Tuesday, 25 December 2012

தர்ஹாக்களில் நடப்பது என்ன ? கேசட் தஃவா



 நீங்களும் செய்யலாமே
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக நவம்பர் முழுவதும் தர்ஹாக்களில் நடப்பது என்ன என்ற கேசட்டை மங்கலம் நால்ரோடு, காயிதேமில்லத் நகர், ஜக்கரியா காம்பவுன்ட், R.P.நகர், கொள்ளுக்காடு, கணபதிபாளையம் ரோடு, சின்ன பள்ளிவாசல், கோல்டன் டவர், EB.ஆபிஸ் அருகில், ஸ்டார்நகர்,சின்னவர் தோட்டம், இந்தியன் நகர், அன்பு இல்லம், வடுகன்காளிபாளையம், 
ஆகியபகுதிகளுக்கு சென்று சலுகை விலை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது 
(குறிப்பு : இலவசமாக கொடுத்தால் மக்கள் அலட்சியமாககருதுவார்கள்
என்பதால் சலுகை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது) 
இவ்வாறு விற்பனை செய்ததால் ஆர்வத்தோடு மக்கள் கேசட்டை வாங்கிச் சென்றார்கள்
300கேசட்கள் இவ்வாறாக விற்பனை செய்யப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

இஸ்லாம் ஒர் இனியமார்க்கம் _ உடுமலை _23122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக   23.12.2012 அன்று உடுமலையில் நடைபெற்ற "இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சியில்
ஏராளமான பிறமத மற்றும் பிறகொள்கை சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு அவர்களின் இஸ்லாம் மார்க்கம் குறித்த
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு
சகோ.பக்கீர் முஹமது அல்தாபி அவர்கள் ,
தெளிவான பதில் மூலம் சத்திய இஸ்லாத்தினை எடுத்துரைத்தார்.
 இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான இஸ்லாமிய
சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டனர்.


கலந்து கொண்ட சகோதர சகோதரிகளுக்கு "இஸ்லாம்கூறும்கடவுள்கொள்கை " ,யார் இவர்?
ஆகிய துண்டு பிரசுரங்கள் , 
"அறிவை இழப்பதற்கா ஆன்மிகம் ",யார்கடவுள்?  மற்றும்  "மனிதன் கடவுளாக முடியுமா?" ஆகிய DVD கள் ,
 மற்றும் "மாமனிதர் நபிகள் நாயகம் " புத்தகம் வழங்கப்பட்டது.

உடுமலை கிளை சகோதரர்கள் திருப்பூர் மாவட்ட சகோதரர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தினர்.

மேலும் இந்த நிகழ்ச்சி  
TNTJ web master சகோ.S.M.அப்பாஸ் அவர்களால் onlinepj.com இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால்,
உலகமெங்கும் ஏராளமானோர் கண்டு பயன்பெற்றனர்.
குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் உள்ளூர் கேபிள் டிவியில்
நேரடி ஒளிபரப்பு  செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

பேச்சாளர் பயிற்சிவகுப்பு _மங்கலம் _23-12-2012



தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை மாணவர்அணியின் சார்பாக 23-12-2012 அன்று பேச்சாளர் பயிற்சிவகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்.பிலால்அவர்கள் "பெற்றோரைபேணுவோம்" என்றதலைப்பிலும், சகோதரர்.யூனுஸ்அவர்கள்"குர்ஆன்இறைவேதமே" என்றதலைப்பிலும், சகோதரர்.அப்துர்ரஹ்மான்அவர்கள் "இஸ்லாம் இறைமார்க்கமே"என்றதலைப்பிலும், சகோதரர்இத்ரீஸ்அவர்கள் "வெற்றியாளர்கள்யார்?"என்றதலைப்பிலும், சகோதரர்.சம்சுதீன்அவர்கள் "மதுவைஒழித்தஇஸ்லாம்"என்றதலைப்பிலும்,உரையாற்றினார்கள்.(அல்ஹம்துலில்லாஹ்)

Saturday, 22 December 2012

வட்டி இல்லா கடன் உதவி _உடுமலை _21.12.2012

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
21.12.2012
அன்று  
வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில்
உடுமலை  சகோதரர்.
அக்பர் அலி
அவர்களுக்கு ரூ.10000/= 
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

Friday, 21 December 2012

வட்டி இல்லா கடன் உதவி _ உடுமலை _18122012

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
18.12.2012
அன்று  
வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில்
திருப்பூர் செரங்காடு சகோதரர்.
முஹமது யூசுப்
அவர்களுக்கு ரூ.10000/= 
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

உடுமலை"இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" தாவா ப்ளெக்ஸ் பேனர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக வருகிற 23.12.2012 அன்று உடுமலையில் நடைபெற உள்ள"இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சிக்கு  தாவா ப்ளெக்ஸ் பேனர்கள்

