Monday, 28 October 2013
பட்டாசுக்களால் பலியாகும் உயிர்கள் : தடுக்க வழி என்ன?

சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் ஏராளமானோர் பலியாகி பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது போன்று எதிர் காலத்தில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
முஹம்மது அப்துல்காதர், விருதுநகர்
அரசாங்கத்தை நடத்தக்கூடியவர்களுக்கு கொஞ்சம் மூளை இருந்து, அந்த மூளையைப் பயன்படுத்தி சட்டங்களை இயற்றி இருந்தால், இதுபோன்ற பேரழிவுகளைத் தடுத்திருக்க முடியும். வெடி மருந்துகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் அறிந்துள்ளோம். மிக அவசியமான தேவைகளுக்காகவே தவிர, வேறு எதற்காகவும் வெடி மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது என்றுதான் அறிவுடைய மக்கள் முடிவுக்கு வருவார்கள். பாறைகளை உடைப்பதன் மூலம்தான் சாலை வசதிகளைப் பெற முடியும் என்பதால், இதற்காக வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்கிறது. உணவைச் சமைத்துச் சாப்பிட நெருப்பு அவசியம். அதை உருவாக்கிட தீப்பெட்டி அவசியம் என்பதால் இதற்காக வெடிமருந்துகள் பயன்படுத்துவதை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்கிறது.

ஆனால் மக்கள் சர்வசாதாரணமாக வெடி மருந்துகளுடன் விளையாடும் நிலைக்கு பட்டாசு உபயோகமே காரணமாகும். தீபாவளி போன்ற பண்டிகைகளுடன் தொடர்புபடுத்தி இதற்கு பட்டாசு வியாபாரிகள் மதச் சாயம் பூசிவிட்டதே இந்த பேராபத்துக்குக் காரணம்.
உண்மையில் இதற்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பட்டாசுகள் பிற்காலத்தில் வந்த கண்டுபிடிப்பாகும். முந்தைய காலத்தில் தீபாவளி கொண்டாடிய இந்துக்கள் பட்டாசுகளை அறிந்திருக்கவில்லை. எனவே மதத்துக்கு வெளியே நின்று சிந்திப்பதுதான் சரியானதாகும். இப்படி சிந்தித்தால் பட்டாசுகள் வெடிப்பதால் கீழ்க்கண்ட தீமைகள் ஏற்படுவதை உணரலாம்.
•பொருளாதாரத்தைத் பயனற்ற வழியில் விரயமாக்குவது
•பட்டாசு வெடித்து உயிர்கள் பலியாவது
•பட்டாசுகள் மூலம் குடிசைகள் எரிந்து சாம்பலாவது •பட்டாசு வெடிப்பவர்களுக்கும் அருகிலிருப்பவர்களுக்கும் படுகாயங்களை ஏற்படுத்துவது
•மனிதனின் காதுகள் தாங்கிக் கொள்ள முடியாத அதிக சப்தம் காரணமாக கேட்கும் திறனில் ஏற்படும் பாதிப்புகள்
•இதய நோயாளிகளும், பச்சிளம் குழந்தைகளும், சிந்திப்பவர்களும், படிப்பவர்களும் இந்த சப்தம் காரணமாக கடுமையான பாதிப்புகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளாகுவது
•பட்டாசுகள் மூலமாக வெளியேறும் நச்சுப்புகை மூலம் காற்று மாசு படுகிறது
•அதை சுவாசிப்பதன் மூலம் மனிதர்களும், இன்னபிற உயிரினங்களும் கடும் பாதிப்புக்குகளைச் சந்திக்கின்றன.நோயாளிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
•பட்டாசு வெடிப்பதன் மூலம் குப்பைகளின் அளவும் அதிகரித்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.
•நச்சுப் பொருள் கலந்த குப்பைகளால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது.
இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் இதனால் எந்த நன்மையாவது உள்ளதா என்றால் அதுவும் இல்லை. நவீன சாதனங்கள் பயன்படுத்துவதன் காரணமாக காற்று மாசு படுவதாகவும், பூமி வெப்பமயமாகி வருவதாகவும், ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு புற ஊதாக்கதிர்கள் பூமிக்கு வந்து மனிதர்களுக்கு கேடுகள் ஏற்படுத்துவதாகவும் கூறி அந்த நவீன சாதனங்களின் பயன்பாட்டைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேற்கண்ட
சாதனங்களால் சில கேடுகள் ஏற்பட்டாலும் அது பட்டாசினால் ஏற்படும் கேடுகளை விட பலப்பல மடங்கு குறைவானதுதான். அத்துடன் இந்த சாதனங்கள் மூலம் விரைவாகவும் பணிகள் முடிகின்றன. சொகுசான இன்பங்களை அனுபவிக்கிறோம். இதற்காக மேற்கண்ட தீமைகளை நாம் சகித்துக் கொள்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால் இதைவிட பெரும்கேடு ஏற்படுத்தும் பட்டாசுகளால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
அறிவுள்ள மக்களுக்குத் தெரியும் இந்த விபரம் ஆட்சியாளர்களுக்கு ஏன் தெரியவில்லை. அவசியமற்ற கேடுகள் விளைவிக்கின்ற பட்டாசுகளுக்கு அறவே அனுமதி இல்லை என்று முடிவு செய்தால், இதுபோன்ற அழிவுகளுக்கு இடமில்லை.
பட்டாசைக் காரணம்காட்டி வெடி மருந்துகள் பரவலாகக் கிடைப்பதால்தான், வெடிகுண்டு தயாரிக்கும் பயங்கரவாதிகளுக்கும் வசதியாகப் போய்விடுகிறது.
இதைப்பற்றி சிந்திக்காமல் நீதி விசாரணை நடத்துவதும் நஷ்ட ஈடு கொடுப்பதும்தான் அரசின் நடவடிக்கையாக இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற பேரழிவுகள் தொடர்கதையாகிப் போய்விடும்.
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/unarvuweekly/crackers-how-to-ban-17-03/
Copyright © www.onlinepj.com
தீபாவளி பட்டாசினால் உருவாகும் அலர்ஜியும் ஆஸ்துமாவும்
ஒவ்வொரு சமுதாயமும் தங்களது மகிழ்ச்சியை வெüப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றைப் பண்டிகைகளாகக் கொண்டாடி வருகின்றனர்.



