Thursday, 25 April 2013

கிரகணத்தொழுகை 25042013


சந்திர கிரகணம்
=============

இன்று இரவு 1,20 லிருந்து 1:55 மணி வரை சந்திரகிரகணம் ஏற்படுகிறது
1040. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :1 Book :16

அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 1,20 லிருந்து 1:55 மணி வரை திருப்பூர் மாவட்ட மர்க்கஸ்
மஸ்ஜிதுரஹ்மான் பள்ளிவாசலில் நபி வழி கிரகணத்தொழுகை  நடை பெறுகிறது

இதைப்போன்று பல்லடம், மங்கலம். M.S நகர், உடுமலை, தாராபுரம்,மடத்துக்குளம்,ஆண்டிய கவுண்டனூர்  ஆகிய கிளை மர்கஸ்களில் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 1,20 லிருந்து 1:55 மணி வரை கிரகணத்தொழுகை நடை பெறுகிறது
அனைவரும் கலந்து கொண்டு இறைவனின் அருளை பெர
அன்புடன் அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

திருப்பூர் மாவட்டம்

தொழுகை முறை .....

தொழுகை முறை .....
***********************************

** சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.


** கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.

** பள்ளியில் தொழ வேண்டும்

** இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.

** இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்

** ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும்

** நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்

** கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும்.

** மேலும் திக்ர் செய்தல், பாவமன்னிப்புத் தேடல், தர்மம் செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.

இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:

'நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1500

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது 'அஸ்ஸலாத்து ஜாமிஆ' என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்கள்: புகாரீ 1051, முஸ்லிம் 1515

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள்...

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் )1500

நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1065, முஸ்லிம் 1502

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் - முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம் - ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழந்தார்கள். பின்னர் 'இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ, வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1500

'நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ' என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் கிரகணம் விலகியது. அன்று செய்த ருகூவுவைப் போல் நீண்ட ருகூவை நான் செய்ததில்லை. அன்று செய்த நீண்ட ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை' என்று ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1515

'கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; அவனைப் பெருமைப்படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1044, முஸ்லிம் 1499

சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவு செய்வது ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அது வரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவரது மரணத்திற்காகவோ, வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தனது அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும், பிரார்த்திக்கவும், பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்கள்: புகாரீ 1059, முஸ்லிம் 1518

அனைவரும் தொழுது அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவோம்!

    பிறமத சகோதரர்.சுந்தர் க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் _V.K.P.கிளை



         

    தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்V.K.P.கிளை  சார்பில் 24.04.2013அன்று  பிறமத சகோதரர்.சுந்தர் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
     அல்ஹம்துலில்லாஹ்.



    Wednesday, 24 April 2013

    மருத்துவ உதவி _பெரியதோட்டம்கிளை _23042013


    TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 23.04.2013அன்று மாதர்ஸா என்ற முதியவரின் தோல்பட்டையில் எழும்பு விலகிய சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக ரூ 1677 வழங்கப்பட்டது

    "தொழுகை " -வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


    TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளையின் சார்பாக 23.04.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் சாஹிது ஒலி  அவர்கள் "தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது

    Tuesday, 23 April 2013

    தண்ணீர் மற்றும் நீர் மோர் _காலேஜ்ரோடுகிளை _23042013





    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை சார்பாக காலேஜ்ரோடுகிளை பள்ளிவாசல் மஸ்ஜிதுல் முபீன் அருகில் பிரதான சாலையின் ஓரத்தில் பந்தல் அமைத்து கோடைகாலத்தில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் மற்றும் நீர் மோர் ஆகியவற்றை  பொது மக்களுக்கு வழங்கினர்.

    என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு... கவுன்சிலிங்கிற்காக மே 4 முதல் விண்ணப்பங்கள் விற்பனை


    என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு வேண்டுகோள்‏..
    என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அண்ணாபல்கலைக்கழகம் வேண்டுகோள்: முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை பெற்று தயாராக வைத்திருங்கள்


    பிளஸ்–2 முடித்துவிட்டு என்ஜினீயரிங் சேர முடிவை நோக்கி இருக்கும் மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை இப்போதே பெற்று தயாராக வைத்திருங்கள் என்று அண்ணாபல்கலைக்கழகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.


    என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை :
       தமிழ்நாட்டில் 552 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சேர 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் ஒற்றைச்சாளர முறையில் அண்ணாபல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்தி மாணவர்களை சேர்க்கிறது.
    இந்த கவுன்சிலிங்கை சென்னை கிண்டியில் உள்ள அண்ணாபல்கலைக்கழகம் வருடந்தோறும் நடத்தி வருகிறது. வருடந்தோறும் என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதுபோல பி.இ. படிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
    பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 10–ந்தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடுவதற்கு முன்னதாக பி.இ. படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் அண்ணாபல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு மையங்களில் விநியோகிப்பது வழக்கம். அதுபோல இந்த வருடமும் பிளஸ்–2 தேர்வு முடிவு வருவதற்கு முன்னதாக விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட உள்ளன. 

     இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்காக மே 4ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விற்பனை!


    பொறியியல் சேர்க்கை தொடர்பான முழு அட்டவணையை, பொறியியல் சேர்க்கை செயலர், ரெய்மண்ட் உதிரியராஜ், 22.04.2013 வெளியிட்டார். அதன் விவரம்:




    * விண்ணப்பம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியீடு 3.5.13

    * விண்ணப்பம் வினியோகம் ஆரம்பம் 4.5.13

    * விண்ணப்பம் வழங்க, கடைசி நாள் 20.5.13

    * பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 20.5.13

    * "ரேண்டம்' எண் வெளியீடு 5.6.13

    * "ரேங்க்' பட்டியல் வெளியிடும் தேதி 12.6.13

    * மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கும் நாள் 21.6.13

    * கலந்தாய்வு முடியும் நாள் 30.7.13

    இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார்.

    விண்ணப்பம் வழங்கும் இடங்கள் மற்றும் சேர்க்கை அட்டவணை தொடர்பான விவரங்கள் அனைத்தையும், www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
    சான்றிதழை இப்போதே பெறுக :
    வழக்கமாக என்ஜினீயரிங் சேரும் மாணவர்கள் கவுன்சிலிங்கிற்காக விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு பல்வேறு சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் வைத்திருக்கவேண்டும்.

    அதுபோல சுதந்திரபோராட்ட வீரர் வாரிசாக இருந்தால் அதற்குரிய சான்று, முன்னாள் ராணுவத்தினர் மகளாக, மகனாக இருந்தால் அதற்குரிய சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்று, சொந்த நாட்டில் வசிப்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்கவேண்டும்.
    ஆனால் பலர் கவுன்சிலிங் நேரத்தில் சான்றிதழ் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். எனவே இப்போதே அந்த சான்றிதழ்களை தேவைப்படுபவர்கள் உரிய அதிகாரிகளிடம் பெற்று தயாராக வைத்திருக்கவேண்டும்.
    இந்த அறிவிப்பை அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) பேராசிரியர் காளிராஜ், என்ஜினீயரிங் மாணவர்சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் வேண்டுகோளாகவிடுத்துள்ளனர்.
    விண்ணப்ப படிவங்கள் :

    மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்துவதற்காக விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் தயாராக வைக்கப்பட இருக்கின்றன.
    இந்த வருடமும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் என்ஜினீயரிங் படிப்பில்சேர இடம் கிடைக்கும் என்று அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    sourse:  tntjsw.net
     

    "பில்லி- சூனியம் " -பெரியகடை வீதி கிளைபெண்கள் பயான் 21042013

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பில்  21.04.2013 அன்று பெண்கள் பயான்   நடைபெற்றது.  இதில் சகோதரி.ஜமீலா  அவர்கள் "பில்லி- சூனியம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.

    நரக வேதனை _பெரியகடை வீதி கிளைதெருமுனை பிரச்சாரம் 16042013

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பில்  16.04.2013 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  இதில் சகோ.ராஜா  அவர்கள் "நரக வேதனை " எனும் தலைப்பில்
    நரகத்தின் தன்மைகளை விரிவாக விளக்கி ,அந்த நரகத்திலிருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பு பெற தீமைகளை தவிர்த்து நன்மைகளை செய்வோம்.என உரையாற்றினார்.

    பிறமத சகோதரர்.ரமேஷ் அவர்களுக்கு "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" தாவா _V.K.P.கிளை

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை  சார்பில் 22.04.2013 அன்று  பிறமத சகோதரர்.ரமேஷ்   அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவருக்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ,மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் மற்றும் திருப்பூர் இனிய மார்க்க DVD வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
    அல்ஹம்துலில்லாஹ்.

    ஆபாசத்தால் சீரழியும் குடும்ப வாழ்க்கை



    ஆபாசத்தால் சீரழியும் குடும்ப வாழ்க்கை

    இன்டர்நெட் ஆபாசங்களால் சிறார்கள் சீரழிவது போதாதென்று பலரது குடும்ப வாழ்வும் சீரழிந்து வருகின்றது.

    ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கையறையில் சிறப்பாக செயல்பட முடியாது என்று ஒரு ஆய்வு எச்சரிக்கிறது. ஆண்கள்தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் படம் பார்ப்போர் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

    இப்படி ஆபாசப் படம் பார்க்கும், குறிப்பாக இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை அடிக்கடி பார்ப்போரால், படுக்கை அறையில் நிஜமான உடலுறவு நடவடிக்கையில் முழுமையாக செயல்பட முடியாமல் போகின்றது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆபாசப் படங்களை பார்ப்போர் பல பிரச்சினைகளுக்கு ஆளாவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

    வீடியோவில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பாதியளவு கூட ஆண்களால் படுக்கை அறையில் காட்ட முடிவதில்லை.



