மானம் காக்கும் பண்பாளர்களாவோம்.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/partha-than-pangalukku-pathukappu/
Copyright © www.onlinepj.com

Tuesday, 11 June 2013

மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா ! சரியா?



கேள்வி:
பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்கு தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று இதற்கு காரணம் கூறுகிறார்கள். இது சரியா?

பதில்:

முஸ்லிம்களைப் பொருத்த வரை தங்களின் அனைத்து காரியங்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் தான் நடத்த வேண்டும். சில காரணங்களை நாமாகக் கற்பணை செய்து கொண்டு சடங்குகளை உருவாக்கக் கூடாது.

பெண்கள் புகுந்த வீட்டில் சிரமப்படுக்ககூடாது என்பதற்காகவே வரத்ட்சணை கொடுக்கிறோம் என்று கூறுவது போலவும், 

கள்ளச் சாராயம் குடித்து சாகக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடை திறந்துள்ளோம் என்பது போலவும் 

எல்லா தவறான காரியங்களுக்கும் காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தக் காரணத்தில் சிறிதும் உண்மை இல்லை.

உலகில் இந்தியா தவிர வேறு நாடுகளில் எல்லாம் பருவ வயது அடைவதற்கு விழாக்கள் இல்லை. அங்கெல்லாம் பெண்களுக்கு வரண் கிடைக்கவில்லையா?

ஆணுக்கு திருமணம் செய்ய எண்ணும் பெற்றோர் எந்த வீட்டில் பெண் இருக்கிறார் என்று விசாரித்துப் பார்த்து பெண் கேட்டு வருவார்கள். அது போல் பெண் வீட்டாரும் விசாரித்துப் பார்த்து மாப்பிள்ளை பேசுவார்கள். பூபெய்தல் விழாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.

பெண்ணுக்கு மாப்பிள்ளை அவசியம் என்பது போல் ஆணுக்கும் பெண் அவசியம் தானே? அப்படியானால் எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த ஆண் இருக்கிறான் என்பதற்காக ஏன் விழா நடத்தவில்லை?

கொடுத்த அன்பளிப்பை மொய் எனும் பெயரில் திரும்பப் பெறுவதற்காகவே இது போன்ற விழாக்களை மற்ற மதத்தவர்கள் உருவாக்கினார்கள். 

கொடுத்த அன்பளிப்பை திரும்பக் கேட்கக் கூடாது என்ற கொள்கையுடைய இஸ்லாத்தில் இந்த விழா தேவையற்றது.

Monday, 3 June 2013

தேனீக்களின் வழி அறியும் திறன்




தேனீக்கள் மூலம் கன்னிவெடிகளைக் கண்டுபிடிக்கலாம் என்ற செய்தி தமிழில் எல்லா ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு வெளிவந்தது. 

அச்சு அசலாக ஒரு வார்த்தை கூட மாறாமல் அனைத்து ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு தான் இச்செய்தி வெளியானது. 

ஏதோ ஒரு ஊடகத்தில் வந்ததை அப்படியே காப்பி அடித்து எல்லோரும் பயன்படுத்தியுள்ளனர். 

