Showing posts with label மாணவர்அணி. Show all posts
Showing posts with label மாணவர்அணி. Show all posts

Monday, 18 November 2019

மாணவரணி, மருத்துவ அணி, மற்றும் தொண்டரணி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி


              தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  17/11/2019 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட அனைத்து கிளை மாணவரணி, மருத்துவ அணி, மற்றும் தொண்டரணி   ஒருங்கிணைப்பு    நிகழ்ச்சி நடைபெற்றது.



      மாநில செயலாளர் சகோதரர்.T.A.அப்பாஸ் மற்றும் மாணவரணி செயலாளர் பயாஸ் அவர்களும் கலந்து கொண்டு அணிகள் மூலம் எவ்வாறெல்லாம் சமூக சேவைப்பணிகள் செய்யலாம் என்பதை விளக்கி ஆர்வமூட்டினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 14 October 2019

*சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை பெற இலவச ஆன்லைன் பதிவு முகாம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பாக 13.10.19 ஞாயிறு அன்று மாவட்ட மர்கஸ் மஸ்ஜிதுர் ரஹ்மான் வளாகத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை பெற இலவச ஆன்லைன் பதிவு முகாம்

 நடைபெற்றது.
          இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள்  கலந்து கொண்டு தமக்கான அரசு உதவிக்காக பதிவு செய்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

Sunday, 6 October 2019

*சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை பெற இலவச ஆன்லைன் பதிவு முகாம்*



கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் சிறுபான்மையின மக்களுக்காக அரசாங்கத்தாலும், சில தொண்டு நிறுவனங்களாலும் வருடந்தோறும் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த உதவித் தொகை பெரும்பாலும் தகுதியுடைய மாணவ, மாணவியர்களுக்கு சரியாகச் சென்றடைவதில்லை. இதற்கு காரணம் இது குறித்த போதிய விழிப்புணர்வு அம்மக்களிடம் காணப்படுவதில்லை.
இதனால் வருடந்தோறும் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை, இதை எப்படிப் பெறுவது என்ற வழிமுறைகள் தெரியாத காரணத்தால் பயன்படாமல் மீண்டும் அரசாங்கத்திடமே சென்றுவிடுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணிப் பிரிவு தமிழகம் முழுவதும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம் ஆண்டுதோறும் பல பகுதிகளில் நடத்திக்கொண்டு வருகிறது.
அந்த வரிசையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பாக மாவட்ட தலைமையகமான மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வளாகத்தில் 06.10.19 ஞாயிறு அன்று காலை 9.00 மணியளவில் இந்நிகழ்ச்சி ஆரம்பமானது.
இதில் மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுடன் காலை 8.00 மணிக்கே வந்து ஆர்வத்துடன் அமர்ந்திருந்து தமது உரிமையை பெற பதிவு செய்தனர்.
நிகழ்ச்சி ஆரம்பமானதும் மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, ஆன்லைன் பதிவுகள் வேகமாக நடைபெற்றன. இதில் அதிவேக இன்டர்நெட் இணைப்புடன் ஐந்து கணிணிகள் மூலம் இதில் அனுபவமுள்ள மாணவரணியைச் சேர்ந்த நிர்வாகிகள் பதிவு செய்து கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சி இந்நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் நூர்தீன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாவட்ட மாணவரணிச் செயலாளர் இம்ரான் அவர்கள் தலைமையிலும், மாவட்ட துணைச் செயலாளர் ஹனிபா,இந்தியன் நகர் ரஜாக் , கோம்பைத்தோட்டம் அப்துல்லாஹ் MISc., MSநகர் சிராஜ், பெரியதோட்டம் பசீர் அலி, மற்றும் மாணவரணி சகோதரர்கள் பதிவு செய்யும் பணிகளை செய்து வருகின்றனர்.
தொண்டரணிச் செயலாளர் சித்திக் அவர்கள் தலைமையில் தொண்டரணி சகோதரர்கள் வந்திருந்த பொதுமக்களுக்கும் பணியாற்றும் சகோதரர்களுக்கும் தேவையான உதவிகளை செய்தனர்.
மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அராபத், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ரஷீத், ரபீக், ஷேக் பரீத், மருத்துவரணிச் செயலாளர் ஜாகிர், மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
பல மாணவ மாணவியர்களுக்கு வங்கிக்கணக்கு மற்றும், பள்ளியில் கடந்த வருட மதிப்பெண் சான்று பெறாமல் இருந்தனர்.
அவர்களுக்கு ஆவணங்களை முறையாக பெறும் வழிமுறைகளை விளக்கப்பட்டது.
ஆவணங்களை முறையாக பெற்று வருபவர்களுக்காகவும், இன்று பதிவு செய்ய இயலாதவர்களுக்கும்
இன்ஷாஅல்லாஹ் அடுத்த வாரமும் இதே இடத்தில் முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
என்றும் சமுதாய மற்றும் சமூக சேவை பணிகளில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம்.

Friday, 4 October 2019

மாவட்ட மாணவரணி ஆலோசனைக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 03/10/2010 அன்று இரவு கோம்பைத் தோட்டம் மாவட்ட மர்கஸ் வளாகத்தில்,



மாவட்ட மாணவரணி மூலமாக இன்ஷாஅல்லாஹ் 06/10/2019 அன்று நடைபெறவுள்ள  சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் இலவசமாக பதிவு செய்யும் முகாம் பற்றி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கோம்பைத்தோட்டம், வெங்கடேஸ்வரா நகர், பெரியதோட்டம் ஆகிய கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு  நிகழ்ச்சியை எவ்வாறெல்லாம் சிறப்பாக நடத்துவது என கருத்துக்கள் கேட்டறியப்பட்டு முடிவுகள் எடுத்து சிறப்பாக இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்..


