Wednesday, 12 December 2012

வட்டி இல்லா கடன் உதவி _ உடுமலை _09122012


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
09.12.2012 அன்று  
வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில்பழனி  சகோதரர். யாசர் அஹமது
அவர்களுக்கு ரூ.6000/= 
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _11.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 11.12.2012 அன்று மாலை 08:00முதல் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சதாம் அவர்கள்
"இறை அச்சம் " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

தெருமுனைபிரச்சாரம் _செரங்காடு _11.12.2012

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடுகிளைசார்பாக 11.12.2012அன்றுமாலை08:00முதல் 
தெருமுனை பிரச்சாரம்நடைபெற்றது.
இதில்சகோ.பசீர்அவர்கள் " இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Tuesday, 11 December 2012

பெண்கள் பயான் _09122012 _காலேஜ்ரோடு

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு   கிளை சார்பாக
G.K.நகர் பகுதி யில் 09.12.2012 அன்று மாலை  பெண்கள் பயான் நடைபெற்றது
  சகோதரி.மதீனா அவர்கள் "இஸ்லாம் கூறும் வழிமுறைகள்  "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அந்த பகுதி பெண்கள் தமது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

Sunday, 9 December 2012

பெண்கள் பயான் _09.12.2012 _வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக
வெங்கடேஸ்வரா நகர் மதரஸதுல்தக்வா வில்
09.12.2012 அன்று மாலை 5 மணிமுதல் பெண்கள் பயான் நடைபெற்றது
மாவட்ட பேச்சாளர்
சகோ.பசீர் அவர்கள்
 "இறை அச்சம் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம்   
சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால்
திருப்பூர் கோம்பை தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்
பள்ளியில் பிரதி ஞாயிறு காலை 7.00மணி முதல் 9.30மணி வரை (முதல்வகுப்பு) உள்ளூர்வாசிகளுக்கும் ,
 பிரதி ஞாயிறு காலை 10:00 மணி முதல்  1:00 மணி வரை 

(இரண்டாம் வகுப்பு) வெளியூர்வாசிகளுக்கும் நடைபெற்றுவருகிறது .
09-12-2012 அன்று   5 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது

தர்பியா_ 09122012 _தாராபுரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 09-12-2012 அன்று காலை 10:00 மணி முதல்  1:00 மணி வரை மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது
சகோ.அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் "கொள்கை உறுதி" எனும் தலைப்பில், நல்லொழுக்கபயிற்சி வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் சகோ.சேக்பரீத் சகோ.பசீர்,
கிளைநிர்வாகிகள் ,மற்றும் கிளைஉறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ் 

Saturday, 8 December 2012

தர்பியா_04122012_மங்கலம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 04-12-2012 அன்று காலை 08:00 மணி முதல்  10:00 மணி வரை மஸ்ஜிதுல்மாலிகுல்முல்க் பள்ளியில் சகோ இமாம் தவ்ஃபீக் அவர்கள் "கொள்கை உறுதி" எனும் தலைப்பில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

Friday, 7 December 2012

தாவா பணிகளுக்காக அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடுமலை கிளையின் தாவா பணிகளுக்காக
கேரளா மாநிலம் புதுநகரம் பகுதியை சேர்ந்த சகோதரர்.அப்துல்ஜமால் அவர்கள்
வீடியோ ப்ரொஜெக்டர், DVD பிளேயர், ஸ்க்ரீன் உட்பட
ரூ.38500 மதிப்பிலான பொருட்களை வழங்கினார்
இதனை உடுமலை கிளை நிர்வாகிகள் சகோ.பஜுலுல்லாஹ்,
சகோ.அப்துர்ரசீத் மற்றும்  சகோ.அப்துர்ரஹ்மான் ஆகியோர்
 30.11.2012 அன்று நேரில் சென்று பெற்றுக்கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - மாவட்ட நிர்வாகிகள் -ஆலோசனை


7.12.2012 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ,
திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நேரில் வந்து
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 23.12.2012 அன்று
உடுமலையில் நடைபெற உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் "
நிகழ்ச்சி பற்றி செயல்படுத்த வேண்டிய செயல்முறைகள்,
பணிகள் குறித்து கலந்தாலோசனை செய்து ,
   கிளை நிர்வாகிகளுக்கு  ஆலோசனை வழங்கினர்.

Wednesday, 5 December 2012

மாபெரும் புகையிலை தடுப்பு மருத்துவ முகாம்-பெரியதோட்டம் கிளை





03.12.12 அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக  கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையுடம் இணைந்து மாபெரும் புகையிலை தடுப்பு மருத்துவ முகாம் பெரியதோட்டம் 2 வது வீதியில் தாருல் ஹூதா அரபி பாடசாலையில் 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மூலம் நடைப்பெற்றது.இதில் 160 பேர் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் மருத்துவ ஆலோசனையும்,புகையிலையினால் ஏற்படும் தீங்கு குறித்து புகைப்படமும்,மாத்திரையும் (swingam) தரப்பட்டது.
பரிசோதனை முகாமில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இவருக்கு கட்டண சலுகை அடிப்படையில் மருத்துவ சிகிச்சை நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.