ஜாக்ரப், மே 23- 
வெடிகுண்டுகளை தேனீக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அய்ரோப்பிய யூனியனோடு இணைந்த குரோடியா நாடு, அடர்ந்த பசுமை காடுகளும், பெரிய ஏரிகளும் உடையது. இயற்கை வளம் கொழிக்கும் இந்த நாட்டில், 1990இல் பால்கன் போரின்போது புதைத்து வைக்கப்பட்ட ஏராளமான கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. சுமார் 750 சதுர கி.மீ. பரப்பளவுக்கு கண்ணி வெடிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மொத்தம் 90,000 வெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவற்றை அகற்ற பல்வேறு முயற்சிகள் நடந்தாலும், பலனளிக்கவில்லை. கண்ணிவெடியில் சிக்கி இதுவரை 2500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்நாட்டில் உள்ள ஜாக்ரப் பல்கலைக்கழக வேளாண்மை துறை பேராசிரியர் நிகோலா கேசிக், தேனீக்களை பற்றி ஆய்வு செய்தார். அவற்றை தொடர்ந்து கண்காணித்ததில் அவை டிஎன்டி (டிரை நைட்ரோ டோலுவின்) என்ற வெடிபொருள் வாசனை மூலம் இரைதேடுவதைக் கண்டறிந்தார். வெடிகுண்டுகளின் வெடிப் பொருளை அழிவு சக்தியை அளக்க ஒரு கிராம் டிஎன்டி அடிப்படை அலகாக குறிப்பிடப்படுகிறது. இத்தகைய டிஎன் டியை நுகரும் திறனுடைய தேனீக்களை, வெடிகுண்டு கண்டுபிடிக்க பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. உடனடியாக, தனது மாணவர்களுடன் இணைந்து தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். இந்த ஆராய்ச்சிக்கு இனிப்புடன் டிஎன் டியை கலந்து ஆங்காங்கு வைத்துவிட்டு, தேனீக்களின் நடவடிக்கையை உற்று கவனித்தனர். அப்போது, டிஎன்டி கலந்து வைத்த இனிப்பின் மையப்பகுதியை மட்டும் தேனீக்கள் மிகச்சரியாக நுகர்ந்தன. இதுகுறித்து பேராசிரியர் நிகோலா கேசிக் கூறுகையில், இந்த ஆராய்ச்சி, கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இது விஞ்ஞான பூர்வமாக வெற்றி பெற்றால், கண்ணி வெடி இருப்பதாக கருதப்படும் பகுதிகளில் தேனீக் களின் நடவடிக்கையை அகச்சிவப்பு கதிர்கள் மூலம் கண்காணித்து அகற்றி விடலாம். நாய், எலி மூலம் கண்ணிவெடியை கண்டுபிடிக்க முடியும் என்றாலும், அவற்றின் உடல் எடை காரணமாக வெடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தேனீக்களை பொறுத்தவரை அந்த பிரச்சினையே இல்லை. தேனீக்கள் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அமெரிக்காவில் நடந்துள்ளது என்றார். 

தினகரன், விடுதலை, யஹூ உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் இதே வாசகங்கள் ஒரு புள்ளிமாறாமல் வெளியிடப்பட்டுள்ளன். இதைப் படிப்பவர்களுக்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சி என்ன என்பது விளங்காது. மேலும் தேனீக்கள் வெடிமருந்து வாசனையைக் கொண்டுதான் இரை தேடுவதாக தவறான தகவலும் தரப்பட்டுள்ளது. இது உண்மையும் பொய்யும் கலந்த கலவையாக உள்ளது. 

உண்மையில் தேனீக்கள் வெடிமருந்தின் வாசனையைக் கொண்டு இரை தேடுவதில்லை. நாய்களுக்கும் எலிகளுக்கும் பயிற்சி அளிப்பது போல் பயிற்சி அளிக்கப்பட்டால் அந்த தேனீக்கள் மட்டும் தான் வெடிமருந்துகளைக் கண்டுபிடிக்கும். எல்லா தேனீக்களும் அதைக் கண்டுபிடிக்காது. இந்த உண்மைக்கு மாற்றமாக இச்செய்தியைத் திரித்து எழுதியுள்ளனர். 

இது குறித்து விரைவில் விரிவுபடுத்தி வெளிவரவுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கம் 12 ஆம் பதிப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம். 

16:68,69 வசனங்களுக்கான விளக்கம் 68, 69. 

"மலைகளிலும்,
மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!''474 என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது.259 அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது.26 474 

தேனீக்களின் வழி அறியும் திறன் 

இவ்வசனத்தில் (16:68) 


தேனீக்களை நோக்கி உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் என்று தேனீக்களுக்கு உள்ளுணர்வை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தேனீக்கள் பாதைகளை அறிவதில் தனித்து விளங்குகின்றன என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். 

அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது: தேனைத் தேடி, தேனீக்கள் அதிகப் பயணம் மேற்கொள்கின்றன. ஆனால், அவை அதிகமான குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகின்றன. இதற்காக, கம்ப்யூட்டரின் உதவியுடன், செயற்கைப் பூக்களைக் கொண்டு, தேனீக்களின் பயண வழியைக் கண்காணித்தோம். அதில், தேனீக்கள் மிகக் குறைவான நேரத்தில், வெவ்வேறு பூக்களுக்குச் செல்வதற்கு அதிக குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தோம். அந்த வழிகள், விற்பனைப் பிரதிநிதி செல்வதற்காக, கம்ப்யூட்டர் உருவாக்கிக் கொடுத்த வழிகளை விட, அதிக வழிகளாகும். இதன் மூலம், கம்ப்யூட்டரின் அறிவை, மிகச்சிறிய தேனீயின் மூளை மிஞ்சியுள்ளது. இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

வழிகளை எளிதாகக் கண்டு கொள்ளும் திறன் தேனீக்களுக்கு உள்ளது என்ற இந்த உண்மையை திருக்குர்ஆன் சொல்லி இருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம் தான் என்பது உறுதியாகிறது. எளிதாக வழிகளைக் கண்டுபிடிப்பது என்பது குறுக்கு வழிகளை மட்டும் குறிக்காது. சரியான வழியையும் கண்டுபிடித்தால் தான் எளிதாக இருக்கும். ஒரு மலரில் அல்லது கனியில் தனக்கு உரிய உணவு உள்ளதா என்பதை மோப்ப சக்தி மூலம் சரியாகக் கண்டுபிடித்தால் தான் வழிகள் எளிதாக இருக்கும். ஒவ்வொரு பூவாகச் சென்று ஏமாந்தால் வழிகள் எளிதாக இருக்காது. அலைச்சல் தான் மிச்சமாகும். தேனீக்களின் மோப்ப சக்தி மிகத் துல்லியமாக அமைந்துள்ளதயும் இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பாவில் உள்ள குரோஷியா நாட்டுக்கும் செர்பியாவுக்கும் நடந்த போரின் போது ஏராளமான கன்னிவெடிகளை செர்பியா புதைத்து வைத்தது. போர் முடிந்த பின்னும் கன்னிவெடி புதைக்கப்பட்ட இடத்தில் கால் வைப்பவர்கள் செத்துமடிந்து வருகின்றனர். எனவே கன்னிவெடிகளைக் கண்டுபிடிக்க தேனீக்களின் மோப்ப சக்தியைப் பயன்படுத்த முடியுமா என்று ஜாக்ரப் பல்கலைக் கழக வேளாண்மைத் துறை பேராசிரியர் நிகோலா கேசிக் ஆராய்ச்சி மேற்கொண்டார். தேனீக்களின் உணவு எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தேனீக்கள் அதைச் சரியாகக் கண்டு பிடிக்கும் திறன் வாய்ந்தவை என்பதை முதலில் இவர் கண்டுபிடித்தார். வெடிமருந்துகளில் உள்ள டி.என்.டி எனும் வாசனையை இனிப்புடன் கலந்து தேன் கூடுகளுக்கு அருகில் வைக்கப்பட்டது. இனிப்பைத் தேடிவரும் தேனீக்கள் டி.என்.டி வாசனையைப் பழகிக் கொண்டன. இப்படியே பழக்கப்பட்ட தேனீக்கள் டி.என்.டி வாசனை எங்கு இருந்தாலும் அது தன்னுடய உணவின் வாசனை என்று நினைக்கும் அளவுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு தேனீக்கள் பழக்கப்பட்ட பின்னர் டி.என்.டி கலந்த இனிப்பையும் டி.என்.டி கலக்காத இனிப்பையும் கூடுகளுக்கு அருகில் வைக்கும் போது டி.என்.டி கலந்த இனிப்பை மட்டும் அது சரியாகக் கண்டு பிடித்து அதில் அமர்ந்தது. இதன் பின்னர் ஒரு இடத்தில் வைக்கப்படும் இனிப்பின் நடுப்பகுதியில் டி.என்.டி கலந்தும் ஓரங்களில் டி.என்.டி கலக்காமலும் வைக்கப்பட்ட்து. அப்போது டி.என்.டி கலந்த மையப்பகுதியில் போய் தேனீக்கள் அமர்ந்தன. இயல்பாக வெடிமருந்தின் வாசனையை தேனீக்கள் தேடிச் செல்லாது. அது தான் தன்னுடைய உணவு என்று பயிற்சியளிக்கப்படும் போது அந்த வாசனையைத் தேடிச் செல்ல ஆரம்பித்து விடும். இப்படி பழக்கப்பட்ட தேனீக்களுக்கு அருகில் மண்ணுக்குள் வெடி பொருளைப் புதைத்து வைத்தால் அந்த இடத்தின் மேலே அமர்ந்து மொய்க்க ஆரம்பித்தன. இதன் மூலம் அந்த இடத்தில் கன்னி வெடி உள்ளதைக் கண்டுபிடித்து பக்குவமாக அகற்றலாம் என்பது தான் ஆராய்ச்சியின் முடிவாகும். இது குறித்து பேராசிரியர் நிகோலா கேசிக் கூறுகையில், ‘‘இந்த ஆராய்ச்சி, கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இது விஞ்ஞானபூர்வமாக வெற்றிபெற்றால், கண்ணிவெடி இருப்பதாகக் கருதப்படும் பகுதிகளில் தேனீக்களின் நடவடிக்கையை அகச்சிவப்பு கதிர்கள் மூலம் கண்காணித்து அகற்றி விடலாம். நாய், எலி மூலம் கண்ணிவெடியைக் கண்டுபிடிக்க முடியும் என்றாலும், அவற்றின் உடல் எடை காரணமாக வெடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தேனீக்களைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சனையே இல்லை. தேனீக்கள் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அமெரிக்காவில் நடந்துள்ளது’ என்றார். இன்று பல்வேறு ஆய்வுகள் மூலம் இதைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் தேனீக்களிடம் இந்தத் தன்மை உள்ளது என்ற விஷயம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். எனவே குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/thenikkalin_vazi_ariyum_thiran/
Copyright © www.onlinepj.com

