Thursday, 6 June 2013

கல்வியின் அவசியம் _பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் 05062013

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 05/06/2013 அன்று அண்ணா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் சபியுல்லா "கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

Wednesday, 5 June 2013

டி.வி.யில் தொலைந்த சமுதாயம் _பெரியகடை வீதி கிளை தெருமுனை பிரச்சாரம் 04062013
















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளையின் சார்பாக 04.06.2013 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.பசீர் அவர்கள் டி.வி.யில் தொலைந்த சமுதாயம். என்ற தலைப்பில் உரையாற்றினார்

கால் அறுவை சிகிச்சைக்காக ரூ 3000 மருத்துவ உதவி _பெரியதோட்டம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 04/06/2013 அன்று தாராபுரத்தை சார்ந்த சாகுல் ஹமீது என்ற சகோதரரின் கால் அறுவை சிகிச்சைக்காக ரூ 3000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

Tuesday, 4 June 2013

சகோதரியின் அவசர இரத்த தேவைக்கு கிளை சகோதரர்களால் 2 யூனிட் ( O- ) இரத்தம் _ மடத்துக்குளம் 04062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பாக 04.06.2013 அன்று மடத்துக்குளம் சோழமாதேவி பகுதியை சேர்ந்த சகோதரி.ரம்ஜான் பேகம் அவர்களின் பிரசவ அறுவை சிகிச்சை அவசர இரத்த தேவைக்கு கிளை சகோதரர்களால் 2 யூனிட் ( O- ) இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கல்வியின் அவசியம் _கோம்பைதோட்டம்கிளை தெருமுனை பிரச்சாரம் 03062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளையின் சார்பாக 03.06.2013 அன்று ஜாக் பள்ளி வீதி பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ராஜூ என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – காலேஜ்ரோடு கிளை 03062013




தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 03.06.2013 அன்று  பிறமத சகோதரர். ராஜு அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 3 June 2013

தேனீக்களின் வழி அறியும் திறன்




தேனீக்கள் மூலம் கன்னிவெடிகளைக் கண்டுபிடிக்கலாம் என்ற செய்தி தமிழில் எல்லா ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு வெளிவந்தது. 

அச்சு அசலாக ஒரு வார்த்தை கூட மாறாமல் அனைத்து ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு தான் இச்செய்தி வெளியானது. 

ஏதோ ஒரு ஊடகத்தில் வந்ததை அப்படியே காப்பி அடித்து எல்லோரும் பயன்படுத்தியுள்ளனர். 

ஜாக்ரப், மே 23- 
வெடிகுண்டுகளை தேனீக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அய்ரோப்பிய யூனியனோடு இணைந்த குரோடியா நாடு, அடர்ந்த பசுமை காடுகளும், பெரிய ஏரிகளும் உடையது. இயற்கை வளம் கொழிக்கும் இந்த நாட்டில், 1990இல் பால்கன் போரின்போது புதைத்து வைக்கப்பட்ட ஏராளமான கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. சுமார் 750 சதுர கி.மீ. பரப்பளவுக்கு கண்ணி வெடிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மொத்தம் 90,000 வெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவற்றை அகற்ற பல்வேறு முயற்சிகள் நடந்தாலும், பலனளிக்கவில்லை. கண்ணிவெடியில் சிக்கி இதுவரை 2500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்நாட்டில் உள்ள ஜாக்ரப் பல்கலைக்கழக வேளாண்மை துறை பேராசிரியர் நிகோலா கேசிக், தேனீக்களை பற்றி ஆய்வு செய்தார். அவற்றை தொடர்ந்து கண்காணித்ததில் அவை டிஎன்டி (டிரை நைட்ரோ டோலுவின்) என்ற வெடிபொருள் வாசனை மூலம் இரைதேடுவதைக் கண்டறிந்தார். வெடிகுண்டுகளின் வெடிப் பொருளை அழிவு சக்தியை அளக்க ஒரு கிராம் டிஎன்டி அடிப்படை அலகாக குறிப்பிடப்படுகிறது. இத்தகைய டிஎன் டியை நுகரும் திறனுடைய தேனீக்களை, வெடிகுண்டு கண்டுபிடிக்க பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. உடனடியாக, தனது மாணவர்களுடன் இணைந்து தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். இந்த ஆராய்ச்சிக்கு இனிப்புடன் டிஎன் டியை கலந்து ஆங்காங்கு வைத்துவிட்டு, தேனீக்களின் நடவடிக்கையை உற்று கவனித்தனர். அப்போது, டிஎன்டி கலந்து வைத்த இனிப்பின் மையப்பகுதியை மட்டும் தேனீக்கள் மிகச்சரியாக நுகர்ந்தன. இதுகுறித்து பேராசிரியர் நிகோலா கேசிக் கூறுகையில், இந்த ஆராய்ச்சி, கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இது விஞ்ஞான பூர்வமாக வெற்றி பெற்றால், கண்ணி வெடி இருப்பதாக கருதப்படும் பகுதிகளில் தேனீக் களின் நடவடிக்கையை அகச்சிவப்பு கதிர்கள் மூலம் கண்காணித்து அகற்றி விடலாம். நாய், எலி மூலம் கண்ணிவெடியை கண்டுபிடிக்க முடியும் என்றாலும், அவற்றின் உடல் எடை காரணமாக வெடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தேனீக்களை பொறுத்தவரை அந்த பிரச்சினையே இல்லை. தேனீக்கள் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அமெரிக்காவில் நடந்துள்ளது என்றார். 

