Showing posts with label பத்திரிக்கைசெய்தி. Show all posts
Showing posts with label பத்திரிக்கைசெய்தி. Show all posts

Tuesday, 15 August 2017

நிலவேம்பு கசாயம் பத்திரிக்கை செய்தி - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக டெங்கு நோய் பரவாமல் தடுக்க அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் விதமாக வழங்கப்பட்ட  நிலவேம்பு கசாயம்   பத்திரிக்கை செய்தியாக 14-08-2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது,அல்ஹம்துலில்லாஹ்

Monday, 13 October 2014

திருப்பூர் மாவட்ட செயற்குழு பற்றிய பத்திரிக்கை செய்திகள்...

திருப்பூர் மாவட்டம் சார்பில் 12.10.2014 அன்று நடைபெற்ற "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்" க்கான திருப்பூர் மாவட்ட சிறப்பு செயற்குழு பற்றிய செய்தி தினகரன், தினமலர் போன்ற தினசரி பத்திரிக்கைகளில் வெளியானது. அல்ஹம்துலில்லாஹ்...
 

Saturday, 11 January 2014

பல்லடம் கிளை மருத்துவ முகாம் _பத்திரிக்கை செய்தி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம்  கிளை சார்பாக 05.01.2014 அன்று கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனையுடன் இணைந்து " புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம்  " நடைப்பெற்றது.
இது பற்றிய பத்திரிக்கை செய்தி 


1.தினமணி

2.தினகரன்

Wednesday, 18 September 2013

தர்பியாதீர்மானங்கள் பத்திரிக்கைகளில் செய்தி _திருப்பூர் மாவட்டம்

Add caption
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை சார்பாக 15.09.2013  அன்று காலை 5.45 முதல் இரவு 8.30 வரை திருப்பூர் ரோஜா மஹால் மண்டபத்தில் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மற்றும் பேச்சாளர்களுக்கான தர்பியா நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாம் கலந்துகொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் பல்வேறு அவசியமான முக்கிய தகவல்களை அறிந்து செயல்பட ஏதுவாக அமைந்தது.

இந்த பயிற்சி முகாம் பற்றியும்,எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட தீர்மானங்கள் பற்றி பத்திரிக்கைகளில்  வந்த செய்தி



Tuesday, 17 September 2013

ஜனவரி 28சிறை செல்லும்போராட்ட பிரச்சாரப் பேரணி -பத்திரிக்கைகளுக்கு செய்தி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை சார்பாக 15.09.2013  அன்று காலை 5.45 முதல் இரவு 8.30 வரை திருப்பூர் ரோஜா மஹால் மண்டபத்தில் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மற்றும் பேச்சாளர்களுக்கான தர்பியா நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாம் கலந்துகொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் பல்வேறு அவசியமான முக்கிய தகவல்களை அறிந்து செயல்பட ஏதுவாக அமைந்தது.

இந்த பயிற்சி முகாம் பற்றியும்,எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட தீர்மானங்கள் பற்றி பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுக்கப்பட்டது.  


1. 2000  இருசக்கர வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி

வருகிற ஜனவரி 28அன்று கோவையில் நடைபெறவுள்ள சிறை செல்லும் போராட்டம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் 2000  இருசக்கர வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி திருப்பூர் மாவட்டம் சார்பில் நடத்தவேண்டும் என்றும் ......

2.இஸ்லாத்தினை தழுவுவோருக்கு இடஒதுக்கீடில் பாரபட்சம் நீக்கவேண்டும்

இந்து,கிருத்துவ,மற்றும் பிற மதத்திலிருந்து இஸ்லாத்தினை தழுவுவோருக்கு இடஒதுக்கீடு ரத்து செய்யக்கூடாது என்ற நீதிமன்ற உத்திரவை தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும்  என்றும்....

3.டெல்லி மாணவி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கவேண்டும்.

