Showing posts with label பொதுக்கூட்டம். Show all posts
Showing posts with label பொதுக்கூட்டம். Show all posts

Monday, 5 August 2019

பல்லடம் - மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 04082049

தீவிரவாதத்திற்கு_எதிராக_முஸ்லிம்களின்_தொடர்_பிரச்சாரம்
\

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

04/08/2019 ஞாயிறு மாலை 7:15 முதல் பல்லடம் அண்ணா நகர் பகுதியில் நடைபெற்றது.



இந்த பொதுக்கூட்டத்தில் சகோதரி: *ரஹ்மத்* அவர்கள் *இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு* எனும் தலைப்பிலும்,

சகோதரர்: *அபூபக்கர் சஅதி* அவர்கள் *வரதட்சணை ஓர் வன்கொடுமை*
எனும் தலைப்பிலும்

சகோதரர்: *நெல்லை N.பைசல்* அவர்கள் *இஸ்லாம் கூறும் மனித நேயம்* எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.



பெருவாரியான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 17 March 2019

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக ,
15.03.2019 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6:30 மணி முதல் தாராபுரம் ஜின்னா மைதானம் பகுதியில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோதரர். அபூபக்கர் சஅதி அவர்கள் *இஸ்லாமிய குடும்பம்* எனும் தலைப்பிலும்,

சகோதரர். ஜமால் உஸ்மானி அவர்கள் *சீரழியும் இளைஞர்களை சீர்திருத்தும் இஸ்லாம்* எனும் தலைப்பிலும்,உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்



Tuesday, 8 January 2019

திருக்குர்ஆன் மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் _ மங்கலம்கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கிளை சார்பில்  4-01-2019 அன்று திருக்குர்ஆன்   மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 



அதில் மாநில பொதுச்செயலாளர்  E. முகமது அவர்கள் திருக்குர்ஆன் மாநாட்டின் நோக்கம்  என்ற தலைப்பிலும்




மாநில செயலாளர் அப்துல் கரீம்  அவர்கள் சத்தியத்தை சொல் அதில் உறுதியாக நில் என்ற தலைப்பிலும்






மாநில மேலாண்மை குழு தலைவர் M. S. சுலைமான் அவர்கள் மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் 

இதில்  அதிகமாக ஆண்கள் மற்றும் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் . 

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 24 July 2018

மகளிர் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்- மங்கலம் கிளை










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் அன்ஸாரிய்யா மகளிர் இஸ்லாமிய கல்வியகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மங்கலம் கிளை சார்பில் 22-7-2018 அன்று ஞாயிறு மாலை 6-00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.
முதல் நிகழ்வாக கல்லூரி மாணவிகளின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் 1, ஏகத்துவம் 2, இணைவைப்பு 3, மார்க்க கல்வியின் அவசியம் 4, வரதட்சனை 5, இறை அச்சம்
6, திருக்குரான் மாநாடு ஏன்? ஆகிய தலைப்புகளில் 6 மாணவிகள் உரை நிகழ்த்தியது பொதுமக்கள் ஆர்வமுடன் கேட்கும் வண்ணம் அமைந்தது.
அடுத்து TNTJ மாநில செயலாளர் சகோ. முஹம்மத் கனி அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், TNTJ மாநில செயலாளர் சகோ. கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் சத்தியத்தில் சங்கமிப்போம் என்ற தலைப்பிலும், சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
சிறப்பான முறையில் இந்த பெண்கள் கல்வியகத்தை நடத்தும் ஆசிரியர்களுக்கு பரிசுகளும், ஒரு வருட கல்வியை நிறைவு செய்த மாணவியர்களுக்கு சான்றிதழ் பட்டமும், பரிசுகளும் வழங்கப்பட்டது.
நகரின் மையப்பகுதியில் பொதுக்கூட்டம் நடந்ததால் பிறமத மக்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கவனிக்கும் வகையிலும், 1000 த்திற்கும் அதிகமான கொள்கை சகோதர சகோதரிகள் கலந்து கொண்டும் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 2 May 2018

மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 27/04/2018 வெள்ளி மாலை 5:30 மணி முதல் திருப்பூர் டவுன் ஹால் மைதானத்தில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோ. பா. அப்துர்ரஹ்மான் அவர்கள் “TNTJவின் அரும் பணிகள்” எனும் தலைப்பிலும், சகோ. R.அப்துல் கரீம் அவர்கள் “ வஹியை மட்டும் பின்பற்றுவோம்” எனும் தலைப்பிலும், சகோ. P.ஜைனுலாபுதீன் அவர்கள் “திருக்குர்ஆன் கூறும் சமநீதி” எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இந்த பொதுகூட்டத்தில் பெரும் திரளான சகோதர சகோதரிகள்  கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

