Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

Saturday, 6 July 2019

ஜார்கண்ட்டில் தப்ரேஸ் அன்சாரி அடித்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


               தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 05/07/2019  வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி எதிரில்   மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்,மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத்,  மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் ரஷீத், ரபீக், சேக் பரீத், அனிபா, மற்றும் மாபு பாஷா , மாவட்ட அணிச் செயலாளர்கள் உள்ளிட்ட  மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் சகோதரர். ஜமால் உஸ்மானி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.


அதில், மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்றும்,

 சொந்த நாட்டு குடிமக்கள் காட்டுமிராண்டிகளால் அடித்துக் கொல்லப்பட்டு வருகிறார்கள், 
உ.பி-யில் முஹம்மது அஹ்லாக் தொடங்கி ஜார்கண்ட் தப்ரேஸ் அன்சாரி வரை நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். என்பதையும் 

  சமீபத்தில் ஜெய் ஸ்ரீராம் கோசம் போடச்சொல்லி தப்ரேஸ் அன்சாரி உட்பட ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும்  11 முஸ்லிம்களை காவிகள் அடித்து படுகொலை செய்துள்ளனர் என்பதயும் விளக்கி 

    சட்ட ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கும் ஜார்கண்ட் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

         இதில் தொடர்புடையவர்கள்,  இதன் பின்னணியில்
இருப்பவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி,

         குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

Wednesday, 27 March 2019

பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களை தூக்கிலிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்




பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களை தூக்கிலிட வலியுறுத்தி 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.03.2019 திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு திருப்பூர் காங்கயம் ரோடு CTC அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்ட்த்தில் மாநில பேச்சாளர் சகோதரர். கோவை R. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

தமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி சம்பவத்தில் நூற்றுக்கணக்கான அபலைப் பெண்களை காம வெறியர்கள் சிலர் காதல் என்ற பெயரில் தனி இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்து, அடித்துத் துன்புறுத்தி நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர்.

அந்த வீடியோவை வைத்து அப்பெண்களை மிரட்டிப் பணம் பறித்ததுடன் அதை வைத்தே அவர்களை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படாத காரணத்தினால்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

பொள்ளாச்சியில் நிகழ்ந்தது போன்ற பாலியல் கொடூரம் இனியும் நிகழாது இருக்க வேண்டுமென்றால் இதில் தொடர்புடையவர்கள், இதன் பின்னணியில் இருப்பவர்கள் என அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை பார்த்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட நினைக்கும் கயவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்பட வேண்டும்.

இவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும். அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.



மாவட்ட துணைச்செயலாளர் சேக்பரீத் நன்றியுரை ஆற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 23 April 2018

ஆஷிஃபாவை கற்பழித்துக் கொன்ற காவி களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - தாராபுரம் கிளை


காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவிலில்  எட்டு நாட்கள் வைத்து கூட்டு வன்புணர்வு செய்து கொன்ற காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்,  அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியும்,



திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை யின் சார்பாக

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

நாள் :- 20/4/18  வெள்ளிக்கிழமை 

நேரம்  :- மாலை 4:30 மணியளவில்

இடம்  :-  நகராட்சி அலுவலகம் முன்பு (அண்ணாசிலை அருகில்)

உரை  : நெல்லை செய்யது அலி (TNTJ மாநிலச் செயலாளர்)


Wednesday, 18 April 2018

ஆஷிஃபாவை கற்பழித்து கொன்ற காவி பயங்கரவாதிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் _திருப்பூர் மாவட்டம்








காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில் கற்பழித்து கொன்ற காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்,  

இந்த கொடூரத்தை செய்த காவி மிருகங்களை தூக்கிலிட வேண்டும் என்று  வலியுறுத்தியும் 
திருப்பூர் மாவட்டம் சார்பில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

திருப்பூர்  மாநகராட்சி அலுவலகம் முன்பு 18/4/18  புதன்கிழமை  மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை நடந்தது.