டெல்லி மாணவி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கிய உடனடியாக தண்டனை வழங்கவேண்டும்என்றும்...

4. திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கும் , தமிழகஅரசுக்கும் நன்றி..




கடந்த அன்று நடந்து முடிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில்  காவல்துறைக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த வருடம் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிக சரியான வகையில் நடவடிக்கை எடுத்து பொது அமைதியை ஏற்படுத்தி கொடுத்த திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கும் , தமிழகஅரசுக்கும் நன்ற தெரிவிக்கிறது என்றும்....

4.மது போதை மற்றும் புகை பிடித்தல் தீமை குறித்து விழிப்புணர்வு 

பொதுமக்களின் உடல் மற்றும் உள்ளக்கேடுகளை விளைவிக்கும் மது,மற்றும் புகை பற்றிய தீமைகளை குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது என்றும்.. 

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்

சிறை செல்லும் போராட்ட ஆலோசனை கூட்ட தீர்மானம்_தாராபுரம் கிளை _செய்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக  ஆலோசனை கூட்ட பத்திரிக்கை செய்தி

தாராபுரம் கிளை ஆலோசனை கூட்ட தீர்மானம்.


இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 28, அன்று கோவை மண்டலம் சார்பில் கோவையில் நடைபெறும் சிறை செல்லும் போராட்டத்திற்கு தாராபுரம் பகுதியிலிருந்து 5000 மேற்பட்டவர்களை அழைத்து செல்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இது பற்றிய செய்தி தினதந்தி 15.09.2013   பத்திரிக்கையில் அன்று வெளியானது.

Tuesday, 10 September 2013

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு? _பத்திரிக்கையாளர்சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  09.09.2013 அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ்  அவர்கள் தலைமையில்  மாநில செயலாளர் அப்துர்ரஹீம் மற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக்  முன்னிலையில் 
 
கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி ,மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு  கூட்டம்"   திருப்பூர் பெரியகடைவீதி மர்கசில் நடைபெற்றது.



பத்திரிக்கையாளர் சந்திப்பு

இந்த கூட்டத்தில்  ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு? என்பது பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ்  அவர்கள் பத்திரிக்கையாளர் மத்தியில் விரிவாக விளக்கம் வழங்கினார். மேலும் பத்திரிக்கையாளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் விளக்கம் வழங்கி நடந்தது.

Tuesday, 2 July 2013

திருப்பூர் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் _பத்திரிகை செய்திகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 30.06.2013 அன்று திருப்பூர் டவுன்ஹாலில்  மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பற்றி பத்திரிகை செய்திகள் 
                                                              
                                                                    1.தினத்தந்தி


                                                            2.தினகரன்
  
                                                                3. தினமணி


Friday, 1 February 2013

"விஸ்வரூபம்"முழுமையாக தடை செய்யதினமணிசெய்தி புகைப்படம் _01022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 31.01.2013அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சிதலைவரிடம் ஏராளமான பொதுமக்களுடன் சென்று
"விஸ்வரூபம்" திரைப்படம் முஸ்லிம்களின்புனித நூலான "திருக்குர்ஆன்"ஐ இழிவுபடுத்தியும்,  முஸ்லிம்களை தீவிரவாதி களாக சித்தரித்து உள்ளதையும் அறிந்து, அந்த திரைபடத்தை தமிழகத்தில் முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி பத்திரிக்கையில் 01.02.2013 அன்று வந்த  செய்தி புகைப்படம்  :

Wednesday, 26 December 2012

பத்திரிக்கைசெய்தி _உடுமலைஇஸ்லாம் ஒர்இனியமார்க்கம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   23.12.2012 அன்று உடுமலையில் நடைபெற்ற "இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சி







உடுமலை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதின் விளைவாக முன்னணி பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டனர்.






அல்ஹம்துலில்லாஹ்!