தினகரன், விடுதலை, யஹூ உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் இதே வாசகங்கள் ஒரு புள்ளிமாறாமல் வெளியிடப்பட்டுள்ளன். இதைப் படிப்பவர்களுக்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சி என்ன என்பது விளங்காது. மேலும் தேனீக்கள் வெடிமருந்து வாசனையைக் கொண்டுதான் இரை தேடுவதாக தவறான தகவலும் தரப்பட்டுள்ளது. இது உண்மையும் பொய்யும் கலந்த கலவையாக உள்ளது. 

உண்மையில் தேனீக்கள் வெடிமருந்தின் வாசனையைக் கொண்டு இரை தேடுவதில்லை. நாய்களுக்கும் எலிகளுக்கும் பயிற்சி அளிப்பது போல் பயிற்சி அளிக்கப்பட்டால் அந்த தேனீக்கள் மட்டும் தான் வெடிமருந்துகளைக் கண்டுபிடிக்கும். எல்லா தேனீக்களும் அதைக் கண்டுபிடிக்காது. இந்த உண்மைக்கு மாற்றமாக இச்செய்தியைத் திரித்து எழுதியுள்ளனர். 

இது குறித்து விரைவில் விரிவுபடுத்தி வெளிவரவுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கம் 12 ஆம் பதிப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம். 

16:68,69 வசனங்களுக்கான விளக்கம் 68, 69. 

"மலைகளிலும்,
மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!''474 என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது.259 அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது.26 474 

தேனீக்களின் வழி அறியும் திறன் 

இவ்வசனத்தில் (16:68) 


தேனீக்களை நோக்கி உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் என்று தேனீக்களுக்கு உள்ளுணர்வை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தேனீக்கள் பாதைகளை அறிவதில் தனித்து விளங்குகின்றன என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். 

அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது: தேனைத் தேடி, தேனீக்கள் அதிகப் பயணம் மேற்கொள்கின்றன. ஆனால், அவை அதிகமான குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகின்றன. இதற்காக, கம்ப்யூட்டரின் உதவியுடன், செயற்கைப் பூக்களைக் கொண்டு, தேனீக்களின் பயண வழியைக் கண்காணித்தோம். அதில், தேனீக்கள் மிகக் குறைவான நேரத்தில், வெவ்வேறு பூக்களுக்குச் செல்வதற்கு அதிக குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தோம். அந்த வழிகள், விற்பனைப் பிரதிநிதி செல்வதற்காக, கம்ப்யூட்டர் உருவாக்கிக் கொடுத்த வழிகளை விட, அதிக வழிகளாகும். இதன் மூலம், கம்ப்யூட்டரின் அறிவை, மிகச்சிறிய தேனீயின் மூளை மிஞ்சியுள்ளது. இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