Wednesday, 29 May 2013

இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?


இறந்தவரின் உறுப்புகளைக் கொண்டே தவிர வேறு எந்த சிகிச்சையாலும் மனித உயிரைக் காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டான நிலை வரும் போது இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாமிய ஷரீஅத் அனுமதிக்கிறதா? கூடுமா? 

ஏனெனில், அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல் உறுப்புகளை அமானிதமாக வழங்கியுள்ளான். 

அந்த அமானிதத்தை முழுமையாக அவனிடத்தில் சேர்ப்பது மனிதனின் கடமையாகும். மறுமையில் அல்லாஹ்வுடைய சந்நிதானத்தில் நாம் முழுமையான உடலுறுப்புகளுடன் நிறுத்தப்பட்டு கேள்வி கணக்கு கேட்கப்படுவோம் என்பதற்கு குர்ஆனுடைய வசனங்கள் சான்று பகர்கின்றன. 

ஹாமீம் ஸஜ்தா என்ற அத்தியாயத்தில் 20, 21, 22 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். 

இறுதியாக நரகமாகிய அதன் பால் அவர்கள் வந்தடைந்து விடுவார்கள். பாவம் செய்த அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவியும், அவர்களுடைய பார்வையும், அவர்களுடைய தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி சாட்சி கூறும்... 

மேலும், தாஹா என்ற அத்தியாயத்தில் 125, 126 ஆயத்துக்களில் அல்லாஹ் கூறுகிறான். அந்த மனிதன் என் ரட்சகனே! ஏன் என்னை குருடனாக நீ எழுப்பினாய்? நான் திட்டமாக (உலகத்தில்) பார்வையுடையவ னாக இருந்தேனே என்று கேட்பான். (அதற்கு) அவ்வாறே! நம் வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவைகளை மறந்து விட்டாய். (நீ மறந்த) அவ்வாறே இன்றைய தினம் நீயும் (நம் அருளிருந்து) மறக்கப்படுகிறாய் என்று (அல்லாஹ்) கூறுவான். 

மேலும், மார்க்கச் சட்ட மேதைகள் ஒருவன் குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிப்பதற்கு முன்னால் அவனுடைய நகங்களையோ, மீசை போன்ற முடிகளையோ அகற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் மறுமையில் அந்த நகங்களும், முடிகளும் தீட்டுடன் அவன் முன் கொண்டு வந்து வைக்கப்படும் என்று கூறியுள்ளார்கள். 

உடல் உறுப்புக்கள் பற்றி மறுமையில் அவற்றின் நிலை பற்றி தெளிவாகக் கூறியிருக்கும் போது, 
அதை உலகிலே எப்படி தானம் செய்யலாம்? 