    இதற்கு முக்கியக் காரணம், மூளையின் உற்சாக மையத்தைத் தூண்டி விடக்கூடிய ஹார்மோனான, டோபமைன் அபரிமிதமான அளவில் சுரப்பதே ஆகும் என்று கண்டுபிடித்துள்ளனர். அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து உணர்ச்சி வசப்படுவோருக்கு டோபமைன் அதிக அளவில் சுரந்து, சுரந்து கடைசியில், உண்மையான இன்பத்தை அனுபவிக்க நேரிடும்போது அதனால் பலன் இல்லாமல் போய் விடுகிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

    இப்படி ஆபாசப் படம் பார்த்து உண்மையான உற்சாகத்தையும், இன்பத்தையும் தொலைத்து நிற்கும் பலரும் தற்போது இது குறித்த கவுன்சிலிங்கிற்கு அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து செக்ஸாலஜிஸ்ட் ஒருவர் கூறுகையில், ஆபாசப் படம் பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் உள்ளது. இன்டர்நெட் மூலம் ஆபாசப் படம் பார்ப்போர் பெருமளவில் பெருகி விட்டனர். இதனால் உண்மையான செக்ஸ் நடவடிக்கைகளில் இவர்களால் ஈடுபடுவதில் பல சிரமங்களைச் சந்திக்கின்றனர்.

    அதிக அளவிலான செக்ஸ் நடவடிக்கைகளைப் பார்த்துப் பார்த்து இவர்கள் மனரீதியாக களைத்துப் போய் விடுகின்றனர். அதில் ஒரு சலிப்பும், அலுப்பும் வந்து விடுகிறது. டோபமைன்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.

    இப்படிப்பட்ட செக்ஸ் பட அடிமைகள், படிப்படியாக ஆபாசப் படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் இல்லற வாழ்வை இழந்து தவிக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

    மேற்கண்ட ஆய்வு முடிவை உண்மைப்படுத்தும் விதமான ஒரு வழக்கு சென்ற மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விபரம் பின்வருமாறு :

    ஆபாசப் படம் பார்த்ததால் வந்த கேடு!

    எழும்பூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் ஒருவருக்கு 25 வயதுப் பெண்ணுடன் திருமணம் செய்விக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு இந்தத் திருமணம் நடைபெற்றது.

    2 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பிறகு 2009ஆம் ஆண்டு கணவர் சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் தன் மனைவிக்கு உடலுறவில் நாட்டம் இல்லை; எனவே எனக்கு அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று மனு செய்திருந்தார்.

    ஆனால் மனைவியும் ஒரு விவாகரத்து மனு செய்தார். அதில் அவர், “தன் கணவர் ஆண்மையற்றவர்; தங்கள் இருவருக்கும் உடலுறவே நடக்கவில்லை; எனவே தனக்கு விவாகரத்து வேண்டும்”என்றும் தனியாக மனுச் செய்தார்.

    பிறகு நீதிபதி தம்பதியினரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இருவரும் உறவு வைத்துக் கொள்ள உடல் ரீதியாக எந்த விதத் தடையுமில்லை என்று மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர்.

    இதைத் தொடர்ந்து கவுன்சிலிங் முறையில் பிரச்சனையை அறிய தம்பதியினர் உளவியல் நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    உளவியல் நிபுணர்கள் இருவரையும் தனித்தனியாக, சேர்ந்து என்று பலநாட்கள் கவுன்சிலிங் நடத்தியதில் தெரியவந்த உண்மை வேறுவிதமாக இருந்துள்ளது.

    கணவர் இயற்கைக்கு மாறாக நடந்துகொள்ள வற்புறுத்துவதாகவும், ஆபாச வீடியோக்களை தினமும் பார்ப்பதாகவும் மனைவி கூறினார்.

    இதனையடுத்து கணவரும் தனது ஆபாசப் பட ஆர்வத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் தன் மனைவியிடம் இயற்கையான முறையில் உறவுகொள்ள நாட்டமில்லை என்றும், தன்னால் உறவு கொள்ள இயலவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார் கணவர்.

    இதையே உளவியல் நிபுணர்கள் அறிக்கையாகத் தயாரித்து, “இப்படி ஒருவர் ஆபாசப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தால் இயற்கையான உறவில் அவர்களுக்கு நாட்டமில்லாது போய்விடும்; இந்தக் கேசிலும் இதுதான் நிலைமை” என்று அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

    இதனையடுத்து கணவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்த குடும்பநல கோர்ட், மனைவியின் விவாகரத்து மனுவை ஏற்று விவாகரத்து வழங்கியது.

    ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டு கடைசியில் உடலுறவிலேயே நாட்டமில்லாத அளவிற்குச் சென்று ஆண்மையை இழந்து நிற்கும் இந்த இழிநிலை தேவைதானா என்பதை ஆபாசப் படம் பார்ப்போர் சிந்திக்க வேண்டும்.