            திருப்பூர் பகுதி காவிகள் அராஜகம் மிகுந்த பகுதியாக உள்ளதாலும், காவிகளுக்கெதிரான நமது இந்த ஆர்ப்பாட்டம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.,

           மிக அதிகமான காவலர்களை அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

           பொதுமக்களும், குழந்தைகளுடன் பெண்களும் மிக அதிகமாக பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

      அதில் மாநில செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

       மாநில தலைமையின் FB பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததை காவிகள் உட்பட  லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

        அல்ஹம்துலில்லாஹ்

           இந்த ஆர்ப்பாட்டமும், அதில் மாநில  செயலாளரின் கண்டன உரையும்  வெகு ஜன மக்கள் மத்தியிலும் அரசு மற்றும் காவல்துறை மத்தியிலும் இஸ்லாம் பற்றியும், இஸ்லாமியர் பற்றியும், குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பற்றி நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அல்ஹம்துலில்லாஹ்.

         




   



Saturday, 20 January 2018

எச்.ராஜா வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- திருப்பூர் மாவட்டம்














நமது உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் வம்புக்கிழுக்கும் வகையில் பேசிமதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் செயல்படும்  பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா வை கண்டித்தும்அவனை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும்,

       திருப்பூர் மாவட்டம் சார்பில் கடந்த 19/01/2018 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடத்தினோம்.

            திருப்பூர் பகுதி காவிகள் அராஜகம் மிகுந்த பகுதியாக உள்ளதாலும்காவிகளுக்கெதிரான நமது இந்த ஆர்ப்பாட்டம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.,

           மிக அதிகமான காவலர்களை அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
           பொதுமக்களும் மிக அதிகமாக பெரும் திரளாக எழுச்சியுடன் கலந்து கொண்டனர்,
           மாநில தலைமையின் FB பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததை காவிகள் உட்பட  லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

        அதில் மாநில பொதுச்செயலாளர்  M.S. சையது இப்ராஹிம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

           இந்த ஆர்ப்பாட்டமும்அதில் மாநில பொது செயலாளரின் கண்டன உரையும்  வெகு ஜன மக்கள் மத்தியிலும் அரசு மற்றும் காவல்துறை மத்தியிலும் இஸ்லாம் பற்றியும்இஸ்லாமியர் பற்றியும்குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பற்றி நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்.

         

Monday, 25 September 2017

மியான்மர் அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 18/9/17 அன்று திங்கட்கிழமை  தாராபுரத்தில் அன்னாசிலை அருகில் தாராபுரம் நகராட்சி முன்பு ரோஹிங்கியா முஸ்லிம்களை கொல்லும் மியான்மர் அரசை கண்டித்து  கண்டன ஆர்பாட்டம்  நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.


Sunday, 17 September 2017

மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து ஆர்பாட்டம் - திருப்பூர் மாவட்டம்

மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து – தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  சார்பில் ஆர்பாட்டம்

திருப்பூர்  செப் 15 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக  மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும்  மத்திய  மோடி அரசு  ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை திறுப்பி அனுப்பும் முடிவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது .


மியான்மரிலுள்ள ராகின் மஹானத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களை ராணுவமும் புத்த மதவாதிகளும் கூட்டுச்சேர்ந்து ஆயிரக்கணக்கில் இனப்படுக்கொலை செய்யப்படுகிறார்கள்.

 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அங் சாங் சுகி என்ற பெண்ணின் தலைமையில் நடைபெறும் அரசில் இன அழிப்பு படுகொலைகள் நடத்தப்படுகின்றன.