வழிகளை எளிதாகக் கண்டு கொள்ளும் திறன் தேனீக்களுக்கு உள்ளது என்ற இந்த உண்மையை திருக்குர்ஆன் சொல்லி இருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம் தான் என்பது உறுதியாகிறது. எளிதாக வழிகளைக் கண்டுபிடிப்பது என்பது குறுக்கு வழிகளை மட்டும் குறிக்காது. சரியான வழியையும் கண்டுபிடித்தால் தான் எளிதாக இருக்கும். ஒரு மலரில் அல்லது கனியில் தனக்கு உரிய உணவு உள்ளதா என்பதை மோப்ப சக்தி மூலம் சரியாகக் கண்டுபிடித்தால் தான் வழிகள் எளிதாக இருக்கும். ஒவ்வொரு பூவாகச் சென்று ஏமாந்தால் வழிகள் எளிதாக இருக்காது. அலைச்சல் தான் மிச்சமாகும். தேனீக்களின் மோப்ப சக்தி மிகத் துல்லியமாக அமைந்துள்ளதயும் இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பாவில் உள்ள குரோஷியா நாட்டுக்கும் செர்பியாவுக்கும் நடந்த போரின் போது ஏராளமான கன்னிவெடிகளை செர்பியா புதைத்து வைத்தது. போர் முடிந்த பின்னும் கன்னிவெடி புதைக்கப்பட்ட இடத்தில் கால் வைப்பவர்கள் செத்துமடிந்து வருகின்றனர். எனவே கன்னிவெடிகளைக் கண்டுபிடிக்க தேனீக்களின் மோப்ப சக்தியைப் பயன்படுத்த முடியுமா என்று ஜாக்ரப் பல்கலைக் கழக வேளாண்மைத் துறை பேராசிரியர் நிகோலா கேசிக் ஆராய்ச்சி மேற்கொண்டார். தேனீக்களின் உணவு எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தேனீக்கள் அதைச் சரியாகக் கண்டு பிடிக்கும் திறன் வாய்ந்தவை என்பதை முதலில் இவர் கண்டுபிடித்தார். வெடிமருந்துகளில் உள்ள டி.என்.டி எனும் வாசனையை இனிப்புடன் கலந்து தேன் கூடுகளுக்கு அருகில் வைக்கப்பட்டது. இனிப்பைத் தேடிவரும் தேனீக்கள் டி.என்.டி வாசனையைப் பழகிக் கொண்டன. இப்படியே பழக்கப்பட்ட தேனீக்கள் டி.என்.டி வாசனை எங்கு இருந்தாலும் அது தன்னுடய உணவின் வாசனை என்று நினைக்கும் அளவுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு தேனீக்கள் பழக்கப்பட்ட பின்னர் டி.என்.டி கலந்த இனிப்பையும் டி.என்.டி கலக்காத இனிப்பையும் கூடுகளுக்கு அருகில் வைக்கும் போது டி.என்.டி கலந்த இனிப்பை மட்டும் அது சரியாகக் கண்டு பிடித்து அதில் அமர்ந்தது. இதன் பின்னர் ஒரு இடத்தில் வைக்கப்படும் இனிப்பின் நடுப்பகுதியில் டி.என்.டி கலந்தும் ஓரங்களில் டி.என்.டி கலக்காமலும் வைக்கப்பட்ட்து. அப்போது டி.என்.டி கலந்த மையப்பகுதியில் போய் தேனீக்கள் அமர்ந்தன. இயல்பாக வெடிமருந்தின் வாசனையை தேனீக்கள் தேடிச் செல்லாது. அது தான் தன்னுடைய உணவு என்று பயிற்சியளிக்கப்படும் போது அந்த வாசனையைத் தேடிச் செல்ல ஆரம்பித்து விடும். இப்படி பழக்கப்பட்ட தேனீக்களுக்கு அருகில் மண்ணுக்குள் வெடி பொருளைப் புதைத்து வைத்தால் அந்த இடத்தின் மேலே அமர்ந்து மொய்க்க ஆரம்பித்தன. இதன் மூலம் அந்த இடத்தில் கன்னி வெடி உள்ளதைக் கண்டுபிடித்து பக்குவமாக அகற்றலாம் என்பது தான் ஆராய்ச்சியின் முடிவாகும். இது குறித்து பேராசிரியர் நிகோலா கேசிக் கூறுகையில், ‘‘இந்த ஆராய்ச்சி, கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இது விஞ்ஞானபூர்வமாக வெற்றிபெற்றால், கண்ணிவெடி இருப்பதாகக் கருதப்படும் பகுதிகளில் தேனீக்களின் நடவடிக்கையை அகச்சிவப்பு கதிர்கள் மூலம் கண்காணித்து அகற்றி விடலாம். நாய், எலி மூலம் கண்ணிவெடியைக் கண்டுபிடிக்க முடியும் என்றாலும், அவற்றின் உடல் எடை காரணமாக வெடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தேனீக்களைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சனையே இல்லை. தேனீக்கள் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அமெரிக்காவில் நடந்துள்ளது’ என்றார். இன்று பல்வேறு ஆய்வுகள் மூலம் இதைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் தேனீக்களிடம் இந்தத் தன்மை உள்ளது என்ற விஷயம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். எனவே குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/thenikkalin_vazi_ariyum_thiran/
Copyright © www.onlinepj.com

தொழுகை _காங்கேயம்கிளை பெண்கள்பயான் 02062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம்கிளையின் சார்பாக 02.06.2013 அன்று பெண்கள்பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சேக்பரீத் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

வரதட்சணை _கோம்பைதோட்டம்கிளை பெண்கள் பயான் 02062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளையின் சார்பாக 02.06.2013 அன்று VIP வீதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. ஷாபாமா அவர்கள் வரதட்சணை என்ற தலைப்பில் உரையாற்றினார்.பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Sunday, 2 June 2013

சொர்க்கத்தில் அல்லாஹ்வை சந்திப்போம்" மங்கலம் கிளை பயான் 02062013 f

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "சொர்க்கத்தில் அல்லாஹ்வை சந்திப்போம்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

நல்லதையே பேசுவோம் _மங்கலம் கிளை பயான் 01062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "நல்லதையே பேசுவோம் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது

வானவர்களின் வாழ்த்து _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 01062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "வானவர்களின் வாழ்த்து" என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது

Saturday, 1 June 2013

வட்டி இல்லா கடன் உதவி 81 உடுமலைகிளை 31052013

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 31.05.2013 அன்று வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் உடுமலைசகோதரர். முஹம்மதுரபி அவர்களுக்கு ரூ.4,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு _காலேஜ்ரோடுகிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் காலேஜ்ரோடுகிளை சார்பில்  20.05.2013 அன்று  கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த கோடைகாலப் பயிற்சி முகாமில் 42 மாணவ மாணவியர்கள்  கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசு வழங்கினர்.




 

நல்லூர் கிளை பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரூ.11465/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 31.05.2013 அன்று திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை  பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரூ.11465/= நிதியுதவி செய்யப்பட்டது

நல்லூர் கிளை பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரூ.5000/= நிதியுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 31.05.2013 அன்று திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை  பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரூ.5000/= நிதியுதவி செய்யப்பட்டது

பெண்கள் நரகத்திலிருந்து பாதுகாப்பு பெற -மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 31052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31.05.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "பெண்கள் நரகத்திலிருந்து பாதுகாப்பு பெற " என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

Friday, 31 May 2013

சொர்க்கத்தின் மாளிகை _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 31052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31.05.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "சொர்க்கத்தின் மாளிகை" என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது

S.S.L.C இலவச ரிசல்ட் மற்றும் பிரிண்ட் அவுட் _கோம்பைதோட்டம்கிளை 31052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 31.05.2013 அன்று 
10 வகுப்பு (S.S.L.C.) மாணவ மாணவியர்களுக்கு  தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து உடனடியாக இலவச ரிசல்ட் மற்றும் பிரிண்ட் அவுட் எடுத்து 10 வகுப்பு (S.S.L.C.)மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

ஈமானில் ஏற்ற தாழ்வு _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 30052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 30.05.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஈமானில் ஏற்ற தாழ்வு" என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

Thursday, 30 May 2013

"பிரம்மாண்டமான சொர்க்கம்" மங்கலம் கிளை மார்க்கவிளக்க சொற்பொழிவு 30052013

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 30.05.2013அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் "பிரம்மாண்டமான சொர்க்கம்"  என்ற தலைப்பில் மார்க்கவிளக்க சொற்பொழிவு நடைபெற்றது

தொழுகையின் அவசியம் -மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-05-2013 அன்று ரோஸ் கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

திருப்பூர் மங்கலம் கிளையில் இஸ்லாத்தைஏற்ற கனேஷ் ..உமர்ஷரீப் ஆக _29052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 29.05.2013அன்று சகோதரர்.கனேஷ் என்பவர் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை  உமர்ஷரீப் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் மற்றும் அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு மங்கலம் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

"மோசடி செய்யாதீர் " மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 29052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.05.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் "மோசடி செய்யாதீர் "என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

"சாலையின் ஒழுக்கம்" பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் 29052013

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 29/05/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் சபியுல்லா அவர்கள் "சாலையின் ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்