Sunday 15 June 2014

"எது நபி வழி?" _ 2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _அலங்கியம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்கிளை சார்பாக 15.06.2014  அன்று 2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. பசீர் அவர்கள் "எது நபி வழி?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...

"அல்லாஹுவின் தூதர் மீது அன்சாரிகள் கொண்ட அன்பு " _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆண்டியகவுண்டனூர் கிளை  சார்பாக 15.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "அல்லாஹுவின் தூதர் மீது அன்சாரிகள் கொண்ட அன்பு " எனும் தலைப்பில்  குர்ஆன்வகுப்பு  நடத்தினார்கள். 
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

4330. அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னி ஆஸிம்(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹுனைன் நாளில் போர்ச் செல்வங்களை வழங்கியபோது உள்ளங்கள் இணக்க மாக்கப்பட்ட வேண்டிய (மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தை; தழுவிய)வர் களிடையே (அவற்றைப்) பங்கிட்டார்கள். (மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்குக் கிடைத்தது போல் தமக்கும் கிடைக்காமல் போனதால் அவர்கள் கவலையடைந்தவர்களைப் போல் காணப்பட்டார்கள். எனவே, அவர்களிடையே (ஆறுதலாக) நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். (அவ்வுரையில்), 'அன்சாரிகளே! உங்களை வழிதவறியவர்களாக நான் காணவில்லையா?' அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நேர் வழியை அளித்தான். நீங்கள் பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அப்போது அல்லாஹ் என் மூலமாக உங்களைப் பரஸ்பரம் நேசமுடையவர்களாக்கினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தன்னிறைவுடையவர்களாய் ஆக்கினான் (அல்லவா?)" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (தம் வருகையால் அன்சாரிகள் அடைந்த நன்மைகளை) ஒவ்வொன்றாகச் சொல்லும் போதெல்லாம், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அதிக உபகாரம் புரிந்தவர்கள்" என்று அன்சாரிகள் கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் பதிலளிக்கமாலிருப்பது எதனால்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் சொல்லும் போதெல்லாம் அவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகப் பெரும் உபகாரிகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் விரும்பினால் இன்னின்னவாறெல்லாம் (நீங்கள் எனக்குச் செய்த உபகாரங்களை நினைவுபடுத்தும் வகையில்) சொல்ல முடியும். ஆனால், (இந்த) மக்கள் (நான் கொடுக்கும்) ஆடுகளையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்) கொண்டு போக நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே (என்னையே) உங்களுடன் கொண்டு செல்வதை விரும்பமாட்டீர்களா? ஹிஜ்ரத் (நிகழ்ச்சி) மட்டும் நடந்திருக்காவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு கணவாயிலும் ஒரு பள்ளத்தாக்கிலும் சென்றாலும் நான் அன்சாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத்தாக்கிலும் தான் செல்வேன். அன்சாரிகள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் (போன்றவர்கள்) நீங்கள் எனக்குப் பின்னால் விரைவிலேயே (ஆட்சியதிகாரத்தில்) உங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள். எனவே, (எனக்குச் சிறப்புப் பரிசாக மறுமையில் கிடைக்கவிருக்கும்) 'ஹவ்ள் (அல் கவ்ஸர்' என்னும்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும் வரை (நிலை குலையாமல்) பொறுமையுடன் இருங்கள்" என்று கூறினார்கள்.
Volume :4 Book :64
4331. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை (வெற்றிப் பரிசாக) அளித்தபோது நபி(ஸல்) அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) மக்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானார்கள். உடனே, (அன்சாரிகளில்) சிலர், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! (எதிரிகளான) குறைஷிகளின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக் கொண்டிருக்க, (நமக்குக் கொடுக்காமல்) இவர்களுக்குக் கொடுக்கிறார்களே; ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மைவிட்டு விடுகிறார்களே!" என்று (கவலையுடன்) கூறினார்கள். அவர்களின் இந்தப் பேச்சு இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப்பட்ட தோலால், ஆன ஒரு கூடாரத்தில் ஒன்று திரட்டினார்கள். அவர்களுடன் மற்றவர்களை நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, 'உங்களைக் குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? (உண்மை தானா?)" எங்கள் தலைவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடைய மக்கள் சிலர் தான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் குறைஷிகளின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க, நம்மைவிட்டுவிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார்களே!' என்று பேசிக் கொண்டனர்" என்று கூறினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள், 'இறை மறுப்பைவிட்டு இப்போது நான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு கொடுக்கிறேன். (அதன் வாயிலாக) அவர்களடன் நான் இணக்கம் ஏற்படுத்திக் கொள்கிறேன். மக்கள் (பிற உலக) செல்வங்களை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இரைத்தூதரையே கொண்டு செல்வதை விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்றுத்திரும்பும் செல்வங்களை விட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்" என்று கூறினார்கள். அன்சாரிகள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் (எங்களுடன் உங்களைக் கொண்டு செல்வதையே) விரும்புகிறோம்" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'விரைவில் (உங்களை விடப் பிறருக்கு ஆட்சியதிகாரத்தில்) அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதைக் காண்பீர்கள். எனவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) சந்திக்கும் வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், அன்று நான் (எனக்கு வழங்கப்படவுள்ள சிறப்புப்பரிசான 'அல் கவ்ஸர்' எனும்) தடாகத்தின் அருகே இருப்பேன்" என்று கூறினார்கள். ஆனால், மக்கள் பொறுமையாக இருக்கவில்லை.
Volume :4 Book :64

ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் _ அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக  15.06.2014 அன்று ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்  நடைபெற்றது. 
ஒரு வீட்டில் தஃவா செய்து அந்த வீட்டின் முன் இருந்த திருஷ்டி எலுமிச்சை அகற்றப்பட்டது

"நோன்பின்சிறப்புகள்" _பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 15.06.14 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.ஷபாமா அவர்கள் "நோன்பின்சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _வெங்கடேஸ்வராநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 15.06.2014 அன்று கிளை மர்கஸில் பெண்களுக்கான  சந்தேகங்களுக்கு அல்குர்ஆன் -ஹதிஸ் அடிப்படையில் பதில் வழங்கும்  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இதில் சகோதரர். H.M.அஹமதுகபீர்  அவர்கள், கலந்து கொண்ட சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார். 
 அல்ஹம்துலில்லாஹ் ....

"ஜனாசாவின் சட்டங்கள்" _உடுமலை கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 15.06.2014 அன்று தர்பியா  நடைபெற்றது.
சகோதரர் ஆஷம்   அவர்கள் "ஜனாசாவின் சட்டங்கள்" என்ற தலைப்பில் செய்முறை விளக்கத்தோடு உரையாற்றினார்.


ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

பிறமத சகோதரர்.அசோக்க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" வழங்கி தாவா _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 14.06.2014 அன்று பிறமத சகோதரர்.அசோக்   அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

"ஜக்ரியாநபியின் பிரார்த்தனை" _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 14.06.2014 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "ஜக்ரியாநபியின் பிரார்த்தனை"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

வடுகன்காளி பாளையம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.3800/= நிதிஉதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 15.06.2014 அன்று திருப்பூர் மாவட்டம்  வடுகன்காளி பாளையம்  கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ.3800/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"ரமலானில் நாம் செய்யவேண்டிய நன்மைகள்" _ S.V. காலனி கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 15.06.2014 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
சகோதரர் H.M.அஹமதுகபீர்   அவர்கள் "ரமலானில் நாம் செய்யவேண்டிய நன்மைகள்"  எனும் தலைப்பில், உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்... 

ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

"அனாதையை அரவணைப்பவரும், அண்ணல் நபியும் " _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆண்டியகவுண்டனூர் கிளை  சார்பாக 15.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "அனாதையை அரவணைப்பவரும், அண்ணல் நபியும் " எனும் தலைப்பில்  குர்ஆன்வகுப்பு  நடத்தினார்கள். 
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
5304. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்' என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள்.
2699. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள். மக்காவாசிகள் அவர்களை மக்காவிற்குள் நுழைய விட மறுத்தார்கள். இறுதியில், நபி(ஸல்) அவர்கள், 'மக்காவில் (வரும் ஆண்டில்), தாம் (தம் தோழர்களுடன்) மூன்று நாள்கள் தங்க (அனுமதிக்க) வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் மக்காவாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, 'இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துகள்" என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், 'நாங்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம்; நீங்கள் இறைத்தூதர் தாம் என்று நாங்கள் அறிந்திருப்போமாயின் உங்களை (மக்காவில் நுழையவிடாமல்) தடுத்திருக்க மாட்டோம். ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஆவேன்" என்று பதிலளித்துவிட்டு, அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர்' என்பதை அழித்து விடுங்கள்" என்று கூறினார்கள். அலீ(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (அந்தஸ்தைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்க மாட்டேன்" என்று கூறிவிட்டார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்திரத்தை எடுத்து, 'இது அப்துல்லாஹ்வின் குமாரர் முஹம்மத் செய்த சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்து(கள் கொண்ட பத்திரம்) ஆகும். (அந்த ஷரத்துகளாவன:) (முஸ்லிம்களின்) ஆயுதம் எதுவும் உறையிலிருந்தபடியே தவிர, மக்காவினுள் நுழையக்கூடாது. மக்காவாசிகளில் எவரும் முஹம்மதைப் பின்தொடர்ந்து வர விரும்பினாலும் கூட, அவரை முஹம்மது தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. மேலும், தம் தோழர்களில் எவரும் மக்காவில் தங்கிவிட விரும்பினால் அவரை முஹம்மது தடுக்கக் கூடாது" என்று எழுதினார்கள். (அடுத்த ஆண்டு) நபி(ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்தபோது (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணையான மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரிடம் எங்களை (எங்கள் நகரை)விட்டு வெளியேறும்படி கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் கழிந்துவிட்டது" என்றார்கள். நபி(ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா(ரலி) அவர்களின் (அனாதை) மகள், 'என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!" என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ(ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்" என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ(ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் (ஒவ்வொரு வரும், 'அவளை நானே வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்)டனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்" என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்" என்று கூறினார்கள். ஸைத்(ரலி), '(இவள்) என் சகோதரரின் மகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், 'சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்" என்று கூறினார்கள். அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்" என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்" என்றார்கள். மேலும், ஸைத்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)" என்று கூறினார்கள். 

"நல்லோர்கள் உயிருடன் இருக்கிறார்களா?" _யாசின் பாபு நகர் கிளைகுர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 15.06.2014 அன்று  சகோ.ஷிஹாபுதீன்  அவர்கள் "நல்லோர்கள் உயிருடன் இருக்கிறார்களா?"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க முடியாது _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 15.06.2014 அன்று சகோ.ஜின்னா  அவர்கள் "ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க முடியாது" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க முடியாது

ஒருவர் மற்றவரின் பாவத்தைச் சுமக்க முடியாது என்று இவ்வசனங்களில் (2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38) கூறப்படுகிறது.
இது இஸ்லாத்தின் மிகப்பெரிய அடிப்படைக் கொள்கையாகும். இந்த அடிப்படையில் தான் கிறித்தவ மார்க்கத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது.
எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது.
"ஒருவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் அவரைத்தான் சாரும். ஆதம் (அலை) பாவம் செய்தால் ஆதமுடைய பிள்ளைகள் யாரும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை. எனவே பிறக்கும் போதே யாரும் பாவியாகப் பிறக்க மாட்டார்கள்'' என இஸ்லாம் கூறுகிறது.
அனைவரது பாவங்களையும் சுமப்பதற்காக ஏசு பலி கொடுக்கப்பட்டாரா என்றால் அதையும் இஸ்லாம் மறுக்கிறது.
மற்றவர்கள் செய்த பாவங்களுக்காக அந்தப் பாவத்தில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பலி கொடுப்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது.
இறந்துவிட்ட உறவினர்களுக்காகவோ, மற்றவர்களுக்காகவோ - அல்லாஹ்வும் அவனது தூதரும் விதிவிலக்கு அளித்தவை தவிர - நாம் நன்மைகள் செய்து அவர்களுக்குச் சேர்த்து விட முடியாது என்பதற்கும் இவ்வசனங்கள் சான்றுகளாக உள்ளன.