    இப்படி ஆண்மையற்ற கணவன்கள் அதிகரிக்கும்போது அவர்களது மனைவிமார்கள் தங்களுக்கு வேறு வடிகாலின்றி விபச்சாரத்தின் பக்கம் தள்ளப்படுகின்றனர். விபச்சாரத்தின் பக்கம் செல்ல வழியில்லாத பெண்கள் தங்களது கணவனின் கதையை முடிப்பதற்கும் இதுதான் காரணமாக உள்ளது. இதனால் விபச்சாரமும், கொலைகளும் பெருகுகின்றன.

    கள்ளக்காதல்களும், அதனால் ஏற்படும் கொலைகளுக்கும் இந்த ஆபாசப் படங்கள்தான் காரணமாக உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆபாசப் படம் பார்த்தால் மட்டுமல்ல; அறைகுறை ஆடை அணிந்த பெண்களைப் பார்ப்பதும் ஆபத்து!

    ஆபாசப் படங்களைப் பார்ப்பது மட்டும்தான் ஆண்மைக் குறைவுக்கு காரணம் என்று நாம் விளங்கிக் கொள்ளக்கூடாது. அறைகுறையாக கவர்ச்சியாக ஆடை அணிந்து செல்லும் பெண்களைப் பார்ப்பதும் கூட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டு உடலுறவில் நாட்டமில்லாமல் செய்துவிடும் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

    பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

    அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்தப் புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இதுகுறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.

    இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.

    அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு.

    முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் எனக் கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்தக் குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது

    உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.

    அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்தத் தொடர்பு தெரிய வந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் உடைகள் மறைக்காத உடலின் பாகங்களால் ஆண்களின் தூண்டப்படும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.

    முக்கால்வாசி ஆண்மைக் குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

    நாங்கள் ஆபாச ஆடை அணிந்தால் உங்களுக்கென்ன? என்று வெட்டி நியாயம் பேசும் பெண்கள் மேற்கண்ட செய்தியைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிற பெண்கள் அணிந்து செல்லும் ஆபாச ஆடைகளையும், கவர்ச்சிக் காட்சிகளையும் உங்கள் வீட்டு ஆண்கள் உற்று நோக்கினால் அதனால் ஆண்மைக்குறைவு ஏற்பட்டு, இல்லற வாழ்வை இழந்து அவதிப்பட்டு, அதனால் பாதிக்கப்படுபவர்கள் வெட்டி நியாயம் பேசும் இந்தப் பெண்கள்தான் என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

    (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

    அல்குர் ஆன் 24 : 30


    செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

    அல்குர் ஆன் 17 : 36


    ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்படுமா? :

    - சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை!

    ஆபாச இணையதளங்கள் அதிகரித்துள்ளது குறித்து, கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அவற்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    கமலேஷ் வஸ்வானி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநலன் கோரும் மனு, தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆபாச இணையதளங்கள் ஏராளமாக பெருகியுள்ளன. அவற்றைத் தடை செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

    அந்த மனு, தலைமை நீதிபதி, அல்டமாஸ் கபீர் தலைமையிலான, "டிவிஷன் பெஞ்ச்' முன், 15.04.13 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

    "இணையதளங்களில், ஆபாச இணையதளங்கள் ஏராளமாக உள்ளன; அவற்றில், குழந்தைகளை நிர்வாணமாக காட்டும் இணையதளங்கள் பெருகியுள்ளன; அத்தகைய இணைய தளங்களைப் பார்க்கும் சிறுவர் சிறுமியர், அது போன்ற குற்றங்களில் ஈடுபட, வாய்ப்பு இருக்கிறது' என, கவலை தெரிவித்தனர்.

    மேலும், "ஆபாச இணையதளங்களைக் கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்ட நீதிபதிகள், "அவற்றை முழுவதும் தடை செய்ய என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தனர்.

    மத்திய அரசாங்கம் நினைத்தால் ஆபாச இணையதளங்களை ஒரே நிமிடத்தில் தடை செய்துவிடலாம். ஆபாச இணையதளங்களால் ஏற்படும் கேடுகளை மத்திய அரசாங்கம் அறியாமலில்லை. மத்திய அரசாங்கத்தின் ஆசியோடுதான் அவை அரங்கேறி வருகின்றது என்பதுதான் உண்மை.

    நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இவைகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்பதுதான் ஒழுக்க சீலர்களின் எதிர்ப்பார்ப்பு.

