Wednesday, 24 April 2013

மருத்துவ உதவி _பெரியதோட்டம்கிளை _23042013


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 23.04.2013அன்று மாதர்ஸா என்ற முதியவரின் தோல்பட்டையில் எழும்பு விலகிய சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக ரூ 1677 வழங்கப்பட்டது

"தொழுகை " -வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளையின் சார்பாக 23.04.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் சாஹிது ஒலி  அவர்கள் "தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது

Tuesday, 23 April 2013

தண்ணீர் மற்றும் நீர் மோர் _காலேஜ்ரோடுகிளை _23042013





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை சார்பாக காலேஜ்ரோடுகிளை பள்ளிவாசல் மஸ்ஜிதுல் முபீன் அருகில் பிரதான சாலையின் ஓரத்தில் பந்தல் அமைத்து கோடைகாலத்தில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் மற்றும் நீர் மோர் ஆகியவற்றை  பொது மக்களுக்கு வழங்கினர்.

என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு... கவுன்சிலிங்கிற்காக மே 4 முதல் விண்ணப்பங்கள் விற்பனை


என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு வேண்டுகோள்‏..
என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அண்ணாபல்கலைக்கழகம் வேண்டுகோள்: முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை பெற்று தயாராக வைத்திருங்கள்


பிளஸ்–2 முடித்துவிட்டு என்ஜினீயரிங் சேர முடிவை நோக்கி இருக்கும் மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை இப்போதே பெற்று தயாராக வைத்திருங்கள் என்று அண்ணாபல்கலைக்கழகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.


என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை :
   தமிழ்நாட்டில் 552 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சேர 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் ஒற்றைச்சாளர முறையில் அண்ணாபல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்தி மாணவர்களை சேர்க்கிறது.
இந்த கவுன்சிலிங்கை சென்னை கிண்டியில் உள்ள அண்ணாபல்கலைக்கழகம் வருடந்தோறும் நடத்தி வருகிறது. வருடந்தோறும் என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதுபோல பி.இ. படிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 10–ந்தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடுவதற்கு முன்னதாக பி.இ. படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் அண்ணாபல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு மையங்களில் விநியோகிப்பது வழக்கம். அதுபோல இந்த வருடமும் பிளஸ்–2 தேர்வு முடிவு வருவதற்கு முன்னதாக விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட உள்ளன. 

 இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்காக மே 4ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விற்பனை!


பொறியியல் சேர்க்கை தொடர்பான முழு அட்டவணையை, பொறியியல் சேர்க்கை செயலர், ரெய்மண்ட் உதிரியராஜ், 22.04.2013 வெளியிட்டார். அதன் விவரம்:




* விண்ணப்பம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியீடு 3.5.13

* விண்ணப்பம் வினியோகம் ஆரம்பம் 4.5.13

* விண்ணப்பம் வழங்க, கடைசி நாள் 20.5.13

* பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 20.5.13

* "ரேண்டம்' எண் வெளியீடு 5.6.13

* "ரேங்க்' பட்டியல் வெளியிடும் தேதி 12.6.13

* மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கும் நாள் 21.6.13

* கலந்தாய்வு முடியும் நாள் 30.7.13

இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம் வழங்கும் இடங்கள் மற்றும் சேர்க்கை அட்டவணை தொடர்பான விவரங்கள் அனைத்தையும், www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
சான்றிதழை இப்போதே பெறுக :
வழக்கமாக என்ஜினீயரிங் சேரும் மாணவர்கள் கவுன்சிலிங்கிற்காக விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு பல்வேறு சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் வைத்திருக்கவேண்டும்.

அதுபோல சுதந்திரபோராட்ட வீரர் வாரிசாக இருந்தால் அதற்குரிய சான்று, முன்னாள் ராணுவத்தினர் மகளாக, மகனாக இருந்தால் அதற்குரிய சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்று, சொந்த நாட்டில் வசிப்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்கவேண்டும்.
ஆனால் பலர் கவுன்சிலிங் நேரத்தில் சான்றிதழ் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். எனவே இப்போதே அந்த சான்றிதழ்களை தேவைப்படுபவர்கள் உரிய அதிகாரிகளிடம் பெற்று தயாராக வைத்திருக்கவேண்டும்.
இந்த அறிவிப்பை அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) பேராசிரியர் காளிராஜ், என்ஜினீயரிங் மாணவர்சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் வேண்டுகோளாகவிடுத்துள்ளனர்.
விண்ணப்ப படிவங்கள் :

மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்துவதற்காக விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் தயாராக வைக்கப்பட இருக்கின்றன.
இந்த வருடமும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் என்ஜினீயரிங் படிப்பில்சேர இடம் கிடைக்கும் என்று அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
sourse:  tntjsw.net
 

"பில்லி- சூனியம் " -பெரியகடை வீதி கிளைபெண்கள் பயான் 21042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பில்  21.04.2013 அன்று பெண்கள் பயான்   நடைபெற்றது.  இதில் சகோதரி.ஜமீலா  அவர்கள் "பில்லி- சூனியம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.

நரக வேதனை _பெரியகடை வீதி கிளைதெருமுனை பிரச்சாரம் 16042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பில்  16.04.2013 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  இதில் சகோ.ராஜா  அவர்கள் "நரக வேதனை " எனும் தலைப்பில்
நரகத்தின் தன்மைகளை விரிவாக விளக்கி ,அந்த நரகத்திலிருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பு பெற தீமைகளை தவிர்த்து நன்மைகளை செய்வோம்.என உரையாற்றினார்.

பிறமத சகோதரர்.ரமேஷ் அவர்களுக்கு "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" தாவா _V.K.P.கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை  சார்பில் 22.04.2013 அன்று  பிறமத சகோதரர்.ரமேஷ்   அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவருக்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ,மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் மற்றும் திருப்பூர் இனிய மார்க்க DVD வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

ஆபாசத்தால் சீரழியும் குடும்ப வாழ்க்கை



ஆபாசத்தால் சீரழியும் குடும்ப வாழ்க்கை

இன்டர்நெட் ஆபாசங்களால் சிறார்கள் சீரழிவது போதாதென்று பலரது குடும்ப வாழ்வும் சீரழிந்து வருகின்றது.

ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கையறையில் சிறப்பாக செயல்பட முடியாது என்று ஒரு ஆய்வு எச்சரிக்கிறது. ஆண்கள்தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் படம் பார்ப்போர் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

இப்படி ஆபாசப் படம் பார்க்கும், குறிப்பாக இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை அடிக்கடி பார்ப்போரால், படுக்கை அறையில் நிஜமான உடலுறவு நடவடிக்கையில் முழுமையாக செயல்பட முடியாமல் போகின்றது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆபாசப் படங்களை பார்ப்போர் பல பிரச்சினைகளுக்கு ஆளாவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

வீடியோவில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பாதியளவு கூட ஆண்களால் படுக்கை அறையில் காட்ட முடிவதில்லை.



இதற்கு முக்கியக் காரணம், மூளையின் உற்சாக மையத்தைத் தூண்டி விடக்கூடிய ஹார்மோனான, டோபமைன் அபரிமிதமான அளவில் சுரப்பதே ஆகும் என்று கண்டுபிடித்துள்ளனர். அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து உணர்ச்சி வசப்படுவோருக்கு டோபமைன் அதிக அளவில் சுரந்து, சுரந்து கடைசியில், உண்மையான இன்பத்தை அனுபவிக்க நேரிடும்போது அதனால் பலன் இல்லாமல் போய் விடுகிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இப்படி ஆபாசப் படம் பார்த்து உண்மையான உற்சாகத்தையும், இன்பத்தையும் தொலைத்து நிற்கும் பலரும் தற்போது இது குறித்த கவுன்சிலிங்கிற்கு அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து செக்ஸாலஜிஸ்ட் ஒருவர் கூறுகையில், ஆபாசப் படம் பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் உள்ளது. இன்டர்நெட் மூலம் ஆபாசப் படம் பார்ப்போர் பெருமளவில் பெருகி விட்டனர். இதனால் உண்மையான செக்ஸ் நடவடிக்கைகளில் இவர்களால் ஈடுபடுவதில் பல சிரமங்களைச் சந்திக்கின்றனர்.

