Monday, 8 July 2013

வட்டி இல்லா கடன் உதவி 83 உடுமலைகிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 06.07.2013 அன்று வட்டிஇல்லா கடன் உதவி திட்டத்தில்   தாராபுரம் சகோதரர். அபுதாகிர் அவர்களுக்கு ரூ.10,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

வட்டி இல்லா கடன் உதவி 84 உடுமலைகிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 06.07.2013 அன்று வட்டிஇல்லா கடன் உதவி திட்டத்தில்   உடுமலை சகோதரர். பஜூலுல்லாஹ் அவர்களுக்கு ரூ.15,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

Saturday, 6 July 2013

"ஜூம்ஆஅவசியமும்,முஸ்லிம்களின் கடமையும்" _நல்லூர் கிளையில் புதிதாக நபிவழி ஜூம்ஆ

TNTJ திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 

05.07.2013 அன்று நல்லூர் V.S.A.நகர் பகுதியில்புதிய மர்கஸ் அமைக்கப்பட்டு  புதிதாக ஜூம்ஆ ஆரம்பிக்கப்பட்டது 
 

மாநில பொது செயலாளர் சகோதரர் கோவை ரஹமதுல்லாஹ் அவர்கள் "ஜூம்ஆஅவசியமும், முஸ்லிம்களின் கடமையும்" எனும் தலைப்பில் ஜூம்ஆ உரையாற்றினார்கள்.
ஏராளமான சகோதர,சகோதரிகள் இந்த நபிவழி ஜூம்ஆ தொழுகையில் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்


S.V.காலனி கிளையில் புதிதாக நபிவழி ஜூம்ஆ தொழுகை

TNTJ திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 
05.07.2013 அன்று S.V.காலனி கிளையில்புதிய மர்கஸ் அமைக்கப்பட்டு  புதிதாக ஜூம்ஆ ஆரம்பிக்கப்பட்டது 
மாநில பேச்சாளர் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் ஜூம்ஆ உரையாற்றினார்கள்.ஏராளமான சகோதர,சகோதரிகள் இந்த நபிவழி ஜூம்ஆ தொழுகையில் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

"கல்வியின் அவசியம்" _அரபி பாடசாலையின் ஆண்டு விழா பரிசளிப்பு _ V.K.P.கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் 30.06.2013 அன்று V.K.P.கிளை அரபி பாடசாலையின் ஆண்டு விழா நடைபெற்றது, 
மாணவ மாணவியர் ஸூரா மனனம், கிராத், மற்றும் மார்க்க விளக்க கேள்வி பதில் சொல்லுவது ஆகியன நடத்தப்பட்டது.
 மாநில பேச்சாளர் சகோ.அஹமது கபீர் அவர்கள் கலந்து கொண்டு
அரபி பாடசாலை யில் பயின்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி "கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!

அரபி பாடசாலையின் ஆண்டு விழா பரிசளிப்பு _தாராபுரம் கிளை

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 30.06.2013 அன்று தாராபுரம் கிளை சார்பில் தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் அரபி பாடசாலையின் ஆண்டு விழா நடைபெற்றது,
இதில் அரபி பாடசாலை யில் பயின்ற 17 மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

Thursday, 4 July 2013

உங்கள் ஊர்களுக்குரிய சஹர் மற்றும் இஃப்தார் நேரம்

தங்களது ஊர்களுக்குரிய சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் பின் வரும் இணையதளத்தின் மூலம் அதற்குரிய நேரத்தை தெரிந்து கொள்ளலாம்.
sc1
இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

மேற்கண்ட இணையதளத்தில் எப்படி அவரவர் தங்களது ஊர்களுக்குரிய அட்டவனையை பெறுவது என்பதை பார்ப்போம்.
Prayer times by city என்ற பகுதியில் தங்கள் ஊரின் ஆங்கில பெயரின் ஆரம்ப 3 அல்லது 4 எழுத்துக்களை கொடுத்து அதற்கு கீழ் உள்ள பெட்டியில் இந்தியாவை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இந்தியாவில் உள்ளவர்கள்)
முழு பெயரையும் ஆங்கிலத்தில் எழுதினால் நமக்கு தேவையான ஊர் கிடைப்பதில் சில நேரங்களி்ல் சிக்கல் ஏற்படும். காரணம், தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு spelling ஐ பயன்படுத்துவார்கள்.சில நேரங்களில் நமக்கு அவர்கள் எப்படி எழுதியுள்ளார்கள் என்பது தெரியாது.
இது போன்று நேரத்தில் ஆரம்பத்தில் இடம் பெறும் 3 அல்லது 4 வார்த்தைகளை கொடுத்தால் எளிதில் நமக்கு தேவையான ஊர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
சென்னை போன்ற மிகவும் பிரபல்யமான ஊர்களுக்கு முழு பெயரைம் கொடுக்கலாம்
உதாரணமாக தென்காசிக்கு எடுக்க வேண்டும் எனில்:
tenkasi