    ஆபாசப்படம் பார்ப்போருக்கு மன அழுத்தம் :

    - லண்டன் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

    பிரிட்டன் ஆண்கள் அதிக அளவில் ஆபாச படங்களை பார்ப்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பணியிடங்கள், கணவன்-மனைவி உறவு உள்ளிட்டவற்றில் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அண்மையில், பிரிட்டனில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் குறித்து, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிட்டன் இளைஞர்களில் நான்கில் ஒரு பங்கு இளைஞர்கள் ஆபாசப்படம் பார்க்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதனால் அதிக நேரம் தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பதால், மன அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனமின்மை, உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றில் பிரச்னை எழுவது தெரியவந்துள்ளது.
    thanks:
    Ahamed Salam Tntj
      
    original sourse: http://www.onlinepj.com/unarvuweekly/abasathal_seeraziyum_kudumba_vazkai/

    Monday, 22 April 2013

    பார்வையைஇழந்த பிறமத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் திருப்பூர் மாவட்டம் 19042013


    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 19.04.2013 அன்று கண்களின் பார்வையை முற்றிலும் இழந்த பிறமத சகோதரர்.தீனதயாளன்   அவர்கள் நமது மர்கஸில் வருகை தந்து இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன் இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவற்றை பார்வையுடைய நண்பர்களை படிக்க வைத்து அறிவேன் என கேட்டதிற்கு இனங்க  திருக்குர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள்நாயகம், அர்த்தமுள்ளகேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள், இதுதான்இஸ்லாம், குற்றச்சாட்டுகளும் பதில்களும் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
    அல்ஹம்துலில்லாஹ்.

    கோடைகால தண்ணீர் பந்தல் _திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை




    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை சார்பாக 22.04.2013 அன்று முதல் காலேஜ்ரோடுகிளை பள்ளிவாசல் மஸ்ஜிதுல் முபீன் அருகில் பிரதான சாலையின் ஓரத்தில் பந்தல் அமைத்து கோடைகாலத்தில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் மற்றும் நீர் மோர் ஆகியவற்றை  பொது மக்களுக்கு வழங்கினர்.

    "நல்ல மனைவி"_செரங்காடு கிளை பெண்கள் பயான் 20042013


    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பில் 20.04.2013அன்று  யாசின்-பாபு நகர்பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது.அதில் "நல்ல மனைவி" எனும் தலைப்பில் சகோ.செரங்காடு அப்துல்லாஹ்  அவர்கள் உரைநிகழ்த்தினார்.

    V.K.P. கிளை இரத்த தான முகாம் 21042013


    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பில்  21.04.2013 அன்று சூலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் V.K.P. கிளை மற்றும்   திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.  இதில் 40 சகோதரர்கள்  இரத்த தானம்  வழங்கினார்கள்.


     




     மேலும் அங்கு நடைபெற்ற இரத்த பிரிவு கண்டறியும் முகாமில் 40 க்கும் மேற்பட்டோர் தமது இரத்த பிரிவை அறிந்து இரத்த தானம் வழங்க உறுதி ஏற்றனர்.





    "மரணம்" -பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம் -21042013

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில்  21.04.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.அப்துல்லா.M.I.Sc.,அவர்கள் "மரணம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது.

    "மரணசிந்தனை " பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம் _21042013


    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில்  21.04.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.சபியுல்லா அவர்கள் "மரணசிந்தனை " எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது.

    "இஸ்லாம் ஓர் அறிமுகம் " -S.V.காலனி கிளை தெருமுனை பிரச்சாரம் _21042013

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில்  21.04.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது.

    Sunday, 21 April 2013

    M.S.நகர் கிளை பொதுக்குழு 20130421


    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 21.04.2013 அன்று காலை 8 to 8:30 மணிவரை M.S.நகர் கிளையின் பொதுக்குழு மாவட்டநிர்வாகிகள் மா.செயலாலர்.ஜாஹிர் அப்பாஸ்
    மா.பொருலாலர்.சலிம் பாய்
    மா.து.செயலாலர்.அலாவுதீன்
    அவர்கள் தலைமையில் நிர்வாகமாற்றம் செய்யப்பட்டது

    புதிய நிர்வாகம்
    தலைவர் ; A.முஹம்மத் 9025031316

    செயலாலர்: சாதிக் பாஷா 9566784878

    பொருலாலர்: சிராஜ் தீன் 7871888444

    து.தலைவர் :அப்சர் 8925341978

    து.செயலாலர் : திவான்9629254448

                                                                                         மருத்துவ அணி : அர்சத்9952886394

                                                                              தொன்டர் அணி : அப்துல்லாஹ்9865986567

    மடத்துக்குளத்தில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி மழை தொழுகை- 21042013




    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 21.04.2013 ஞாயிறு காலை 8 மணிக்கு மடத்துக்குளம் A.R.M. மஹால் வளாக திடலில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி மழை தொழுகை நடைபெற்றது..
    மடத்துக்குளம் மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய
    பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்தனர்.



    Saturday, 20 April 2013

    மருத்துவ உதவி _தாராபுரம் 19042013

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக 19.04.2013 அன்று
    தாராபுரம் பகுதியை சேர்ந்த காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்ட  சகோ. அவர்களின் மருத்துவ செலவினகளுக்காக  ரூ.3000 /= வசூல் செய்து  மருத்துவ உதவி வழங்கப்பட்டது

    அல்குரான்- ஹதிஸ் கேள்வி- பதில்நிகழ்ச்சி தாராபுரம் _19042013

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தமது மார்க்க  அறிவை   வளர்த்துக்கொள்ள அல்குரான்- ஹதிஸ்  கேள்வி- பதில்நிகழ்ச்சி  நடைபெற்றது.
     
    தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வளாகத்தில் 19.04.2013 அன்று
    சரியான பதில் அளித்த 5 நபர்களுக்கு  பரிசளிப்பு விழா நடைபெற்றது

    ஆஷிஷ் கேத்தன் -"ஐயா, நானே ஓர் இந்து. என் சமூகத்தை நானே இழிவாகக் காட்டுவேனா?


    "ஐயா, நானே ஓர் இந்து. என் சமூகத்தை நானே இழிவாகக் காட்டுவேனா? மதத்தின் பெயரால் நடத்தப்பட்டுள்ள படுபாதகக் குற்றங்கள்தான் இங்கே விசாரிக்கப்படவேண்டும். என் மத விருப்பங்களை அல்ல.’- ஆஷிஷ் கேத்தன்

    பாசிசத்தின் காரிருள் இந்நாட்டின் ஆட்சி, அதிகார, நீதி, ஊடக துறைகளையெல்லாம் சூறையாடி வரும் வேளையிலும் நீதியை நிலைநாட்டும் உறுதியுடன் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களில் ஒருவர் தாம் ஆஷிஷ் கேத்தன். எந்தவொரு முஸ்லிம் அமைப்புகளும் செய்ய இயலாத அர்ப்பணிப்புமிக்க காரியங்களை உயிரை பணயம் வைத்து 6 மாத காலம் டெஹல்காவுக்காக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை நேரடியாக சந்தித்து பேட்டியெடுத்து உலகிற்கு அவர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்திய ஆஷிஷ் கேதான் என்ற பத்திரிகையாளரை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
    இன்று பிழைப்புக்காய் மாறடித்து, எந்த அறமும் இல்லாது ஊடகங்களை கழிவறைகளாக மாற்றும் பத்திரிகையாளர் மத்தியில் எந்த சமரசமும் இல்லாமல் ஆஷிஷ் கேத்தன் செய்ததை நாங்கள் நன்றியுடன் நினைவுகூறுகிறோம்.

    அவரது 60 மணி நேரப் வீடியோ பதிவுகளில் கொலைகாரர்கள், காவல்துறை உயரதிகாரிகள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், அரசு வழக்கறிஞர்கள் என பலர் தோன்றி தங்களின் வீரதீரச் செயல்களை விரிவாக வர்ணித்தார்கள் .கோத்ராவில் ரயிலை எப்படி எரித்தார்கள், அதில் இருந்த கரசேவகர்களை எல்லாம் எப்படி நம் என் உயிர் தோழன் படத்தில் வரும் நாயகனைப் போல சங் பரிவார் ஆட்களே பலி கொடுத்தார்கள் என்பதையும் ஆதாரங் களுடன் மிக துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டினார் ஆஷிஷ் கேத்தன். அதன் பின் சிலரைப் பிடித்து மிரட்டி எப்படி எல்லாம் தவறான வாக்குமூலங்களைப் பதிவு செய்து கோத்ராவின் மிகவும் மதிக்கத்தக்க இஸ்லாமியத் தலைவர்களை சிறையில் அடைத்தார்கள் என்பதையும் இந்த வீடியோ பதிவுகள் உறுதிப்படுத்தின.