அதிக அளவிலான செக்ஸ் நடவடிக்கைகளைப் பார்த்துப் பார்த்து இவர்கள் மனரீதியாக களைத்துப் போய் விடுகின்றனர். அதில் ஒரு சலிப்பும், அலுப்பும் வந்து விடுகிறது. டோபமைன்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.

இப்படிப்பட்ட செக்ஸ் பட அடிமைகள், படிப்படியாக ஆபாசப் படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் இல்லற வாழ்வை இழந்து தவிக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

மேற்கண்ட ஆய்வு முடிவை உண்மைப்படுத்தும் விதமான ஒரு வழக்கு சென்ற மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விபரம் பின்வருமாறு :

ஆபாசப் படம் பார்த்ததால் வந்த கேடு!

எழும்பூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் ஒருவருக்கு 25 வயதுப் பெண்ணுடன் திருமணம் செய்விக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு இந்தத் திருமணம் நடைபெற்றது.

2 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பிறகு 2009ஆம் ஆண்டு கணவர் சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் தன் மனைவிக்கு உடலுறவில் நாட்டம் இல்லை; எனவே எனக்கு அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று மனு செய்திருந்தார்.

ஆனால் மனைவியும் ஒரு விவாகரத்து மனு செய்தார். அதில் அவர், “தன் கணவர் ஆண்மையற்றவர்; தங்கள் இருவருக்கும் உடலுறவே நடக்கவில்லை; எனவே தனக்கு விவாகரத்து வேண்டும்”என்றும் தனியாக மனுச் செய்தார்.

பிறகு நீதிபதி தம்பதியினரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இருவரும் உறவு வைத்துக் கொள்ள உடல் ரீதியாக எந்த விதத் தடையுமில்லை என்று மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதைத் தொடர்ந்து கவுன்சிலிங் முறையில் பிரச்சனையை அறிய தம்பதியினர் உளவியல் நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

உளவியல் நிபுணர்கள் இருவரையும் தனித்தனியாக, சேர்ந்து என்று பலநாட்கள் கவுன்சிலிங் நடத்தியதில் தெரியவந்த உண்மை வேறுவிதமாக இருந்துள்ளது.

கணவர் இயற்கைக்கு மாறாக நடந்துகொள்ள வற்புறுத்துவதாகவும், ஆபாச வீடியோக்களை தினமும் பார்ப்பதாகவும் மனைவி கூறினார்.

இதனையடுத்து கணவரும் தனது ஆபாசப் பட ஆர்வத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் தன் மனைவியிடம் இயற்கையான முறையில் உறவுகொள்ள நாட்டமில்லை என்றும், தன்னால் உறவு கொள்ள இயலவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார் கணவர்.

இதையே உளவியல் நிபுணர்கள் அறிக்கையாகத் தயாரித்து, “இப்படி ஒருவர் ஆபாசப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தால் இயற்கையான உறவில் அவர்களுக்கு நாட்டமில்லாது போய்விடும்; இந்தக் கேசிலும் இதுதான் நிலைமை” என்று அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து கணவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்த குடும்பநல கோர்ட், மனைவியின் விவாகரத்து மனுவை ஏற்று விவாகரத்து வழங்கியது.

ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டு கடைசியில் உடலுறவிலேயே நாட்டமில்லாத அளவிற்குச் சென்று ஆண்மையை இழந்து நிற்கும் இந்த இழிநிலை தேவைதானா என்பதை ஆபாசப் படம் பார்ப்போர் சிந்திக்க வேண்டும்.

இப்படி ஆண்மையற்ற கணவன்கள் அதிகரிக்கும்போது அவர்களது மனைவிமார்கள் தங்களுக்கு வேறு வடிகாலின்றி விபச்சாரத்தின் பக்கம் தள்ளப்படுகின்றனர். விபச்சாரத்தின் பக்கம் செல்ல வழியில்லாத பெண்கள் தங்களது கணவனின் கதையை முடிப்பதற்கும் இதுதான் காரணமாக உள்ளது. இதனால் விபச்சாரமும், கொலைகளும் பெருகுகின்றன.

கள்ளக்காதல்களும், அதனால் ஏற்படும் கொலைகளுக்கும் இந்த ஆபாசப் படங்கள்தான் காரணமாக உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆபாசப் படம் பார்த்தால் மட்டுமல்ல; அறைகுறை ஆடை அணிந்த பெண்களைப் பார்ப்பதும் ஆபத்து!

ஆபாசப் படங்களைப் பார்ப்பது மட்டும்தான் ஆண்மைக் குறைவுக்கு காரணம் என்று நாம் விளங்கிக் கொள்ளக்கூடாது. அறைகுறையாக கவர்ச்சியாக ஆடை அணிந்து செல்லும் பெண்களைப் பார்ப்பதும் கூட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டு உடலுறவில் நாட்டமில்லாமல் செய்துவிடும் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்தப் புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இதுகுறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.

இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.

அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு.

முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் எனக் கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்தக் குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது

உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.

அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்தத் தொடர்பு தெரிய வந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் உடைகள் மறைக்காத உடலின் பாகங்களால் ஆண்களின் தூண்டப்படும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.

முக்கால்வாசி ஆண்மைக் குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

நாங்கள் ஆபாச ஆடை அணிந்தால் உங்களுக்கென்ன? என்று வெட்டி நியாயம் பேசும் பெண்கள் மேற்கண்ட செய்தியைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிற பெண்கள் அணிந்து செல்லும் ஆபாச ஆடைகளையும், கவர்ச்சிக் காட்சிகளையும் உங்கள் வீட்டு ஆண்கள் உற்று நோக்கினால் அதனால் ஆண்மைக்குறைவு ஏற்பட்டு, இல்லற வாழ்வை இழந்து அவதிப்பட்டு, அதனால் பாதிக்கப்படுபவர்கள் வெட்டி நியாயம் பேசும் இந்தப் பெண்கள்தான் என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர் ஆன் 24 : 30


செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

அல்குர் ஆன் 17 : 36


ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்படுமா? :

- சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை!

ஆபாச இணையதளங்கள் அதிகரித்துள்ளது குறித்து, கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அவற்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கமலேஷ் வஸ்வானி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநலன் கோரும் மனு, தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆபாச இணையதளங்கள் ஏராளமாக பெருகியுள்ளன. அவற்றைத் தடை செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

அந்த மனு, தலைமை நீதிபதி, அல்டமாஸ் கபீர் தலைமையிலான, "டிவிஷன் பெஞ்ச்' முன், 15.04.13 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

"இணையதளங்களில், ஆபாச இணையதளங்கள் ஏராளமாக உள்ளன; அவற்றில், குழந்தைகளை நிர்வாணமாக காட்டும் இணையதளங்கள் பெருகியுள்ளன; அத்தகைய இணைய தளங்களைப் பார்க்கும் சிறுவர் சிறுமியர், அது போன்ற குற்றங்களில் ஈடுபட, வாய்ப்பு இருக்கிறது' என, கவலை தெரிவித்தனர்.

மேலும், "ஆபாச இணையதளங்களைக் கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்ட நீதிபதிகள், "அவற்றை முழுவதும் தடை செய்ய என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தனர்.

மத்திய அரசாங்கம் நினைத்தால் ஆபாச இணையதளங்களை ஒரே நிமிடத்தில் தடை செய்துவிடலாம். ஆபாச இணையதளங்களால் ஏற்படும் கேடுகளை மத்திய அரசாங்கம் அறியாமலில்லை. மத்திய அரசாங்கத்தின் ஆசியோடுதான் அவை அரங்கேறி வருகின்றது என்பதுதான் உண்மை.

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இவைகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்பதுதான் ஒழுக்க சீலர்களின் எதிர்ப்பார்ப்பு.

