Tuesday, 21 April 2015
புனிதமாதங்கள்எவை? உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 21.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 55. புனிதமாதங்கள்எவை? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
55. புனித மாதங்கள் எவை
இந்த (9:36)
வசனத்தில் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு
என்று கூறப்படுகிறது. இந்தப் பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்கள்
புனிதமானவை என்றும் கூறப்படுகிறது.
ஆனால்
புனிதமான அந்த நான்கு மாதங்கள் எவை என்று திருக்குர்ஆனில் கூறப்படவில்லை.
ஆனாலும் இந்த நான்கு மாதங்கள் யாவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
அருள்பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 20/04/2015 அன்று பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. அஜ்மல் கான் அவர்கள் 224. அருள்பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார் எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
சகோ. அஜ்மல் கான் அவர்கள் 224. அருள்பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார் எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
224. அருள் பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார்
எந்த
நபிமார்களுக்கும் செய்ததை விட இப்ராஹீம் நபிக்கு அல்லாஹ் அதிகப் பேரருள்
புரிந்துள்ளான் என்பது இவ்வசனத்தின் (11:73) மூலம் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம்கள்
ஒவ்வொரு தொழுகையிலும் எனக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டிப்
பிரார்த்தியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதற்காக ஒரு
பிரார்த்தனையையும் கற்றுத் தந்தார்கள். அத்தஹிய்யாத் இருப்பில் நாம் ஓதும்
ஸலவாத் எனும் அந்த பிரார்த்தனையில் "இறைவா! இப்ராஹீம் நபிக்கும் அவரது
குடும்பத்தினருக்கும் நீ அருள் புரிந்தது போல் முஹம்மதுக்கும் அவரது
குடும்பத்தினருக்கும் அருள் புரிவாயாக!'' என்று குறிப்பிட்டிருப்பது
இப்ராஹீம் நபியின் மீது அல்லாஹ் செய்த மகத்தான அருளை நமக்குப் புரிய
வைக்கிறது.
மூன்று கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 19500/= நிதியதவி _ வெங்கடேஸ்வரா நகர் கிளை

வசூலான தொகை ரூ.19500/= யை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.6500/= ம்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.6500/= ம்
திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.6500/= ம் நிதியதவியாக வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..
Monday, 20 April 2015
வேதம்அருளப்படும்முன்மூஸாநபியின்பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 19/04/2015 அன்று பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சிராஜுதீன் அவர்கள்184. வேதம் அருளப்படும் முன் மூஸாநபியின் பிரச்சாரம் எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
சகோ. சிராஜுதீன் அவர்கள்184. வேதம் அருளப்படும் முன் மூஸாநபியின் பிரச்சாரம் எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம்
மூஸா நபியவர்களுக்கு எழுத்து வடிவில் இறைவன் வேதத்தை வழங்கியதாக இவ்வசனம் (7:145) கூறுகிறது.
இவ்வேதம் எப்போது வழங்கப்படுகிறது என்பது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
மூஸா நபியும்,
ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்தினரிடமும்
54 பிறமத சகோதர்ர்களுக்கு தனிநபர் தாவா +புத்தகங்கள் _ MS நகர் கிளை







திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 19-04-15 அன்று 54 பிறமத சகோதர்ர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றியும் , இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் , ஜமாஅத்தின் பணிகள் குறித்தும் தனிநபர் தாவா செய்து " மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் " 12 முஸ்லிம் தீவிரவாதிகள் ......? 1 மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் 11 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
Sunday, 19 April 2015
இனப்பெருக்கத்தில்பெண்களின்பங்கு -மடத்துக்குளம் குர்ஆன் வகுப்பு

சகோ. அஜ்மல் கான் அவர்கள் 207. இனப்பெருக்கத்தில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
207. இனப் பெருக்கத்தில் பெண்களின் பங்கு
மனிதன் படைக்கப்பட்டதைக் கூறும் போது விந்துத் துளியிலிருந்து படைத்ததாகப் பல வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
"துளி' என
நாம் மொழி பெயர்த்திருந்தாலும், விந்துத் துளியில் உள்ள ஒரு
உயிரணுவிலிருந்து மனிதனைப் படைத்ததாகவும், அது கலப்பு விந்துத் துளி எனவும்
இந்த வசனத்தில் (76:2) இறைவன் கூறுகிறான்.
ஆணிடமிருந்து
வெளிப்படும் உயிரணு, பெண்ணிடமிருந்து வெளிப்படுகின்ற சினை முட்டையுடன்
இரண்டறக் கலந்து, பிறகு தான் அது பெண்ணின் கருவறைக்குச் சென்று மனிதனாக
உருவாகிறது.
மனித
உற்பத்தியில் ஆணுடைய உயிரணுவும், பெண்ணுடைய சினை முட்டையும் கலந்தாக
வேண்டும் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கலப்பு
விந்துத்துளி எனக்கூறி இது இறைவனின் வார்த்தை தான் என்பதை திருக்குர்ஆன்
நிரூபிக்கிறது.
Subscribe to:
Posts (Atom)