Saturday 29 October 2011

”முஸ்லிம்களாக வாழ்வோம் முஸ்லிம்களாக” மங்கலம் கோல்டன் டவர் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 24-10-2011 அன்று மாலை 06:30மணி முதல் 8:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் குழந்தைகள் மதரசாவில் பயிலும் மாணவி முஸ்லிம்களாக வாழ்வோம் முஸ்லிம்களாக மரணிப்போம் என்ற தலைப்பிலும குழந்தைகள் மதரசாவின் ஆசிரியை தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பிலும் மங்கலம் பள்ளியின் இமாம் குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

posted by SM.YOUSUF

“ஈமான்” மங்கலம் கோல்டன் டவர் சிறுவர்களுக்கான சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 24-10-2011 அன்று காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை புதிதாக துவங்கப்பட்ட மதரசாவில் “ஈமான்” என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான சொற்பொழிவு நடைபெற்றது. இதில் யாசர் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

இருதய சிகிச்சைக்காக ரூ 7231 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கொடுவாயூர் பாலக்காட்டைச் சேர்ந்த அப்துல்காதர் என்பவருக்கு கடந்த 14.10.2011 அன்று இருதய சிகிச்சைக்காக (HEART ATTACK) மருத்துவ உதவியாக ரூ 7231 வழங்கப்பட்டது.
posted by SM.YOUSUF

தினந்ததோறும் சொற்பொழிவு நிகழ்ச்சி – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-10-2011 அன்று முதல் தினமும் இஷா தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் மாலிகுள் முல்க் பள்ளியில் சொற்பொழிவு நடைபெறுகின்றது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது
posted by SM.YOUSUF

”இஸ்லாமிய அடிப்படைக் கல்வி“ மங்கலம் கோல்டன் டவர் மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 16-10-2011 அன்று காலை 9:00 மணிமுதல் 10:00 மணிவரை புதிதாக துவங்கப்பட்ட மதரசாவில் “இஸ்லாமிய அடிப்படைக் கல்வி ” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யாசர் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்ப – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 11-10-2011 அன்று முதல் மஸ்ஜிதுல் மாலிகுல் முல்க் பள்ளியில் பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
posted by SM.YOUSUF

”இஸ்லாத்தை அறிந்துகொள்வோம்” மங்கலம் தெருமுனைப் பிரச்சாரம்

இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 16-10-2011 அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை சின்னவர் தோட்டத்தில் “இஸ்லாத்தை அறிந்துகொள்வோம்” என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

“இஸ்லாத்தின் அடிப்படை” மங்கலம் கோல்டன் டவர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 17-10-2011 அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை இந்தியன் நகரில் “இஸ்லாத்தின் அடிப்படை ” என்ற தலைப்பில் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவ்பிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

இறுதய அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 2250 மருத்துவ உதவி

பல்லடத்தில் வசிக்கும் செல்வராஜ் என்ற சகோதரருக்கு இறுதய அறுவை சிகிச்சை செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக கடந்த 14-10-2011 அன்று ரூபாய் 2250 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
posted by SM.YOUSUF

மணி என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் மங்கலம் கிளையில் மணி என்ற சகோதரர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டி வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 14-10-2011 அன்று அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது
posted by SM.YOUSUF

”வரதட்சனை ஓர் வன்கொடுமை” கோம்பை தோட்டம் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக கடந்த 9-10-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மவ்லவி தாஹா அவர்கள் விரயம் என்ற தலைப்பிலும் ரசுல் மைதீன் அவர்கள் வரதட்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். கலந்து கொண்டவர்களும் கூடி இருந்தவர்களும் கேட்டு பயன் பெற்றனர்.
posted by SM.YOUSUF

Wednesday 19 October 2011

மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


உள்ளே செல்லும் முன்:


(இணையத்தில் உலாவரும் மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு தேவையானவற்றையும், விருப்பமானவற்றையும் மட்டும் படித்துவிட்டு சென்றுவிடுவார்கள். (பதிவர்களாகவோ த‌னக்கென ஒரு தளத்தை உடையவர்களாகவோ இல்லாத பட்சத்தில்) அவர்கள் அத்தனை பேருக்கும்'வலைப்பதிவு', 'பதிவர்கள்', 'சமூக தளங்கள்', 'திரட்டி', 'ஓட்டுப்பட்டை'போன்ற விஷயங்கள்பற்றி தெரிந்திருக்குமா என்றால், சிலரைத் தவிர அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நானும் இந்த தளத்தை ஆரம்பிக்கும் முன் எனக்கும் இவை எதுவுமே அறிமுகம் இல்லாமல்தான் இருந்தது. அந்த அடிப்படையில்தான் (இதைப் பற்றி அறியாத, சாதாரணமாக படித்துச் செல்லும் வாசகர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு குழப்பமாக இந்த இடுகை அமைந்துவிடக் கூடாது என்பதால்) கீழ்க்காணும் இந்த சிறு விளக்கம் தேவைப்படுகிறது.