ஆபாசப்படம் பார்ப்போருக்கு மன அழுத்தம் :

- லண்டன் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

பிரிட்டன் ஆண்கள் அதிக அளவில் ஆபாச படங்களை பார்ப்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பணியிடங்கள், கணவன்-மனைவி உறவு உள்ளிட்டவற்றில் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அண்மையில், பிரிட்டனில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் குறித்து, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிட்டன் இளைஞர்களில் நான்கில் ஒரு பங்கு இளைஞர்கள் ஆபாசப்படம் பார்க்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதனால் அதிக நேரம் தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பதால், மன அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனமின்மை, உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றில் பிரச்னை எழுவது தெரியவந்துள்ளது.
thanks:
Ahamed Salam Tntj
  
original sourse: http://www.onlinepj.com/unarvuweekly/abasathal_seeraziyum_kudumba_vazkai/

Monday, 22 April 2013

பார்வையைஇழந்த பிறமத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் திருப்பூர் மாவட்டம் 19042013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 19.04.2013 அன்று கண்களின் பார்வையை முற்றிலும் இழந்த பிறமத சகோதரர்.தீனதயாளன்   அவர்கள் நமது மர்கஸில் வருகை தந்து இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன் இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவற்றை பார்வையுடைய நண்பர்களை படிக்க வைத்து அறிவேன் என கேட்டதிற்கு இனங்க  திருக்குர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள்நாயகம், அர்த்தமுள்ளகேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள், இதுதான்இஸ்லாம், குற்றச்சாட்டுகளும் பதில்களும் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

கோடைகால தண்ணீர் பந்தல் _திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை சார்பாக 22.04.2013 அன்று முதல் காலேஜ்ரோடுகிளை பள்ளிவாசல் மஸ்ஜிதுல் முபீன் அருகில் பிரதான சாலையின் ஓரத்தில் பந்தல் அமைத்து கோடைகாலத்தில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் மற்றும் நீர் மோர் ஆகியவற்றை  பொது மக்களுக்கு வழங்கினர்.

"நல்ல மனைவி"_செரங்காடு கிளை பெண்கள் பயான் 20042013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பில் 20.04.2013அன்று  யாசின்-பாபு நகர்பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது.அதில் "நல்ல மனைவி" எனும் தலைப்பில் சகோ.செரங்காடு அப்துல்லாஹ்  அவர்கள் உரைநிகழ்த்தினார்.

V.K.P. கிளை இரத்த தான முகாம் 21042013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பில்  21.04.2013 அன்று சூலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் V.K.P. கிளை மற்றும்   திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.  இதில் 40 சகோதரர்கள்  இரத்த தானம்  வழங்கினார்கள்.


 




 மேலும் அங்கு நடைபெற்ற இரத்த பிரிவு கண்டறியும் முகாமில் 40 க்கும் மேற்பட்டோர் தமது இரத்த பிரிவை அறிந்து இரத்த தானம் வழங்க உறுதி ஏற்றனர்.





"மரணம்" -பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம் -21042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில்  21.04.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.அப்துல்லா.M.I.Sc.,அவர்கள் "மரணம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது.

"மரணசிந்தனை " பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம் _21042013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில்  21.04.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.சபியுல்லா அவர்கள் "மரணசிந்தனை " எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது.

"இஸ்லாம் ஓர் அறிமுகம் " -S.V.காலனி கிளை தெருமுனை பிரச்சாரம் _21042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில்  21.04.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது.

Sunday, 21 April 2013

M.S.நகர் கிளை பொதுக்குழு 20130421


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 21.04.2013 அன்று காலை 8 to 8:30 மணிவரை M.S.நகர் கிளையின் பொதுக்குழு மாவட்டநிர்வாகிகள் மா.செயலாலர்.ஜாஹிர் அப்பாஸ்
மா.பொருலாலர்.சலிம் பாய்
மா.து.செயலாலர்.அலாவுதீன்
அவர்கள் தலைமையில் நிர்வாகமாற்றம் செய்யப்பட்டது

புதிய நிர்வாகம்
தலைவர் ; A.முஹம்மத் 9025031316

செயலாலர்: சாதிக் பாஷா 9566784878

பொருலாலர்: சிராஜ் தீன் 7871888444

து.தலைவர் :அப்சர் 8925341978

து.செயலாலர் : திவான்9629254448

                                                                                     மருத்துவ அணி : அர்சத்9952886394

                                                                          தொன்டர் அணி : அப்துல்லாஹ்9865986567

மடத்துக்குளத்தில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி மழை தொழுகை- 21042013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 21.04.2013 ஞாயிறு காலை 8 மணிக்கு மடத்துக்குளம் A.R.M. மஹால் வளாக திடலில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி மழை தொழுகை நடைபெற்றது..
மடத்துக்குளம் மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய
பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்தனர்.



Saturday, 20 April 2013

மருத்துவ உதவி _தாராபுரம் 19042013

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக 19.04.2013 அன்று
தாராபுரம் பகுதியை சேர்ந்த காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்ட  சகோ. அவர்களின் மருத்துவ செலவினகளுக்காக  ரூ.3000 /= வசூல் செய்து  மருத்துவ உதவி வழங்கப்பட்டது

அல்குரான்- ஹதிஸ் கேள்வி- பதில்நிகழ்ச்சி தாராபுரம் _19042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தமது மார்க்க  அறிவை   வளர்த்துக்கொள்ள அல்குரான்- ஹதிஸ்  கேள்வி- பதில்நிகழ்ச்சி  நடைபெற்றது.
 
தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வளாகத்தில் 19.04.2013 அன்று
சரியான பதில் அளித்த 5 நபர்களுக்கு  பரிசளிப்பு விழா நடைபெற்றது

ஆஷிஷ் கேத்தன் -"ஐயா, நானே ஓர் இந்து. என் சமூகத்தை நானே இழிவாகக் காட்டுவேனா?


"ஐயா, நானே ஓர் இந்து. என் சமூகத்தை நானே இழிவாகக் காட்டுவேனா? மதத்தின் பெயரால் நடத்தப்பட்டுள்ள படுபாதகக் குற்றங்கள்தான் இங்கே விசாரிக்கப்படவேண்டும். என் மத விருப்பங்களை அல்ல.’- ஆஷிஷ் கேத்தன்

பாசிசத்தின் காரிருள் இந்நாட்டின் ஆட்சி, அதிகார, நீதி, ஊடக துறைகளையெல்லாம் சூறையாடி வரும் வேளையிலும் நீதியை நிலைநாட்டும் உறுதியுடன் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களில் ஒருவர் தாம் ஆஷிஷ் கேத்தன். எந்தவொரு முஸ்லிம் அமைப்புகளும் செய்ய இயலாத அர்ப்பணிப்புமிக்க காரியங்களை உயிரை பணயம் வைத்து 6 மாத காலம் டெஹல்காவுக்காக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை நேரடியாக சந்தித்து பேட்டியெடுத்து உலகிற்கு அவர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்திய ஆஷிஷ் கேதான் என்ற பத்திரிகையாளரை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
இன்று பிழைப்புக்காய் மாறடித்து, எந்த அறமும் இல்லாது ஊடகங்களை கழிவறைகளாக மாற்றும் பத்திரிகையாளர் மத்தியில் எந்த சமரசமும் இல்லாமல் ஆஷிஷ் கேத்தன் செய்ததை நாங்கள் நன்றியுடன் நினைவுகூறுகிறோம்.