மேற்கண்டவாறு ten , India என கொடுத்து find கொடுத்தால் ten என ஆரம்பிக்கும் அனைத்து ஊர்களையும் காண்பிக்கும் .அதில் நமக்கு தேவையான தென்காசியை தேர்வு செய்து கொள்ளலாம்

tenkasi2

தென்காசியை தேர்வு செய்தவுடன் பின் வரும் பக்கம் இடம் பெறும்.

tenkasi3

இதில் நமக்கு தேவையான வருடம் அல்லது மாதத்தை தேர்வு செய்து கொண்டு அதற்கு பிறகு வரும் அட்டவனையை காபி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
அட்டவனையில் இடம் பெறும் சுப்ஹு நேரத்தை , சஹர் நேரமாகவும்  , மக்ரிப் நேரத்தை , இஃப்தார் நேரகமாகவும் கணக்கிட்டு கொள்ள வேண்டும்.
இதே வழி முறைகளை பயன்படுத்தி அனைத்து ஊர்களுக்கான தொழுகை நேரங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
சில நேரங்களில் ஒரே பெயரில் பல ஊர்கள் இடம் பெறும். அது போன்ற நேரத்தில் map city என்ற வசதியை பயன்படுத்தி நமது ஊரை எளிதில் தேர்வு செய்யலாம்.
உதாரணமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் என்ற ஊருக்கு அட்டவனை தேவை எனில் tir என கொடுத்தால்
same-name

மேற்கண்ட படத்தில் இரண்டு திருப்பத்தூர் இடம் பெற்றிருப்பதை நீங்கள் காணலாம். இதில் நமது ஊர் எது என்பதை அறிய map city ஐ தேர்வு செய்து மேப்பில் இடம்  பெற்றிருக்கும் அருகில் உள்ள ஊர்களை வைத்து எது நமது ஊர் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
சிறிய ஊர்களின் பெயர் சில நேரங்களில் இந்த இணையதளத்தில் இடம் பெற்றிருக்காது. அது போன்ற நேரங்களில் அருகில் உள்ள பெரிய ஊர்களின் பெயரைகளை கொடுத்து அட்டவனையை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த இணையதளத்தை பயன்படுத்தி சென்ற ஆண்டுகளுக்குரிய மற்றும் வரப்போகும் ஆண்டுகளுக்குரிய தொழுகை , சஹர் மற்றும்  இஃப்தார் நேரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு: இந்த இணையதளத்தை நேரங்களை அறிந்து கொள்வதற்காக மட்டுமே குறிப்பிட்டுள்ளோம் இதில் இடம் பெற்றுள்ள மற்ற செய்திகளுக்கும் நமக்கு எந்த சம்பந்தமும் இல்லை
sourse : http://www.tntj.net/159882.html

நோன்பின் சிறப்பு _ பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 03.07.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் ராஜா அவர்கள் நோன்பின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்

மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 01.07.2013 அன்று திருப்பூர் பகுதியை சார்ந்த தாஜுதீன் என்ற சகோதரரின் எலும்புநோய்சிகிச்சைக்காக ரூ 7000/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

நோன்பின் சட்டம் _பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 03/07/2013 அன்று பெரியதோட்டம் 3வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.சபியுல்லா அவர்கள் நோன்பின் சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Wednesday, 3 July 2013

பிறமத சகோதரர். டேவிட் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 02.07.2013 அன்று பிறமத சகோதரர். டேவிட் அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

இலவச திருகுர்ஆன் வழங்க நிதி கேட்டு ப்ளெக்ஸ் 4 பேனர்கள் கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில் 30.06.2013 அன்று பிற மத சகோதரர்களுக்கு இலவச திருகுர்ஆன் வழங்க நிதி கேட்டு ப்ளெக்ஸ் 4 பேனர்கள் வைக்கப்பட்டது

திருக்குர்ஆன்தமிழாக்கம் வழங்கி பிற மத தாவா _கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் சார்பில் 30.06.2013 அன்று நடைபெற்ற வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த பிற மத சகோதரர்களை சந்தித்து திருக்குர்ஆன்தமிழாக்கம்  2 ,மனிதனுக்குஏற்ற மார்க்கம் 2 , மாமனிதர்நபிகள்நாயகம் 2 ,  ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா கோம்பைதோட்டம் கிளை  சகோதரர்களால் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


"சத்தியத்தை மக்களிடம் சொல்லும் வழிமுறை " காலேஜ்ரோடு கிளை பெண் பிரசாரகர்களுக்கான பயிற்சி வகுப்பு _02072013


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 02.07.2013 அன்று காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் பெண் பிரசாரகர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோதரி.கோவை சமீனா  அவர்கள் "சத்தியத்தை மக்களிடம் சொல்லும் வழிமுறை " எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள்.