பல்வகை இணைய தளங்களில் ஒன்றான 'ப்ளாக்கர்'(Blogger/Blogspot/Blog)என்பது கூகுள் த‌ரும் ஒரு இலவச தளமாகும். இதனை தமிழில் 'வலைதளம்', 'வலைப்பதிவு', 'வலைப்பூ' என்கிறோம். ஏராளமான இலவச வலைப்பூ சேவைகள் இருந்தாலும் இந்த ப்ளாக்கர் சேவையின் மூலமே பெரும்பாலானவர்கள் வலைப் பதிவுகள் உருவாக்கி, அவரவர் கருத்துக்களையும் பலவித செய்திகளையும், கலைகளையும் மற்றவர்களுடன் இணையத்தில் பகிர்ந்துக் கொள்கிறோம். இப்படிப்பட்ட வலைப் பதிவுகளை எல்லாம் ஒரே இடத்தில் பார்ப்பதற்காக ஒன்று திரட்டித் தரும் இணையத் தளத்திற்குதான்'வலைத் திரட்டி' (சுருக்கமாக 'திரட்டி') என்பார்கள். தமிழ் மொழி வலைப்பதிவுகளுக்கும் பல திரட்டிகள் உள்ளன. குறிப்பாக 'இண்ட்லி', 'உலவு', 'தமிழிஷ்', 'திரட்டி', 'தமிழ் 10', 'தமிழ்ப் பூங்கா', 'தமிழ்வெளி'போன்றவற்றை சொல்லலாம். அவற்றில் ஒன்றுதான் 'தமிழ் மணம்' என்ற திரட்டியுமாகும். சரி, விஷயத்திற்கு வருவோம்.)

சில நாட்களுக்கு முன் இந்த தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவர் பதிவுலகின் சக சகோதரர்களை நாகரிகமற்ற வார்த்தைகளில் உரையாடி இழிவுபடுத்தியமைக்கு முதலில் என் கண்டனங்களை பதிவுச்செய்துக் கொள்கிறேன். 



அதைத் தொடர்ந்து அவர் இட்ட‌ ஒரு பின்னூட்டத்தில், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போதும் எழுத்துப் பரிமாற்றங்களின்போதும் கூறிக்கொள்ளும் 'முகமன்' வார்த்தைகளையும் இழிவுபடுத்திக் கூறியுள்ளதற்காக தமிழ்மணத்திடம் முஸ்லிம்கள் சார்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்மண நிர்வாகிகள் சரியான முறையில்விளக்கம் அளிக்காத வரை தமிழ்மணத்தின் மீதான எதிர்ப்பு தொடரும்என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறோம்.

இதோ தமிழ்மணத்தின் அந்த நிர்வாகி கக்கிய விஷம்:

//சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்//

தமிழ்மண நிர்வாகிகளே! எங்கள் மார்க்கம் கற்றுத்தந்த, எக்காலத்துக்கும்/ நேரத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு முகமன் வார்த்தையை உங்களில் ஒருவர் கொச்சைப்படுத்துகிறார் என்றால், "இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது"என்பதுபோல் நீங்கள் கண்டும் காணாமலே இருந்துவிடப் போகிறீர்களா? அல்லது ஒரு நிர்வாகத்தின் பொறுப்பான நிர்வாகிகளாக அவர் சார்பில் இஸ்லாமியர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கப் போகிறீர்களா?


தமிழ்மணத்துக்கு ஆதரவு தரும் பதிவர்களுக்கு "ஜாதி/மத வெறியர்கள் பரப்பும் அவதூறுகளைப் புறந்தள்ளி இப்பதிவர் தமிழ்மணம் நிர்வாகத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறார்" என 'கிரீன் பேஜ்' (green badge) கொடுக்கிறீர்களே... அடுத்தவர்களுக்கு இடையூறு இன்றி அவரவர் மதங்களைப் பின்பற்றிச் செல்பவர்கள் உங்கள் பாஷையில் 'வெறியர்கள்' என்றால், அநாவசியமாக வலிய வந்து ஒரு மார்க்கத்தின் முகமனை கொச்சைப்படுத்துபவர்கள் 'மகா மட்டமான வெறியர்கள்' அல்லவா? அப்படிப்பட்டவர்களைப் புறந்தள்ளி 'ரெட் பேஜ்' கொடுத்து உங்கள் நிர்வாகத்தைவிட்டும் வெளியேற்றத் தயாரா? (எரிகிறதைப் பிடுங்கினால்தானே கொதிக்கிறது அடங்கும்..?)