அவரது 60 மணி நேரப் வீடியோ பதிவுகளில் கொலைகாரர்கள், காவல்துறை உயரதிகாரிகள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், அரசு வழக்கறிஞர்கள் என பலர் தோன்றி தங்களின் வீரதீரச் செயல்களை விரிவாக வர்ணித்தார்கள் .கோத்ராவில் ரயிலை எப்படி எரித்தார்கள், அதில் இருந்த கரசேவகர்களை எல்லாம் எப்படி நம் என் உயிர் தோழன் படத்தில் வரும் நாயகனைப் போல சங் பரிவார் ஆட்களே பலி கொடுத்தார்கள் என்பதையும் ஆதாரங் களுடன் மிக துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டினார் ஆஷிஷ் கேத்தன். அதன் பின் சிலரைப் பிடித்து மிரட்டி எப்படி எல்லாம் தவறான வாக்குமூலங்களைப் பதிவு செய்து கோத்ராவின் மிகவும் மதிக்கத்தக்க இஸ்லாமியத் தலைவர்களை சிறையில் அடைத்தார்கள் என்பதையும் இந்த வீடியோ பதிவுகள் உறுதிப்படுத்தின.



பாபு பஜ்ரங்கி பல கொலைகளைச் செய்துவிட்டு நான் அவர்களை எல்லாம் கொன்ற பிறகு மகாராணா பிரதாப் ஆக உணர்ந்தேன் என்கிறான். மதன் சாவல், தான் எப்படி காங்கிரஸ் எம்.பி இஷான் ஜாப்ரியைத் தரை-யில் எட்டி உதைத்து, அவரைத் துண்டு துண்டாக வெட்டி, உயிருடன் தீயிட்டுக் கொளுத்தினோம் என்பதைத் துல்லியமாகக் கூறுகிறான். இன்னும் மூன்று மணி நேரம் மட்டுமே உள்ளது காரியத்தை முடிக்க என்பதை எப்படிக் கொலை-காரர்களுக்குத் தெரிவித்தான் என்பதை மங்கிலால் ஜெயின் பரபரப்புடன் விவரிக்கிறான். இது வரலாறு காணாததாக இருக்க வேண்டும் என்று தங்களின் தலைமை எப்படி உத்தரவிட்டது என்பதைப் பதிவு செய்கிறான் தீபக் ஷா. ராக்கெட் செலுத்தும் கருவியைத் தயாரித்ததை ஒரு விஞ்ஞானியைப் போல் விளக்கும் ஹரேஷ் பட்டுக்குப் பின்னர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி கொடுத்து அழகு பார்த்தான் நரேந்திர மோடி. நாங்கள் கொடுத்த ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பார்த்து எங்கள் ஆட்களே திகைத்துப் போனார்கள் என்று மேலும் கூறுகிறான் ஹரேஷ் பட். எப்படி இந்த இனப்படுகொலையின்போது குஜராத் காவல்துறையினரின் கண்களும் வாயும் மூடப்பட்டிருந்தது என்கிறான் பாபு பஜ்ரங்கி. நரேந்திர மோடி காவல்துறையை எங்களுக்காகப் பணிபுரியச் செய்தார் என்கிறான் வி.எச்.பி. தலைவர் ராஜேந்திர வியாஸ். ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தபோது எப்படி கொலைகாரர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி இருந்தது என்பதைக் கூறுகிறான் திமந்த் பட். காவல் துறையினரே எப்படி 70-&80 பேரைக் கொன்றார்கள் என்பதை சுரேஷ் ரிச்சர்ட் நினைவு கூர்கிறான். என்னை வெளியே கொண்டு வர நரேந்திர மோடி மூன்று முறை நீதிபதிகளை மாற்றினார் என காலரைத் தூக்கி விட்டுச் சொல்கிறான் பாபு பஜ்ரங்கி. இதே பாபு பஜ்ரங்கியைத்தான் நரேந்திர மோடி பல மாதங்கள் ராஜஸ்தானின் மௌண்ட் அபுபில் உள்ள பெரும் சொகுசு மாளிகையில் மறைத்து வைத்திருந்தான். கொலைகளைச் செய்தவர்கள் மீதான சில வழக்குகள் வலிமையற்றவை. கடவுளின் ஆசிர்வாதத்தால் சமாளித்தோம் என பெருமூச்சு விடுகிறான் மூத்த வழக்கறிஞரும் வி.எச்.பி. பொதுச்செயலாளருமான திலிப் திரிவேதி. மேலும் நீதிபதி கே.ஜி.ஷா நம்முடைய ஆள், நீதிபதி நானாவதிக்குப் பணம்தான் குறி என்கிறான் குஜராத் மாநில வழக்கறிஞர் அரவிந்த பாண்டியா.

சிறப்புப் புலனாய்வுக் குழு முன்னால் தான் ஆஜராக விரும்புவதாக ஆஷிஷ் கேத்தன் தானே மனு செய்தார். அவர் அழைக்கப்பட்டார். அவர் தனது விரிவான வாக்குமூலங்களையும் 60 மணி நேர காட்சிக் கோப்புக ளையும் அந்தக் குழுவிற்குக் கொடுத்தார். அதன் பின் தொடர்ந்து பல முறை சென்று வாக்குமூலங்கள் அளித்தார். அதில் பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானிக்கு எதிராகப் பல நுணுக்கமான தகவல்களை வழங்கினார் ஆஷிஷ். நீதிமன்றங்களில் தொடர்ந்து ஆஜராகிக் கொண்டேயிருந்தார் ஆஷிஷ். பல முறை அவரிடம் வேண்டாத கேள்விகள், குதர்க்கமான கேள்விகள் என அவரை ஆத்திரப்படுத்தும் விதமாகவே நீதிபதிகளும், அரசு வழக்கறிஞர்களும் நடந்து கொண்டார்கள். இப்ப கூட நீங்க ரகசிய காமிரா வச்சிருக்கீங்களா என்றார் நீதிபதி ஜோஷி. அவர் எல்லா குற்றவாளிகளின் முன்னணியில் ஆஷிஷிடம் அவரது குடும்பத்தார், அவரது வீடு, அது வாடகை வீடா, எத்தனை ஆண்டுக-ளாக இந்த விலாசத்தில் குடியிருக்கிறார் என அங்கு நீதிமன்ற அறையில் இருக்கும் கொலைகாரர்களுக்குத் தகவல் தருவதற்காகவே விசாரனையை நடத்தினார். டெல்லியில் ஒரு புகழ்பெற்ற பெரிய பத்திரிகையில் பணியாற்றும் ஒரு பத்திரிகையாளனுக்கே இப்படிப்பட்ட மரியாதை என்றால், பாதிக்கப்பட்ட ஏழை சாட்சிகளை எப்படி நடத்தியிருப்பார்கள்.

”ஒரு சாதாரண, எளிய நிருபனாகிய என்னால் இவ்வளவு முக்கிய ஆதாரங்களைத் திரட்டி வர முடிந்தால், சர்வ அதிகாரமும் கொண்ட உங்கள் அணியால் அனைத்தையும் கொண்டுவரமுடியும் என்றேன் இந்த ஸ்டிங் ஆபரேஷனை நான் மேற்கொண்டதன் நோக்கம் என்ன? இந்துக்களைத் தவறானவர்கள் என்று காட்டுவதா? என்று அதிகாரி கேட்டார் .நான் சொன்னேன். ‘ஐயா, நானே ஓர் இந்து. என் சமூகத்தை நானே இழிவாகக் காட்டுவேனா? மதத்தின் பெயரால் நடத்தப்பட்டுள்ள படுபாதகக் குற்றங்கள்தான் இங்கே விசாரிக்கப்படவேண்டும். என் மத விருப்பங்களை அல்ல.’
.எடிட் செய்யப்படாத 60 நிமிட வீடியோ இந்த ஆதாரம் நாடு முழுவதையும் உலுக்கியெடுக்கும். மோடி பதவி விலகவேண்டியிருக்கும் கொலைகாரர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று நாங்கள் நம்பினோம்.ஆனால் நடக்கவில்லை. என்று வருத்ததுடன் கூறுகிறார் ஆஷிஷ் கேத்தன்

பாதிக்கப்பட்ட ஆதரவற்ற சமுதாயத்திற்காக உயிரை பணயம் வைத்து நீதிக்காக போராடிய ஆஷிஷ் கேத்தன் அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக .நேர்வழி காட்டுவானாக


thanks : https://www.facebook.com/BeliversNampikkaiyalarkal?hc_location=timeline

Thursday, 18 April 2013

சாப்பிட்ட பின் விரலைச் சூப்ப வேண்டுமா?



சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் பரக்கத் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார். மேலும் "உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்'' என்றும், உங்களின் "எந்த உணவில் பரகத் உள்ளது' அல்லது "(உங்களின் எந்த உணவில்) உங்க ளுக்கு பரக்கத் வழங்கப்படும்' (என்பதை அவர் அறியமாட்டார்)''

அறிவிப்பவா் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 4140

பரக்கத் என்றால் நம் புலனுக்குத் தெரியாத மறைமுக அருள் என்று பொருள்.


 
விரலைச் சூப்புவது இன்று அநாகரிகமாக பார்க்கப்படுகிறது. மேலைநாட்டவர்கள் சாப்பிடுவதற்கு கரண்டியைப் பயன்படுத்தி வருவதால் ஈர்க்கப்பட்டவர்கள் இதை அநாகரிகம் என்று சித்தரித்து விட்டனர்.

உண்பதற்கு கரண்டியைப் பயன்படுத்துவது மேலை நாட்டவரின் அநாகரிகத்தால் உருவாக்கப்பட்ட வழக்கமாகும்.

மேலை நாட்டவர்கள் நம்மைப் போல் தினமும் குளிக்க மாட்டார்கள். மலம் கழித்தால்கூட துடைத்து விட்டு போவார்களே தவிர கழுவ மாட்டார்கள். தண்ணீர் என்றால் அவர்களுக்கு அவ்வளவு அலர்ஜி. விரல்களால் சாப்பிட்டால் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டிய நிலை வரும் என்பதால் அவர்கள் கரண்டியால் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் விரல்களைப் பயன்படுத்தி சாப்பிடுவதும் விரல்களைச் சூப்புவதும் தான் சிறந்த நாகரிகமாகும்

பொதுவாக ஈரமான பொருளில் அல்லது திரவத்தில் விரல்கள் படும்போது விரல்களில் இருந்து ஒரு திரவம் சுரக்கும். அந்தத் திரவம் எளிதில் அப்பொருளை ஜீரணமாக்கிவிடும் என்பதால் விரல்களைக் சூப்புவது தான் சரியான உண்ணும் முறையாகும்.

இதை அறிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சியாளர்களிடம் நாம் கேட்கத் தேவையில்லை. நாமே பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம்.

ஒரு குழம்பைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.

அதை இரண்டு பாத்திரங்களில் ஊற்றுங்கள்.

ஒரு பாத்திரத்தில் ஏதாவது ஒரு கரண்டியைப் போடுங்கள்

இன்னொரு பாத்திரத்தில் உள்ள குழம்பில் சிறிது நேரம் விரலை வைத்து விட்டு எடுத்து விடுங்கள்.

விரலை விட்ட குழம்பு சில மணி நேரங்களில் நொதித்துப் போய் இருப்பதையும் கரண்டியைப் போட்ட குழம்பு நொதிக்காமல் இருப்பதையும் நீங்கள் காணலாம். இதை சமையல்கட்டில் உள்ள எல்லா பெண்களும் அறிவார்கள்.

உணவு நொதித்துப் போவதுதான் ஜீரணத்தின் ஆரம்ப நிலையாகும்.

எனவே சாப்பிட்ட பின் விரலைச் சூப்புவதால் விரலில் சுரக்கும் திரவம் உணவில் கலந்து அது எளிதில் ஜீரணமாகும் நிலைக்கு மென்மைப்படுத்துகிறது.




நாகரிகம் என்ற பெயரில் நமக்கு நன்மை தரும் இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் யாருக்காக்வும் விட்டு விடக் கூடாது

http://www.onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/sappitta_pin_viralai_soopa_venduma/


thanks: Muja Al-ikhlas

"அண்டைவீட்டாரின் ஒழுக்கம்" -பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் -17042013

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 17/04/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் S.அப்துல்லாஹ் MISC அவர்கள் "அண்டைவீட்டாரின் ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது

Wednesday, 17 April 2013

"ஆபாசம்" _செரங்காடுகிளைதெருமுனை பிரச்சாரம் _16042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பில்  16.04.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.ரசூல்மைதீன்   அவர்கள்"ஆபாசம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது

Monday, 15 April 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14 வது மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள் _14042013 _குடந்தை



2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று குடந்தை மஹாமஹம் திருமண மஹாலி ல்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14 வது மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
மேலும் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் சிறப்பாக செயலாற்றிய மாவட்ட கிளைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

முஸ்லி ம்களின் ஜீவாதார கோரிக்கை

1.    கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லி ம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலி தா வாக்களித்தார். இரண்டாண்டுகள் கடந்த பின்னரும் இது குறித்து அவர் அசாத்திய மவுனம் சாதித்து வருகிறார். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் முஸ்லி ம்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

2.    அவ்வாறு அதிகப்படுத்தித் தந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலி ல் முஸ்லி ம்களின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவுக்கு பெற்றுத் தர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அயராது உழைக்கும் என்று இப்பொதுக்குழு உறுதியளிக்கின்றது.

3.    நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் முஸ்லி ம்களுக்கு பத்து சதவிகிதம் தனியாக இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று காரண காரியங்களுடன் பரிந்துரை செய்திருந்தார். மேலும் சென்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லி ம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவதாக காங்கிரஸ் வாக்களித்தது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முஸ்லி ம்களின் கோரிக்கையை அலட்சியம் செய்யும் மத்திய அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரை அடிப்படையில் முஸ்லி ம்களுக்கு தனியாக பத்து சத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
4.    முஸ்லி ம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், முஸ்லி ம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு 4.5 சத இட ஒதுக்கீடு என்று கூறி வஞ்சகமாக ஏமாற்றும் மத்திய அரசின் துரோகத்தையும் இப்பொதுக்குழு கண்டிக்கிறது.,
5.    இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் முன்னேறிய சமுதாயங்களான பார்சிகள், சீக்கியர்கள், மற்றும் கிறித்துவர்கள் தான் பயனடைவார்கள். முஸ்லி ம்கள் இதனால் பயனடைய மட்டார்கள் என்று இப்பொதுக்குழு கருதுகிறது.
6.    முஸ்லி ம்களுக்கு 6 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போர்ராட்டங்கள் நட்த்திய பின் புதுவை மாநிலத்தில் ஒரு பகுதியில் மட்டும் இரண்டு சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதாகவும் இன்னொரு பகுதியில் அறவே இட ஒதுக்கீடு இல்லை எனவும் அறிவித்தது. ஒட்டு மொத்த புதுவையில் ஒரு சதவிகிதம் ஆகிறது.  புதுவை அரசின் இந்த துரோகத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. புதுவை சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் முஸ்லி ம்களுக்கு ஆறு சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இப்பொதுக்குழு புதுவை அரசை வலி யுறுத்துகிறது.
மாபெரும் அறப் பேராட்டம்
7.    தமிழகத்தில் முஸ்லி ம்களின் இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்திலி ருந்து ஏழு சதமாக உயர்த்த மாநில அரசை வலி யுறுத்தியும் இந்திய அளவில் முஸ்லி ம்களுக்கு தனியாக பத்து சதவிகிதம் இட ஒதுக்கீட்டை சட்டமாக்க மத்திய அரசை வலி யுறுத்தியும் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று மாபெரும் அறப்போராட்டம் நடத்துவது என்று இப்பொதுக்குழு அறிவிக்கிறது.