ஷைத்தான் மறைவாக இருந்து மக்களை வழி கெடுப்பான் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான் 01072013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.07.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ஷைத்தான் மறைவாக இருந்து மக்களை வழி கெடுப்பான் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

Tuesday, 2 July 2013

திருப்பூர் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் _பத்திரிகை செய்திகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 30.06.2013 அன்று திருப்பூர் டவுன்ஹாலில்  மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பற்றி பத்திரிகை செய்திகள் 
                                                              
                                                                    1.தினத்தந்தி


                                                            2.தினகரன்
  
                                                                3. தினமணி


Monday, 1 July 2013

மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 30.06.2013 அன்று திருப்பூர் டவுன்ஹாலில்  மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.





மாலை 4.45 மணி முதல் மக்ரிப் வரை  " வரதட்சணை " எனும் தலைப்பில் பொதுமக்கள் எதார்த்த வாழ்வில் வரதட்சணையின் பாதிப்புகளை அனுபவித்தாலும், வெளிப்படையாக வரதட்சணையின் இலாபங்களை மட்டுமே பேசுவதை பற்றியும், வரதட்சணை  ஒழிய தீர்வு  
ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுத்து நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த எளிமையான திருமணமே என்று 
 பெண்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி யும்

தொடர்ந்து






சகோ.M.I.சுலைமான் அவர்கள் "முஸ்லிம் பெண்ணே, உன்னில் இஸ்லாம் எங்கே?" எனும் தலைப்பிலும்,





சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "எதிர்காலம் இஸ்லாத்திற்கே" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.









ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


அனைவரும் மேடை நிகழ்சிகளை தெளிவாக பார்க்கும் வண்ணம் பிரமாண்ட LED TV உள்ளிட்ட சிறப்பான ஏற்பாடுகள்  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தனர்.


இந்நிகழ்ச்சி உலகமெங்கும் உடனடியாக காணும் வகையில்
www. onlinepj.com இல்  live செய்யப்பட்டது.

 இந்நிகழ்ச்சி  பற்றி தினமணி  நாளிதழ் செய்தி

அல்ஹம்துலில்லாஹ்

வரதட்சணை தள்ளு வண்டியில் மெகா போன் 10 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் _பெரியதோட்டம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 30/06/2013 அன்று வரதட்சணை சம்பந்தமாக  தள்ளு வண்டியில் மெகா போன் மூலமாக 10 இடங்களில்
விழிப்புணர்வு  பிரச்சாரம் செய்யப்பட்டது
நோட்டீஸ் 500 வழங்கப்பட்டது

ரமலான் நோன்பினால் கிடைக்கும் மறுமை பலன்கள் -மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ரமலான் நோன்பினால் கிடைக்கும் மறுமை பலன்கள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 28.06.2013 அன்று திருப்பூர் பகுதியை சார்ந்த பிஸ்மில்லாஹ்கான் என்ற சகோதரரின் இருதய  சிகிச்சைக்காக ரூ 6256/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

ரமலான் மாதம் தேர்தெடுக்கப்பட்டது ஏன்? மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ரமலான் மாதம் தேர்தெடுக்கப்பட்டது ஏன்? " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

வரதட்சணைக்கு எதிராக 8 இடங்களில் வாகன பிரச்சாரம் மற்றும் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-06-2013 அன்று வரதட்சணைக்கு எதிராக 8 இடங்களில் வாகன பிரச்சாரம் மற்றும் நோட்டிஸ் 1000 விநியோகம் செய்யப்பட்டது அந்த இடங்கள்

1.மங்கலத்திக்கு அருகில் உள்ள புத்தூர் என்ற கிராமத்தின் பள்ளிவாசல் அருகில்
2.புத்தூர் கடைத்தெருவில்
3.புத்தூர் பஸ் ஸ்டாப்பில்
4.மங்கலம் காயிதே மில்லத் நகரில்
5.ஜக்கரியா காம்பவ்டில்



6.R.P. நகரில்
7.16 வீட்டு லைனில்
8.மங்கலம் காயிதே மில்லத் நகர் இரண்டாவது வீதி

 ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது

மங்கலம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரபேல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் 29-06-2013 அன்று

ரபேல் என்ற கிருத்துவ சகோதரருக்கு தஃவா செய்யப்பட்டது அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ராஃபல் என்று மாற்றி கொண்டார் .
அவருக்கு இலவசமாக மனிதனுக்கு ஏற்ற மார்க்க,மாமனிதர் நபிகள் நாயக்கம்,ஏசு சிலுவையில் அறைய படவில்லை,பைபிளில் நபிகள் நாயகம்,ஆகிய புத்தகங்களும், இரண்டு DVD கேசட்கள் வழங்கப்பட்டன

ஷைத்தான் மனிதர்களுக்கு பகிரங்க எதிரி _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ஷைத்தான் மனிதர்களுக்கு பகிரங்க எதிரி " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

ஷைத்தான் எதன் மூலம் படைக்கப்பட்டான் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் " ஷைத்தான் எதன் மூலம் படைக்கப்பட்டான் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.