Monday, 3 November 2014
தலைமை ஆசிரியருக்கு திருக்குர்ஆன் - மங்கலம் கிளை
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 30-10-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு மங்கலம் கிளை, கோல்டன் டவர் கிளை, RP நகர் ஆகிய மூன்று கிளை நிர்வாகிகள் இணைந்து மங்கலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து அவரிடம் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதின் அவசியத்தை குறித்து நோடீஸ் கொடுத்து விளக்கப்பட்டது . அதை தொடர்ந்து தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு மாநிலத் தலைமை நடத்தும் முஸ்லிமல்லாத மாணவர்களுக்கான தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை குறித்து கட்டுரைப் பரிசுப் போட்டி தொடர்பாக அவரிடம் விளக்கி மாணவர்களிடம் இதனை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. பள்ளிக்கு முன்பாக கட்டுரைப் போட்டிக்கான விளம்பர ஃபிளக்ஸ் வைப்பதற்கு அனுமதியும் கேட்கப்பட்டது. மேலும் தலைமை ஆசிரியருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் .
வெங்கடேஸ்வரா நகர் கிளையின் பொதுக்குழு....

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான் ...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக அன்று 29-10-2014 கிடங்குத் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் சகோ : ஜுஹ்னு அவர்கள் அல்லாஹ்வின் அதிகாரம் என்ற தலைப்பிலும் ஃபாஜிலா என்ற சகோ : உறவைப் பேணுவோம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
போஸ்ட் ஆபிஸ் அலுவலகருக்கு திருக்குர்ஆன் - 3 மங்கலம் கிளைகள்...
Subscribe to:
Posts (Atom)