 இந்த பொது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

சிறுமி ஆசிஃபாவை  கடத்தி சென்று கோவிலில் அடைத்து வைத்து, தொடர்ச்சியாக பலநாட்கள் கொடூரமாக கற்பழித்து கொலை செய்த காவி
மனித மிருகங்களை உடனடியாக மத்திய அரசு தூக்கிலிட வேண்டும் என்று இந்த பொதுக்கூட்டம் வாயிலாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வலியுறுத்துகிறது.


தமிழக மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் காவேரி நீர் தமிழகத்திற்கு கிடைப்பதில்லை.இதை உச்ச நீதிமன்றமும் குறிப்பிட்ட அளவு நீரை முறையாக விடவேண்டும் என கூறியும்,கர்நாடக அரசு தர மறுக்கிறது.

எனவே தமிழக மக்களின் நீர் ஆதாரத்தை கவனத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.


இன்ஸா அல்லாஹ் ஜனவரி 27,2019 அன்று,தமிழ்நாடு தவ் ஹீத் ஜமாஅத் நடத்த இருக்க கூடிய திருக்குர்ஆன் மாநில மாநாட்டில்,தமிழகமெங்கும் 15லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இம் மாநாட்டில்,இறைவேதமாகிய திருக்குர்ஆனின் சிறப்புகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் விதமாக  இருப்பதால்,இம்மாநாட்டிற்கு நமது பகுதியிலிருந்து இன்ஷா அல்லாஹ் பல்லாயிரகனக்கான மக்களோடு செல்ல இருப்பதால் இம்மாநாட்டிற்காக நாம் அனைவரும் உழைப்போம் என  பொதுக்கூட்டம் வாயிலாக கேட்டு கொள்கிறோம்.

கடந்த தேர்தலில் ஆளுங்கட்சியின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முஸ்லிம்களுக்கான 3.5% இட ஒதுக்கிட்டினை  உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள்,அந்த வாக்குறுதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிறைவேற்றி தர வேண்டுமென பொதுக்கூட்டம் வாயிலாக கேட்டுகொள்கிறோம்.

GST உட்பட பல்வேறு மறைமுக வரிவிதிப்பால்  திருப்பூரில் தொழில்கள் நசிந்து பல்வேறு நிறுவனங்கள் மூடும்நிலை, தொழிலாளர்கள் வேலை இழக்கும் இழி நிலை, மற்றும் அனைத்து மக்களின் பாதிப்பை போக்க இந்த வரிவிதிப்புகளை சீரமைக்க மத்திய அரசை இ
 




ந்த பொதுக்கூட்டம் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, 26 August 2016

முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) விளக்க பொதுக்கூட்டம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-8-2016 அன்று வடுகன்காளிபாளையம் ஈத்கா நகர் பகுதியில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ. M.S. சுலைமான் ( மாநில செயலாளர் ) அவர்கள் " முஹம்மதுர் ரசூலுல்லாஹ் " என்ற தலைப்பிலும் சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஅதி அவர்கள் " ஏகத்துவம் ஏற்படுத்திய வாழ்வியல் மாற்றம் " என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

Saturday, 20 August 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் பொதுக்கூட்ட அழைப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-08-2016 அன்று இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-08-2016 வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு மக்களை அழைக்கும் முகமாக வடுகன்காளிபாளையம் கிளை சகோதரிகள் வடுகன்காளிபாளையம் பகுதியில்  வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து  பொதுக்கூட்ட த்திற்கு அழைப்பு கொடுத்தனர்.... அல்ஹம்துலில்லாஹ்....

Wednesday, 10 August 2016

இஸ்லாமிய மர்க்க விளக்க பொதுக்கூட்டம் - வடுகன்காளிபாளையம்

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக இன்ஷாஅல்லஹ் வருகின்ற ஆகஸ்ட் 21 ம் தேதி மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெருகின்றது.இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவும்...அல்ஹம்துலில்லாஹ்...


Saturday, 30 July 2016

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக  22-07-2016 அன்று மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் TNTJ பேச்சாளர் சகோ.அஹ்மது கபீர் அவர்கள் ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) **  என்ற தலைப்பிலும்,மாநில தனிக்கை குழு உறுப்பினர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் *** அமைதி மார்க்கம் இஸ்லாம் *** என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்..இதில் ஆண்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்....