    பாபு பஜ்ரங்கி பல கொலைகளைச் செய்துவிட்டு நான் அவர்களை எல்லாம் கொன்ற பிறகு மகாராணா பிரதாப் ஆக உணர்ந்தேன் என்கிறான். மதன் சாவல், தான் எப்படி காங்கிரஸ் எம்.பி இஷான் ஜாப்ரியைத் தரை-யில் எட்டி உதைத்து, அவரைத் துண்டு துண்டாக வெட்டி, உயிருடன் தீயிட்டுக் கொளுத்தினோம் என்பதைத் துல்லியமாகக் கூறுகிறான். இன்னும் மூன்று மணி நேரம் மட்டுமே உள்ளது காரியத்தை முடிக்க என்பதை எப்படிக் கொலை-காரர்களுக்குத் தெரிவித்தான் என்பதை மங்கிலால் ஜெயின் பரபரப்புடன் விவரிக்கிறான். இது வரலாறு காணாததாக இருக்க வேண்டும் என்று தங்களின் தலைமை எப்படி உத்தரவிட்டது என்பதைப் பதிவு செய்கிறான் தீபக் ஷா. ராக்கெட் செலுத்தும் கருவியைத் தயாரித்ததை ஒரு விஞ்ஞானியைப் போல் விளக்கும் ஹரேஷ் பட்டுக்குப் பின்னர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி கொடுத்து அழகு பார்த்தான் நரேந்திர மோடி. நாங்கள் கொடுத்த ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பார்த்து எங்கள் ஆட்களே திகைத்துப் போனார்கள் என்று மேலும் கூறுகிறான் ஹரேஷ் பட். எப்படி இந்த இனப்படுகொலையின்போது குஜராத் காவல்துறையினரின் கண்களும் வாயும் மூடப்பட்டிருந்தது என்கிறான் பாபு பஜ்ரங்கி. நரேந்திர மோடி காவல்துறையை எங்களுக்காகப் பணிபுரியச் செய்தார் என்கிறான் வி.எச்.பி. தலைவர் ராஜேந்திர வியாஸ். ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தபோது எப்படி கொலைகாரர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி இருந்தது என்பதைக் கூறுகிறான் திமந்த் பட். காவல் துறையினரே எப்படி 70-&80 பேரைக் கொன்றார்கள் என்பதை சுரேஷ் ரிச்சர்ட் நினைவு கூர்கிறான். என்னை வெளியே கொண்டு வர நரேந்திர மோடி மூன்று முறை நீதிபதிகளை மாற்றினார் என காலரைத் தூக்கி விட்டுச் சொல்கிறான் பாபு பஜ்ரங்கி. இதே பாபு பஜ்ரங்கியைத்தான் நரேந்திர மோடி பல மாதங்கள் ராஜஸ்தானின் மௌண்ட் அபுபில் உள்ள பெரும் சொகுசு மாளிகையில் மறைத்து வைத்திருந்தான். கொலைகளைச் செய்தவர்கள் மீதான சில வழக்குகள் வலிமையற்றவை. கடவுளின் ஆசிர்வாதத்தால் சமாளித்தோம் என பெருமூச்சு விடுகிறான் மூத்த வழக்கறிஞரும் வி.எச்.பி. பொதுச்செயலாளருமான திலிப் திரிவேதி. மேலும் நீதிபதி கே.ஜி.ஷா நம்முடைய ஆள், நீதிபதி நானாவதிக்குப் பணம்தான் குறி என்கிறான் குஜராத் மாநில வழக்கறிஞர் அரவிந்த பாண்டியா.

    சிறப்புப் புலனாய்வுக் குழு முன்னால் தான் ஆஜராக விரும்புவதாக ஆஷிஷ் கேத்தன் தானே மனு செய்தார். அவர் அழைக்கப்பட்டார். அவர் தனது விரிவான வாக்குமூலங்களையும் 60 மணி நேர காட்சிக் கோப்புக ளையும் அந்தக் குழுவிற்குக் கொடுத்தார். அதன் பின் தொடர்ந்து பல முறை சென்று வாக்குமூலங்கள் அளித்தார். அதில் பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானிக்கு எதிராகப் பல நுணுக்கமான தகவல்களை வழங்கினார் ஆஷிஷ். நீதிமன்றங்களில் தொடர்ந்து ஆஜராகிக் கொண்டேயிருந்தார் ஆஷிஷ். பல முறை அவரிடம் வேண்டாத கேள்விகள், குதர்க்கமான கேள்விகள் என அவரை ஆத்திரப்படுத்தும் விதமாகவே நீதிபதிகளும், அரசு வழக்கறிஞர்களும் நடந்து கொண்டார்கள். இப்ப கூட நீங்க ரகசிய காமிரா வச்சிருக்கீங்களா என்றார் நீதிபதி ஜோஷி. அவர் எல்லா குற்றவாளிகளின் முன்னணியில் ஆஷிஷிடம் அவரது குடும்பத்தார், அவரது வீடு, அது வாடகை வீடா, எத்தனை ஆண்டுக-ளாக இந்த விலாசத்தில் குடியிருக்கிறார் என அங்கு நீதிமன்ற அறையில் இருக்கும் கொலைகாரர்களுக்குத் தகவல் தருவதற்காகவே விசாரனையை நடத்தினார். டெல்லியில் ஒரு புகழ்பெற்ற பெரிய பத்திரிகையில் பணியாற்றும் ஒரு பத்திரிகையாளனுக்கே இப்படிப்பட்ட மரியாதை என்றால், பாதிக்கப்பட்ட ஏழை சாட்சிகளை எப்படி நடத்தியிருப்பார்கள்.

    ”ஒரு சாதாரண, எளிய நிருபனாகிய என்னால் இவ்வளவு முக்கிய ஆதாரங்களைத் திரட்டி வர முடிந்தால், சர்வ அதிகாரமும் கொண்ட உங்கள் அணியால் அனைத்தையும் கொண்டுவரமுடியும் என்றேன் இந்த ஸ்டிங் ஆபரேஷனை நான் மேற்கொண்டதன் நோக்கம் என்ன? இந்துக்களைத் தவறானவர்கள் என்று காட்டுவதா? என்று அதிகாரி கேட்டார் .நான் சொன்னேன். ‘ஐயா, நானே ஓர் இந்து. என் சமூகத்தை நானே இழிவாகக் காட்டுவேனா? மதத்தின் பெயரால் நடத்தப்பட்டுள்ள படுபாதகக் குற்றங்கள்தான் இங்கே விசாரிக்கப்படவேண்டும். என் மத விருப்பங்களை அல்ல.’
    .எடிட் செய்யப்படாத 60 நிமிட வீடியோ இந்த ஆதாரம் நாடு முழுவதையும் உலுக்கியெடுக்கும். மோடி பதவி விலகவேண்டியிருக்கும் கொலைகாரர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று நாங்கள் நம்பினோம்.ஆனால் நடக்கவில்லை. என்று வருத்ததுடன் கூறுகிறார் ஆஷிஷ் கேத்தன்

