Friday 30 November 2012

அல்ஹம்து சூரா ஓதாமல் தொழலாமா?



கேள்வி

தொழ ஆரம்பிக்கும் ஒருவருக்கு அல்ஹம்து சூரா தெரியவில்லை. மற்றவர்களைப் பார்த்து தொழுது கொண்டிருக்கும் இவர் அல்ஹம்து சூரா ஓதாமல் தொழுவதால் அந்தத் தொழகை ஏற்றுக் கொள்ளப்படுமா?

சேக் முஹம்மது

பதில் 

சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதாதவருக்கு தொழுகை இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

756حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

திருக்குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது.

அறிவிப்பவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)
நூல் : புகாரி 756

சூரத்துல் ஃபாத்திஹா ஓதாவிட்டால் தொழுகை இல்லை என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். எனவே சூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்தவர்கள் அதை ஓதாமல் தொழுகக்கூடாது. அப்படி தொழுதால் அந்தத் தொழுகை ஏற்கப்படாது.

ஆனால் புதிதாக இஸ்லாத்துக்கு வந்தவர்களோ அல்லது தொழுகை முறை சரியாகத் தெரியாதவர்கள் புதிதாகத் தொழ ஆரம்பிக்கும் போது அந்தச் சூழலில் சூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் இவர்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை. இவர்களின் தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டானோ என்று சந்தேகப்படத் தேவையில்லை.

அறியாமை, மறதி போன்ற காரணங்களுக்கு இஸ்லாத்தில் மன்னிப்பு உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் முஆவியா பின் ஹகம் என்ற நபித்தோழர் புதிதாக இஸ்லாத்திற்கு வந்த நிலையில் முஸ்லிம்களுடன் சேர்ந்து தொழுதார்கள்.

தொழுகையில் வெளிப்பேச்சுக்களைப் பேசக்கூடாது என்ற ஒழுங்குமுறையை இவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே தொழுதுகொண்டிருக்கும் போதே மற்றவர்களிடம் பேசினார்கள்.
தொழுகை முடிந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நபித்தோழரைக் கண்டிக்காமல் அமைதியான முறையில் அறிவுரை கூறினார்கள். அவர் தொழுத தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என்றோ அவர் மறுபடியும் தொழ வேண்டும் என்றோ நபியவர்கள் கூறவில்லை.

836 حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَتَقَارَبَا فِي لَفْظِ الْحَدِيثِ قَالَا حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ هِلَالِ بْنِ أَبِي مَيْمُونَةَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ قَالَ بَيْنَا أَنَا أُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ عَطَسَ رَجُلٌ مِنْ الْقَوْمِ فَقُلْتُ يَرْحَمُكَ اللَّهُ فَرَمَانِي الْقَوْمُ بِأَبْصَارِهِمْ فَقُلْتُ وَا ثُكْلَ أُمِّيَاهْ مَا شَأْنُكُمْ تَنْظُرُونَ إِلَيَّ فَجَعَلُوا يَضْرِبُونَ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ فَلَمَّا رَأَيْتُهُمْ يُصَمِّتُونَنِي لَكِنِّي سَكَتُّ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبِأَبِي هُوَ وَأُمِّي مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلَا بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ فَوَاللَّهِ مَا كَهَرَنِي وَلَا ضَرَبَنِي وَلَا شَتَمَنِي قَالَ إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ وَقَدْ جَاءَ اللَّهُ بِالْإِسْلَامِ رواه مسلم

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் "யர்ஹமுக் கல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் "என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள்மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் -என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், "இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்'' என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?'' என்றேன்.

நூல் : முஸ்லிம் 935

எனவே புதிதாக தொழுபவர்கள் சூரத்துல் பாத்திஹாவை தொழுகையில் ஓத இயலாது என்பதால் தொழுவதற்கு அவர்கள் அஞ்சவேண்டிய அவசியமில்லை. அவர்களின் தொழுகையை இறைவன் ஏற்றுக்கொள்வான்.

ஆனால் இதே நிலையில் நீடிக்காமல் சீக்கிரமாக சூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்து தொழுகையில் ஓத முயற்சிக்க வேண்டும்.
நன்றி= ONLINEPJ.COM


POSTED BY
 

தெருமுனைப் பொதுக் கூட்டம் -மங்கலம் கிளை





அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-11-2012 அன்று மங்கலம் நால் ரோட்டில் தெருமுனைப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.தாவூத் கைஸர் அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பிலும் சகோ.தவ்ஃபீக் அவர்கள் உலகப் பொதுமறை திருக்குர்ஆன் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் 


POSTED BY