அப்சல் குரு தூக்குக்குக் கண்டனம்

8.    நாடாளுமன்றத் தாக்குதலி ல் தொடர்பு இல்லாத அப்சல் குருவுக்கு தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்துவதற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது நீதிபதிகள் சட்டப்படி இந்த வழக்கை அணுகவில்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது. இந்தியாவின் நீதித்துறை மீது உலகமே காரித்துப்பும் வகையில் இதுபோல் சட்டத்துக்கு அப்பாற்பட்டு தங்கள் இஷ்டத்துக்கு நீதிபதிகள் தீர்ப்பளிப்பதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்கேற்ப தக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
9.    அப்சல் குருவுக்கு முன்னால் தூக்குத் தண்டனை தீர்ப்புப் பெற்ற பலரது மனுக்கள் நிலுவையில் இருக்க வரிசைக்கு மாற்றமாக அப்சல் குருவின் மனுவை மட்டும் அவசரமாக நிராகரித்த குடியரசுத் தலைவரின் செயலையும், இதற்குக் காரணமான மத்திய அரசையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
10.    கருணை மனு நிராகரிக்கப்பட்ட பலர் உடனே தூக்கில் போடப்படாமல் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டு தண்டனையில் இருந்து தப்பிக்க மத்திய அரசு உதவி வருகிறது. ஆனால் அப்சல் குருவுக்கு மட்டும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் இரகசியமாக தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய மத்திய அரசின் அயோக்கியத்தனத்தையும் மதவெறிப் போக்கையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது
11.    தூக்குத் தண்டனை கைதிகளை தூக்கில் போடுவதற்கு முன்னர் அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்து கடைசி சந்திப்புக்கு  ஏற்பாடு செய்யும் மரபை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் கடைப்பிடித்து வருகின்றன. இந்த மரபை மீறி அப்சல் குருவின் குடும்பத்தினரில் யாருக்கும் தெரிவிக்காமல் இரகசியமாக தூக்கில் போட்ட காங்கிரசின் கயமைத் தனத்தை முஸ்லி ம்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று இப்பொதுக்குழு அறிவிக்கிறது.
12.    எந்த மனிதனாக இருந்தாலும் அவனது மத நம்பிக்கைப்படி அவனுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட வேண்டும். கைதிகளாக இருந்தாலும் அது அவர்களின்   கடைசி உரிமையாகும். ஆனால் அப்சல் குருவுக்கு இஸ்லாமிய முறைப்படி ஜனாஸா தொழுகை நடத்தாமல் இந்துக்களின் பிணத்தைப் போல் புதைத்து இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிராக காங்கிரஸ் அரசு போர் தொடுத்துள்ளதையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் திரைப்படங்கள்
13.    முஸ்லி ம்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக சித்தரித்து உண்மைக்கு மாறான வகையில் திரைப்படம் எடுக்கும் கமலஹாசன், விஜய், விஜயகாந்த், அர்ஜுன் ஆகிய கூத்தாடிகளை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் இதன் விளைவுகள் இனிமேல் கடுமையாக இருக்கும் என்று கண்டிப்பதுடன் மேற்கண்ட கூத்தாடிகளையும் அவர்களின் திரைப்படங்களை இயக்குபவர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் இப்பொதுக்குழு கடுமையாக எச்சரிக்கின்றது.
14.    முஸ்லி ம்களுக்கு எதிராக விஸ்வரூபம் திரைப்படம் அமைந்துள்ளது என்று ஒட்டு மொத்த முஸ்லி ம் சமுதாயமும் கருதும் போது இப்படத்தை தடை செய்திருக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதியை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
15.    விஸ்வரூபம் என்ற திரைப்படம் இஸ்லாம் மார்க்கத்தையும் முஸ்லி ம்களின் வேதமான திருக்குர்ஆனையும் ஒட்டு மொத்த முஸ்லி ம்களையும் இழிவுபடுத்தும் வகையில் இருந்தது. இந்தப் படம் வெளியானால் அது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அனைத்து முஸ்லி ம் இயக்கங்களும் இக்கோரிக்கையை வைத்தன.
இதனை ஏற்று உடனடியாக இப்படத்தை தடை செய்த முதல்வர் ஜெயலலி தாவின் உறுதியான நடவடிக்கையை இப்பொதுக்கு பாராட்டுகிறது. இஸ்லாம் மார்க்கத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்க நடிகர் கமலஹாசன் இறங்கி வரச்செய்த தமிழக அரசுக்கு இப்பொதுக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
16.    விஸ்வரூபம் என்பது தனிப்பட்ட ஒரு நடிகனுக்கும் முஸ்லி ம்களுக்குமான பிரச்சனை. இது இந்து முஸ்லி ம் பிரச்சனை அல்ல. இந்துக்களை உயர்த்தி முஸ்லி ம்களைத் தாழ்த்தி இப்படம் எடுக்கப்படவில்லை. ஆனாலும் இப்படத்துக்கு முஸ்லி ம்கள் எதிர்ப்பு தெரிவித்ததைக் காரணம் காட்டி ஒட்டு மொத்த இந்துக்களை முஸ்லி ம்களுக்கு எதிராக தூண்டி விட்ட ஊடகங்கள் அனைத்தையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பரபரப்புக்காக உண்மைக்கு மாற்றமான வகையில் செய்திகளை திரிக்க வேண்டாம் எனவும் இப்பொதுக்குழு ஊடகங்களுக்கு அறிவுரை சொல்கிறது.
17.    முஸ்லி ம் பெயர் தாங்கி இயக்குனர் அமீர் உள்ளிட்ட திரைத்துறையினர் அனைவரும் விஸ்வரூபம் படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தும், முஸ்லி ம்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களைச் செய்திருந்தும் கூட இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் சீமான் ஆகிய இருவர் மட்டும் துணிவாக உண்மையை உடைத்துப் பேசியதற்கு இப்பொதுக்குழு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இஸ்லாமிய சட்டத்தை இழிவுபடுத்துவோரைக் கண்டித்து
18.    பச்சிளங்குழந்தையைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்த குற்றத்துக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா என்ற பெண்ணுக்கு ஆதரவாகப் பேசி இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தை விமர்சனம் செய்த கருணாநிதிக்கு இப்பொதுக்குழு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
19.    மரண தண்டனை காட்டுமிராண்டித்தனம் என்றால் அது குறித்து எங்களோடு விவாதிக்க தயாரா என்று கருணாநிதிக்கும் அறிவு ஜீவிகள் போர்வையில் உளறி வருவோருக்கும் பகிரங்க விவாத அழைப்பு கொடுத்தும் அதை ஏற்காத இவர்களின் கோழைத்தனத்தையும் இப்பொதுக்குழு கண்டிக்கிறது.
20.    இலங்கையில் இந்துத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அனைத்துக் கட்சிகளும் அங்கே முஸ்லி ம்கள் புத்த பிக்குகளால் தாக்கப்படுவதற்கும் பள்ளிவாசல்களை அடித்து நொறுக்குவதற்கும் எதிராக எவ்விதக் கண்டனங்களையும் பதிவு செய்யவில்லை என்பதை முஸ்லி ம்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என முஸ்லி ம் சமுதாயத்தை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
பாபரி மஸ்ஜித்
21.    பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகியும் அப்பள்ளியை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்திய முஸ்லி ம்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். ரேபரேலி  நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையைத் துரிதப்படுத்தவும் நியாயமான தீர்ப்பு வழங்கவும் இப்பொதுக்குழு நீதித் துறையைக் கேட்டுக் கொள்கிறது.
22.    பாபர் மசூதி குறித்த அலஹாபாத் நீதிபதிகளின் கட்டப்பஞ்சாயத்து அநியாயத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை துரிதமாக விசாரித்து முடிக்க மத்திய அரசு முயல வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றம் ஆறப்போட்டு அநீதியிழைக்காமல் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.