    பாதிக்கப்பட்ட ஆதரவற்ற சமுதாயத்திற்காக உயிரை பணயம் வைத்து நீதிக்காக போராடிய ஆஷிஷ் கேத்தன் அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக .நேர்வழி காட்டுவானாக


    thanks : https://www.facebook.com/BeliversNampikkaiyalarkal?hc_location=timeline

    Thursday, 18 April 2013

    சாப்பிட்ட பின் விரலைச் சூப்ப வேண்டுமா?



    சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் பரக்கத் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார். மேலும் "உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்'' என்றும், உங்களின் "எந்த உணவில் பரகத் உள்ளது' அல்லது "(உங்களின் எந்த உணவில்) உங்க ளுக்கு பரக்கத் வழங்கப்படும்' (என்பதை அவர் அறியமாட்டார்)''

    அறிவிப்பவா் : அபூஹுரைரா (ரலி)

    நூல் : முஸ்லிம் 4140

    பரக்கத் என்றால் நம் புலனுக்குத் தெரியாத மறைமுக அருள் என்று பொருள்.


     
    விரலைச் சூப்புவது இன்று அநாகரிகமாக பார்க்கப்படுகிறது. மேலைநாட்டவர்கள் சாப்பிடுவதற்கு கரண்டியைப் பயன்படுத்தி வருவதால் ஈர்க்கப்பட்டவர்கள் இதை அநாகரிகம் என்று சித்தரித்து விட்டனர்.

    உண்பதற்கு கரண்டியைப் பயன்படுத்துவது மேலை நாட்டவரின் அநாகரிகத்தால் உருவாக்கப்பட்ட வழக்கமாகும்.

    மேலை நாட்டவர்கள் நம்மைப் போல் தினமும் குளிக்க மாட்டார்கள். மலம் கழித்தால்கூட துடைத்து விட்டு போவார்களே தவிர கழுவ மாட்டார்கள். தண்ணீர் என்றால் அவர்களுக்கு அவ்வளவு அலர்ஜி. விரல்களால் சாப்பிட்டால் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டிய நிலை வரும் என்பதால் அவர்கள் கரண்டியால் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் விரல்களைப் பயன்படுத்தி சாப்பிடுவதும் விரல்களைச் சூப்புவதும் தான் சிறந்த நாகரிகமாகும்

    பொதுவாக ஈரமான பொருளில் அல்லது திரவத்தில் விரல்கள் படும்போது விரல்களில் இருந்து ஒரு திரவம் சுரக்கும். அந்தத் திரவம் எளிதில் அப்பொருளை ஜீரணமாக்கிவிடும் என்பதால் விரல்களைக் சூப்புவது தான் சரியான உண்ணும் முறையாகும்.

    இதை அறிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சியாளர்களிடம் நாம் கேட்கத் தேவையில்லை. நாமே பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம்.

    ஒரு குழம்பைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.

    அதை இரண்டு பாத்திரங்களில் ஊற்றுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் ஏதாவது ஒரு கரண்டியைப் போடுங்கள்

    இன்னொரு பாத்திரத்தில் உள்ள குழம்பில் சிறிது நேரம் விரலை வைத்து விட்டு எடுத்து விடுங்கள்.

    விரலை விட்ட குழம்பு சில மணி நேரங்களில் நொதித்துப் போய் இருப்பதையும் கரண்டியைப் போட்ட குழம்பு நொதிக்காமல் இருப்பதையும் நீங்கள் காணலாம். இதை சமையல்கட்டில் உள்ள எல்லா பெண்களும் அறிவார்கள்.

    உணவு நொதித்துப் போவதுதான் ஜீரணத்தின் ஆரம்ப நிலையாகும்.

    எனவே சாப்பிட்ட பின் விரலைச் சூப்புவதால் விரலில் சுரக்கும் திரவம் உணவில் கலந்து அது எளிதில் ஜீரணமாகும் நிலைக்கு மென்மைப்படுத்துகிறது.




    நாகரிகம் என்ற பெயரில் நமக்கு நன்மை தரும் இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் யாருக்காக்வும் விட்டு விடக் கூடாது

    http://www.onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/sappitta_pin_viralai_soopa_venduma/


    thanks: Muja Al-ikhlas

    "அண்டைவீட்டாரின் ஒழுக்கம்" -பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் -17042013

    TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 17/04/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் S.அப்துல்லாஹ் MISC அவர்கள் "அண்டைவீட்டாரின் ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது

    Wednesday, 17 April 2013

    "ஆபாசம்" _செரங்காடுகிளைதெருமுனை பிரச்சாரம் _16042013

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பில்  16.04.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.ரசூல்மைதீன்   அவர்கள்"ஆபாசம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது