Monday, 29 December 2014
பெண்களில்நபிமார்கள்இல்லாததுஏன்? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

இதில், சகோ. செய்யது அலி அவர்கள் பெண்களில்நபிமார்கள்இல்லாததுஏன்? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
“ இஸ்லாத்தின் பார்வையில் மவ்லிது “ _ வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

சார்பாக 26-12-2014 அன்று மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில் நடைபெற்றது இதில்
சகோ.யாசர் அவர்கள் “ இஸ்லாத்தின் பார்வையில் மவ்லிது “ என்ற
தலைப்பில் முந்தைய நாள் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் மவ்லிது பற்றி உரையாற்றப்பட்ட பயானுக்கு பதில் கொடுக்கக்கூடிய வகையில் உரையாற்றினார்
இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர் .....அல்ஹம்துலில்லாஹ்
பிறமதசகோதரர். மயூரா விற்கு தாஃவா செய்து, திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகம்

இதில்,
நாத்திக சிந்தனை கொண்டிருக்கும் பிறமத சகோதரர் மயூரா என்பவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை குறித்து விளக்கம் அளித்து, திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
Sunday, 28 December 2014
"தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரவிளைவுகள் _திருப்பூர் மாவட்ட செயற்குழு

மாநில செயலாளர் சகோ.கோவை M.அப்துர்ரஹீம் அவர்கள்,
நம் ஜமாஅத் சார்பில் கடந்த அக்டோபர் 15 முதல் நவம்பர்15 வரை ஒரு மாதம் செய்த "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்" ஏற்படுத்திய விளைவுகளை பட்டியலிட்டு, இது போன்ற பிரச்சாரங்களை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியங்களையும், வழிமுறைகளையும் விளக்கினார்.

கிளை நிர்வாகிகளிடம் இந்த பிரச்சாரம் செய்ததில் ஏற்பட்ட அனுபவங்களை கேட்கப்பட்டது.
இந்த பிரச்சாரம் எளிதாக தூய இஸ்லாத்தினை பிறமக்களுக்கு எடுத்து சொல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியது என்றும்,
அரசுதுறை அதிகாரிகள், பல்வேறு பிரமுகர்களின் இஸ்லாத்தினை பற்றிய தவறான கண்ணோட்டத்தை போக்கும் வகையில் அமைந்தது என்றும்,
பல்வேறு கோணத்தில் கருத்து தெரிவித்தனர்.


தொடர்ந்து மாநிலமேலாண்மைகுழு உறுப்பினர் சகோதரர். M.S.சுலைமான் அவர்கள் "நிர்வாகிகள், பிரச்சாரகர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குகள்" பற்றியும், முக்கியமாக தற்கால நவீன பிரச்சார கருவிகளான பேஷ்புக், வாட்சாப் போன்ற சாதனங்களை பயன்படுத்தும் ஒழுங்குகள் பற்றியும் வருங்காலத்தில் பிரச்சாரத்தை வீரியமாக செய்ய பல்வேறு ஆலோசனைகளையும் அழகாக எடுத்து சொல்லி உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)