உடுமலைஇஸ்லாம் ஒர் இனியமார்க்கம் _ப்ளெக்ஸ் பேனர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக வருகிற 23.12.2012 அன்று உடுமலையில் நடைபெற உள்ள

"இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சிக்கு  ப்ளெக்ஸ் பேனர்கள் 

நான் முஸ்லிம் தாவா_ நல்லூர் -21.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 21.12.2012 அன்று நல்லூர் V.S.A. நகரில் முஸ்லிமல்லாத பிற  மக்களிடம் வருகிற 23.12.2012 அன்று உடுமலையில் நடைபெற உள்ள"இஸ்லாம் ஒர் இனியமார்க்கம்" நிகழ்ச்சிக்கு  அழைப்பிதழ் கொடுத்து தாவா செய்யப்பட்டது.


"உலக அழிவு நாள் " _போஸ்டர்தாவா _நல்லூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 19.12.2012 அன்று நல்லூர்  அணைத்து சர்சுகள் ,நகராட்சி அலுவலகம்,
பஸ்நிலையம் உட்பட பிரதான பகுதிகளில் "உலக அழிவு நாள் " என்ற தலைப்பில் குர்ஆன்ஹதீஸ் வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டி தாவா செய்யப்பட்டது .

தெருமுனைபிரச்சாரம் _நல்லூர் _16.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 16.12.2012 அன்று மாலை 07:00முதல் நல்லூர்பகுதியில்  
தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ரசூல் மைதீன்   அவர்கள்
"தற்பெருமை  " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

தெருமுனைபிரச்சாரம் _யாசின்பாபுநகர் _இஸ்லாம் கூறும் நற்பண்புகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
யாசின் பாபு நகர் கிளை சார்பாக 16.12.2012 அன்று மாலை 07.30 முதல் 
யாசின் பாபு நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.பசீர் அவர்கள்" 
இஸ்லாம்  கூறும்  நற்பண்புகள்  "
என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

மாவட்ட பேச்சாளர்களிண் ஆலோசனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 
 மாவட்ட  பேச்சாளர்களிண்  ஆலோசனை  (மசூரா)
17.12.2012  ஞாயிற்றுக்கிழமை அன்று   காலை 10  மணி முதல்
மாவட்ட துணைச்செயலாளர்.சகோ.  சேக்  பரீத்  தலைமையில்
மாவட்ட மர்கஸில் நடை பெற்றது.
இதில் தாயிகளின் நிறை குறைகள் அலசப்பட்டு
பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமும்
பிரசாரம் செய்ய வேண்டிய முறை,
அதன் நன்மையையும் எடுத்து சொல்லப்பட்டு
நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் _19122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 19.12.2012 அன்று மாலை08:00முதல் வெங்கடேஸ்வராநகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. ஜபருல்லாஹ் அவர்கள்
" இன்றைய இளைஞர்களின்  நிலை "
என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்
.

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் _18122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 18.12.2012 அன்று மாலை08:00முதல் வெங்கடேஸ்வராநகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் ரசூல் மைதீன்அவர்கள்" 
இஸ்லாம்  பெண்களின் உரிமையை  பறிக்கிறதா ? "
என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

Wednesday, 19 December 2012

தாராபுரம் _கேள்வி- பதில் நிகழ்ச்சி_14.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
தாராபுரம்  கிளை சார்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தமது மார்க்க  அறிவை வளர்த்துக்கொள்ள அல்குரான்- ஹதிஸ்  
கேள்வி- பதில்  நிகழ்ச்சி நடைபெற்றது.
14.12.2012 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வளாகத்தில் சரியான பதில் அளித்த 5 நபர்களுக்கு  பரிசளிப்பு விழா நடைபெற்றது.



Tuesday, 18 December 2012

பெண்கள்பயான் _V.K.P _16122012



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளையின் சார்பாக 16-12-2012 அன்று மாலை 04:30 மணி முதல்  06:00 மணி வரை  
V.K.P.யில் உள்ள தவ்ஹீத் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது 
சகோதரி சுமையா அவர்கள் துஆக்களின் சிறப்பு  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
(அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தஃவா _மங்கலம் _17122012







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் 17-12-2012 அன்று மங்கலத்தில் உள்ள முக்கியமான 15 பகுதிகளில் கரும்பலகை தஃவா செய்யப்பட்டது. இது சிறந்த ஒரு தஃவாவாக அமைந்துள்ளதுஇதில் அனைத்து கரும்பலகைகளிலும் தினமும் ஒரே மாதிரியான குர்ஆன் மற்றும் ஹதீஸ் களை எழுதுவது என முடிவு செய்யப் பட்டது