- மவ்லவி ஹாபிழ் எஸ். அபூபக்கர் சித்தீக் பாகவி, மண்டபம். 


பதில்: நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனங்கள் எடுத்துக் கொண்ட தலைப்புடன் சம்பந்தப்பட்டவை அல்ல. 

மறுமையில் இறைவன் நம்மை எழுப்புவது குறித்துக் கூறும் வசனங்களாகும். நமது உடல் உறுப்புகளைத் தானம் செய்யக் கூடாது என்றோ, அவ்வாறு செய்தால் அவ்வுறுப்புக்கள் இல்லாமல் எழுப்பப்படுவார்கள் என்றோ அவ்வசனங்கள் கூறவில்லை. மறைமுகமாகவும் அந்தக் கருத்து அவ்வசனத்திற்குள் அடங்கியிருக்கவில்லை. 

நீங்கள் சுட்டிக்காட்டிய தாஹா 125, 126 வசனங்களை எடுத்துக் கொண்டால் அது உங்களது வாதத்துக்கு எதிராக அமைந்துள்ளதைக் காணலாம். 
கண் பார்வையுடன் இவ்வுலகில் வாழ்ந்தவன் இறைவனின் போதனையை மறுத்தால் குருடனாக எழுப்பப்படுவான் என அவ்வசனம் கூறுகிறது. குருடனாக எழுப்பப்படுவதற்குக் காரணம் அவன் நல்லவனாக வாழவில்லை என்பது தானே தவிர இவ்வுலகில் கண்ணை இழந்திருந்தான் என்பது அல்ல. கண் இருந்தவனைக் குருடனாக எழுப்பிட அவனது நடத்தை தான் காரணம். அது போல் கண்ணற்றவன் இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அவன் குருடனாக எழுப்பப்பட மாட்டான். அவனும் மற்ற நல்ல முஸ்லிம்களைப் போல இறைவனைக் காண்பான். 

எனவே நல்லவர் கெட்டவர் என்ற அடிப்படையில் இறைவன் செய்யும் ஏற்பாட்டை அதற்குத் தொடர்பு இல்லாத காரியத்துடன் பொருத்தக் கூடாது. 

மேலும் மறுமையில் நாம் எழுப்பப்படும் போது அனைத்து ஆண்களும் சுன்னத் செய்யப்படாதவர்களாகவே எழுப்பப்படுவோம் - புகாரி 3349, 3447, 4635, 4740, 6524 

சுன்னத் மூலம் நம்மிடமிருந்து அப்புறப்படுத்திய பகுதிகளையும் சேர்த்து இறைவன் எழுப்புவான் என்பது எதை உணர்த்துகிறது? 

இவ்வுலகில் எந்த உறுப்புக்களை இழந்தான் என்பதற்கும் மறுமையில் எழுப்பப்படும் கோலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை இது உணர்த்தவில்லையா? 

சில முகங்கள் மறுமையில் கறுப்பாக இருக்கும். சில முகங்கள் வெண்மையாக இருக்கும் எனவும் திருக்குர்ஆன் கூறுகிறது. 

அமெரிக்கர்களின் முகம் வெண்மையாகவும், ஆப்ரிக்கர்களின் முகம் கறுப்பாகவும் இருக்கும் என்று இதற்கு அர்த்தமில்லை. மாறாக நல்லடியாராக வாழ்ந்த ஆப்ரிக்கர் வெண்மையான முகத்துடன் வருவார். ஜார்ஜ் புஷ் இப்படியே மரணித்தால் கறுத்த முகமுடையவராக வருவார் என்பதே இதன் கருத்தாகும். 

இவ்வுலகின் தோற்றத்துக்கும், மறுமைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம். 

நவீனமான காரியங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பொருத்த வரை நேரடியாக திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறப்பட்டிருக்காது. ஆயினும், மறைமுகமாக ஏதேனும் தடை இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும். 

தடை காணப்பட்டால் அதைக் கூடாது என அறியலாம். 