Thursday, 8 February 2018

வினாப் புத்தகம் வழங்கப்பட்டது - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-05---- 06-02-18- இரண்டு நாட்களில் மேலும் -60- மாணவ மாணவிகளுக்கு மாணவரணி சார்பில் வினாப் புத்தகம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


Wednesday, 7 February 2018

வினா தொகுப்பு புத்தகம் வழங்கும் நிகழ்வு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-04-02-18- ஞாயிறு காலை -10-30- மணிக்கு மாணவரணி சார்பில் வினா தொகுப்பு புத்தகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது மாவட்டத்தலைவர் அப்துர்ரஹ்மான்( வாவி) இஸ்லாம் கூறும் கல்வியின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும் PROF,,;நைனார் முஹம்மது கல்வியின் பயன்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர், -40- மாணவ மாணவிகளுக்கு வினாத்தொகுப்பு முதற்கட்டமாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்




பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி என்ற புத்தகம் - அலங்கியம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான

தேர்வு வழிகாட்டி என்ற புத்தகம் இலவசமாக கொடுப்பதற்காக அலங்கியம் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களை சந்தித்து அனுமதி பெறப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 27 January 2018

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு வழிகாட்டி புத்தகம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணியின்  சார்பாக  21,22,23,24-1-2018 ஆகிய தேதிகளில்  பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது  தேர்வு வழிகாட்டி புத்தகம் 25  மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. . 
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 23 January 2018

தேர்வு வழிகாட்டி புத்தகம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி  சார்பாக  20-1-2018 அன்று தேர்வு வழிகாட்டி புத்தகம்  20-1-2018 வரை 11 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. . 

அல்ஹம்துலில்லாஹ்

பத்து மற்றும் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாண மாணவிகளுக்கு வினா வங்கி புத்தகம் - கோம்பைதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 20/01/2018 அன்று பத்து மற்றும் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாண மாணவிகளுக்கு பயன்பெறும் வகையில் வினா வங்கி புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விளம்பர DTP 30 ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 3 January 2018

மாணவரணி மசூரா -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-01-01-18- அன்று மாணவரணி கலந்தாலோசனை( மசூரா) நடைபெற்றது, அதில்

1- வாரம் 2 தெருமுனைப்பிரச்சாரம்
2- நோட்டீஸ் விநியோகம்
ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 28 December 2017

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விழிப்புணர்வு - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி  சார்பாக 28-12-2017 அன்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 
பத்தாம் வகுப்பு ( தமிழ் மீடியம் ) - 6
மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. 
பத்தாம் வகுப்பு  (English medium ) - 2 மாணவர்களுக்கு  வழங்கப்பட்டது 
பன்னிரெண்டாம் வகுப்பு (English medium ) -  2 மாணவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Monday, 7 August 2017

தனிநபர் தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  3-8-2017 அன்று மாணவரணி சகோதரர்கள் மூலமாக  இரண்டு பேருக்கு தொழுகை சம்பந்தமாக  தனிநபர் தாவா செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 14 May 2017

மாணவர்களுக்கு என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? நிகழ்ச்சி -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்ட மாணவரணியின் சார்பாக திருப்பூர் காங்கயம் ரோடு காயத்ரி மஹாலில் 07-05-17 அன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வ்வு எழுதிய மாணவர்களுக்கு என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் சகோ.அஷ்ரப் அலி அவர்களும்,சகோ. பயாஸ் அவர்களும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்

ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 9 May 2017

மாணவரனி வழிகாட்டி நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  1-5-2017 அன்று மாவட்டம் சார்பாக நடத்தப்படுகிற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களை கலந்து கொள்ளச்செய்வதற்காக வீடு வீடாக சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!

Tuesday, 21 March 2017

மாணவர் ஒருங்கினைப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 15/03/17/ அன்று இஷாவிற்கு பிறகு மாணவர் ஒருங்கினைப்பு நடைபெற்றது அதில் அல்லாஹ்வின் உதவியால் தாவா பணிகளை வீரியமாக செய்வோம் என்று மாணவர்கள் உறுதியளித்தனர் இதில் 30 மாணவர்கள் கலந்து. கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 16 March 2017

மாணவர் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 13--03--17 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மாணவர் ஒருங்கினைப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 2 March 2017

மாணவர் அணி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி -

TNTJ திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையில் 26-02-17 அன்று இரவு மணவர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

Friday, 4 March 2016

தேர்வை எதிர்கொள்வது எப்படி - மாணவரனி நிகழ்ச்சி - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 28-02-2016 ஞாயிறன்று   மாணவர் அணி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வது எப்படி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ. ஷாகித் ஒலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

Friday, 30 October 2015

மாணவர்களுக்கு இலவச ட்யூஷன் - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை சார்பாக 3-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு இலவச ட்யூஷன் வகுப்புகள். தினந்தோறும் மாலை 5:மணி முதல் 6:45மணி வரை  நடத்தப்படுகிறது.அல்ஹம்துலில்லாஹ்....