 மேலும் 
சர்வதேச அகதிக்கான அடையாள அட்டையுடன்  இந்தியாவில்  40 ஆயிரம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளனர்

 ஆனால் இந்திய அரசு முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் பொருளாதாரத்தை காரணம் காட்டி மியான்மருக்கு திருப்பி அனுப்ப போவதாக    முடிவு செய்துள்ளதையும் கைவிட 
 வலியுறுத்தி
  திருப்பூர்  மாவட்டம்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, திருப்பூர் மாநகராட்சி  அருகில்   மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட  தலைவர் அப்துர்ரஹ்மான்  தலைமை தாங்கினார்
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் முஹம்மது யூசுப்  அவர்கள் கண்டன உரையாற்றினார்

இதில் மியான்மார்  அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரும்திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு மியான்மர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

 இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தொண்டரனி செயலாளர் இர்ஷாத் தலைமையில் மாவட்ட தொண்டரனி சகோதரர்கள் சிறப்பாக எற்பாடு செய்தார்கள் .

  இறுதியாக மாவட்ட பொருளாளர் ஷேக் ஜெய்லானி  நன்றிகூறினார்.

அல்ஹம்துலில்லாஹ்!






Friday, 2 June 2017

மாட்டிறைச்சி விற்பனை தடையை கண்டித்து ஆர்பாட்டம் - திருப்பூர் மாவட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ்வின் மகத்தான அருளால் மத்திய மோடி அரசின் மாட்டிறைச்சி விற்பனை தடையை கண்டித்தும்,மேலும் திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பா நகரில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையான தொழுகையை நிறைவேற்ற விடாமல் தடுப்பதையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 31-05-2017 புதன் அன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது,இதில் மாநில துனைத்தலைவர் M.I.சுலைமான் அவர்கள் தலைமை வகித்தார்கள்,மாநில பேச்சாளர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி மற்றும் மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் ,செயலாளர் ஜாஹிர் அப்பாஸ்,பொருளாளர் ஷேக் ஜீலானி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் ,மாநில செயலாளர் மயிலை அப்துர் ரஹீம் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள் ,இறுதியாக மாவட்ட பொருளாளர் ஷேக் ஜீலானி அவர்கள் நன்றியுரை கூறினார்கள். இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சகோதர,சகோதரிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர் .அல்ஹம்துலில்லாஹ்










Friday, 16 October 2015

கண்டன ஆர்ப்பாட்டம் - திருப்பூர் மாவட்டம்

TNTJ  திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 06.10.2015 அன்று காலை 10.30 மணிக்கு  திருப்பூர்  மாநகராட்சி அலுவலகம் முன்பு  உ.பி. படுகொலை  சம்பவத்தை கண்டித்து  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட  சகோதர  சகோதரிகள் கலந்து  கொண்டு, விண்ணை முட்டும்  அளவுக்கு  கோஷம் எழுப்பி கண்டனங்களை பதிவு செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்

கண்டன உரை :  கோவை அப்துல்  ரஹீம்.

Thursday, 31 January 2013

"விஸ்வரூபம் " திரைப்படத்தை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சிதலைவரிடம்கோரிக்கை மனு _31012013

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 31.01.2013அன்று 


நடிகர்.கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள "விஸ்வரூபம்" திரைப்படம் முஸ்லிம்களின்புனித நூலான "திருக்குர்ஆன்"ஐ இழிவுபடுத்தியும்,  முஸ்லிம்களை தீவிரவாதி களாக சித்தரித்து உள்ளதையும் அறிந்து, அந்த திரைபடத்தை தமிழகத்தில் முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சிதலைவரிடம் ஏராளமான பொதுமக்களுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர்மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலக அதிகாரிகளும்  உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தனர்.




Thursday, 20 September 2012

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் அமேரிக்க அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 18-09-2012.அன்று மாலை 4.மணியளவில் திருப்பூர் மாநகராட்சி வளாகம் முன்பு நடை பெற்றது மாவட்ட தலைவர் :ஷேக்ஃபரீத் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடை பெற்றது.
சகோ:H.M.அஹமது கபீர் அவர்கள் கண்டன உரையாற்றினார். இக்கூட்டத்தில் ஆண்கள் பெண்கள் மூன்றாயிரத்திற்க்கும்அதிகமானோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.



ஒபாமாவிற்க்கு மரியாதை
















POSTED BY மாணவரணி SHAHID