Showing posts with label காமராஜர் நகர். Show all posts
Showing posts with label காமராஜர் நகர். Show all posts

Sunday, 26 October 2014

புதிய கிளை துவக்கம் : பல்லடம் காமராஜர் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் கடந்த 19.10.14 அன்று கிளைப் பொதுக்குழு நடைபெற்றது. இதில், மாவட்ட துணைத் தலைவர் சகோ. ஆஸம், மாவட்ட து.செயலாளர் சகோ. ஷேக் ஃபரீத், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சகோ. ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

பல்லடம் நகராட்சியில் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகள் பரவலாக வீரியமாக நடைபெறுவதற்கு தோதுவாக பல்லடம் காமராஜர் நகர் கிளை எனும் புதிய கிளை துவக்கப்பட்டது. இதற்கு கிளைப் பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களின் முழு சம்மதம் மற்றும் ஒத்துழைப்புடன் இம்முடிவு எடுக்கப்பட்டு இரு கிளைகளுக்கும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு மூவர் குழு அமைக்கப்பட்டது. மிக சிறப்பான முறையில் பொதுக்குழு நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை நிர்வாகம் :
1. சகோ. காஜா
2. சகோ. இனாயத்துல்லாஹ்
3. சகோ. சிராஜுதீன்

பல்லடம் காமராஜர் நகர் கிளை நிர்வாகம் :
1. சகோ. மாலிக்
2. சகோ. சவ்கத் அலி
3. சகோ. செய்யது முத்து