இந்தச் செய்தியை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.
இந்தப் பட்டாசுப் புகை சுற்றுப்புறச் சூழலை மட்டுமல்லாது நம்முடைய சுவாசப் பையையும் மாசுபடுத்தி, சேதப்படுத்தி விடுகின்றது என்பதை நாம் நன்கு விளங்கிக் கொள்கிறோம். பட்டாசு வெடிப்பதால் நாம் இரண்டு பாவங்களைச் செய்கிறோம். ஒன்று நம்மை நாமே அழித்துக் கொள்வது, மற்றொன்று, நாம் மற்றவர்களை அழிப்பது. இந்த இரண்டு பாவங்களும் ஒரு சேர பட்டாசில் அமைந்திருக்கின்றன.
உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:29
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் 2:195
நம்மை நாமே அழித்து, மற்றவர்களையும் அழிக்கும் இந்தப் பாவங்களை நாம் ஒரு போதும் செய்யக் கூடாது என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது. இன்று பட்டாசினால் கை, கால், கண்கள் பறி போகின்றன. எத்தனையோ பேருக்குக் கண் பாதிக்கப்பட்டுள்ளது. கை, கால் முடமாகியிருக்கின்றது. பறி போன கண்ணை, கை, கால்களை யாராவது திருப்பித் தர முடியுமா? பட்டாசில் உருவாகும் நெருப்புக்கு, இது உயிருள்ளது, உயிரில்லாதது என்று பிரித்துப் பார்க்கும் ஆற்றல் உள்ளதா? ஏன் நெருப்புடன் இப்படி ஒரு விளையாட்டு? மனித உயிருக்கும் உடைமைக்கும் இன்ன பிற உயிரினத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஊறு விளைவிக்கும் இந்தத் தீயுடன் இப்படி ஒரு விபரீத விளையாட்டை நம்முடைய குழந்தைகள் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் மிகப் பெரும் பொறுப்பும் கடமையுமாகும். திடுக்கிடும் தொட்டில் குழந்தைகள் பட்டாசுகள் வெடிப்பதால் இது வரை கண்ட இடையூறுகள் மட்டுமின்றி இன்னும் பல்வேறு இடையூறுகளும் உள்ளன. வெடிச் சத்தம் கேட்டவுடன் நாம் வளர்க்கும் கோழி போன்ற பறவையினங்களும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் அஞ்சி நடுங்குகின்றன; அலறித் துடிக்கின்றன. தொட்டிலில் தூங்கும் குழந்தைகள் வெடிச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்து அழுகின்றன; அதிர்ச்சியடைகின்றன. இப்படி எல்லா இனத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் இந்தக் காரியத்தை ஒரு போதும் முஸ்லிம் சமுதாயம் செய்யக் கூடாது.
"பிற முஸ்லிம்கள் எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். மேலும் எவர் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதை விட்டும் ஒதுங்கிக் கொள்கிறாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 10
வெடியின் விளைவுகளையும் விபரீதங்களையும் மாற்று மத நண்பர்களுக்கும் விளக்கி, அவர்களையும் இந்தத் தீமையை விட்டுத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்தப் பொறுப்பையுடைய நாமே இந்தக் காரியத்தைச் செய்யலாமா? வீணாகச் செலவழிக்கும் போது, "காசைக் கரியாக்காதே!'' என்று வழக்கத்தில் சொல்வதுண்டு! ஆனால் இன்று நம்முடைய குழந்தைகளுக்கு வெடியை வாங்கிக் கொடுத்து விபத்தைத் தேடிக் கொடுக்கிறோம் என்பது ஒரு புறமிருக்க, காசை எப்படிக் கரியாக்க வேண்டும் என்ற பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறோம்.
அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 102:8
பொருளாதாரம் என்பது ஓர் அருட்கொடை! அந்த அருட்கொடையை எப்படிச் செலவழித்தோம் என்பது பற்றி விசாரிக்கப்படுவோம் என்ற பயம் நமக்கு வர வேண்டும். "ஓர் அடியான் தனது வாழ்நாளை எப்படிக் கழித்தான்? கல்வியை எப்படிச் செயல்படுத்தினான்? அவனுடைய பொருளை எங்கிருந்து சம்பாதித்தான்? அதனை எப்படிச் செலவழித்தான்? தன்னுடைய இளமையை எப்படிக் கழித்தான்? என்று விசாரிக்கப் படாமல் மறுமை நாளில் அவனது பாதம் நகராது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ பர்ஜா (ரலி) நூல்: திர்மிதீ 2341
இந்த ஹதீஸின் படி பட்டாசு வகைக்காக செலவழித்த பணங்காசுக்கு நாம் பதில் சொல்லாமல் மறுமையில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எம். ஷம்சுல்லுஹா
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/egathuvam/2007-ega/nov_2007/
Copyright © www.onlinepj.com
அலட்சியமாக கருதப்படும் நபிமொழிகள் _மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்
.jpg)
இஸ்லாத்தின் பார்வையில் வீண் விரையம்" _S.V.காலனி கிளைபெண்கள் பயான்

27.10.2013 அன்று S.V.காலனி கிளை மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி.குர்சித் பானு ஆலிமா அவர்கள்."இஸ்லாத்தின் பார்வையில் வீண் விரையம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பிறமத ஏழைசகோதரிக்கு ரூ.3000/= மருத்துவஉதவி _தாராபுரம் நகர கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பில் 27.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து பிறமத ஏழைசகோதரி .வசந்தி அவர்களின் மருத்துவ (கிட்னி பாதிப்பு) செலவினங்களுக்காக ரூ.3000/= மருத்துவஉதவி யாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்...
"கொள்கை உறுதி" _வடுகன்காளிபாளையம் கிளை பயான்

சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "கொள்கை உறுதி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்..
ஏராளமான பொது மக்களும் கேட்கும் வகையில் பள்ளி ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது...
Subscribe to:
Posts (Atom)