Monday, 21 March 2016

மார்க்க விளக்கக் பொதுக்கூட்டம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 20-03-16 (ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மார்க்க விளக்கக் கூட்டம் தாராபுரம் ஜின்னாமைதானம் பகுதியில் நடைபெற்றது.சகோ:சேக் அப்துல்லா அவர்கள் "tntj ஆம்புலன்ஸ்"என்ற தலைப்பிலும்,சகோ:முகமது சலீம் அவர்கள்"முஸ்லிம்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.இறுதியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சிகளும்,மாநாட்டில் சகோ.PJ அவர்கள் ஆற்றிய உரையும் புரஜக்டரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது....இந்நிகழ்ச்சியில் ஆண்களும் ,பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.......அலஹம்துலில்லாஹ்.....

Wednesday, 9 March 2016

மாபெறும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளை சார்பாக  06-03-2016 அன்று  
திருப்பூர்  நொய்யல் வீதியில் மாபெறும் இஸ்லாமிய  மார்க்க விளக்க பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாஃபி  அவர்கள்இறுதி வெற்றி  ஏகத்துவத்திற்கே.என்ற தலைப்பிலும்  சகோ. அப்துர் ரஹ்மான்  பிர்தவ்ஸி அவர்கள் “லாயிலாஹா இல்லல்லாஹ்  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ” என்ற தலைப்பிலும்   சிறப்புரையாற்றினார்கள்,ஆண்களும்,பெண்களும்,பெரும் திரளாக  அனைவரும் குடும்பத்துடன் வந்து கலந்து  கொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்....

Wednesday, 20 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பொதுக்கூட்டம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 16-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் இஸ்லாம் கூறும் ஏகத்துவம் என்ற தலைப்பிலும் ,மாநில பேச்சாளர் சகோ.குல்சார் நுஃமான் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள் ,இந்நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்....

Monday, 18 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பொதுக்கூட்டம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,இதில் மாநில பேச்சாளர் அப்துல் கரீம் அவர்கள் தவ்ஹீதை எதிர்ப்பது பொதுநலமா?சுயநலமா? என்ற தலைப்பிலும் ,சகோ.குல்சார் நுஃமான் அவர்கள் ஜனவரி - 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,மேலும் மங்கலம் மதரஸா மாணவர்களின் சார்பாக ஷிர்க் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday, 29 December 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 27-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் சகோ.அபுபக்கர் சித்திக் சஆதி ,அவர்களும்,அன்பான அழைப்பு என்ற தலைப்பில் சகோ.அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்களும் உரையாற்றினார்கள்,இப்பொதுக்கூட்டத்தில் மதரஸா மாணவிகளின் சார்பாக ஷிர்க் ஒழிப்பு சம்பந்தமான கண்காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது , பெரும் திரளாக ஆண்களும்,பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்......









Tuesday, 3 November 2015

மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 01-11-2015 அன்று மாபெரும்  இஸ்லாமிய  மார்க்க விளக்க பொதுக்கூட்டம் கடுமையான  எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது ,இறைவன் அருளால்  மழையிலும் மாநாடு போல மக்கள்  திரள பொதுக்கூட்டம்  சிறப்பாக நடைபெற்றது ,இதில் மாவட்ட பேச்சாளர் சகோ .அப்துர்ரஹ்மான் அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் அரும்பணிகள் என்ற தலைப்பிலும் ,மாநில பேச்சாளர் சகோ.அப்துர் ரஹ்மான்  ஃ பிர்தவ்சி  அவர்கள் மாநபி வழியா மத்ஹப் வழியா என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....



Tuesday, 27 October 2015

ஷிர்க் ஒழிப்பு விளக்கப் பொதுக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 25-10-15 ஞாயிறு திருப்பூர்  மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் ஷிர்க் ஒழிப்பு விளக்கப் பொதுக்கூட்டம்  கோம்பைத்தோட்டம் மெயின் வீதியில் நடைபெற்றது ,இதில் மாநில தலைவர் .MA பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள்  இணைவைத்தவர்களின் மறுமை நிலை ? என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் சகோ: A ஜபருல்லாஹ் அவர்கள்  இளைஞர்களே  எங்கே செல்கிறீர்கள்? என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். இப்பொதுக்கூட்டத்தில்  அதிகமான ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்,அல்ஹம்துலில்லாஹ்.....