Thursday 2 April 2015

வேறுவானங்களும், வேறுபூமியும் _மடத்துக் குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம்  கிளை சார்பாக 02.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர் சையதுஅலி அவர்கள் 225. வேறுவானங்களும், வேறுபூமியும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.. 
 

225. வேறு வானங்களும், வேறு பூமியும் உருவாக்கப்படும்

இவ்வசனங்களில் (11:107,108) "வானங்களும் பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம் நல்லவர்கள் சொர்க்கத்திலும், கெட்டவர்கள் நரகத்திலும் இருப்பார்கள்' என்று சொல்லப்படுகிறது.
அதாவது வானம், பூமி எப்படி அழியாதோ அவ்வாறு சொர்க்கவாசிகளுக்கும் நரகவாசிகளுக்கும் அழிவில்லை என்ற கருத்தை இது தருகிறது.
உலகம் அழிக்கப்படும் போது வானங்கள், பூமி உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் என்று திருக்குர்ஆன் (55:26, 27) கூறுகிறது.
வானமும் பூமியும் அழிக்கப்பட இருக்கும்போது வானமும் பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம் என்று எப்படி கூற முடியும் என்ற சந்தேகம் இதனால் ஏற்படலாம்.
இன்னும் சில வசனங்களை நாம் ஆய்வு செய்தால் அவை இந்த முரண்பாட்டை நீக்கும் வகையில் அமைந்துள்ளதைக் காண முடிகின்றது.
இந்தப் பூமி வேறு பூமியாகவும், வானங்கள் வேறு வானங்களாகவும் மாற்றப்படும் என்ற கருத்தில் அமைந்த வசனங்களே அவை. (பார்க்க: திருக்குர்ஆன் 14:48, 21:104, 39:67)
இப்போதுள்ள வானம், பூமி ஆகியவை அழிக்கப்பட்ட பின், மீண்டும் உருவாக்கப்படும் வானம், பூமி நிலையானதாக இருக்கும். அந்த வானம், பூமி நிலையாக இருக்கும் காலமெல்லாம் சொர்க்கம், நரகமும் நிலையாக இருக்கும் என்பதையே இவ்வசனங்கள் (11:107, 108) கூறுகின்றன.
மேலும் விபரத்துக்கு 453வது குறிப்பைப் பார்க்கவும்