கண்தானம், இரத்ததானம், கிட்னி தானம் போன்ற காரியங்கள் கூடாது என்பதை மறைமுகமாகக் கூறும் எந்த ஒரு ஆதாரமும் நாமறிந்த வரை கிடைக்கவில்லை

சுட்டிக் காட்டப்படும் ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை. 

மார்க்கம் தடை செய்யாத ஒன்றை தடை செய்ய நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. 

அடுத்தது நமது உறுப்புக்கள் அமானிதம் என்று கூறுகிறீர்கள். அமானிதம் தான். ஆனால், இந்த அமானிதத்தின் பொருள் வேறாகும். நான் உங்களிடம் ஒரு பொருளை அமானிதமாகத் தந்தால் அதை நீங்கள் உபயோகிக்கக் கூடாது. அதை அப்படியே திருப்பித் தர வேண்டும். ஆனால், அல்லாஹ் அமானிதமாகத் தந்த கண்களால் நாம் பார்க்கிறோம். காதுகளால் கேட்கிறோம். இன்னும் மற்ற உறுப்புகளையும் பயன்படுத்துகிறோம். 

அமானிதம் என்பதற்கு மற்ற அமானிதம் போன்று பொருள் கொண்டால் இவையெல்லாம் கூடாது எனக் கூற வேண்டும். இறைவன் தடை செய்த காரியங்களில் பஸ்ன்படுத்தக் கூடாது என்ற ஒரு நிபந்தனையுடன் அதைப் பயன்படுத்தலாம். இந்த அடிப்படையில் தான் அது அமானிதமாகிறது. 

நம்மிடம் அல்லாஹ் காசு பணத்தைத் தருகிறான் என்றால் அதுவும் அமானிதம் தான். அதாவது அதை நாமும் பயன்படுத்தலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். தவறான வழியில் மட்டும் செலவிடக் கூடாது. 

அது போல் தான் நமது உறுப்புக்களை நாமும் பயன்படுத்தலாம். நமக்கு எந்தக் கேடும் வராது என்றால் பிறருக்கும் கொடுக்கலாம். தப்பான காரியங்களில் அவற்றைப் பஸ்ன்படுத்தக் கூடாது. இது தான் அமானிதத்தின் பொருள். குர்ஆனினும், ஹதீஸிலும் தடை செய்யப்படாதவற்றைத் தவறா? சரியா? எனக் கண்டுபிடிக்க நமது மனசாட்சியையே அளவுகோலாகக் கொள்ள நபி(ஸல்) அனுமதியளித்துள்ளனர். (அஹ்மத் 17320) 

உங்களுக்கு மிக விருப்பமான ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு இன்னொருவரின் இரத்தமோ, கிட்னியோ வைக்கப்பட்டால் தான் பிழைப்பார். இந்த நிலையில் உங்களுக்கு நெருக்கமானவர் என்றால் உங்கள் மனசாட்சி அதைச் சரி காணும். பெற்றுக் கொள்வதை மட்டும் சரி கண்டு விட்டு கொடுப்பதைச் சரி காணாமல் இருந்தால் அது நேர்மையான பார்வை இல்லை. 

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியத்துக்கு இந்த அளவுகோலைப் பயன்படுத்துமாறு நாம் கூறுவதாக நினைக்க வேண்டாம். 

மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றை நமது மனசாட்சி சரி கண்டாலும் அது தவறு தான். மார்க்கத்தில் தடுக்கப்படாத ஒன்றை நமது மனசாட்சி சரி கண்டால் அது சரியான அளவுகோல் தான் என்பதே அந்த நபிமொழியின் கருத்தாகும். 

குளிப்புக் கடமையானவர்கள் முடியையோ, நகங்களையோ வெட்டக்கூடாது என்று சில அறிஞர்கள் கூறினாலும் அதற்கு குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ எந்த ஆதாரமும் இல்லை. எனவே தான் வேறு சில அறிஞர்கள் ஆதாரமற்ற இக்கருத்தை நிராகரித்துள்ளனர். எனவே உறுப்புக்கள் தானம் பற்றி தடை செய்யும் ஏற்கத்தக்க ஆதாரங்கள் வேறு இருந்தால் தெரிவியுங்கள். நாம் பரிசீலிக்கத் தயாராகவுள்ளோம்.

பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/kan_thanam/
Copyright © www.onlinepj.com