Sunday 8 June 2014

மங்கலம் கோல்டன் டவர்

கிளையின் மாவட்ட  பொறுப்பாளர்கள்:

1.சேக் பரீத்   ..மாவட்ட துணை செயலாளர். ...91501 22377

2.பசீர் அஹமது ... மாவட்ட துணை செயலாளர்....94860 43728

கிளைநிர்வாகிகள் :

தலைவர் .........................K.முஹம்மது தவ்ஃபீக் ..... 9150507968
 

செயலாளர்....................சாகுல் ஹமீது  ...................  9688640388
 

பொருளாளர்.. ..........     முஹமது அனிபா  ............. 91505 05043
 

துணை தலைவர் .......  M.Sஅமானுல்லாஹ் ......... 9543530342
 

துணை செயலாளர்...... A.சம்சுதீன் .........................   7845304066 

தொண்டரணி :.........      M.J.தாஹா   .......................  9944801984 


 அலுவலகம்:
மர்கஸ்:


TNTJ மங்கலம்கோல்டன் டவர்கிளை,

3/119,பல்லடம்ரோடு,

மங்கலம்,

திருப்பூர் மாவட்டம். 

மங்கலம் கோல்டன் டவர் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 08-06-2014 அன்று பொதுக்குழு 
மாவட்ட  தலைவர். சகோ. நூர்தீன் தலைமையில்  கிளையின் மாவட்ட பொறுப்பாளர் சகோ.பசீர் மற்றும் கிளை உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட  புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது

தலைவர் : K.முஹம்மது தவ்ஃபீக் 9150507968

செயலாளர் : சாகுல் ஹமீது 9688640388

பொருளாளர் : A.முஹம்மது ஹனீஃபா 9150505043

துணை தலைவர் : M.Sஅமானுல்லாஹ் 9543530342

துணை செயலாளர் : A.சம்சுதீன் 7845304066

தொண்டரணி : M.J.தாஹா 9944801984
 

"இறைஅச்சமுடையோர்" _யாசின் பாபு நகர் கிளைகுர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 08.06.2014 அன்று  சகோ.ஆஷம்  அவர்கள் "இறைஅச்சமுடையோர்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

1. அலிஃப், லாம், மீம்.2
2. இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.
3. அவர்கள் மறைவானவற்றை3 நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.
4. (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும்4 அவர்கள் நம்புவார்கள். மறுமையையும்1 உறுதியாக நம்புவார்கள்.
5. அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள்.

"மரண சாசனத்தை மாற்றிய வாரிசுரிமை சட்டம்" _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு


 





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08.06.2014 அன்று சகோ.ஜின்னா  அவர்கள் "மரண சாசனத்தை மாற்றிய வாரிசுரிமை சட்டம்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


மரண சாசனத்தை மாற்றிய வாரிசுரிமைச் சட்டம்

வாரிசுரிமைச் சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டிருந்தது (திருக்குர்ஆன் 2:180, 2:240)
பின்னர், எந்தெந்த உறவினருக்கு எவ்வளவு சொத்துக்கள் கிடைக்கும் என்ற சட்டம் (4:11-12, 4:176) அருளப்பட்டபின் மரண சாசனம் எழுதுவது கடமை இல்லை என்று ஆகிவிட்டது.
மரண சாசனம் செய்யும் கடமைதான் நீக்கப்பட்டுள்ளது. ஒருவர் விரும்பினால் தமது சொத்துக்கள் குறித்து மரண சாசனம் செய்வதற்கு அனுமதி உள்ளது.
திருக்குர்ஆன் 4:11-12 வசனங்களில் "பாகப்பிரிவினைக்கு முன் மரண சாசனத்தை நிறைவேற்ற வேண்டும்'' என்று குறிப்பிடப்படுவதிலிருந்து இதனை அறியலாம்.
ஆயினும் இவ்வாறு செய்யும் மரண சாசனம் மூன்றில் ஒரு பகுதியைத் தாண்டக் கூடாது. மூன்று லட்சம் ரூபாய் சொத்துக்களை விட்டுச் செல்பவர் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்குத்தான் மரண சாசனம் செய்யும் உரிமை படைத்துள்ளார்.
ஒருவர் முழுச் சொத்துக்கும் மரண சாசனம் எழுதி வைத்தாலும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்குத்தான் அது செல்லும். எஞ்சியவை இஸ்லாம் கூறும் முறைப்படி வாரிசுகளுக்குப் பங்கிடப்படும்.
"நான் எனது முழுச் சொத்தையும் அறப்பணிகளுக்காக மரண சாசனம் செய்யட்டுமா?'' என்று ஸஃது (ரலி) அவர்கள் கேட்ட போது "மூன்றில் ஒரு பகுதி அளவு செய்! அதுவே அதிகம் தான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (புகாரி 3936, 4409, 5668, 6373)
எனவே உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், பொதுக்காரியங்களுக்கும் மரண சாசனம் செய்வோர் 33 சதவிகிதத்துக்கு மிகாத வகையில் வஸிய்யத் எனும் மரண சாசனம் செய்யலாம்.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:180; 2:240; 4:11-12; 5:106)
 http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/45_marana_sasanathai_matriya_varisurimai_sattam/

2 யூனிட் அவரச இரத்த தான உதவி _S.V.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனிகிளை சார்பாக 07.06.2014  அன்று திருப்பூர் மாவட்ட  தலைமை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின்  சிகிச்சைக்கு அவரசமாக தேவைப்பட்ட ( B+,  1யூனிட்,  O+, 1யூனிட்2யூனிட்இரத்தம் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி  வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...