                       
                                                        


இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் தலைமை தாங்கினார்கள்

POSTED BY
 

திருப்பூர் மாவட்ட பொதுக்குழு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கடந்த 02.12.12 அன்று காலை 10.45 மணிக்கு மாவட்ட தலைமை மர்கஸில் வைத்து மாநில செயளாலர்கள் சகோ.அப்துல் ஜப்பார் மற்றும் சகோ.திருவள்ளூர் யூசுப் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.இதில் கடந்த பொதுக்குழுவிலிருந்து இந்த பொதுக்குழு வரை மாவட்ட செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு கண்க்குகள் தாக்கல் செய்யப்பட்டது.மேலும் நிர்வாக சீரமைப்பு நடைப்பெற்றது.



POSTED BY
 

மாணவர் அணியின் சார்பாக ”யார் இவர்? ”துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது-மங்கலம் கிளை

அல்லாஹ்வின் திருபெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக  03-12-2012 அன்று திங்கள் கிழமை அன்று யார் இவர்? என்ற துண்டு பிரசுரம் ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு மாற்றுமத சகோதரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் மங்கலம் பேருந்து நிறுத்தத்திலும் விநியோகம் செய்யப்பட்டது




POSTED BY
 

மாணவர் அணியின் சார்பாக பேனர் தாஃவா-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் மாணவர் அணியின் சார்பாக  01-12-2012 அன்று பல்லடம் கிளை, தாராபுரம் கிளை, உடுமலை கிளை, ஆகிய கிளைகளில் தொழுகைக்கு பின் ஓதும் துஆ பேனர்கள் அடித்து ஒட்டப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)
பேனரின் அளவு (8*4)(8*4)(5*3)


POSTED BY
 

மாணவர் அணியின் சார்பாக தெருமுனை பயான்-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 02-12-2012 அன்று சின்னவர் தோட்டத்தில் மாலை 07:00 மணி 08:00 முதல் மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது இதில் மாணவர் அணியில் உள்ள சகோ யாசின் அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்


POSTED BY
 

Friday, 30 November 2012

அல்ஹம்து சூரா ஓதாமல் தொழலாமா?



கேள்வி

தொழ ஆரம்பிக்கும் ஒருவருக்கு அல்ஹம்து சூரா தெரியவில்லை. மற்றவர்களைப் பார்த்து தொழுது கொண்டிருக்கும் இவர் அல்ஹம்து சூரா ஓதாமல் தொழுவதால் அந்தத் தொழகை ஏற்றுக் கொள்ளப்படுமா?

சேக் முஹம்மது

பதில் 

சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதாதவருக்கு தொழுகை இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

756حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

திருக்குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது.

அறிவிப்பவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)
நூல் : புகாரி 756

சூரத்துல் ஃபாத்திஹா ஓதாவிட்டால் தொழுகை இல்லை என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். எனவே சூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்தவர்கள் அதை ஓதாமல் தொழுகக்கூடாது. அப்படி தொழுதால் அந்தத் தொழுகை ஏற்கப்படாது.

ஆனால் புதிதாக இஸ்லாத்துக்கு வந்தவர்களோ அல்லது தொழுகை முறை சரியாகத் தெரியாதவர்கள் புதிதாகத் தொழ ஆரம்பிக்கும் போது அந்தச் சூழலில் சூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் இவர்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை. இவர்களின் தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டானோ என்று சந்தேகப்படத் தேவையில்லை.

அறியாமை, மறதி போன்ற காரணங்களுக்கு இஸ்லாத்தில் மன்னிப்பு உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் முஆவியா பின் ஹகம் என்ற நபித்தோழர் புதிதாக இஸ்லாத்திற்கு வந்த நிலையில் முஸ்லிம்களுடன் சேர்ந்து தொழுதார்கள்.

தொழுகையில் வெளிப்பேச்சுக்களைப் பேசக்கூடாது என்ற ஒழுங்குமுறையை இவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே தொழுதுகொண்டிருக்கும் போதே மற்றவர்களிடம் பேசினார்கள்.
தொழுகை முடிந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நபித்தோழரைக் கண்டிக்காமல் அமைதியான முறையில் அறிவுரை கூறினார்கள். அவர் தொழுத தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என்றோ அவர் மறுபடியும் தொழ வேண்டும் என்றோ நபியவர்கள் கூறவில்லை.