Monday, 20 February 2012

திருப்பூர்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் மாநிலப் பேச்சாளர் முஹம்மது அவர்கள் கண்டன உரை ஆற்றினார்கள்.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.




posted by SM.YOUSUF

Saturday, 24 December 2011

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர். இந்த இட ஒதுக்கீடு, ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமலுக்கு வரும். மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையில், ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஜாதியினர், இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவர். உத்தர பிரதேச மாநில தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- தினமலர் 22-12-2011 செய்தி
இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.


posted by SM.YOUSUF

Saturday, 10 December 2011

தினமலரின் விஷமத்தனமும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் துடிப்பான செயல்பாடும்



ஊடக பயங்கரவாதமும் பார்ப்பனிய பாசிச வெறியும் கொண்ட தினமலர் நாளிதழ் எவ்வளவு தான் குட்டுப்பட்டாலும், தனது உண்மை முகத்தை, சுய ருபத்தை அடிக்கடி வெளிக்காட்டத் தவறுவதில்லை, உண்மையின் உரைகல் என்று முகப்பில் பெயர் (மட்டும்) தாங்கி வந்து கொண்டிருக்கும் இந் நாளிதழ் கடந்த 7-12-2011 புதன்னறு சென்னை பதிப்பில் வெளிவந்த செய்தியொன்று தமிழ் முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அரைகுறைகள் கொண்டாடிய முகரம் பண்டிகையை செய்தியாக வெளியிடுகிறோம் என்ரெண்ணி அனைத்து முஸ்லிம்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது. முகரம் பண்டிகையை கொண்டாடுவதன் நோக்கமாக அசன்(ரலி), உசேன் (ரலி) அவர்களின் மரணச் செய்தியை கேட்ட அவர்களுது தாயார் பாத்திமா (ரலி) அவர்கள் தீக்குளித்து இறந்ததின் நினைவாக இந்நாள் கொண்டாடப்படுகிறது என்று செய்தி வெளியிட்டிருந்தது. செய்தி குழுமங்கள் வாயிலாக பரப்பப்பட்டு நமது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டிருந்த நிலையில் நமது ஜமாத்தின் தம்மாம் மண்டல நிர்வாகிகள் தினமலரின் நிர்வாகி பாலா அவர்களைத் தொடர்பு கொண்டு நமது கண்டனத்தை பதிவு செய்ததுடன் தொடர்ந்து இது போல் முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகள் வெளியிடுவது சமுக நல்லினக்கத்தை குலைக்கும் செயலாக உள்ளதை தெளிவுபடுத்தினர் அனைத்தையும் பொறுமையாக கேட்ட நாளிதழ் நிர்வாகி தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி வெளிட்டதாகவும், உங்களது மத உணர்வுகளை மதிக்கிறோம். இச் செய்தியை உடனடியாக நிக்கிவிடுகிறோம் என்று சொல்லி 1 மணி நேரத்தில் இணைய தளத்திலிருந்து நிக்கினர் அல்ஹம்துலில்லாஹ்.
இத்தோடு சமிபத்தில் கேரளாவில் நடைபெற்ற சம்பவத்தை ஒப்பிட்டு பார்ப்பது பொருத்தமாக இருக்கும் விஷமத்தனமாக நபிகள் நாயகத்தை அவமதித்து கல்லுரியில் வினாத்தாள் தயாரித்த ஜோசப் என்கிற பேராசிரியரின் கையைதுண்டித்த இயக்கத்தினர் நினைத்துப் பார்க்க வேண்டும். சத்திய மார்க்கத்தை அதன் தூய்மையான வழியில் எடுத்துச் சொல்லும் தமிழ்நாடு தவ்ஹித் ஜாமத்தின் சீரிய வழிகாட்டுதலின் படி செயல்படும் அடிமட்ட உறுப்பினர் கூட வன்முறையை கையில் எடுப்பதில்லை அவ்வளவு தெளிவான தலைமையின் வழிகாட்டுதல்கள். புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

posted by SM.YOUSUF