தமிழ்மண நிர்வாகிகளே! இஸ்லாமிய முகமனை கேலி செய்துவிட்டதால் அதில் மாசு ஏற்படுத்தி விட்டதாக எண்ணிவிடவேண்டாம். ஒருபோதும் அதன் தூய்மை மாறாது. ஆனால் காற்றுக்கு எதிரே துப்பினால் அது முகத்தில்தான் விழும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்வது தமிழுக்காக செய்யும் சேவை என்று நீங்கள் சொல்வதால், உங்கள் மூலம்தான் எங்கள் பதிவுகள் தூக்கி நிறுத்தப்படும் என்று நாங்கள் நம்பவில்லை. உங்களைப்போல் எத்தனையோ திரட்டிகள் உள்ளன என்பது உங்களுக்கும் தெரியும். பதிவர்களின் ஆதரவும் உங்கள் வளர்ச்சியின் ஒரு பங்கு என்பதும் உங்களுக்கு தெரியும்.ஆகவே....

இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்கும், எங்கள் சகோதர பதிவர்கள் பலரை கேவலப்படுத்தி இருப்பதற்கும் தமிழ்மணமாகிய நீங்களும், சம்பந்தப்பட்ட அந்த நிர்வாகியும் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே உங்கள் 'ஓட்டுப்பட்டை' தொடர்ந்து எங்கள் பதிவில் நீடிக்கும்; எங்கள் பதிவுகள் உங்கள் திரட்டியில் இணைக்கப்படும். அத்துடன் புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி சொல்லவும் தயங்கமாட்டோம்..!
posted by SM.YOUSUF

Wednesday 12 October 2011

”வரதட்சனை ஓர் வன்கொடுமை” தலைப்பில் பெரியதொட்டம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதொட்டம் கிளை சார்பாக கடந்த 5.10.2011 புதன் இரவு 9.15 மணிக்கு தெருமுனை பிரசாரம் நடைபெற்றது இதில் வரதட்சணை ஓர் வன்கொடுமை எனும் தலைப்பில் சகோ சதாம் ஹுசைன் (MISC) உரையாற்றினார்.
posted by SM.YOUSUF

வாவிபாளையம் கிளையில் பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை சார்பாக கடநத் அக்டோபர் 9 / 2011 ஞாயிற்றுகிழமை முதல் பெரியவர்களுக்கான குரான் ஓதும் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. இதில் குரான் ஓதுதல் மற்றும் உச்சரிப்பு ஆகியவை கற்றுத்தரப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
posted by SM.YOUSUF

Tuesday 11 October 2011

பள்ளி கட்டிட நிதி _நாகை மாவட்ட மஷ்ஜிதூர் நூர் பள்ளி

IMG_0004.jpg
TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 1.10.2011 அன்று  நாகை மாவட்ட மஷ்ஜிதூர்  நூர் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு உதவியாக ரூ 21062 வழங்கப்பட்டது.  அல்கம்துளில்லாஹ்...
posted by SM.YOUSUF

TNTJ வின் உள்ளாட்சி தேர்தல் நிலைபாடு, பத்திரிக்கை செய்தி


















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் சார்பாக TNTJ வின் உள்ளாட்சி தேர்தல் நிலைபாடு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இது கடநத் 24-9-2011 அன்று தினரகன் பத்திரிக்கையில் வெளியானது. மேலும் தினத்தந்தியில் கடந்த 3-10-2011 அன்று வெளியானது.

posted by SM.YOUSUF

மங்கலம் கோல்டன் டவர் கிளையில் மக்தப் மதரஸா



மங்கலம் கோல்டன் டவர் கிளையில் மக்தப் மதரஸா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையில் கடந்த 25-9-2011 அன்று சிறுவர்களுக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்.
posted by SM.YOUSUF

தாவா.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆயக்குடி கிராமத்தில் கடந்த 18-9-2011 அன்று தஃவா நிகழ்ச்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்களிடையே ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. பஷீர் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
posted by SM.YOUSUF

Wednesday 5 October 2011

திருப்பூரில் ரூபாய் 7045 மருத்துவ உதவி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 10-9-2011 அன்று ஏழை சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 7045 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
posted by SM.YOUSUF

திருப்பூர் மாவட்ட தாயிக்கள் ஆலோசனைக் கூட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட தாயிக்கள் ஆலோசனைக் கூட்டம் கடநத் 18.09.2011 அன்று நடைபெற்றது. இதில் தாயி பொறுப்பாளர் சகோ முஹம்மத் சலீம் அவர்கள் பேச்சாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் எனும் தலைப்பில் உரையாற்றினார். மேலும் தஃவா பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
posted by SM.YOUSUF

மங்கலம்கோல்டன் டவர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கோல்டன் டவர் கிளை சார்பாக கடந்த 17-9-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தவ்ஃபீக் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF

இரத்த தான சேவையை பாராட்டி விருது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி கடந்த 15-9-2011 அன்று திருப்புர் மாவட்டம் கலக்டர் மதிவாணன் விருது வழங்கினார்கள். இதை மாவட்ட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.posted by SM.YOUSUF