836 حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَتَقَارَبَا فِي لَفْظِ الْحَدِيثِ قَالَا حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ هِلَالِ بْنِ أَبِي مَيْمُونَةَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ قَالَ بَيْنَا أَنَا أُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ عَطَسَ رَجُلٌ مِنْ الْقَوْمِ فَقُلْتُ يَرْحَمُكَ اللَّهُ فَرَمَانِي الْقَوْمُ بِأَبْصَارِهِمْ فَقُلْتُ وَا ثُكْلَ أُمِّيَاهْ مَا شَأْنُكُمْ تَنْظُرُونَ إِلَيَّ فَجَعَلُوا يَضْرِبُونَ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ فَلَمَّا رَأَيْتُهُمْ يُصَمِّتُونَنِي لَكِنِّي سَكَتُّ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبِأَبِي هُوَ وَأُمِّي مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلَا بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ فَوَاللَّهِ مَا كَهَرَنِي وَلَا ضَرَبَنِي وَلَا شَتَمَنِي قَالَ إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ وَقَدْ جَاءَ اللَّهُ بِالْإِسْلَامِ رواه مسلم

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் "யர்ஹமுக் கல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் "என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள்மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் -என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், "இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்'' என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?'' என்றேன்.

நூல் : முஸ்லிம் 935

எனவே புதிதாக தொழுபவர்கள் சூரத்துல் பாத்திஹாவை தொழுகையில் ஓத இயலாது என்பதால் தொழுவதற்கு அவர்கள் அஞ்சவேண்டிய அவசியமில்லை. அவர்களின் தொழுகையை இறைவன் ஏற்றுக்கொள்வான்.

ஆனால் இதே நிலையில் நீடிக்காமல் சீக்கிரமாக சூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்து தொழுகையில் ஓத முயற்சிக்க வேண்டும்.
நன்றி= ONLINEPJ.COM


POSTED BY
 

தெருமுனைப் பொதுக் கூட்டம் -மங்கலம் கிளை





அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-11-2012 அன்று மங்கலம் நால் ரோட்டில் தெருமுனைப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.தாவூத் கைஸர் அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பிலும் சகோ.தவ்ஃபீக் அவர்கள் உலகப் பொதுமறை திருக்குர்ஆன் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் 


POSTED BY
 

Sunday, 25 November 2012

யார் இவர்? துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது-தாராபுரம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை மாணவர் அணியின் சார்பாக 24-11-2012 அன்று இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை மற்றும் யார் இவர்? துண்டு பிரசுரங்கள் தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் கடை வீதி மற்றும் மக்கள் கூடுமிடங்களில் சென்று கொடுக்கப்பட்டது.(அல்ஹம்துலில்லாஹ்)


                                                                 



POSTED BY
 

பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்கு உதவி-உடுமலை கிளை



16.11.2012  அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
உடுமலை கிளை மஸ்ஜிதுத்  தக்வா பள்ளிவாசலில்,  
ஜூம்மாஹ்வசூல்
 செய்யப்பட தொகை  ரூ. 6000/= 
திருப்பூர்  மாவட்டம் பெரிய கடை வீதி   கிளை   
பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்கு   
உதவி வழங்கப்பட்டது. 

POSTED BY
 

மருத்துவஉதவி-உடுமலை 13112012


TNTJ திருப்பூர் மாவட்டம் _ உடுமலை கிளையின் சார்பாக
13.11.2012 அன்று பொள்ளாச்சி பகுதி  ஐ சார்ந்த  ஏழை சகோதரி  யின் 
மருத்துவ செலவினக்களுக்கு  ரூபாய் 5  ஆயிரம் 
TNTJ உடுமலை கிளை ஜகாத்  நிதிலிருந்து  அவரது கணவர் வசம் உதவி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் 

POSTED BY
 

மாணவர் அணியின் சார்பாக மக்தப் மதரஸா மாணவர்களுக்கு பேச்சாளர் பயிற்சி வகுப்பு




அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 11-11-2012 அன்று மக்தப் மதரஸா மாணவர்களுக்கு பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் ஆறு மாணவர்கள் கலந்து கொண்டனர்(அல்ஹம்துலில்லாஹ்)


POSTED BY
 

மாணவர் அணியின் சார்பாக பேச்சாளர் பயிற்சி வகுப்பு-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 11-11-2012 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 5 இளைஞர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்


POSTED BY
 

வட்டி இல்லா கடன் உதவி-உடுமலை கிளை



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
07.11.2012
 
அன்று வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில்
மடத்துக்குளம் சகோதரருக்கு 
அவர்களுக்கு ரூ.20000/= 
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது. 

POSTED BY
 

Wednesday, 14 November 2012

பெண்கள் பயான்-மங்கலம் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-11-2012 அன்று மங்கலம் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள ஒரு சகோதரரின் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் அல் இர்ஷாத் கல்லூரி மாணவி இர்ஃபான மற்றும் அல் இர்ஷாத் கல்லூரி மாணவி ரமீஸ் ஃபாத்திமா கோவை மாவட்ட பெண் தாயி மும்தாஜ் ஆகியோர் உரையாற்றினார்கள்

POSTED BY