Monday, 14 July 2014

காலேஜ் ரோடு கிளை சார்பாக பிறமத சகோதரருக்கு தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 20.06.14 அன்று தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. 











இதில், லாரன்ஸ் எனும் கிறிஸ்தவ சகோதரருக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்து அவருக்கு இலவசமா  குர்ஆன் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

 அல்ஹம்துலில்லாஹ்..

பெண்களுக்கான சிறப்பு பயான் _ வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் சார்பாக வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக 13.07.14  அன்று பெண்களுக்கான சிறப்பு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ.அஹ்மது கபீர்  அவர்கள் திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அதைத் தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 14.07.14 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ.தீன் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டோர் யார் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக ஹதீஸ் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை  சார்பாக, 14.07.14 அன்று  ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் அதிக நன்மை தரும் சிறிய அமல்கள் முஸ்லிம் நூலில் 5218 எண்களில் இருக்கும் ஹதீஸ் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ஹதீஸ் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை  சார்பாக, 13.07.14 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் ரமளானில் இரவு வணக்கம்  என்ற தலைப்பில் புஹாரியில் 2010,2013,3569 மற்றும் நஸயீ 1347,1587,1588 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மாநிலத் தலைமைக்கு நிதியுதவி ரூ.6200 _மங்கலம் கிளை

 திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-07-14  அன்று, மாநிலத் தலைமைக்கு நிதியுதவியாக, ரமலான் மாதத்தின் இரண்டாவது ஜூம்மாவில் ரூ.6200  வசூல் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .

பெண்களுக்கான சிறப்பு பயான் _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 13-7-14 அன்று  பெண்களுக்கான சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நபீலா மற்றும் ஆபிலா ஆகிய  இரு சகோதரிகள், இறையச்சம்  மற்றும் குர்ஆனின் சிறப்புகள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் 30 க்கும் மேற்ப்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 
அல்ஹம்துலில்லாஹ்.

ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி மாத இதழ்கள் விற்பனை _ மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-7-2014 அன்று 20 ஏகத்துவ மாத இதழ்களும், 10 தீன்குலப் பெண்மணி மாத இதழ்களும்  விற்பனை செய்யப்பட்டன. 
அல்ஹம்துலில்லாஹ்...

இலவசமாக 40 உணர்வு பேப்பர்கள் விநியோகம் _ மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11.07.14 அன்று ஜுமுஆக்கு பின் 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டன.   
அல்ஹம்துலில்லாஹ்..

80 உணர்வு பேப்பர்கள் விற்பனை _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11.07.2014 அன்று ஜுமுஆக்கு பிறகு,   80 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்..

பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா _ கோம்பைத் தோட்டம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 13.07.14 அன்று பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா நடத்தப்பட்டது. இதில், சகோ.பஷீர் அலி அவர்கள் வகுப்பு நடத்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரபு பயான் _ மங்கலம் கிளை - 09.07.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக ரமலான் 09.07.14 மற்றும் 10.07.14 ஆகிய  தினங்களில் இரவுத் தொழுகைக்குப்    பின் ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், மறுமை நம்பிக்கை என்ற தலைப்பில் சகோ.அஹ்மது  கபீர்  அவர்கள் தொடர்  உரை நிகழ்த்தினார்.
 அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ மங்கலம் கிளை - 08.07.14

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக 08.07.14 அன்று, இரவுத் தொழுகைக்குப் பின் ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், “சிறிய இணைவைப்பு” என்ற தலைப்பில் சகோ. தவ்ஃபீக்  அவர்கள் தலைப்பில்  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 12 July 2014

மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக தனி நபர் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 12-07-2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் ஏழு சிறுவர்களுக்கு தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ உடுமலை - 11.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 11.07.2014 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரசீத்  அவர்கள் "அண்டை வீட்டாரின் உரிமைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

சூனியம் குறித்து 30 போஸ்டர்கள் _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 10.07.14  அன்று சூனியம் சம்பந்தமாக டிஎன்டிஜே மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சவால் விடுத்த போஸ்டர்  உடுமலை பகுதியில் 30 இடங்களில் மொத்தம் முப்பது (30) போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 10.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 10.07.14 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது.  
இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் தனிமனித ஒழுங்குகள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் பகுதியில் ஜாக் அமைப்பினரால் கிழிக்கப்பட்ட போஸ்டர்கள்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை    சார்பாக  11-07-14  அன்று பி.ஜே.யின் சவால் குறித்து 25 இடங்களில் போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன. இதில், 4 போஸ்டர்கள்  இதுவரை ஜாக் அமைப்பினரால் கிழிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில்  மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சூனியம் குறித்து 25 போஸ்டர்கள் _ மங்கலம் கோல்டன் டவர் கிளை

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக கடந்த 10-07-14 அன்று சூனியம் குறித்து பி.ஜே அவர்கள் சவால் விடுத்தது பற்றிய 25 போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்....

மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக தனிநபர் தஃவா

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 09-07-14  அன்று பள்ளிவாசலில் ஒரு இளைஞருக்கு தனி நபர் தஃவா  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. 

சூனியம் பற்றிய சவால் விடுத்த போஸ்டர்கள் 26 _ நல்லூர் கிளை

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை  சார்பாக கடந்த 10.07.14  அன்று சூனியம் செய்வது குறித்து பி.ஜே அவர்கள் சவால் விடுத்த போஸ்டர் 26 இடங்களில் மொத்தம் 26 போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

ஹதீஸ் வகுப்பு _ ஆண்டியக் கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக 12.07.14 அன்று பஜ்ருக்கு பிறகு ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. செய்யது இப்ராஹீம் அவர்கள் இரத்தம் வெளியேற்றுதல் தொடர்பாக புஹாரியில் 1940 எண்ணில் இருக்கும் ஹதீஸ் மற்றும் திர்மிதீயில் 705 எண்ணில் இருக்கும் ஹதீஸ் மூலம் விளக்கம் அளித்தார்.

மாநிலத் தலைமையின் நிதிக்கு ரூ.1420 /- வழங்கப்பட்டது _ தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை  சார்பாக 11.07.14 அன்று ஜும்ஆவிற்கு வசூலிக்கப்பட்ட தொகை ரூ.1420/- மாநிலத் தலைமைக்கு நிதியுதவியாக  வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ தாராபுரம் கிளை - 10.07.14

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை  சார்பாக 10-7-2014 அன்று "மஸ்ஜிதுர் ரஹ்மான்" பள்ளியில் இரவு தொழுகைக்குப் பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது.  இதில் சகோ.அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

ஆதரவு இல்லங்களுக்கு ரூ.12,700 உதவி _ தாராபுரம் கிளை



திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 10-7-2014 அன்று,  இரவு தொழுகைக்கு பிறகு முதியோர் இல்லம், ஆதரவற்ற சிறுவர் மற்றும் சிறுமியர்  இல்லத்திற்காக  ரூபாய்-12700 /-  வசூல் செய்து அதன் பொறுப்பாளர் "அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி" அவர்களிடம் ஒப்படைக்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்