வக்ஃபு வாரியத்தை முற்றாகக் கலைக்கக் கோரி

23.    கிறித்தவ சமுதாயத்தின் அறப்பணிகளுக்கான சொத்துக்களை அரசு தலையீடு இல்லாமல் கிறித்தவ சமுதாயமே நிர்வகித்து வருகிறது. அதனால் அவர்களின் சொத்துக்கள் ஆக்ரமிக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்து வருகிறது. ஆனால் முஸ்லி ம் சமுதாய சொத்துகளை அரசின்  வக்ஃபு வாரியம் நிர்வகிக்கிறது. இது அரசியல்வாதிகளுக்கும் சுரண்டல்  பேர்வழிகளுக்கும் கொள்ளை அடிக்க வாய்ப்பாக இருந்து வருகிறது. எனவே முஸ்லி ம் சமுதாய சொத்துக்களை அரசு தலையீடு இல்லாமல் முஸ்லி ம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ஃப் வாரியத்தை முற்றாகக் கலைத்து விட வேண்டும் என மாநில மத்திய அரசுகளை இப்பொதுக்குழு  கேட்டுக் கொள்கிறது.
24.    உள்ளூர் ஜமாஅத்துகள் வக்பு சொத்துக்களை நிர்வாகம் செய்தால் மட்டுமே வக்பு சொத்துக்களைப் பாதுகாக்க முடியும் என்று இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது.

முஸ்லி ம் தனியார் சட்டம்

25.    பெண்கள் பருவ வயதை அடைந்தவுடன் திருமணத்துக்குத் தயாராகிறார்கள். பருவ வயதை அடைந்து 18 வயதை அடையாத பெண்கள் காதல் வலையில் விழுந்து சீரழிந்து போகிறார்கள். இந்த நிலை ஏற்படாமல் தடுக்க பொறுப்புள்ள சில பெற்றோர்கள் தங்கள் புதல்விகள் 16 வயதை அடைந்தவுடன் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் இது போன்ற திருமணங்களை குழந்தைகள் திருமணம் என்று சொல்லி  அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பெற்றோர் மீது வழக்கும் பதிவு செய்கிறார்கள். திருமணம் விவாகரத்து உள்ளிட்ட சில சட்டங்களில் முஸ்லி ம்களுக்கு தனியாக சட்டம் உள்ளதால் பருவ வயதை அடைந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய முஸ்லி ம்களுக்கு சட்டப்படி உரிமை உள்ளது. இந்த உரிமையைப் பறிக்கும் வகையில் செயல்படுவதை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

திருமண பதிவுகளில் கெடுபிடி

26.    உச்ச நீதிமன்ற உத்தரவுபடி திருமணங்களை பதிவு செய்ய வேண்டுமென மாநில அரசு சட்டம் இயற்றியது. திருமணத்தை பதிவு செய்ய போகும் போது முஸ்லி ம்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். தற்காலத்தில் முஸ்லி ம்கள் திருமண பத்திரிக்கை கூட அடிக்காமல் எளிமையாக திருமணம் செய்கிறார்கள். திருமண பத்திரிக்கை கொண்டுவர வேண்டுமென அதிகாரிகள் நிர்பந்தம் செய்கின்றனர்.
நமது நாட்டில் ரேஷன் கடைகளில் உள்ள குளறுபடிகளை உலகமே அறியும். பெயரையும் வயதையும் தவறாக எழுதுதல், குடும்ப உறுப்பினர்கள் சிலரது பெயர்களை சேர்க்காமல் விட்டுவிடுதல் போன்ற குறைபாடுகள் ரேஷன் கார்டில் உள்ளது. திருமணத்தை பதிவு செய்யும் போது ரேஷன் கார்டில் கூறப்பட்டுள்ள தகவலுக்கு மாற்றமாக உள்ளதால் ரேஷன் கார்டில் பெயர் இல்லை என்பன போன்ற காரணங்களை கூறி திருமணத்தை பதிவு செய்ய மறுப்பது.
அதிகமான முஸ்லி ம் பெண்கள் ஆரம்ப கல்வியை தாண்டுவதில்லை. ஆரம்ப கல்வியை கற்ற சான்றிதழ்களையும் பாதுகாப்பதில்லை. திருமணத்தை பதிவு செய்யும் போது கல்வி சான்றிதழ்களை கேட்டு வற்புறுத்துகின்றனர். இதுபோன்ற தேவையற்ற நெருக்கடிகளால் முஸ்லி ம் திருமணங்களை பதிவு செய்வதை தவிர்ப்பதுதான் இச்சட்டத்தால் கிடைத்த நன்மை. எனவே இச்சட்டம் முழுமையாக பயனளிக்க வேண்டுமானால் முஸ்லி ம் நிறுவனங்கள், ஜமாஅத்துகள் முன்னிலையில் பதிவு செய்த திருமணச் சான்றையே ஆதாரமாகக் கொண்டு திருமணத்தை பதிவு செய்ய ஆவண செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

தேர்தல் முறையில் மாற்றம் தேவை

27.    இந்திய தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசனத் திருத்தம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும்  இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
28.    இந்த தேர்தல் முறையினால் மட்டுமே அனைத்து கட்சிகளும் அனைத்து சமுதாயமும் தங்களின் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெறமுடியும். மேலும் கொள்கை முரண்பாடுள்ளவர்களுடன் பொருந்தாக் கூட்டணி வைக்கும் அவலமும் இதனால் ஒழிக்கப்படும் என்று இப்பொதுக்குழு கருதுகிறது.

முஸ்லி ம்களுக்கு ரிசர்வு தொகுதி

29.    சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லி ம்களின் பங்களிப்பு தேர்தல் தோறும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே தலி த் சமுதாய மக்களுக்கு இருப்பது போல் முஸ்லி ம்களுக்கு 20 சதவிகித தொகுதிகளை முஸ்லி ம் ரிசர்வ் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது.


வன்கொடுமை சட்டங்கள்

30. பலநூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்புக்காக வன்கொடுமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை தலி த் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். எந்த சிறு பிரச்சனையானாலும் சாதியின் பெயரைச் சொல்லி  திட்டியதாக புகார் கொடுக்கின்றனர். ஜாதி வேறுபாடு காட்டாமல் தலி த் மக்களுடன் நட்புடன் பழகி வரும் முஸ்லி ம்கள் மீதும் இது போல் பல பொய்ப்புகார்கள் அளிக்கப்பட்டு ஜாமீனில் வரமுடியாத நிலையை முஸ்லி ம்கள் சந்திக்கின்றனர். முற்றிலும் தவறாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சட்ட்த்தை அடியோடு நீக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது,

நோன்புக் கஞ்சிக்கு இலவச அரிசி

31. ரமலான் மாதத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு சிறப்பு விலையில் அரசு வழங்கும் பச்சரிசி விநியோக முறையை இலகுவாக்கும்படி இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. அரிசி வழங்கலி ல் தேவையற்ற கெடுபிடிகள் செய்து முஸ்லி ம்களை அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது.


இறந்தவர்களை அடக்கம் செய்ய மறுப்போர்

32.    காழ்ப்புணர்வு காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சில ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மறுக்கிறார்கள். மனிதாபிமானமற்ற இச்செயலி ல் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

இஸ்லாத்தைத் தழுவியோருக்கான அரசு வேலைவாய்ப்பு

33.    பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்தை தழுவினால் அவர்கள் கிறித்தவர்களின் பிற்பட்ட பிரிவினராகக் கருதும் வகையில் அரசாணை உள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தை தழுவினால் அவர்கள் பிற்பட்ட சமுதாயமாக கருதப்படுவார்கள் என்று அரசாணை இல்லாததால் கல்வி வேலை வாய்ப்பில் இவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. இது குறித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு போட்ட பிறகும் தமிழக அரசு இதுவரை அரசாணை வெளியிடவில்லை. இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நடராஜ் அவர்களை சந்தித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்தனர். பின்னர் இப்பொறுப்புக்கு வந்த நவநீத கிருஷணன் அவர்களையும் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் இன்று வரை இது குறித்து ஆணை பிறப்பிக்கவில்லை. தமிழக அரசின் இந்தப் போக்கை இபொதுக்குழு கண்டிப்பதுடன் உடனடியாக இதற்கு அரசாணை பிறப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

