Monday, 15 July 2013

"கப்ர் வேதனை யாருக்கு ?,ஏன்?" உடுமலைகிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தஃவா பள்ளியில்  ரமலானில் தினசரி ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், 13.07.2013 அன்று  "கப்ர் வேதனை" எனும் தலைப்பிலும், 14.07.2013  "கப்ர் வேதனை யாருக்கு ?,ஏன்?"எனும் தலைப்பிலும்,சகோ.அப்துர்ரசித்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Sunday, 14 July 2013

ரமலான் இரவுத்தொழுகை உரை _ பெரியகடைவீதிகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பில் 13.07.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில்
நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின்,சகோ.மங்கலம் தவ்பீக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Saturday, 13 July 2013

ரமலான்நோன்பாளிகளுக்கும்,பொது மக்களுக்கும் கஞ்சி காய்ச்சி விநியோகம் _உடுமலைகிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தஃவா பள்ளியில்  ரமலான் நோன்பாளிகளுக்கும்,பொது மக்களுக்கும் கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்யப்படுகிறது.
அல்ஹம்துலில்லாஹ்

மார்கத்திற்கு உதவிய நல்லோர்களின் மனைவியர்கள் _உடுமலைகிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 12.07.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தஃவா பள்ளியில்  ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "மார்கத்திற்கு உதவிய நல்லோர்களின் மனைவியர்கள்" எனும் தலைப்பில் சகோ.சேக் அப்துல்லாஹ்    அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

சிறுவர் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில் 12.07.2013அன்று   ரூ. 17,200/=ஐ  TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும் சிறுவர் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக
சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி வசம் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நிதியுதவி வழங்கினர்.

ரமலான் மாத நோன்பு அட்டை _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12.07.2013 அன்று ரமலான் மாத நோன்பு அட்டை   2000 ஜும்மா விற்கு  பின் விநியோகம் செய்யப்பட்டது.
ஒவ்வோர் ஊரிலும் ரமலான் மாதத்தில் அல்லாஹுவின்தூதர் காட்டிய வழி முறைகளுக்கு மாற்றமான தகவல்களுடன் நோன்பு அட்டை விநியோகிப்பர் , அந்த தவறுகளை மக்கள் தெரிந்து நேரான வழியை எடுத்து சொல்லும் வகையில் திருப்பூர் மாவட்டம் சார்பில்
பஜ்ர் பாங்கு வரை உண்ணலாம்,பருகலாம் என்ற ஹதிஸ், நோன்பு திறப்பதை விறைவு படுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் இருக்கின்றனர் என்ற ஹதிஸ் உட்பட பஜ்ர்,மக்ரிப்,நேர அட்டவணையுடன்
ரமலான் மாத நோன்பு குறித்து நபி (ஸல்) காட்டிய வழிமுறையை மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த ரமலான் மாத நோன்பு அட்டை விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

"ரமலான் ஓர் அறிமுகம் " காங்கயம்கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பில் 12.07.2013 அன்று காங்கயம் மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலான் ஓர் அறிமுகம் " எனும் தலைப்பில் சகோ.சேக் பரீத்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் 12-07-2013 அன்று இரவுத் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள்  இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாற்றினார்

பள்ளிவாசல் கட்டிட 5250 ரூபாய் நிதியுதவி _மங்களம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையின் சார்பாக 12-07-2013 அன்று மதுரை மஹபுப்பாளையம் பள்ளிவாசல் கட்டிட 5250 ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது

"நோன்பு தரும் படிப்பினை " பெரியகடைவீதி கிளை ரமலான் இரவுத்தொழுகை பயான்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பில் 12.07.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில்

நடைபெற்றது.




பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.





தொழுகைக்குப்பின், "நோன்பு தரும் படிப்பினை   " எனும் தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
 

நபி வழி "தொழுகை முறை" _ப்ளக்ஸ் பேனர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக

12.07.2013 அன்று "தொழுகை முறை" என்ற தலைப்பில் நபி வழியில் தொழுகை முறைகளை ஹதீஸ் ஆதாரத்துடன் ப்ளக்ஸ் அடித்து மக்கள் படிக்கக்கூடிய வகையில் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Friday, 12 July 2013

நபி வழியில் ஜும்ஆ V.K.Pகிளை புதிய ஜும்ஆ



 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று  " நபி வழியில் ஜும் ஆ தொழுகை " மதரசத்துத் தவ்ஹீத் மதரசாவில் ஆரம்பம் செய்யப்பட்டது . இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர் இதில் சகோதரர் .அஹமத் கபீர் அவர்கள் "நபி வழியில் ஜும்ஆ" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.   அல்ஹம்துலில்லாஹ்


நோன்பின் நோக்கம் _பெரியகடைவீதி ரமலான் இரவுத்தொழுகை பயான்



 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பில் 10.07.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "நோன்பின் நோக்கம்  " எனும் தலைப்பில் சகோ.ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவோம் V.K.Pகிளை இரவு பயான்


Inline image 1

Inline image 2

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக11.07.2013 அன்று  இரவு தொழுகை நடைபெற்று அதில் அதிகமான ஆண்களும் ,பெண்களும்
கலந்துக்கொண்டனர். தொழுகைக்கு பிறகு சகோதரர்.ஷபியுல்லாஹ் அவர்கள் "அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 11 July 2013

ரமலான் பலன்களை பாதுகாப்போம் _உடுமலைகிளை ரமலான் பயான்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 10.07.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தஃவா பள்ளியில்  ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலான் பலன்களை பாதுகாப்போம் " எனும் தலைப்பில் சகோ.சேக் அப்துல்லாஹ்    அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ரமலான் ஓர் அறிமுகம் _காங்கயம்கிளை ரமலான் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பில் 10.07.2013 அன்று காங்கயம் மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலான் ஓர் அறிமுகம் " எனும் தலைப்பில் சகோ.ஹுசைன்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

பாவமன்னிப்பு _M.S.நகர் கிளை ரமலான் பயான்

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 10.07.2013 அன்று M.S.நகர் மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "பாவமன்னிப்பு" எனும் தலைப்பில் சகோ.மங்கலம் தவ்பீக்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ரமலானின் சட்டதிட்டங்கள் _S.V.காலனி கிளை ரமலான் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 10.07.2013 அன்று S.V.காலனி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலானின் சட்டதிட்டங்கள்" எனும் தலைப்பில் சகோ.சேக் பரீத்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Wednesday, 10 July 2013

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10-07-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

ரமலான் _ மங்கலம் கிளை நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08-07-2013 அன்று ரமலான் என்ற தலைப்பில் 1500 நோட்டிஸ் அச்சிட்டு மாணவர் அணியின் சார்பாக விநியோகம் செய்யப்பட்டது

Tuesday, 9 July 2013

"மாறும் உலகில் மாறாத இஸ்லாம்"S.V.காலனி கிளை போஸ்டர்கள்



  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில்
இன்ஷாஅல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும்,மெகா டிவியில் ஒளிபரப்பாகும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் என்ற நிகழ்ச்சிக்காகபோஸ்டர்கள் அச்சிட்டு  ஒட்டப்பட்டது 

V.K.P.கிளை நபி வழியில் தொழுகை,ஜும்மாஹ் மற்றும்இரவுத்தொழுகை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் vkp கிளையின் சார்பாக " புதிய ஜும்ஆ " vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
மேலும் ,இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதம் முதல் நாளிலிருந்து ஐவேளை தொழுகைகள் தொடர்ச்சியாக தினசரி vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
மேலும் ,இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதம் முதல் நாளிலிருந்து இரவு தொழுகை vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
இதில் ,பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது அல்ஹம்துலில்லாஹ்




  

"மாறும் உலகில் மாறாத இஸ்லாம்" மங்கலம் கிளை போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-07-2013 அன்று மங்கலம் பகுதிகளில்போஸ்டர் தாவா ,


இன்ஷாஅல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும்,மெகா டிவியில் ஒளிபரப்பாகும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் என்ற நிகழ்ச்சிக்காக 500  லேம்ப் போஸ்டர்கள் அச்சிட்டு மின்கம்பங்கள் மற்றும் வீட்டு வாசல்களில் ஒட்டப்பட்டது 

இறைவனின் தூய்மையான பதிவேடு _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09-07-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் இறைவனின் தூய்மையான பதிவேடு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

ரமலான் _V.K.P.கிளை நோட்டிஸ்தாவா




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில்
08.07.2013 அன்று " ரமலான் " என்ற தலைப்பில் இன்றைய காலகட்டத்தில் ரமலான் மாதத்தில் பரவியுள்ள பித்அத்களை இனங்காட்டும் விதமாகவும் , மறைக்கப்பட்ட சுன்னத்தான செயல் முறைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் முகமாகவும் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரத்துடன் நோட்டிஸ் அடித்து(வடுகன்காளிபாளையம்) ஊர் முழுவதும் விநியோகம் செய்யது தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.......