பூரண மதுவிலக்கு

34.    மதுபானங்களும் இதர போதைப் பொருட்களும் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது என்பதும், குடும்பத்தில் பிளவை ஏற்படுத்துகிறது என்பதும், கஷ்டப்பட்டு உழைத்த பொருளாதாரத்தைப் பாழாக்கி வறுமையை அதிகரிக்கிறது என்பதும் கொலை அடிதடி போன்ற சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதும், இல்லற வாழ்வில் ஈடுப்பாட்டை குறைப்பதால் கள்ள உறவுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். மானம் மரியாதையை ஒருவன் இழப்பதற்கும் போதைப் பழக்கமே முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. இளம் வயதினர் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் கல்வி கற்பதில் அவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் குறைந்து எதிர்காலம் நாசமாகி வருகிறது. இன்னும் சொல்லி  முடியாத கேடுகள் மதுப்பழக்கத்தால் ஏற்படுவது தெரிந்திருந்தும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தமிழக அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்து குடிப்பழக்கம் இல்லாத மக்களையும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்குவதை இந்த பொதுக்குழு கண்டிக்கிறது. வருவாயை விட நாட்டு மக்களின் நலனும் நிம்மதியும் ஒழுக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்து உடனடியாக தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக அக்கறையுடன் தமிழக அரசை இந்தப் பொதுக்குழு வற்புறுத்துகிறது.
35.    மது, பீடி சிகரெட், பான்பராக், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் தீமைகளை மக்களுக்கு விலக்கி இப்பழக்கத்தில் இருந்து விடுபடத்தக்க வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகங்களும் கிளைகளும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

மதமாற்றம் செய்யும் கிறித்தவ கல்விக்கூடம்

36.    சமீபகாலமாக கல்வி கற்கச் செல்லும் அதிகமான மாணவ மாணவிகளும் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சில ஆசிரியர்களும் காமப் போதையில் தட்டழிந்து திரிகின்றனர். 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கூட ஆண்களுடன் ஓட்டம் பிடிக்கும் நிகழ்ச்சிகளும் ஆசிரியரே மாணவிகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கும் கல்வி முறையும், கட்டுப்பாடற்ற சுதந்திரமும் முக்கியமான காரணங்களாக உள்ளன. ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படித்தால் ஆண்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். அவர்கள் படிக்காமல் பெண்களை ரசிப்பதில் கவனத்தைச் சிதற விடுவதால் ஆண்களின் தேர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. நமது நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஒத்து வராத கோஎஜுகேஷன் என்ற முறை ஒழிக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படிக்கும் கல்வி முறையை அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதை தமிழக அரசு உணர்ந்து மாணவ மாணவிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
37.    சிறுபான்மை மக்கள் தனியாக கல்விக்கூடம் நடத்த அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. இந்த உரிமையை அதிகமான கிறித்தவப் பள்ளிக்கூடங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன, கிறித்தவ மத வழிபாட்டை முஸ்லி ம்களும் இந்துக்களும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். தங்கள் சமுதாய மக்களை கல்வியில் உயர்த்திடவே இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. மத மாற்றம் செய்வதற்கு அல்ல. இப்படி சட்டத்துக்கு எதிராக நடக்கும் கல்விக் கூடங்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு தமிழக அரசு கடுமையான எச்சரிக்கை விடுப்பதுடன் இதுபோன்ற கல்விக்கூடங்களின் அனுமதியை ரத்து செய்யுமாறு இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
38.    சட்டம் ஒழுங்குப்பிரச்சனை ஏற்படக் காரணமாக உள்ள இது போன்ற பள்ளிக்கூடங்களை அனைத்து சமுதாய மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

இலங்கையிலும் பர்மாவிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை

39.    இலங்கையில் சிங்கள மக்களுடன் முஸ்லி ம்கள் நல்லி ணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் முஸ்லி ம்களுக்கு எதிராக புத்த பிக்குகள் பள்ளிவாசல்களை இடித்தும் முஸ்லி ம்களுக்கு எதிரான வன்முறையிலும் இறங்கி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலங்கையின் இந்த அராஜகத்தை உடனே தடுத்து நிறுத்த இந்திய அரசாங்கம் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் எனவும், முஸ்லி ம் நாடுகளில் வாழும் தமிழ் கூறும் மக்கள் அந்தந்த அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துமாறு இப்பொதுக்குழு கடல் கடந்து வாழும் முஸ்லி ம்களைக் கேட்டுக் கொள்கிறது.
40.    அதுபோல் மியான்மர் எனப்படும் பர்மாவில் வங்கதேசத்தில் இருந்து குடியேறியதாகக் கூறி முஸ்லி ம்களை விரட்டியடிக்கும் புத்தமத வெறியர்களை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உலகமெங்கும் வாழும் புத்த துறவிகள் மீது எதிர்வினை உலகமெங்கும் நடந்தால் அதற்கு மியான்மர் அரசும் இலங்கை அரசும் தான் பொறுப்பாவார்கள் என்று இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது. இது போன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ள தாலய்லாமா உள்ளிட்ட புத்த பிக்குகளை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு முஸ்லி ம்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

மத்திய அரசின் ஹஜ் மானியக் கொள்ளை

41.    ஹஜ் பயணிகளிடம் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு அதில் 20 ஆயிரத்தை முஸ்லி ம்களுக்கு கொடுத்து அதை மானியம் எனக் கூறி முஸ்லி ம்களையும் நாட்டு மக்களையும் ஏமாற்றும் மத்திய அரசின் இந்த வஞ்சகத்தை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. விமானக் கட்டணம், உணவு தங்கும் வசதி அனைத்தும் 70 ஆயிரத்துக்குள் அடங்கும் போது மேலும் 80 ஆயிரம் அதிகமாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமும் கொள்ளை அடிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. முஸ்லி ம்களிடம் காசு பறித்து அதில் சிறிதளவை அவர்களுக்குக் கொடுத்து அதை மானியம் என்று சொல்வதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது

வளைகுடா பணியாளர் அவலம்

42.    வளைகுடா பணியார்களின் அதிகமானோர் குறைந்த ஊதியத்தில் கடினமான வேலைகளை செய்கின்றனர். இவர்களின் ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முயல வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
இந்தியத் தூதரகங்களின் அலட்சியப் போக்கு
43.    அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன்களைப் பேணுவதற்காக அனைத்து நாடுகளும் தமது தூதரகங்களில் கனிவான சிறப்பான பொறுப்பான சேவைகளைச் செய்து தங்கள் நாட்டு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்து வருகின்றன. ஆனால் அரபு நாடுகளில் இயங்கும் இந்தியத் தூதரகங்கள் இந்தியத் தொழிலாளர்கள் விஷயத்தில் திமிராகவும் ஆணவத்துடனும் பொறுப்பின்றியும் நடந்து கொள்வதாக எண்ணற்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
44.     தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏமாற்றினாலும், ஊதியக் குறைப்பு செய்தாலும், காரணமின்றி ஆட்குறைப்பு செய்தாலும், விபத்துக்களில் சிக்கிக் கொண்டாலும், தொழிலாளர் மரணித்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத கொடுங்கோலர்கள் தான் இந்திய துதரகங்களில் உள்ளனர். இந்தியத் தொழிலாளர்கள் இந்தியத் தூதரகங்களை அணுகவே அஞ்சுகின்ற அளவுக்கு நிலமை மோசமாகவுள்ளது. இப்போக்கை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. மத்திய அரசு இதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது.

பிறரைத் தாக்கும் ஊர்வலங்களுக்குத் தடை

45.    சிறுபான்மையானாலும், பெரும்பான்மையானாலும் மற்ற மதத்தவரைத் தாக்கிக் கோஷம் போடும் வகையிலும் மற்ற மதத்தவர்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் நடத்தும் எந்த ஊர்வலத்துக்கும் எக்காலத்திலும் அனுமதி அளிக்கக் கூடாது. இதன் மூலம் மத நல்லி ணக்கத்த்தைப் பேண முடியும் என்று அரசுக்கு இபொதுக்குழு ஆலோசனை கூறுகிறது.

கலவர தடுப்பு மசோதா

46.    ஆட்சிக்கு வந்தால் மதக்லவரத் தடுப்பபு சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் வாக்களித்ததை தாமதமின்றி உடனே நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

thanks : tntj.net

SOURSE : http://www.tntj.net/144017.html